Tamil to Tamil&English Dictionary

We are happy to provide you with the best Online Tamil to Tamil Dictionary/Translator.
For typing word in Tamil you can use our tool typing tool

  
Tamil WordTamil MeaningEnglish Meaning
தடி1(அடிபடுதல், பூச்சிக்கடி முதலியவற்றால் உடலின் மேல்பரப்பு) சிறிய அளவில் வீங்குதல்swell slightly
தடி2(ஒருவரின் உடல், ஒரு பொருள் முதலியவற்றின் அளவுகுறித்து வருகையில்) பருமன்(of a person) stout
தடித்த சற்றுப் பருத்தthick
தடித்தனம் யோசனை அற்ற, ஒழுங்கற்ற தன்மைrash, crude fashion
தடிப்பு (பூச்சிக்கடி முதலியவற்றால் ஏற்படும்) திட்டுத்திட்டான வீக்கம்slight swelling (due to insect bite, etc.)
தடிமன் தடித்ததுbulkiness
தடியடி (வன்முறையில் ஈடுபடும் கும்பலைக் கலைக்கக் காவலர்கள்) தடியால் அடிப்பதுcharging with baton
தடு (ஒரு செயலை) நிகழாமல் இருக்கச்செய்தல்prevent
தடுக்கு1(கால்) இடறுதல்(ஏதேனும் ஒன்று காலை) இடறுதல்trip over
தடுக்கு2(கோரை, ஓலை முதலியவற்றால் பின்னப்பட்ட) சதுர அல்லது செவ்வக வடிவச் சிறிய பாய்small mat square or rectangular in shape
தடுப்பு (ஓர் இடத்தின்) பாதுகாப்புக்காக அமைக்கப்படுவதுfence
தடுப்பு ஊசி (குறிப்பிட்ட) நோய் வராமல் தடுக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கையாகப் போடப்படும் ஊசிvaccination
தடுப்புக் காவல் குற்றம்செய்யக் காரணமாக இருப்பவர் என்று நம்பப்படுபவரை முன்னெச்சரிக்கையாக விசாரணை இன்றிக் குறிப்பிட்ட காலம்வரை சிறையில் அடைத்தல்detaining a person without trial as a preventive measure
தடுமன் ஜலதோஷம்(common) cold
தடுமாற்றம் நிலைதவறி ஆட்டம்காணும் நிலைstaggering
தடுமாறு (இயக்கத்தின்போது ஒழுங்காகச் செயல்பட முடியாமல்) நிலைதவறி ஆட்டம்காணுதல்be shaky
தடை மேற்செல்லாதபடி செய்யும் செயல்obstruction
தடை ஆணை ஒன்றைச் செய்ய வேண்டும் அல்லது செய்யக்கூடாது என்று நீதிமன்றம் தனி நபருக்கோ ஓர் அமைப்புக்கோ விதிக்கும் ஆணைinjunction
தடை ஓட்டம் (விளையாட்டில்) இடுப்பளவு உயர மரச் சட்டங்களைத் தாண்டி ஓடுகிற ஒரு தடகளப் போட்டி(in sports) hurdles
தடைக்கல் ஒரு செயலுக்குத் தடையாக அல்லது இடையூறாக அமைவதுstumbling block
தண்டட்டி காலில் அணியும் ஒரு வகை வளையம்a kind of anklet
தண்டம்1எந்த விதப் பயனும் இல்லாமல்போவதுuseless
தண்டம்2தண்டனைsentence
தண்டல் (வரி) வசூலித்தல் collection (of revenue)
தண்டல்காரன் வரி வசூலிப்பவன் (formerly) tax collector
தண்டவாளம் (ரயில் செல்வதற்காக) கனமான மரப் பலகைகளால் இணைக்கப்பட்டுத் தரையோடு பொருத்தப்பட்ட நீண்ட எஃகுத் துண்டுகளின் இணைrails
தண்டனிடு (வணங்குவதற்காக) நெடுஞ்சாண்கிடையாகக் காலில் விழுதல்prostrate
தண்டனை செய்த தவற்றுக்கு ஒருவர் வருந்தும் முறையில் தரப்படுவது அல்லது செய்யவைப்பதுpunishment
தண்டால் உடல் தரையில் படாமல் மார்பையும் தலையையும் மேலும்கீழும் அல்லது முன்னும்பின்னும் உயர்த்தித் தாழ்த்திச் செய்யும் ஒரு வகை உடற்பயிற்சிpress-up
தண்டி (ஒருவர் செய்த குற்றத்துக்காக அல்லது தவற்றுக்காக) தண்டனை தருதல்punish
தண்டு1வேருக்கு மேலாக (பூ, இலை, காய் ஆகியவற்றைத் தாங்கி அமைந்திருக்கும்) வளையும் தன்மை கொண்ட நீண்ட மெல்லிய பகுதிstalk
தண்டுவடம் மூளையிலிருந்து உடலின் பல பாகங்களுக்கும் உணர்வுகளைக் கொண்டுசெல்லும், முதுகெலும்பினுள் அமைந்திருக்கும் நரம்புத் தொகுப்புspinal cord
தண்டை (குழந்தைகள், சிறு பெண்கள் ஆகியோர் காலில் அணியும்) ஒன்றுக்கொன்று தொட்டாற்போல் அமைந்திருக்கும் முனைகளைக் கொண்ட, உருட்டுக் கம்பி வடிவ அல்லது குழல் வடிவ வெள்ளி ஆபரணம்a kind of anklet made of silver (worn by children or girls)
தண்டோரா தமுக்குtom-tom
தண்டோராபோடு தமுக்கடித்தல்notify the public by the beat of tom-tom
தண்ணீர்காட்டு (கடுமையாக) அலைக்கழித்து ஏமாற்றுதல்give a hard time
தண்ணீர்ப்பந்தல் (கோடைக் காலத்தில் வழிப்போக்கர் முதலியோருக்கு) இலவசமாகத் தண்ணீர் அல்லது மோர் தரும் இடம்place where drinking water, buttermilk, etc, are given free (to passers-by during summer)
தண்ணீர்ப்பாம்பு (பொதுவாக நீர்நிலைகளில் காணப்படும்) விஷமற்ற பழுப்பு நிறப் பாம்புwater snake
தண்ணீர்பட்டபாடு (எந்த விதச் சிரமமும் இல்லாமல்) சுலபமாகச் செய்யக் கூடியது a piece of cake
தண்ணீரில்லாக் காடு நீர் முதலிய அடிப்படை வசதிகள்கூட இல்லாத இடம்a place without amenities
தண்மை இதமான குளிர்ச்சிcoolness
தணல் கனன்றுகொண்டிருக்கும் கங்குகள்live coals
தணி1(வெப்பம், பசி, கோபம் முதலியவை) குறைதல்(of heat, hunger, anger, etc.) subside
தணி2(வெப்பம், பசி, கோபம் முதலியவற்றை) குறைத்தல்cause to subside or decrease
தணிக்கை (அரசாங்கம் ஒரு குழுவின்மூலமாகத் திரைப்படம் முதலியவற்றில்) கொள்கைக்கு அல்லது ஒழுக்க விதிகளுக்கு எதிரானது என்று கருதும் பகுதிகளை நீக்குதல்censorship
தணிவு (உயரத்தில்) தாழ்வுlow (in height)
தத்தம்செய் தன் வசம் உள்ளவற்றின் உரிமையைப் பூரணமாகக் கைவிடுதல் அல்லது அந்த உரிமையை வேறொருவருக்கு அளித்தல்give up
தத்தளி (ஓர் ஆபத்தான சூழ்நிலையில் சிக்கி அல்லது நிலை இழந்து) திண்டாடுதல்be in great distress
தத்து1(பறவைகள், சிறு பிராணிகள்) கால்களை ஒருசேர ஊன்றியவாறு தாவுதல்(of certain birds, animals) hop
தத்து2சுவீகாரம்adoption (of a child)
தத்துப்பித்து-என்று முன்னுக்குப்பின் முரணாகbabblingly
தத்துவஞானி தத்துவக் கோட்பாடுகளை உருவாக்குபவர்philosopher
தத்துவார்த்தம் தத்துவரீதியான தன்மைphilosophical nature
தத்ரூபம் (சிறிய நுணுக்கங்கள்கூட விடுபட்டுப்போகாமல்) ஒன்றை அப்படியே வெளிப்படுத்துவதுexact resemblance
ததிங்கிணத்தோம்போடு திண்டாடுதல்suffer greatly
ததும்பு (பாத்திரத்தில் நீர் அல்லது கண்களில் கண்ணீர்) வழியக் கூடிய நிலையில் காணப்படுதல்(of liquids) heave with fullness
தந்தம் (ஆண் யானையின் வாயிலிருந்து) கொம்பு போன்ற வடிவில் வெளியே நீண்டிருக்கும் தூய வெண்மை நிறம் உடைய உறுப்புtusk
தந்தி1(வீணை, வயலின் முதலிய இசைக் கருவிகளில்) நாதத்தை எழுப்புவதற்காகக் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் மெல்லிய கம்பிstring (of musical instruments)
தந்தி2(அரசுத் துறை அலுவலகத்தால்) ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மின் அலைகளாக மாற்றிச் சேவையாக வழங்கப்படும் செய்திtelegram
தந்திக்கம்பி தந்திக்கான அல்லது தொலைபேசிக்கான மின் அலைகளைத் தாங்கிச் செல்லும் கம்பிoverhead wires meant for telecommunications
தந்தியடி (இயந்திரப் பொறியில் குறியீட்டு முறையில் செய்தியை) விரல்களால் கடகடவென்று தட்டி அனுப்புதல்tap the telegraph to send messages
தந்திரம் (-ஆக, -ஆன) (ஒருவரை ஏமாற்ற அல்லது ஒரு காரியத்தைச் சாதிக்கக் கையாளும்) சாமர்த்தியமான வழிமுறைguile
தந்துகி மிக நுண்ணிய இரத்தக் குழாய்capillary
தந்தை அப்பாfather
தப்பட்டை தோளில் மாட்டிக்கொண்டு குச்சியால் அடித்து ஒலி எழுப்பப்படும் வட்டமான ஒரு வகைத் தோல் கருவிa small one headed drum hung from the shoulder and tapped with a pair of small sticks
தப்படி காலை அகட்டி எடுத்துவைக்கும் அடிdistance between the two legs when stretched to full length from each other
தப்பாமல் தவறாமல்without fail
தப்பித்தவறி (ஒன்றைக் கருதிச் செய்யும்) நோக்கம் இல்லாமல்by accident or chance
தப்பிதம் தவறுmistake
தப்பிப்பிழை (ஆபத்திலிருந்து, அழிவிலிருந்து) விடுபடுதல்escape
தப்பு2(துணியைக் கல்லில்) அடித்தல்beat (a cloth on a slab of stone by way of washing)
தப்பு3முறை என்று ஒப்புக்கொள்ளப்பட்டதற்கு மாறானதுwrong doing
தப்புக்கணக்குப் போடு உண்மையான நிலைக்கு மாறாக மதிப்பிடுதல்miscalculate
தப்புதண்டா முறையற்ற காரியம்(involving oneself in) quarrel
தப்பும்தவறுமாக அதிகத் தவறுகளுடன்faultily
தப்பை குறுக்காக வெட்டப்பட்ட மூங்கில் குச்சிbamboo split
தபசு/தபஸ் (கடவுளை நோக்கி) மனத்தை நிலைப்படுத்திச் செய்யும் தியானம்(religious) austerities
தபா தடவை(the number of) time(s)
தபால் அட்டை அஞ்சல் அட்டைpost card
தபால்காரன் (கடிதம் முதலியவற்றை) முகவரியில் குறிப்பிட்டுள்ளவரிடம் சேர்ப்பிக்கும் பணியைச் செய்யும் அஞ்சல் நிலைய ஊழியர்postman
தபால் தலை அஞ்சல் தலை(postage) stamp
தபால் பெட்டி அஞ்சல் நிலையத்தாரால் பொது இடங்களில் வைக்கப்பட்டிருக்கும், கடிதம் போடுவதற்கும் எடுப்பதற்கும் சிறு திறப்பை உடைய பெட்டி போன்ற அமைப்புpost box
தபாலதிபர் அஞ்சல் நிலைய அதிகாரிpostmaster
தபாற்கட்டளை அஞ்சல் ஆணைpostal order
தபேலா (விரல்களாலும் உள்ளங்கையாலும் தட்டி வாசிக்கப்படும்) அரைக்கோள வடிவில் ஒன்றும் நீள் உருளை வடிவில் ஒன்றுமாக அமைந்த தாளக் கருவிtabla
தம்2(உடல் வலிமையை உபயோகித்துச் செய்ய வேண்டிய கடினமான காரியத்திற்காக) உள்ளிழுக்கும் அல்லது அடக்கும் மூச்சுbreath drawn in or held (during exertions)
தம்பட்டம் (கிராமப்புறங்களில் செய்தி அறிவிக்கும் பொருட்டு அடிக்கப்படும்) அகன்ற தட்டு வடிவத் தோல் கருவிa large, round tom-tom
தம்பட்டமடி (ஒரு செய்தியைப் பலர் அறியும்படி) பரப்புதல்/(ஒன்றை) தற்பெருமையுடன் கூறுதல்spread (the news)
தம்பதி திருமணம் செய்துகொண்ட ஓர் ஆணும் பெண்ணும்married couple
தம்பி உடன்பிறந்தவர்களில் தனக்கு இளையவன்younger brother
தம்பிடி மிகக் குறைந்த மதிப்புடைய நாணயம்coin of lowest value
தம்பிரான் சைவ மத குரு ஒருவரால் ஏற்படுத்தப்பட்ட மடத்தில் இருந்து சமயப் பணியும் நிர்வாகப் பணியும் செய்யும் துறவிa Saiva monk in the institution founded by a guru, performing religious and administrative duties
தம்பூரா (செங்குத்தாக நிறுத்தி விரல்களால் மீட்டிச் சுருதி சேர்ப்பதற்கான) குடம் போன்ற அடிப்பகுதியும் நீண்ட கழுத்தும் உடைய ஒரு வகைத் தந்தி வாத்தியம்a four-stringed instrument for maintaining the basic note
தம்ளர் (தண்ணீர் முதலியன குடிக்கப் பயன்படுத்தும்) விளிம்பு உள்ள குவளைdrinking vessel
தமக்கை அக்காelder sister
தமனி இதயத்திலிருந்து உடலின் பல பாகங்களுக்கும் இரத்தம் செல்வதற்கான குழாய்artery
தமாஷ் (-ஆக, -ஆன) சிரிப்பை வரவழைத்தல்humour
தமாஷா வரி கேளிக்கை வரிentertainment tax
தமிழ் தமிழ்நாட்டில் பெரும்பான்மையினராலும் இலங்கை, மலேசியா முதலிய நாடுகளில் சிறுபான்மையினராலும் பேசப்படுகிற, திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த (தொன்மையான) மொழிtamil (language)
தமிழ்நாடு (மொழிவாரியாகப் பிரிக்கப்பட்ட இந்தியாவில்) தமிழ்மொழி பேசுவோர் வாழும், கிழக்குக் கடற்கரையை ஒட்டித் தென்முனைவரையில் உள்ள மாநிலம்state of Tamil Nadu
   Page 1 of 23   1 2 3 23