Tamil to Tamil&English Dictionary

We are happy to provide you with the best Online Tamil to Tamil Dictionary/Translator.
For typing word in Tamil you can use our tool typing tool

  
Tamil WordTamil MeaningEnglish Meaning
தமிழ்ப்படுத்து (பிற மொழியில் உள்ள நூலை) தமிழில் மொழிபெயர்த்தல்/(பிற மொழிச் சொல், தொடர் முதலியவற்றை) தமிழ் ஒலிப்பு முறையில் அமைத்தல்translate (a work) into Tamil/tamilize (a foreign word, phrase, etc.)
தமிழ்வாணர் தமிழில் புலமை மிகுந்தவர்one who has mastery of Tamil
தமிழகம் தமிழ்நாடுstate of Tamil Nadu
தமிழன் தமிழைத் தாய்மொழியாகவோ பண்பாட்டு-பயன்பாட்டு மொழியாகவோ கொண்டவன்one whose mother tongue is Tamil or one who uses Tamil for socio-cultural activities
தமிழாக்கம் தமிழ் மொழிபெயர்ப்பு/(பிற மொழிச் சொல், தொடர் முதலியவற்றின்) தமிழ் ஒலிப்படுத்திய முறைtamil translation/tamilization
தமிழியல் தமிழ் மொழி, பண்பாடு, அறிவியல் துறைகள் முதலியன பற்றி மேற்கொள்ளப்படும் ஆய்வுstudy related to Tamil language, people and culture
தமுக்கடி (ஒரு செய்தியை) பலர் அறிய அறிவித்தல்notify the public by tom-tom
தமுக்கு (கிராமப்புறங்களில் மக்களுக்குச் செய்தியை அறிவிக்கப் பயன்படுத்தும்) மேல்புறத்தில் தோல் இழுத்துக் கட்டப்பட்டு இடுப்பில் தொங்கவிட்டுக்கொண்டு சிறு கோலால் அடித்து ஒலி எழுப்பும் ஒரு வகைப் பறைa kind of small drum for tom-tomming
தமையன் அண்ணன்elder brother
தயக்கம் தடுமாற்றம்hesitation
தயங்கு (செயல்பட அல்லது முடிவெடுக்க முடியாமல்) தடுமாறுதல்hesitate
தயவு (பிறர்) தாராள மனப்பான்மையோடு நடப்பதால் (தனக்கு) கிடைக்கும் ஆதரவுfavour (that one wins or receives)
தயவுதாட்சண்யம் (பெரும்பாலும் எதிர்மறை வினை வடிவங்களுடன் இணைந்து) ஈவிரக்கம்pity or consideration
தயார் (ஒருவர்) மன அளவில் அல்லது செயல் அளவில் உடனடியாக ஒன்றைச் செய்யத் தகுந்தவாறு இருக்கும் நிலை/(ஒன்று) உடனடியாகப் பயன்படுத்தக் கூடிய அளவில் இருக்கிற நிலை(state of) preparedness/(kept in) readiness
தயாரி (பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில்) உருவாக்குதல்produce
தயாரிப்பாளர் (பொருள்களை) தயாரிப்பவர்manufacturer
தயாரிப்பு (பொருளை) தயாரித்தல்the act of producing or manufacturing
தயாளம் பெருந்தன்மையான குணம்generosity
தயிர் பாலில் உறை மோர் ஊற்றுவதால் புளிப்பு அடைந்து கிடைக்கும் சற்றுக் கெட்டியான உணவுப் பொருள்curd(s)
தயை கருணைcompassion
தர்க்கம் விவாதம்discussion (in the nature of an argument)
தர்க்கரீதி-ஆக,-இல்/-ஆன (பேச்சு, செயல்பாடு, சிந்தனை முதலியவற்றின் ஒழுங்கு, அமைப்பு ஆகியவற்றைக் குறிக்கையில்) காரணகாரிய அடிப்படையில்/காரணகாரிய அடிப்படையிலானlogically/logical
தர்க்கி தர்க்கம்செய்தல்argue
தர்கா முஸ்லிம் மகான்கள் அடக்கம்செய்யப்பட்ட இடம்the place where the muslim saints are buried
தர்ணா (அலுவலகத்தின் முன் அல்லது ஒரு பொது இடத்தில் கோரிக்கைகளைத் தீர்க்குமாறு கோரி) வழி மறித்துக் கோஷங்கள் எழுப்பி நடத்தும் போராட்டம்picketing
தர்ப்பூசணி வெளித் தோல் பச்சையாகவும் சதைப் பகுதி சிவப்பாகவும் இருக்கும் இனிப்புச் சுவை கொண்ட நீர் நிறைந்த பூசணி போன்ற பழம்sweet watermelon
தர்ப்பை (சடங்குகளில் பயன்படுத்தும்) வெளிர்ப் பச்சை நிறமுடைய ஒரு வகை நீண்ட புல்kaus (grass considered sacred)
தர்பார் அரசர் அல்லது அரசரின் பிரதிநிதி ஆலோசகருடன் அமர்ந்து நிர்வாகம் நடத்தும் சபைroyal court
தர்ம கட்டணம் எதுவும் வசூலிக்காதfree (of cost)
தர்ம அடி (குற்றம் செய்து பிடிபட்டவருக்குப் பாதிக்கப்பட்டவரும்) சம்பந்தப்படாத பிறரும் சேர்ந்து கொடுக்கும் அடி அல்லது உதைbeating of a culprit by all those present at the spot
தர்மகர்த்தா (கோயில்) அறங்காவலர்trustee (of a temple)
தர்மத்துக்கு (வேலை முதலியவற்றைக் குறிக்கையில்) இலவசமாக(இலவசமாகச் செய்பவதைப் போல) எந்த விதக் கவனமும் இல்லாமல்(when referring to a work done badly) as if it was done for no consideration
தர்மப்பிரபு அதிக அளவில் தர்மம் செய்பவர்philanthropist
தர்மபத்தினி (உயர்வாக அல்லது கேலியாக) மனைவி(respectfully or humorously) wife
தர (கணிதத்தில்) பெருக்கல் குறி(in arithmetic) sign of multiplication
தரக் கட்டுப்பாடு உற்பத்தி செய்யப்படும் பொருளின் தரம் குறையாமல் இருக்க ஏற்படுத்தும் கண்காணிப்புcontrolling the quality of goods manufactured
தரகர் இரு தரப்பினருக்கு இடையே இணைப்பாக இருந்து ஒப்பந்தம் முதலியவற்றைப் பெற்று முடித்துத் தரும் தொழிலைச் செய்பவர்middleman
தரகு இரு தரப்பினருக்கு இடையே இணைப்பாக இருந்து ஒன்றைப் பணம் பெற்று முடித்துத் தரும் தொழில்work of a broker
தரணி உலகம்world
தரதர-என்று (இழு என்னும் வினையோடு) (ஒருவரின் உடல் பகுதி அல்லது ஒரு பொருளின் பகுதி) தரையில் உராய்ந்துகொண்டே வரும் வகையில்(drag) forcibly along the ground
தரப்படுத்து (பல வித வடிவங்களில் வழங்கிவருபவற்றைப் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில்) ஒரே சீராக அமைத்தல்standardize
தரப்பில் பிரதிநிதித்துவம் தரும் முறையில்on behalf of
தரப்பு (வழக்கு, போர், பேச்சுவார்த்தை முதலியவற்றில் ஏதேனும்) ஒரு நிலை மேற்கொண்டதால் அமையும் பிரிவுone of the two parties to a dispute, war, etc
தரம்1(-ஆக, -ஆன) (ஒன்றை) நிர்ணயம் செய்வதற்கு உரிய அளவு அல்லது நிலைquality
தரம்2தடவை(number of) time(s)
தரவு (ஆய்விற்கு ஆதாரமாகத் திரட்டப்படும்) அடிப்படைத் தகவல்கள்data (for research or analysis)
தராசு எடைக்கல்லை வைக்க ஒரு தட்டும் பொருளை வைக்க மற்றொரு தட்டும் எடையின் அளவைக் காட்டக் கூடிய முள்ளும் உடைய, பொருளை நிறுக்கப் பயன்படும் சாதனம்balance (for weighing)
தராதரம் (அந்தஸ்து, வயது அடிப்படையில்) வேறுபாட்டுக்குக் காரணமான தகுதிstatus
தரி1(உடை, மாலை முதலியன) அணிதல்/(திருநீறு, சந்தனம் முதலியவை) பூசுதல்wear
தரி2(ஓர் இடத்தில்) நிலைத்தல்stay
தரிசனம் (கோயிலுக்குச் சென்று இறைவனை அல்லது ஒரு தலத்தில் மகானை) பக்தி உணர்வுடன் காணுதல்having a glimpse (of a deity, saint)
தரிசி (கோயிலில் இறைவனை அல்லது ஒரு தலத்திற்குச் சென்று மகானை) தரிசனம்செய்தல்have a glimpse of (a deity, saint)
தரிசு பயிரிடப்படாமல் கிடக்கும் வெற்று நிலம்fallow or uncultivable land
தரித்திரம் (ஒருவரைப் பீடித்திருக்கும்) கொடிய வறுமைabject poverty
தரிப்பு நிறுத்தம்stop
தருக்கு கர்வம்arrogance
தருணம் (உரிய) நேரம்(right) time
தருவி வரவழைத்தல்cause to be brought
தரை பூமியின் மேல்பரப்பான கடினப் பகுதி/(கட்டடம் போன்றவற்றில்) கல், மண் முதலியவற்றால் கெட்டிப்படுத்தப்பட்ட கீழ்ப்பகுதிsurface of the soil/floor
தரைச்சக்கரம் தரையில் சுழலக் கூடிய சங்குசக்கரம்a cracker with a knob that spins on the floor
தரைத்தளம் (பல மாடிக் கட்டடத்தில்) பூமியின் மேல்பரப்பை ஒட்டி அமையும் தளம்ground floor (in a multi-storeyed building)
தரைப்படை (தரையில் போரிடும்) ஆயுதம் ஏந்திய வீரர்கள், வாகனங்கள் முதலியவை அடங்கிய ராணுவப் பிரிவுarmy
தரைமட்டம் (இடிக்கப்பட்டு அல்லது தகர்க்கப்பட்டு இருக்கும்போது) பூமியின் மேல்பரப்போடு ஒட்டிய நிலை(when pulling down or demolishing) being of the level of the ground
தரையிறங்கு (பறந்துகொண்டிருக்கும் விமானம்) ஓடுதளத்தில் இறங்குதல்(of planes) land
தலபுராணம் (பெரும்பாலும் கோயிலில் உள்ள தெய்வத்தை அடிப்படையாக வைத்து) ஓர் இடத்தின் அல்லது ஊரின் சிறப்பைக் கூறும் முறையில் எழுதப்பட்ட நூல்a composition with the local temple and deity for its subject incorporating local legends
தலம் (மதத்தினருக்கு அல்லது மதப் பிரிவினருக்கு) சிறப்பான ஊர்place of spiritual significance
தல விருட்சம் குறிப்பிட்ட கோயிலுக்கெனச் சிறப்பாகக் கூறப்படும் மரம்sacred tree related to a temple
தலா ஒவ்வொருவரும் அல்லது ஒவ்வொன்றும்each
தலாக் விவாகரத்துdivorce
தலை1உடலின் மேல்பகுதியில் கண், வாய் முதலிய உறுப்புகள் உள்ள பகுதிhead
தலை2(இந்திய நாணயத்தில்) சிங்க உருவம் பதிக்கப்பட்டிருக்கும் பக்கம்(in Indian coins) the side on which the head of lion is impressed
தலைக்கட்டு (கிராமத்தில் ஏதேனும் ஒரு காரியத்திற்குப் பணம் வசூலிக்கும்போது) பெற்றோரும் திருமணம் ஆகாத பிள்ளைகளும் கொண்ட குடும்பம்family (both the parents and unmarried children taken as a unit for assessing the contribution of money to a common purpose)
தலைக்கயிறு மாட்டின் கழுத்துக் கயிறு, மூக்கணாங்கயிறு ஆகியவற்றுடன் இணைக்கப்பட்ட கயிறுrope used for tethering cow, etc to a post
தலைக்கவசம் (தீயணைப்புப் படையினர், வாகன ஓட்டிகள் முதலியோர்) விபத்தின்போது அடிபட்டுவிடாமல் இருக்க, தலையில் அணிந்துகொள்ளும் எஃகு அல்லது கண்ணாடி இழையால் செய்யப்பட்ட ஒரு பாதுகாப்புச் சாதனம்helmet
தலைக்கனம் கர்வம்arrogance
தலைக்கு (குறிப்பிடுகிற) ஒவ்வொருவரும் அல்லது ஒவ்வொருவருக்கும்per head
தலைக்குத்தண்ணீர் விடு (நோய் நீங்கிய பிறகு அல்லது பிரசவத்திற்குப் பிறகு) தலையை நனைத்துக் குளித்தல்take a bath (on recovering from illness or after confinement)
தலைக்குனிவு அவமானம்humiliation
தலைக்கேறு விரைவாக அதிகரித்தல்(of anger, cheerfulness, etc.) get to the head (of s
தலைகாட்டு (பலரும் அறியும்படியாக அல்லாமலும் சிறிது நேரமே இருக்கும்படியாகவும்) தென்படுதல்appear or show up (for a while)
தலைகீழ் (முன்பு இருந்தவற்றுக்கு அல்லது சொல்லப்பட்டதற்கு) முற்றிலும் மாறுbeing just the contrary
தலைகீழாக நில் (எண்ணத்தை நிறைவேற்ற அல்லது செயலைச் செய்து முடிக்க) பெரு முயற்சி எடுத்தல்do the unusual or the impossible
தலைகுப்புற (விழும்போது) தலை அல்லது முன்பகுதி முதலில் கீழே மோதும் விதத்தில்(when falling) head first down
தலைகுனி அவமானம் அடைதல்get humiliated or disgraced
தலைச்சன் முதன்முதல் பிறந்ததுfirst born
தலைச்சுமை (ஒருவர்) தலையில் சுமக்கக் கூடிய (கூடை, மூட்டை முதலிய) பாரம்load that can be carried on the head
தலைச்சுற்றல் தலைசுற்றி மயக்கம் வரும் உணர்வுgiddiness
தலைசுற்று (சுய உணர்வை இழக்கச்செய்யும் வகையில்) சுற்றியுள்ள பொருள்கள் சுழல்வதைப் போன்ற மயக்க உணர்வு ஏற்படுதல்feel giddy
தலைதட்டி (தானியம் முதலியவற்றைப் படியால் அளக்கையில் விளிம்பிற்கு மேல் குவியலாக இருப்பதை) விளிம்பிற்குச் சமமாக வரும் வகையில் தட்டி அகற்றி(while using a measure) with the portion of grain above the brim knocked off
தலைதப்பு (ஆபத்தான நிலையிலிருந்து) உயிர்பிழைத்தல்scrape through danger
தலைதீபாவளி (திருமணம் செய்துகொண்ட பின் கொண்டாடும்) முதல் தீபாவளிப் பண்டிகைthe first தீபாவளி festival (celebrated by the newly married)
தலைதெறிக்க (ஓடுதல் தொடர்பான வினைகளுடன்) பரபரப்புடன் வேகமாகpost-haste
தலைநகர்/தலைநகரம் நாடு, மாநிலம் முதலியவற்றில் அவற்றை நிர்வாகம் செய்யும் அரசு அமைந்துள்ள நகரம்capital city
தலைப்படு (ஒன்றைச் செய்ய) முற்படுதல்begin
தலைப்பாகை (அலங்காரத்திற்காகவோ குல முறைப்படியோ) தலையில் குறிப்பிட்ட வடிவத்தில் சுற்றப்பட்டிருக்கும் துணிக்கட்டுturban
தலைப்பிரட்டை தலையிலிருந்து வால் போன்ற உடல் உடைய, முட்டையிலிருந்து வெளிவந்த தவளைக் குஞ்சுtadpole
தலைப்பு1(கதை, கட்டுரை, சொற்பொழிவு முதலியவற்றில் தரப்பட்டிருக்கும்) பொருள் அடிப்படையிலான பெயர்title (of a story, essay, lecture, etc.)
தலைப்பு2(தாள் முதலியவற்றில்) மேல்பகுதி/(புடவையின்) முந்தானை(வேட்டியில்) அகலப் பகுதியின் தொடக்கம்top (of a paper, etc.)/front piece (of a saree)
தலைப்புச் செய்தி (வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகை ஆகியவற்றில்) தொடக்கத்தில் கூறும் சுருக்கச் செய்திheadline (of a news bulletin or story in a newspaper)
தலைபோகிற (ஒருவருடைய அவசரத்தை உணர்ந்தாலும் ஒத்துக்கொள்ளாத முறையில்) தவிர்க்க முடியாத(in response to the claim that a situation is) urgent
   Page 2 of 23    1 2 3 4 23