Tamil to Tamil&English Dictionary

We are happy to provide you with the best Online Tamil to Tamil Dictionary/Translator.
For typing word in Tamil you can use our tool typing tool

  
Tamil WordTamil MeaningEnglish Meaning
தெரியப்படுத்து (செய்தி, தகவல் முதலியவற்றை எழுத்து அல்லது பேச்சு மூலமாக) தெரிவித்தல்inform
தெரியாத்தனமாக ஒரு செயலைப்பற்றியோ அதன் பின்விளைவுகளைப்பற்றியோ ஒன்றும் அறியாமல்inadvertently
தெரியாமல் (பெரும்பாலும் மன்னிப்புக் கோரும் சந்தர்ப்பத்தில்) தற்செயலாகunintentionally
தெரிவுசெய் தேர்ந்தெடுத்தல்select
தெரு (வீடுகளையோ கடைகளையோ ஒரு புறத்திலாவது கொண்டிருக்கும்) ஊரின் பொது வழிstreet
தெருக்கூத்து தெருக்களில் மேடையில்லாமல் இதிகாசக் கதைகளை இசைப்பாடல், வசனம் போன்றவற்றுடன் நடித்துக்காட்டும் (பெரும்பாலும் ஆண்கள் மட்டும் பங்கேற்கும்) நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிa folk performing art which combines dialogue, song and dance generally treating episodes from puranas and enacted mostly (by men) at Sakti temples
தெலுங்கு ஆந்திர மாநிலத்தில் பெரும்பான்மையினரால் பேசப்படும் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழிtelugu (language)
தெவிட்டு திகட்டுதல்cloy
தெள்ளத்தெளிய/தெள்ளத்தெளிவாக மிகவும் தெளிவாகvery clearly
தெள்ளிய தெளிந்தclear
தெள்ளு தெளிந்தclear
தெள்ளென தெளிவாகclearly
தெளி1(திரவத்தில் உள்ள அழுக்கு, கசடு முதலியவை அடியில் தங்கித் திரவம்) கலங்கிய நிலையிலிருந்து மாறுதல்(of liquids) become clear (by allowing the sediments to settle)
தெளி2(நீர் முதலிய திரவத்தை அல்லது பொடியாக உள்ள உரம் போன்றவற்றைக் கையால் அல்லது ஒரு சாதனத்தால்) பரவலாக விழச்செய்தல்sprinkle
தெளிப்பான் (பூச்சிமருந்தை அல்லது வர்ணத்தை) வேகமாகத் தெளிக்கப் பயன்படும் கருவிsprayer (for insecticide, paint)
தெளிப்பு நீர்ப்பாசனம் குழாய்மூலம் வரும் நீரைப் பீய்ச்சி அடிக்கும் சாதனத்தின்மூலம் சிதறச் செய்து பயிரின் அடிப் பகுதி நனையும்படி செய்யும் பாசன முறைsprinkler irrigation
தெளிவு மறைவு எதுவும் இல்லாமல் பார்க்கப்படக் கூடிய அல்லது தடை எதுவும் இல்லாமல் கேட்கக் கூடிய நிலைclear (to the sight, hearing)
தெளிவுபடுத்து (சந்தேகம் குழப்பம் ஆகியவை நீங்குமாறு) தெளிவாக விளக்குதல்clarify
தெற்கத்திய தெற்கிலுள்ளsouthern
தெற்கு ஒருவர் சூரியன் உதிக்கும் திசையைப் பார்த்து நிற்கும்போது அவருக்கு வலப் பக்கம் உள்ள திசைsouth
தெற்று (பேசும்போது சொற்கள் தொடர்ச்சியாக இல்லாமல் தடைபட்டும் முழு ஒலிப்புப் பெறாமலும்) திக்குதல்stutter
தெற்றுப்பல் ஒரு பல்லின் ஈற்றின் மேல் முளைத்திருக்கும் மற்றொரு பல்supernumerary tooth
தெற்றுவாய் திக்குவாய்stuttering
தெற்றென தெளிவாகclearly
தெறி (நீர்த்துளி, தீப்பொறி முதலியவை) சிதறி விசையுடன் விழுதல்(of water drops) spray
தென் தெற்கு என்பதன் பெயரடைadjective of தெற்கு
தென்படு (கண்ணுக்கு) புலப்படுதல்come into view
தென்றல் மென்மையாக வீசும் காற்றுgentle breeze
தென்னம்பிள்ளை தென்னை மரக் கன்றுcoconut sapling
தென்னு நெம்புதல்lift with a lever
தென்னை (நீர்வசதி உள்ள பகுதிகளில்) ஓலைகளோடு கூடிய மட்டைகளையே கிளைகளாகக் கொண்ட, தேங்காய் காய்க்கும் மரம்coconut tree
தெனாவட்டு திமிர்hauteur
தேக்கம் நீர் ஓடாமல் தடைபட்டிருக்கும் நிலைobstruction to the flow of water
தேக்கரண்டி (சற்றுக் குழிந்த முன்பகுதி கொண்டதும் அளந்து போடுவதற்குப் பயன்படுத்துவதுமான) சிறு கரண்டிteaspoon
தேக்கு1ஓடும் அல்லது வழியும் திரவத்தைத் தடுத்து (ஓரிடத்தில்) தங்கச்செய்தல்stop (so as) to form a pool
தேக்கு2(மரச் சாமான்கள் செய்யப் பயன்படும்) அகல இலைகளை உடைய உறுதியான உயரமான காட்டு மரம்teak (wood)
தேக்சா குண்டானைப் போன்ற ஆனால் அதைவிடப் பெரிய பாத்திரம்a vessel similar to, but larger than குண்டான்
தேகம் (மனித) உடல்(human) body
தேகாந்தம் முழு உடல்whole body
தேங்காய் (வெள்ளைப் பருப்பும் இனிய நீரும் கொண்ட) தென்னை மரத்தின் காய்coconut (fruit with or without the husk)
தேங்காய் எண்ணெய் முற்றிய தேங்காய்ப் பருப்பிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்coconut oil
தேங்காய்த்துருவி தேங்காய்ப் பருப்பைத் துருவப் பயன்படும் சிறுசிறு பற்களையுடைய இரும்பாலான சாதனம்coconut scraper
தேங்காய்ப்பூ துருவி எடுக்கப்பட்ட தேங்காய்ப் பருப்புcoconut scrapings
தேங்கு (தண்ணீர் போன்றவை ஓடாமல்) தங்குதல்stagnate
தேங்குழல் அரிசி மாவும் பாசிப்பயற்று மாவும் கலந்து பிசைந்து அச்சில் பிழிந்து தயாரிக்கும் முறுக்கு போன்ற தின்பண்டம்a kind of savoury made of rice dough fried in oil
தேசத்துரோகம் நாட்டைக் காட்டிக்கொடுக்கும் குற்றம்treason
தேசத்துரோகி தேசத்துரோகம் புரிபவன்traitor
தேசப்படம் நாட்டின் அரசியல், நில அமைப்பைக் காட்டும் படம்map (of a country)
தேசபக்தன் நாட்டின் மீது அதிகப் பற்றுடையவன்patriot
தேசம் நாடுcountry
தேசாந்திரம் நோக்கம் எதுவுமின்றி நாட்டின் பல இடங்களுக்கும் தன் விருப்பப்படி செல்லும் பயணம்moving about places free from responsibilities
தேசிக்காய் எலுமிச்சைlime
தேசியகீதம் தேச விசுவாசத்தை வெளிப்படுத்தும், தேசியச் சின்னமாக விளங்கும் பாடல்national anthem
தேசியமயமாக்கு அரசுடமையாக்குதல்nationalize
தேட்டம் தேடல்pursuit
தேடல் (ஒன்றை) கண்டறிவதற்காக மேற்கொள்ளும் முயற்சிpursuit
தேடித்தா (புகழ், வெற்றி போன்றவற்றை) கிடைக்கச்செய்தல்earn (fame, victory, etc for s
தேடு (முன்னே இல்லாத ஒருவரை அல்லது தேவைப்படுகிற ஒன்றை அலைந்து விசாரித்து) கண்டறிய முயலுதல்search
தேத்தண்ணீர் தேநீர்tea
தேதி (மாதத்தில்) குறிப்பிட்ட எண்ணுடைய நாள்date
தேநீர் தேயிலைத் தூளைக் கொதிக்கும் நீரில் போட்டு வடிகட்டி (பாலும் சர்க்கரையும் கலந்து) தயாரிக்கும் பானம்tea
தேநீர் விருந்து இனிப்பு, காரம் ஆகியவற்றுடன் தேநீர் அல்லது காப்பி தந்து அளிக்கப்படும் சிறு விருந்துtea party
தேம்பு (அழும்போது) மூச்சுத் தடைபட்டு ஒலியுடன் வெளிப்படுதல்sob
தேமல் (உடலில் பெரும்பாலும் கழுத்து, மார்பு, முதுகு முதலிய பகுதிகளில் ஏற்படும்) இயல்பான தோலின் நிறத்திலிருந்து வேறுபட்டுச் சிறிது வெள்ளையாகக் காணப்படும் திட்டுpale white patch on the skin (of the body)
தேய்1(ஒரு பொருள் மற்றொன்றின் மீது) உரசுதல்rub
தேய்2(ஒன்றை மற்றொன்றின் மீது) அழுத்தி முன்னும் பின்னுமாக இழுத்தல்rub
தேய்பிறை (பௌர்ணமிக்கு மறுநாளிலிருந்து அமாவாசைக்கு முன்தினம்வரை) நிலவு படிப்படியாகத் தன்னுடைய வடிவத்தில் குறைந்து காணப்படும் தோற்றம்/நிலவு மேற்குறிப்பிட்ட வடிவத்தில் தோற்றமளிக்கும் காலம்waning moon/dark fortnight
தேய்மானம் ஒரு பொருள் மற்றொரு பொருளில் உராய்வதால் அல்லது தேய்க்கப்படுவதால் பொருளுக்கு ஏற்படும் எடைக்குறைவுloss (of weight)
தேயிலை தேநீர் தயாரிக்கப் பயன்படும் பதப்படுத்தப்பட்ட இலைtea-leaf
தேர்1(ஒரு துறையில்) நுணுக்கமான அறிவும் திறமையும் பெற்றிருத்தல்attain proficiency
தேர்2உற்சவ மூர்த்தியை வைத்து நீண்ட வடக்கயிற்றைக் கொண்டு இழுத்துச் செல்லப்படும், கோபுரம் போன்ற மேல் அமைப்பையும் பெரிய சக்கரங்களையும் கொண்ட கோயில் வாகனம்temple car
தேர்ச்சி (-ஆன) (ஒரு துறையில்) பயிற்சிமூலம் பெறும் நுணுக்கமான அறிவு அல்லது திறமைproficiency
தேர்தல் (ஓர் அரசை அல்லது அமைப்பை நடத்துவதற்காக) பிரதிநிதிகளை அல்லது பதவிக்கு உரியவரை வாக்களித்துத் தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சிelection (of representatives to form a government, etc.)
தேர்ந்த (கைத்தொழிலில்) திறமை வாய்ந்த(in crafts) highly skilled
தேர்ந்தெடு (ஒரு பயனுக்கென அல்லது தகுதிக்கென) தரம் அறிந்து பிரித்தல்(பலவற்றுள் ஒன்றை) வேண்டியது எனத் தீர்மானித்தல்choose
தேர்ப்பாகன் தேர் ஓட்டும் பணி புரிபவன்driver of a chariot
தேர்முட்டி (கோயில்) தேரை நிலையாக நிறுத்திவைக்கும் இடம்station for a temple car
தேர்வர் தேர்வு எழுதுபவர்examinee
தேர்வாணைக் குழு அரசு வேலைக்கு ஆட்களைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்புடைய, அரசால் நியமிக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட அமைப்புpublic service commission (to select employees for government service)
தேர்வு கல்வி நிறுவனங்களில் அல்லது தொழில் நிறுவனங்களில் ஒருவருடைய திறமை, படிப்பு முதலியவற்றைச் சோதித்துப் பார்க்கும் முறைexamination (in academic institutions)
தேர்வுநிலை குறிப்பிட்ட வருடங்கள் பணியாற்றியவருக்கு அரசுப் பணியில் அதே பதவியில் அதிக ஊதியம் தந்து வழங்கும் உயர்நிலை/வருமான அடிப்படையில் நகராட்சி, பேரூராட்சி போன்றவற்றுக்கு வழங்கும் உயர்நிலைselection grade (as related to a post entitling the holder to a higher salary or to municipalities, etc on the basis of the higher revenue raised)
தேரை1(பெரும்பாலும் கல் இடுக்குகளில் காணப்படும்) நீர்க்கசிவான தோலை உடைய ஒரு வகைத் தவளைtree toad
தேரை2தேங்காயில் ஏற்படும் ஒரு வகை நோய்a blight that affects coconut
தேரோட்டம் தேர்த் திருவிழாtemple festival in which the temple car is drawn along
தேவ ஆவி பரிசுத்த ஆவிholy Spirit
தேவகன்னி என்றும் இளமை மாறாமல் இருப்பதாகக் கூறப்படும் தேவலோகப் பெண்celestial damsel
தேவ குமாரன் தேவனின் குமாரனாகிய இயேசுjesus Christ, the Son of God
தேவட்டை எழுத்து அழிந்த காசுdisfigured coin (which is no longer in circulation)
தேவடியாள் விபச்சாரிwhore
தேவதாசி (முன்னர்) கோயிலில் நடனமாடுவதைக் குலத் தொழிலாகக் கொண்ட பெண்(formerly) dancing girl attached to a temple
தேவதாரு மலைப் பிரதேசங்களில் உயர்ந்து வளர்ந்து கிளைகள் பரப்பிக் கொத்துக்கொத்தாகப் பூக்கள் பூக்கும் ஒரு பெரிய மரம்red cedar
தேவதை அழகிய வானுலகப் பெண்nymph
தேவர் (புராணத்தில்) சொர்க்கலோகத்தில் வாழும், இறவாத்தன்மை பெற்றவர்கள்(in puranas) heavenly immortals
தேவலாம்/தேவலை (மோசம் என்று கருதப்படுகிற இரண்டில் அல்லது இருவரில்) ஏற்கத் தகுந்தது/ஏற்கத் தகுந்தவர்(of two unsatisfactory alternatives, etc one the) more acceptable
தேவஸ்தானம் (பெரிய) கோயிலின் நிர்வாக அமைப்புgoverning body of a (big) temple
தேவாங்கு தட்டையான முகத்தில் பெரிய கண்களை உடைய, வால் இல்லாத, குரங்கைப் போன்ற சிறிய விலங்குslender loris
தேவாமிர்தம் (தேவர்களுடைய உணவாகிய) கிடைப்பதற்கு அரிய அமிர்தம்the food of the gods
தேவாலயம் கிறித்தவர்களின் கோயில்church
தேவி பெண் தெய்வம்goddess
தேவை (-ஆன) இல்லாததை அல்லது குறைவாக இருப்பதை நிரப்ப வேண்டிய நிலைneed
   Page 20 of 23    1 18 19 20 21 22 23