Tamil to Tamil&English Dictionary

We are happy to provide you with the best Online Tamil to Tamil Dictionary/Translator.
For typing word in Tamil you can use our tool typing tool

  
Tamil WordTamil MeaningEnglish Meaning
சொற்கோவை (ஒரு மொழியிலுள்ள அல்லது ஒருவர் அறிந்துவைத்துள்ள) சொற்களின் தொகுப்புvocabulary
சொற்சிலம்பம் (பேச்சில் அல்லது எழுத்தில்) வார்த்தைகளின் அலங்காரம்rhetorical flourish
சொற்பம் (மிகவும்) குறைவு(too) little or short
சொற்பிறப்பியல் சொல்லின் தோற்றம், வளர்ச்சி, மாற்றம் முதலியவற்றை விளக்கும் மொழியியல் பிரிவுetymology
சொற்பொழிவு (ஒரு பொருளைப்பற்றிய) நீண்ட மேடைப் பேச்சுspeech
சொற்றொடர் தன்னளவிலோ ஒரு வாக்கியத்திலோ ஒரு தனித்த அலகாக முழுமை அடையாத சொல்தொகுதிphrase
சொறி1(உடலில் ஏதேனும் ஓர் இடத்தில் நகத்தால் அல்லது ஏதேனும் ஒன்றால்) தேய்த்தல்scratch (with fingernails or with something else)
சொறி2அரிப்புடன் கூடிய தோல் நோய்skin disease causing itching
சொறிசிரங்கு தோலில் சொரசொரப்பான தடித்த சுற்றுப் பகுதியை உடைய புண்களை உண்டாக்கி அரிப்பை ஏற்படுத்தும் ஒரு நோய்scabies
சொஜ்ஜி ரவையுடன் சீனி கலந்து முந்திரிப்பருப்பு, ஏலக்காய் முதலியவற்றைச் சேர்த்து நெய் அல்லது பாலில் செய்யப்படுகிற இனிப்புப் பண்டம்a kind of sweetmeat prepared with semolina in ghee or milk with cashew nuts, etc
சொஸ்தமாக்கு குணமாக்குதல்cure
சோ-என்று (மழை) வேகமாக இரைச்சலுடன்(of rain) in a downpour
சோகம் (இழப்பு, தோல்வி முதலியவற்றால்) மனத்தை வருத்தும் துக்க உணர்வுsorrow
சோடா கரியமிலவாயு கலந்து புட்டிகளில் அடைக்கப்படும் நீர்soda (water)
சோடா உப்பு சமையல் சோடாbaking soda
சோடை2(மாட்டு வண்டிகள் போய்வருவதால் ஏற்பட்ட) தடம்rut (left by carts on soft earth)
சோதனை ஒரு பொருளின் உண்மையான தன்மை முதலியவற்றைக் கண்டறிய விஞ்ஞானரீதியில் மேற்கொள்ளப்படும் பரிசோதனைexperiment
சோதனை ஓட்டம் (இயந்திரங்களையும் வாகனங்களையும்) சோதிப்பதற்காக இயக்கிப்பார்த்தல்trial run (of machines, vehicles)
சோதனைக்குழாய் (சோதனைக்கூடத்தில் பயன்படுத்தும்) ஒருபுறம் அடைப்புடைய குறைந்த சுற்றளவுடைய கண்ணாடிக் குழாய்test-tube
சோதனைக்கூடம் (மருத்துவமனை, தொழிற்சாலை, பள்ளிக்கூடம் முதலியவற்றில்) ஆராய்ச்சி, சோதனை முதலியவற்றை மேற்கொள்வதற்கான அறிவியல் கருவிகள் நிறைந்த இடம்laboratory (in a hospital, factory, school, etc.)
சோதனைபூர்வம்-ஆக/-ஆன (கலை, இலக்கியத்தில்) புதிய முறையை ஏற்றுப் பயன்படுத்தும் வகையில்/புதிய முறையை ஏற்றுப் பயன்படுத்தும் வகையிலான(in arts, literature) experimentally/experimental
சோதா உடலில் வலுவில்லாதவன்/ஒன்றுக்கும் உதவாதவன்weak person/weakling
சோதி1(ஒருவரின் நோய் அல்லது ஒன்றின் குறைபாடுகளை) சோதனைமூலம் அறிதல்examine
சோதிடம் (கிரகங்கள், நட்சத்திரங்கள் ஆகியவற்றின் நிலைகளிலிருந்து அல்லது கைரேகையிலிருந்து ஒருவரின்) கடந்தகாலத்தையும் எதிர்காலப் பலனையும் கூறும் கலைastrology
சோதிடர் சோதிடக் கலை தெரிந்து பலன் கூறுபவர்astrologer
சோப்(ப)ளாங்கி சோதாweakling
சோப்பு (உடலைச் சுத்தம் செய்வதற்கானது, துணி துவைப்பதற்கானது என இரு தனித்தனி வகைகளில் கிடைக்கும்) நீரில் நுரை தரும் தன்மையுடையதாகத் தாவர எண்ணெய்யிலிருந்தோ ரசாயன முறையிலோ தயாரிக்கப்படும் கட்டிsoap
சோபன அறை (மணமக்களின் முதலிரவிற்காக அலங்கரிக்கப்பட்டுள்ள) படுக்கை அறைdecorated bedroom for the newly wed
சோபனம் திருமணம் முடிந்து நடக்கும் முதலிரவு நிகழ்ச்சிconsummation rites
சோபி (ஒருவர் ஒரு துறையில் அல்லது செயலில்) சிறப்பாக விளங்குதல்/(ஒரு பொருள் அல்லது நிகழ்ச்சி) சிறப்பாக அமைதல்shine/be splendid
சோபை (தோற்றத்தில் காணப்படும்) களைgrace
சோம்பல் ஒரு செயலைச் செய்ய உந்துதல், விருப்பம், சுறுசுறுப்பு இல்லாமல் இருக்கும் நிலைlaziness
சோம்பு1(ஒரு செயலைச் செய்ய) விருப்பம் காட்டாமல் இருத்தல்be idle
சோம்பு2ஒரு வகைப் பெரிய சீரகம்fennel
சோம்பேறி (ஒரு செயலைச் செய்ய) சோம்பல்படுபவன்lazy-bones
சோமாஸ் பிசைந்து தட்டிய மைதா மாவினுள் பூரணத்தை வைத்து மூடி எண்ணெய்யில் பொரித்துச் செய்யும் உணவுப் பண்டம்a kind of puff with mildly sweetened filling, fried in oil
சோர் (உடல் அல்லது மனம்) மேற்கொண்டு செயல்படச் சக்தியற்றுத் தளர்தல்become fatigued
சோர்வு (உடல் அல்லது மனம்) செயல்படச் சக்தியற்ற நிலைfatigue
சோரம் திருமணம் ஆனவர்கள் பிறருடன் கொள்ளும் உடலுறவுadultery
சோரம்போ (கணவன் அல்லது மனைவி பிறருடன்) கள்ளத்தொடர்பு கொள்ளுதல்commit adultery
சோலை (மனத்திற்கு மகிழ்ச்சி ஏற்படுத்தும் வகையில்) மரங்களும் செடிகொடிகளும் நிறைந்த குளிர்ச்சியான இடம்grove
சோழன் (முற்காலத்தில் புலியை அரசுச் சின்னமாகக் கொண்டு) காவிரி நதி சார்ந்த பகுதிகளை ஆண்ட பரம்பரையைச் சேர்ந்த மன்னன்any king of the Chola dynasty that ruled over the Cauvery delta
சோழி (மாலையாகக் கோக்கவோ விளையாடவோ பயன்படும்) கடல்வாழ் சிறு உயிரினங்களின் வெள்ளை அல்லது பழுப்பு நிற ஓடுcowrie
சோளக்கொல்லை பொம்மை (கம்பு, சோளம் முதலியவை விளையும் நிலத்தில் பறவைகளை விரட்டுவதற்காக) உயரமான கழியில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் துணி அல்லது வைக்கோல் அடைத்த மனித உருவத்தை ஒத்த பொம்மைscarecrow
சோளப்பொரி உப்பும் மஞ்சள் பொடியும் தூவி வறுத்த சோளம்popcorn
சோளம் உருண்டையான தனித்தனி மணிகள் நிறைந்த கதிரை உடைய ஒரு தானியப் பயிர்jowar
சோளி ரவிக்கைblouse
சோற்றுக்கற்றாழை குட்டையான அடித் தண்டையும் வெண்ணிறச் சதைப்பற்றான உள்ளீடு உடைய மடல்களையும் கொண்ட ஒரு வகைக் கற்றாழைthick leaved Indian aloe
சோற்றுப்பட்டாளம் எந்த வேலையும் செய்யாமல் உணவுக்காக மட்டும் ஒருவரை அண்டி வாழும் கும்பல்hangers on for food
சோறு1உலையில் இட்டு வேகவைக்கப்பட்ட அரிசிcooked rice
சோறு2பனைமரத்தின் தண்டு, கற்றாழை மடல் முதலியவற்றின் உள்ளே காணப்படும் சதைப்பற்றான வெண்ணிறப் பொருள்pith
சோனி வலுவற்ற மெலிந்த உடல்puny
சௌக்கியம் (பெரும்பாலும் விசாரிக்கும்போது) ஆரோக்கியம்state of being well
சௌகரியப்படு (ஒன்று ஒருவருக்கு) ஏற்றதாக அமைதல்be convenient
சௌசௌ வெளிர்ப் பச்சை நிறமுடைய சொரசொரப்பான மேற்பகுதியையும், நீர்ச் சத்து மிகுந்த சதைப் பகுதியையும் கொண்ட ஒரு வகைக் காய்a kind of vegetable with light green skin
சௌந்தரியம் அழகுbeauty
சௌபாக்கியவதி இளம் பெண்கள், சுமங்கலிகள் ஆகியோரின் பெயருக்கு முன்னால் இடப்படும் மங்கலச் சொல்a form of address for a girl or a married woman
சௌஜன்(னி)யம் (பழகுதல், பேசுதல் முதலியவற்றில் காட்டும்) சுமுகம்kindly disposition
   Page 25 of 26    1 23 24 25 26