Tamil to Tamil&English Dictionary

We are happy to provide you with the best Online Tamil to Tamil Dictionary/Translator.
For typing word in Tamil you can use our tool typing tool

  
Tamil WordTamil MeaningEnglish Meaning
தேள் இடுக்கி போன்று பிளவுள்ள முன்னங்கால்களையும் விஷமுடைய கொடுக்கையும் உடைய கரு நிற அல்லது செந்நிற உயிரினம்scorpion
தேற்று (வருந்துபவரை) அமைதியடையச்செய்தல்console
தேறு (தேர்வு, பரிசீலனை ஆகியவற்றில்) தகுதியுடையதாகத் தேர்ந்தெடுக்கப்படுதல்pass (an examination)
தேறுதல் (வருத்தத்திலிருந்து, துக்கத்திலிருந்து மீளும் வகையில் பிறர் சொல்லும்) ஆறுதல்consolation
தேன் பூக்களிலிருந்து தேனீக்கள் சேகரிக்கும் இனிமையான திரவம்honey
தேன்நிலவு புதுமணத் தம்பதியினர் மகிழ்ச்சியுடன் கழிப்பதற்காகச் செல்லும் சுற்றுலாhoneymoon
தேன் பூச்சி தேனீhoneybee
தேன் மெழுகு மரச் சாமான்களுக்கு மெருகேற்றுதல், மெழுகுவர்த்தி செய்தல் முதலியவற்றுக்குப் பயன்படும், தேனடையிலிருந்து எடுக்கும் மஞ்சள் நிற மெழுகுbeeswax
தேனடை தேனைச் சேமித்து வைப்பதற்காகத் தேனீக்கள் தங்கள் உடலில் உள்ள மெழுகினால் பல அறைகள் கொண்டதாக அமைக்கும் கூடுhoneycomb
தேனிரும்பு பிற தனிமங்களின் கலப்பில்லாத மிக உறுதியான இரும்புwrought iron
தேனீ தேனைச் சேகரிப்பதும் கூட்டமாக வாழ்வதும் கொட்டக் கூடியதுமான ஒரு வகைப் பூச்சிhoneybee
தை1(துணி முதலியவற்றில்) ஊசியை இரு புறமும் மாறிமாறிச் செலுத்தி நூலை இழுத்து இணைத்தல் அல்லது பொருத்துதல்stitch
தை2பத்தாவது தமிழ் மாதத்தின் பெயர்the name of the tenth Tamil month, i
தையல்1தைக்கப்பட்ட ஆடைகளில் உள்ள நூல் பின்னல்(துணி, தோல் போன்றவற்றில் இரு துண்டுகளை அல்லது கிழிசலை) இணைத்திருக்கும் நூல் இணைப்புstitching
தையல்2பெண்woman
தையல் இயந்திரம் ஆடை முதலியவற்றைத் தைப்பதற்கான இயந்திரம்sewing machine
தையல் இலை (உணவுப் பொருள்களை வைப்பதற்கு) ஈர்க்குச்சி கொண்டு ஒன்றோடு ஒன்று இணைத்த சில மரங்களின் காய்ந்த இலைகள்dry broad leaves of certain trees joined together by thin ribs of palm (used for serving food, etc.)
தையல்காரன் ஆடை தைக்கும் தொழில் செய்பவன்tailor
தைரியம் பயம் இல்லாத தன்மை(மனத்தில்) துணிவுcourage
தைலம் (மேல்பூச்சு மருந்தாக அல்லது வாசனைப் பொருளாகப் பயன்படுத்த) சில தாவரங்களிலிருந்தோ சில விலங்குகளிலிருந்தோ எடுத்துப் பக்குவப்படுத்தித் தயாரிக்கப்படும் எண்ணெய்oil-like extract from certain flora and fauna
தொக்கு1(உணவோடு சேர்த்து உண்ணப் பயன்படும்) மாங்காய் முதலியவற்றைத் துருவி எண்ணெய்யில் வதக்கிக் காரம் சேர்த்துத் தயாரிக்கப்படும் தொடுகறிstrong relish made from vegetables and mixed with tamarind, chillies, etc மாங்காய்த் தொக்கு/ தக்காளித் தொக்கு
தொக்கு2இளப்பம்butt (of ridicule)
தொக்கை தடிமன்fat
தொகு பொதுவாக உள்ள அம்சத்தை அடிப்படையாகக்கொண்டு சேகரித்தல்collect
தொகுதி (பல கதைகளையோ கட்டுரைகளையோ) தொகுத்து உருவாக்கப்பட்டதுcollection (of essays, stories, etc.)
தொகுப்பு ஒன்றாகத் தொகுக்கப்பட்டது அல்லது மொத்தமாகச் சேர்க்கப்பட்டதுcollection
தொகுப்பூதியம் சில வகைப் பணியாளருக்கு அடிப்படைச் சம்பளமோ அகவிலைப்படியோ இல்லாமல் மொத்தமாக அளிக்கப்படும் (மாத) ஊதியம்consolidated pay (without the distinction of basic pay, allowances, etc.)
தொகை குறிப்பிட்ட அளவு பணம்amount
தொங்கட்டான் தோட்டோடு சேர்த்துத் தொங்கவிடும் காதணிornament attached to and suspended from the ear stud
தொங்கல்1தொங்கட்டான்ornament suspended from the ear stud
தொங்கல்2(நூல் முதலியவற்றின்) முனை(வரிசையில்) கடைசி(of thread, etc.) end
தொங்கு மேல் முனையில் மட்டும் பிடிப்புடன் இருந்து அல்லது ஒன்றில் மாட்டப்பட்டுக் கீழ்நோக்கியவாறு இருத்தல்hang
தொங்குபாலம் (ஆற்றின் குறுக்கே இடையில் தூண்கள் இல்லாமல் கட்டப்படும்) இரு நீண்ட கம்பிகளுக்கு இடையே தொங்கிக்கொண்டிருக்கும் பாலம்suspension bridge
தொட்டதற்கெல்லாம் எடுத்ததற்கெல்லாம்for each and everything
தொட்டால்சுருங்கி ஏதாவது ஒன்று தன் மீது படும்போது மடங்கிக் குவிந்துகொள்ளும் இலைகளை உடைய செடி(the plant) touch-me-not
தொட்டி1(நீர், எண்ணெய் போன்றவற்றை வைத்துக்கொள்ள உதவும்) மரம், சிமிண்டு போன்றவற்றால் சதுரம், செவ்வகம் போன்ற வடிவில் செய்யப்பட்ட கொள்கலன்(water) trough
தொட்டில் தாங்கு கட்டைகளுக்கிடையே பக்கவாட்டில் ஆடக் கூடிய, குழந்தையைப் படுக்கவைக்கும் அமைப்புcradle
தொட்டு1(குறிப்பிடப்படும் காலம்) தொடங்கிbeginning from
தொட்டுக்கொள் (சுவைக்காக உணவோடு ஊறுகாய், சட்னி போன்றவற்றை) சேர்த்து உண்ணுதல்have
தொடக்கப் பள்ளி ஒன்று முதல் ஐந்து வகுப்புவரை உள்ள பள்ளிக்கூடம்primary school
தொடக்கம் (காலத்தில்) தொடங்கிய முதல் நிலைbeginning
தொடங்கிவை (சிறப்பு நிகழ்ச்சிமூலம் மாநாடு, விற்பனை முதலியவற்றின்) முதல் கட்டப் பணியை நடைபெறச்செய்தல்inaugurate
தொடங்கு (குறிப்பிட்ட ஒன்றைச் செய்ய அல்லது நிகழ்த்த) செயல்பாட்டில் இறங்குதல்/(ஒன்று நடைபெறுவதற்கான) சூழ்நிலை ஏற்படுதல்begin
தொடர்1(ஒரு செயல், நிலை முதலியவை முடிவு அடையாமல்) நீளுதல்continue
தொடர்2(வழக்கு) தொடுத்தல்file (a suit)
தொடர்3ஒன்றை அடுத்து ஒன்றாக அமையும் வரிசைrow
தொடர் உண்ணாவிரதம் குறிப்பிட்ட நேரத்திற்கு ஒருவர் அல்லது ஒரு குழு என்ற முறையில் இருந்து நடத்தும் உண்ணாவிரதம்fasting in relay (by way of protest)
தொடர் ஓட்டம் ஓட்டத் தூரத்தின் நான்கில் ஒரு பகுதியை ஒருவர் கடந்த பிறகு தன் கையில் உள்ள கட்டையைத் தந்து மற்றவர் அந்த இடத்திலிருந்து ஓட்டத்தைத் தொடர்ந்து நிறைவேற்றும் ஓட்டப் போட்டிrelay race
தொடர்கதை (வார, மாதப் பத்திரிகைகளில்) பகுதிபகுதியாகத் தொடர்ந்து வெளியிடப்படும் நீண்ட கதைserial (in a periodical)
தொடர்ச்சி இருக்க வேண்டிய வரிசையில் அல்லது முறையில் தொடர்ந்து இருப்பதுcontinuity
தொடர்ச்சியாக தொடர்ந்துcontinuously
தொடர்ந்து இடைவிடாமல்continuously
தொடர்பாக/தொடர்பான சம்பந்தமாகin connection with/relating to
தொடர்பு (பிறப்பு, நட்பு, தொழில் முதலியவற்றால் ஏற்படும்) உறவுcontact
தொடர்புகொள் (தொலைபேசி, கடிதம் மூலமாக அல்லது நேரடியாக ஒருவரோடு) செய்திப் பரிமாற்றம் கொள்ள வழிஏற்படுத்துதல்contact (through phone, letter, etc.)
தொடர்வட்டி கூட்டுவட்டிcompound interest
தொடர்வைப்புக் கணக்கு (வங்கி, அஞ்சல்நிலையம் முதலியவற்றில்) குறிப்பிட்ட ஆண்டுகள்வரை மாதாமாதம் தொடர்ந்து ஒரு தொகையைச் செலுத்திச் சேமித்து வட்டியோடு திரும்பப் பெறும் முறைrecurring deposit (in a bank, post office, etc.)
தொடரியல் வாக்கிய அமைப்பின் விதிமுறைகளையும் வாக்கியங்களுக்கு இடையிலான உறவையும் விளக்கும் மொழியியல் பிரிவுsyntax
தொடி (பெண்கள்) தோளை அடுத்த கைப் பகுதியில் அணிந்துகொள்ளும் பிடிப்பான அணி வகைa kind of armlet (worn by women in former times)
தொடுகறி முக்கிய உணவுடன் சேர்த்துச் சாப்பிடுவதற்காகத் தயாரிக்கப்படும் உணவுப் பொருள்dish prepared to go with courses of a meal
தொடுவானம் அடிவானம்horizon
தொடை (மனிதரில்) இடுப்புக்கும் முழங்காலுக்கும் இடையே உள்ள, (விலங்குகளில்) பின்னங்கால்களின் மேல் உள்ள சதைப்பற்று மிகுந்த பகுதி(of human beings) thigh
தொடைதட்டு (ஒருவர் சண்டை, தகராறு முதலியவற்றிற்கு) உற்சாகத்துடனும் பரபரப்புடனும் தயாராதல்get ready for a fight with gusto
தொடைநடுங்கி பயந்து நடுங்குபவன்timid person
தொடைநடுங்கு மிகவும் பயப்படுதல்feel timid
தொண்டர் ஒரு கட்சியிலோ பொதுநல அமைப்பிலோ ஊதியம் இல்லாமல் பணி செய்பவர்worker (in a party)
தொண்டு தன்னலம் கருதாமல், ஆதாயம் எதிர்பாராமல் ஒன்றின் நன்மைக்காக அல்லது வளர்ச்சி போன்றவற்றிற்காகச் செய்யும் பணிservice
தொண்டு கிழம் மிகவும் வயதான ஆண் அல்லது பெண்very old person
தொண்டு நிறுவனம் லாப நோக்கில் இல்லாமல் ஒன்றின் நன்மைக்காக அல்லது வளர்ச்சிக்காகப் பணியாற்றும் நிறுவனம்service organization or society
தொண்டை உணவும் காற்றும் தனித்தனியாக உட்செல்ல இரு திறப்புகளை உடையதும் குரலை வெளிப்படுத்துவதுமான கழுத்தின் உள் பகுதிthroat
தொண்டை அடைப்பான் பெரும்பாலும் குழந்தைகளுக்குக் காய்ச்சல், தொண்டைப்புண் முதலிய அறிகுறிகளுடன் தோன்றி மூக்கினுள்ளும் உதடுகளின் மீதும் மஞ்சளான சாம்பல் நிறப் படலத்தை உண்டாக்கும் தொற்றுநோய்diphtheria
தொண்டைக்கட்டு சாப்பிடவும் பேசவும் முடியாமல் தொண்டை கட்டியிருக்கும் நிலைsore throat
தொண்டைகட்டு (ஜலதோஷம், தொடர்ச்சியான பேச்சு முதலியவற்றினால்) சரியாகப் பேச முடியாதபடி குரல் கம்முதல்have a sore throat
தொண்ணூறு பத்தின் ஒன்பது மடங்கைக் குறிக்கும் எண்(the number) ninety
தொணதொண எரிச்சலையும் வெறுப்பையும் உண்டாக்குகிற வகையில் ஒன்றையே திரும்பத்திரும்பப் பேசுதல்pester
தொணதொணப்பு எரிச்சலை ஏற்படுத்தும் தொடர்ந்த பேச்சுnagging
தொத்தல் சதைப்பிடிப்பு இல்லாமல் மிகவும் ஒல்லியாக இருப்பதுskinny
தொந்தம் சம்பந்தம்connection
தொந்தரவு தொல்லைtrouble
தொந்தி பருத்து முன்தள்ளிக் காணப்படும் வயிறுpaunch
தொப்பல் உடல் முழுவதும் நீர் சொட்ட ஈரத்துடன் இருக்கும் நிலை(soaking) wet
தொப்பி தலையில் அணிந்துகொள்ளும், பல வடிவத்தில் இருக்கும் தலை உறைhat (of various shapes and sizes)
தொப்புள் வயிற்றின் நடுவில் சுழி போன்று குழிந்து காணப்படும் சிறு பகுதிnavel
தொப்புள்கொடி தாயின் கருப்பைக்குள் சிசுவை அதன் தொப்புள் வழியாக நஞ்சுக்கொடியுடன் இணைக்கும் குழாய்umbilical cord
தொப்பை தொந்திpot belly
தொப்பைதள்ளு வயிறு பெருத்து முன்பக்கம் சரிதல்develop a pot belly
தொம்பக்கூத்தாடி கழைக்கூத்தாடிacrobat
தொம்பன் கூடை முடைபவன்basket weaver
தொம்பை (நெல் முதலிய தானியம் சேமித்து வைப்பதற்குப் பயன்படும்) மூங்கிலால் செய்யப்பட்ட குதிர் போன்ற கூடைa huge bamboo basket (to store grains like paddy)
தொய் இறுக்கம் அல்லது விறைப்பு இழந்து தளர்ந்து தாழ்தல்become slack
தொய்வு (-ஆக, -ஆன) (இறுக்கம் அல்லது விறைப்பு இழப்பதால் ஏற்படும்) தளர்வுslackness
தொல் தொன்மையானancient
தொல்பொருள் முற்காலத்தில் வாழ்ந்த மக்களின் பண்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் கிடைக்கும் கட்டடப் பகுதிகள், பாண்டம், கருவி முதலியவை அல்லது அவற்றின் சிதைவுகள்artifacts of archaeological value
தொல்பொருளியல்/தொல்லியல் தொல்பொருள்களைக் கண்டறிந்து வெளிப்படுத்தும் ஆய்வுarchaeology
தொல்லை தொந்தரவுannoyance
தொலை1(எளிதில் கண்டுபிடிக்க முடியாதபடி) காணாமல்போதல்lose
தொலை2(பேசுபவரின் நோக்கில்) எரிச்சலையும் வெறுப்பையும் வெளிப்படுத்த உதவும் ஒரு துணை வினைan auxiliary verb expressing irritation, vexation, etc நான் புறப்படும் நேரத்தில் வந்துதொலைந்தான்
தொலை4(கட்டாயத்தினால் ஒரு செயலைச் செய்ய நேரும்போது) வெறுப்பையும் எரிச்சலையும் வெளிப்படுத்தும் ஒரு துணை வினைan auxiliary verb expressing impatience, irritation, etc
தொலை5தொலைவுdistance
தொலை எழுதி ஒரு முனையில் தட்டச்சு செய்து அனுப்பப்படும் செய்தியை மறு முனையில் தானாகத் தட்டச்சுப் பதிவு செய்யும் மின் கருவிteleprinter
   Page 21 of 23    1 19 20 21 22 23