Tamil to Tamil&English Dictionary

We are happy to provide you with the best Online Tamil to Tamil Dictionary/Translator.
For typing word in Tamil you can use our tool typing tool

  
Tamil WordTamil MeaningEnglish Meaning
தொலைக்காட்சி ஒரு நிகழ்ச்சியையோ காட்சியையோ ஒளிப்பதிவு செய்து மின்காந்த அலைகளாக மாற்றி ஒளிபரப்பி அதைப் படமாகக் காணும் முறைtelevision
தொலைக்காட்சிப் பெட்டி தொலைக்காட்சி நிலையத்திலிருந்து ஒளிபரப்பப்படுவதை உள்வாங்கிக் காட்சிகளாக மாற்றிக் காட்டும் (திரை முதலியவை உள்ள) பெட்டி போன்ற கருவிtelevision set
தொலைத்தொடர்பு தொலைபேசி, தந்தி முதலிய நவீனச் சாதனங்கள்மூலம் ஓர் இடத்திலிருந்து செய்திகளை அனுப்புதலும் பெறுதலுமான செயல்பாடுtelecommunications
தொலைதூரத் தொடர்பகம் தொலைபேசிமூலம் தொலைவில் உள்ள இடங்களை இணைக்கும் நிலையம்(of telephones) trunk exchange
தொலைதூரம் வெகு தூரம்long distance
தொலைநோக்கி தொலைவில் உள்ள பொருள்களைத் தெளிவாகப் பார்ப்பதற்கு ஏற்ற வகையில் ஆடிகள் பொருத்திய குழல் வடிவக் கருவிbinoculars
தொலைநோக்கு எதிர்காலத்தில் ஏற்பட வேண்டிய நலனைக் கருத்தில்கொண்ட கணிப்புfarsightedness
தொலைப்பதிவு தொலை எழுதிமூலம் அனுப்பப்படும் தந்தி முறைச் செய்திtelex
தொலைபேசி பேச்சொலியை மின்னலைகளாகவும் மின்னலைகளைப் பேச்சொலியாகவும் மாற்றிக் கம்பிமூலம் அனுப்பித் தொலைவில் உள்ளவர்கள் தொடர்புகொண்டு பேசிக்கொள்வதற்கு உதவும் கருவிtelephone
தொலைபேசித் தொடர்பகம் தொலைபேசிகளுக்கிடையே தேவைப்படுகிற இணைப்பை ஏற்படுத்தித் தருகிற நிலையம்telephone exchange
தொலைவு இரு இடங்களுக்கு அல்லது பொருள்களுக்கு இடையில் உள்ள அளவு(குறிப்பிடப்படும் ஒருவரிடமிருந்து அல்லது ஒன்றிலிருந்து) விலகியிருக்கும் அளவுதூரம்distance
தொழில் (பொதுவாக) வேலைprofession
தொழில் காய்ச்சல் தொழிலில் ஈடுபட்டுள்ள ஒருவரின் வளர்ச்சியைக் கண்டு அதே தொழில் செய்யும் மற்றொருவருக்கு ஏற்படும் பொறாமைprofessional jealousy
தொழில் துறை தொழில் துவங்குதல், மேம்படுத்துதல் முதலியவற்றைக் கவனிக்கும் அரசுத் துறை(of government) department of industry
தொழில் நிறுவனம் பெருமளவில் முதலீடு செய்து தொழில் நடத்தும் நிறுவனம்industrial concern
தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரங்கள் தொடர்புடைய தொழில்முறைக் கல்வியைப் பாடமாகக் கொண்டு தொழில் பயிற்சி அளிக்கும் கல்லூரிeducational institution providing training in trades connected with machines and tools
தொழில்நுட்பம் உற்பத்தியில் நேரடியாகப் பயன்படுத்தக் கூடிய தொழில்பற்றிய அறிவும் வழிமுறைகளும்technology
தொழில்மயமாக்கு (ஒரு நாட்டின் அல்லது அதன் ஒரு பகுதியின் பொருளாதார முன்னேற்றம் கருதித் தொழிற்சாலைகளைப் பெருக்குவதன்மூலம்) தொழில் வளர்ச்சி பெறச்செய்தல்industrialize
தொழில்முறை ஒரு தொழிலில் ஈடுபடுவதற்கு அல்லது ஒரு தொழிலை வளர்ப்பதற்குத் தேவையானதுvocational
தொழில் முனைவோர் மூலதனம் போட்டு ஒரு தொழிலைத் துவங்கத் திட்டமிடுபவர்entrepreneur
தொழில்வரி மாநகராட்சி, நகராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் எல்லைக்குள் தொழிலை மேற்கொண்டவர்கள் மீது விதிக்கும் வரிprofession tax
தொழிலாளர் உடல் உழைப்பைத் தந்து சம்பளம் பெற்று ஒரு தொழிலைச் செய்பவர் அல்லது தொழிற்சாலையில் இயந்திரங்களை இயக்கிப் பொருள் உற்பத்தியில் நேரடியாக ஈடுபடுபவர்(manual or industrial) worker
தொழிலாளி உடல் உழைப்பை வேண்டுகிற தொழிலைச் செய்பவர்labourer
தொழிற்கல்வி தொழில்முறைக்குத் தேவையான அடிப்படை அறிவையும் பயிற்சியையும் அளிக்கும் கல்விtechnical education
தொழிற்கூடம் தொழிற்சாலைindustrial plant or unit
தொழிற்சங்கம் தொழிலாளர்கள் தங்கள் நலனைப் பாதுகாத்துக்கொள்வதற்காக ஏற்படுத்திக்கொள்ளும் கூட்டமைப்புtrade union
தொழிற்சாலை இயந்திரங்களின் உதவியால் பொருள்களை (பெருமளவில்) உற்பத்திசெய்யும் இடம்factory
தொழிற்படு இயங்குதல்function
தொழிற்பாடு செயல்பாடுfunction
தொழிற்புரட்சி (ஐரோப்பாவில் குறிப்பாக இங்கிலாந்தில்) புதிய இயந்திரங்களின் கண்டுபிடிப்பால் தொழில் துறையில் ஏற்பட்ட பெரும் மாற்றம்industrial revolution
தொழிற்பெயர் (பெயர்த் தன்மையோடு வினைத் தன்மையும் உடையதாக) வினையிலிருந்து பெறப்பட்டு வழங்கும் பெயர்ச்சொல்verbal noun
தொழிற்பேட்டை குடியிருப்புப் பகுதிகளிலிருந்து விலகி, பெருமளவில் தொழிற்சாலைகள் அமைப்பதற்காக அரசு ஏற்படுத்தித் தந்திருக்கும் இடம்cluster of industries in a place set aside by the government
தொழு1(கடவுளை) வழிபடுதல்worship
தொழுகை (முஸ்லிம்கள்) மனத்தில் இறைவனை நினைத்து மெக்கா இருக்கும் திசையை நோக்கிச் செய்யும் வணக்கம்/(கிறித்தவர்) புனித நூலிலிருந்து வாசகங்களைக் கூறிச் செய்யும் வழிபாடுprayer
தொழுநோய் தோல் தடித்தல், தொடு உணர்வு இல்லாமல் போதல் முதலிய அறிகுறிகளுடன் தோன்றி நாளடைவில் உறுப்புச் சிதைவை ஏற்படுத்தும் நோய்leprosy
தொழுவம் (பெரும்பாலும்) மாடுகளைக் கட்டி வைக்கும் (கூரை போடப்பட்ட) இடம்cattle shed
தொழுவுரம் கால்நடைகளின் கழிவைச் சேமித்து நிலத்தில் இட்டுச் சேர்க்கும் உரம்farmyard manure
தொளதொள (தைக்கப்பட்ட ஆடைகளைக்குறித்து வருகையில்) உடலுக்கு ஏற்ற வகையில் கச்சிதமாக இல்லாமல் பெரிதாக உள்ள(of garments) loose
தொளதொள-என்று/-என்ற (தைக்கப்பட்ட ஆடையைக் குறிக்கையில்) உடலுக்குச் சற்றுப் பெரிதாக/உடலுக்குச் சற்றுப் பெரிதான(hanging) loosely/loose
தொற்று1பாய்ந்து பிடித்தல்catch hold of
தொற்று2(பெரும்பாலும் கலைச்சொல்லாக) (வைரஸ் போன்ற) நுண்கிருமிகளால் உடல்நலத்திற்கு ஏற்படும் பாதிப்புinfection
தொற்றுநோய் நீர், காற்று, ஈ முதலியவற்றின் மூலம் அல்லது ஒருவரைத் தொடுவதன்மூலம் பரவும் நோய்contagious disease
தொன்மை காலத்தால் மிகவும் முற்பட்டதுantiquity
தொன்றுதொட்டு மிக நீண்ட காலமாகfrom time immemorial
தொன்னை வாழை இலையையோ வேறு இலைகளையோ சுருட்டித் தைத்துச் செய்யப்பட்ட சிறு கிண்ணம் போன்ற சாதனம்plantain leaf or any other large leaf rolled into a cup-like form (for serving eatables)
தொனி1நேரடியாக வெளிப்படுத்தப்படாமல், குறிப்புப் பொருளாக வெளிப்படுதல்imply
தொனி2நேரடியாக இல்லாத குறிப்புப் பொருள் தரும் வெளிப்பாடுimplication
தோகை சில பறவைகளின் வால் பகுதியில் உள்ள நீண்ட இறகுகளின் தொகுதிtail feathers (of a peacock, etc.)
தோசை அரிசி மாவையும் உளுந்து மாவையும் குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து புளிக்கவைத்துத் தோசைக் கல்லில் வட்டமாக ஊற்றிச் சுட்டு எடுக்கும் உணவுப் பண்டம்griddle cake (by roasting the paste of rice and blackgram)
தோசைக் கல் தோசை சுடுவதற்கான வட்ட வடிவ இரும்புத் தட்டுgriddle for making தோசை
தோசைத் திருப்பி தோசைக் கல்லில் உள்ள தோசையைப் புரட்டிப் போடவும் எடுக்கவும் பயன்படும் பட்டையான முன்புறமும் கைப்பிடியும் உடைய ஒரு வகைக் கரண்டிladle-like utensil for turning griddle cakes
தோட்டக்கலை பூ, காய், பழம் ஆகியவற்றைத் தரும் செடிகளையும் மரங்களையும் வளர்த்துப் பராமரிக்கும் முறைgardening
தோட்டக்கால் புன்செய்ப் பகுதியில் கிணற்றுப் பாசனம்மூலம் சாகுபடிசெய்யப்படும் நிலம்garden land
தோட்டந்துரவு தோட்டமும் அது போன்ற பிறவும்landed property
தோட்டப் பயிர் மேட்டுப்பாங்கான நிலத்தில் நீர்ப் பாய்ச்சி விளைவிக்கும் பயிர்garden land crop
தோட்டம் மலர்ச் செடிகள் அல்லது (சிறிய அளவில்) காய்கறிச் செடிகள் பயிரிடப்படும் இடம்garden (adjacent to a house)
தோட்டா துப்பாக்கிக் குண்டுcartridge
தோட்டி தெரு முதலியவற்றைச் சுத்தம் செய்யும் ஊழியர்sanitary worker
தோடா ஆண்கள் கையில் மணிக்கட்டுப் பகுதியில் அணிந்துகொள்ளும் வளையல் போன்ற பெரிய உலோக வளையம்large bracelet (worn on the wrist by men as a mark of honour)
தோடு1(பெண்கள் அணியும் வைரம் முதலிய கல் பதிக்கப்பட்ட) வட்ட வடிவத் தங்கக் காதணிear stud (normally studded with precious stones, such as diamonds and worn by women)
தோடு2(புளியம்பழம் போன்றவற்றின்) மேல்புற ஓடுshell (of certain fruits, esp
தோண்டி (தண்ணீர் எடுப்பதற்கான) மண் அல்லது உலோகக் கலம்(earthen or metal) pot (for drawing and carrying water)
தோண்டு (கையால் அல்லது கருவியால்) மண்ணை (பள்ளம் ஏற்படும்படி) அகற்றுதல்dig (the earth so as to make a hole or pit)
தோணி துடுப்பால் தள்ளப்படும் படகு(rowing) boat
தோது (ஒன்றைச் செய்வதற்கு ஏற்ற) வசதிconvenience
தோதுப்படு சௌகரியப்படுதல்be convenient
தோப்பு ஒரே வகையைச் சேர்ந்த மரங்கள் நிறைய வளர்க்கப்பட்டுள்ள இடம்grove
தோப்புக்கரணம் இடது கைவிரலால் வலது காதையும் வலது கைவிரலால் இடது காதையும் பிடித்துக்கொண்டு முழங்கால் மடங்குமாறு உட்கார்ந்து எழுந்திருத்தல்the act of squatting and standing alternately, holding the ears with hands in a cross-wise manner (as a mode of worship or punishment)
தோய்1(துணி, ஆயுதம் முதலியவற்றில் நீர், இரத்தம் முதலியவை) படிதல்be soaked
தோய்2(நீர், பால் முதலிய திரவங்களில்) முக்கி நனைத்தல்dip
தோரணம் (விழாக் காலத்தில்) மாவிலை, தென்னங்குருத்து முதலியவற்றை வரிசையாகக் கயிற்றில் இணைத்துத் தொங்கவிடப்படுவதுfestoon of mango leaves, palm leaves, etc கல்யாணப் பந்தல் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது
தோரணை (-ஆக, -ஆன) (ஒருவர் வகிக்கும் பதவி, மனத்தில் உள்ள எண்ணம் முதலியவற்றை வெளிப்படுத்தும்) பாவனைposture
தோராயம் (எண்ணிக்கையை அல்லது அளவைக் குறிக்கையில்) சரியானதற்குச் சற்றுக் கூடவோ குறையவோ உள்ளதுapproximation
தோல்1(சண்டை, பந்தயம் முதலியவற்றின் முடிவில்) வெற்றி (வாய்ப்பை) இழத்தல்be defeated
தோல்2(மனிதன், விலங்கு முதலியவற்றின்) தசையை உறை போல் மூடியுள்ள மெல்லிய பகுதிskin
தோல்வி (சண்டை, பந்தயம் முதலியவற்றின் முடிவில் ஒருவருக்கு ஏற்படும்) வெற்றி இழப்புdefeat
தோலான்துருத்தி (மிகவும் அலட்சியப்படுத்திக் கூறுகையில்) எந்த விதத் தகுதியும் இல்லாத ஆட்கள்tom, Dick and Harry
தோழமை நட்புfriendship
தோழர் (சில அரசியல் இயக்கங்களில்) ஓர் உறுப்பினர் மற்றோர் உறுப்பினரை அல்லது ஆதரவாளரை அழைக்கும் சொல்(in certain political movements) comrade
தோழன் நண்பன்friend
தோள் (மனித உடலில்) கழுத்தின் இரு பக்கங்களிலும் நீண்டு அமைந்து கைகள் துவங்கும் பகுதிshoulder
தோள்கொடு (ஒரு செயலில் ஈடுபட்டிருப்பவருக்கு) உதவிசெய்தல்extend support
தோள்பட்டை தோளின் தட்டையான பகுதிshoulder blade
தோள்பை தோளில் தொங்கவிடும்படி பட்டை வைத்துத் தைத்த பைshoulder bag
தோற்கடி (போட்டியில்) தோல்வி அடையச்செய்தல்(in sports, competition, etc.) defeat
தோற்பாவை ஒளி ஊடுருவக் கூடிய வகையில் தோலால் செய்யப்பட்டு குச்சி, கயிறு போன்றவற்றால் ஆட்டப்படும் (கதைப் பாத்திர) பொம்மைleather puppet
தோற்றம் பார்வைக்குத் தெரியும் புற வடிவம்figure
தோற்று புலப்படுதல்be seen or perceived
தோற்றுவாய் (ஒன்றின்) ஆரம்பம்beginning
தோற்றுவி (ஒன்றை) உருவாக்குதல்cause
தோன்றல் வம்சம் நிலைக்கப் பிறந்தவன் descendent
தோன்று (பார்வைக்கு) தெரிதல்appear
தோஷம் (கிரக நிலை, தீய செயல் போன்றவற்றின்) தீங்கு விளைவிக்கக் கூடிய அம்சம்malignant influence (believed to be the effect of the planetary position at the time of birth or from evil deed)
   Page 22 of 23    1 20 21 22 23