Tamil To Tamil & English Dictionary

  

 

 

Tamil WordTamil MeaningEnglish Meaning
டக்-என்று (ஒரு செயலைச் செய்கையில்) சிறிதும் தாமதமில்லாமல்without delay
டப்பா (மெல்லிய உலோகம் முதலியவற்றால் பல வித அளவில் செய்யப்படும்) மூடி போட்ட கொள்கலம்container (made of metals like tin or plastic)
டப்பாங்குத்து (பாட்டுக்கு அல்லது தப்பட்டை போன்ற வாத்தியங்களின் தாளத்திற்குத் தகுந்தபடி) குதித்துக்குதித்து (ஆண்கள்) ஆடும் ஆட்டம்a sort of dancing done in streets (by men) to an improvised tune and accompanied by drums
டப்பி (கையடக்கமான) சிறிய டப்பாsmall tin box
டபரா (சூடான காபி போன்ற பானங்களை ஆற்றிக் குடிக்கத் தம்ளரோடு பயன்படுத்தப்படும்) விளிம்புள்ள சிறிய வட்ட வடிவப் பாத்திரம்a saucer-like vessel slightly deeper used along with a tumbler for serving hot drinks
டபாய் ஏய்த்தல்cheat
டம்பம் வெளிப்பகட்டுbeing showy or vain
டமாரம் அடித்து ஒலி எழுப்பக் கூடியதாக இருக்கும் பெரிய வட்ட வடிவ வாத்தியம்a kind of kettle drum which produces a loud noise
டமாரமடி (செய்தியை) எல்லோரிடமும் பகிரங்கமாகத் தெரிவித்தல் அல்லது பரப்புதல்trumpet
டவாலி (மாவட்ட ஆட்சியர், நீதிபதி போன்றோரின் ஊழியர் தனது சீருடையின் மேல் தோள்பட்டையிலிருந்து குறுக்காக அணிந்திருக்கும்) பித்தளை வில்லையை உடைய நீண்ட சிவப்புப் பட்டைa red cloth band with a brass badge (passing over the shoulder and across the body worn by attendants to the judges, etc.)
டஜன் பன்னிரண்டு உருப்படி கொண்ட தொகுதிdozen
டாக்டர் மேல்நாட்டு மருத்துவ முறையில் படித்துப் பட்டம் பெற்ற மருத்துவர்doctor (of medicine)
டாங்கி சக்கரங்களின் மேல் சுற்றி வரும் இரும்புப் பட்டை பொருத்தப்பட்டதும் நீண்ட பீரங்கியை உடையதுமான ராணுவ வாகனம்tank (used in warfare)
டாண்-என்று (குறிப்பிட்ட காலத்தில்) சிறிதும் தவறாமல்on the dot
டாம்பீகம் ஆடம்பரம்ostentation
டாலடி (தங்கம், வைரம் முதலியன) கண்ணைப் பறிக்கும் விதத்தில் மின்னுதல்(of gold, diamond, etc.) glitter
டாலர் (சங்கிலி முதலியவற்றில் கோக்கப்படும்) அச்சுப் பதிக்கப்பட்ட சிறு தங்க அல்லது வெள்ளி வில்லை(coin-sized) pendant
டிமிக்கி (கண்காணிப்பவர் கண்ணில் படாமல் அல்லது தான் போக வேண்டிய இடத்திற்குப் போகாமல்) ஏமாற்றி நழுவிவிடும் செயல்giving the slip
டிரங்குப்பெட்டி தகரத்தாலான செவ்வக வடிவப் பெட்டிlarge case (for packing clothes, etc.)
டிராயர்1அரைக் கால்சட்டைshorts
டிராயர்2(மேசை, பீரோ முதலியவற்றில் உள்ள) இழுப்பறைdrawer (of a desk)
டின் (எண்ணெய், அரிசி முதலியவை வைத்துக்கொள்ள உதவும்) பெரிய டப்பாa large container made of tin
டீ தேநீர்tea
டீச்சர் ஆசிரியைwoman teacher
டூப் (கேட்பவருக்கு) நம்ப முடியாதபடி இருக்கும் பேச்சுfib
டூ விடு (சிறுவர்கள் சுட்டு விரலையும் நடுவிரலையும் சேர்த்துப் பின் பிரித்து) நட்பு முறித்தல்(of children) indicate the breaking of friendship (by releasing the forefinger abruptly after holding it with the middle finger by the tip)
டேரா அடி (சர்க்கஸ் நடத்துபவர் ஓர் ஊரில்) கூடாரம் அமைத்தல்put up a tent (by a circus party)
டேவணி ஓர் ஒப்பந்த வேலைக்காக மனுக்கள் கோரப்படும்போது விண்ணப்பதாரர் தமது விண்ணப்பத்துடன் செலுத்த வேண்டிய பணம்money to be paid along with the tender application
டோப்பா (ஆண்கள் தலையில் வைத்துக்கொள்ளும்) செயற்கை முடிwig (for men)
டோலக்கு ஒலி எழுப்பும் வகையில் சிறு வட்டத் தகடுகள் கோர்க்கப்பட்ட விளிம்புப்பட்டையை உடைய வட்ட வடிவத் தோல் வாத்தியம்a kind of tambourine
டோஸ் (சில நேரத்தில் செய்த தவற்றுக்காகக் கிடைக்கும்) திட்டுrebuke (which one receives for his/her mistakes)

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    × Want to join our classes?