Tamil to Tamil&English Dictionary

We are happy to provide you with the best Online Tamil to Tamil Dictionary/Translator.
For typing word in Tamil you can use our tool typing tool

  
Tamil WordTamil MeaningEnglish Meaning
தலைமகள் தலைவிheroine
தலைமகன் தலைவன்hero
தலைமறைவாகு (காவல்துறையினரால் அல்லது எதிரிகளால் பிடிக்கப்பட்டுவிடும் சாத்தியம் இருக்கும்போது) கண்டுபிடிக்க முடியாதபடி ஒளிந்து வாழுதல்go underground or into hiding
தலைமறைவு (காவல்துறையினரால் அல்லது எதிரிகளால் தேடப்பட்டுவரும் ஒருவர் அல்லது அரசால் தடைசெய்யப்பட்ட இயக்கம்) ரகசியமாகச் செயல்படும் நிலைbeing secret
தலைமாடு (படுத்த நிலையில் இருக்கும் ஒருவரின்) தலை இருக்கும் பகுதிplace near the head (of a person lying)
தலைமுறை ஒருவர் பிறந்து வளர்ந்து மற்றுமொரு சந்ததியை உருவாக்கிவிடும்வரை உள்ள (இருபத்தைந்து அல்லது முப்பது ஆண்டு) காலப் பகுதிgeneration
தலைமை1(ஒன்றின் நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டு நிர்வகிக்கும் வகையில் அல்லது ஒன்றை முன்னின்று நடத்தும் வகையில்) அதிகாரங்கள் நிறைந்த முதன்மைleadership
தலைமை2பல பிரிவுகளில் பல விதப் பொறுப்புடையவர்களை நிர்வகிக்கும் முதன்மைப் பொறுப்புடைய/பல கிளைகளைத் தன் நிர்வாகப் பொறுப்பின் கீழுடைய(of officials) chief/(of office) main
தலைமை ஆசிரியர் ஒரு பள்ளியின் அன்றாட நிர்வாகத்துக்கும் பாடம் கற்பிக்கப்படும் பணிக்கும் பொறுப்பான முதன்மைப் பதவி வகிப்பவர்headmaster (of a school)
தலைமை உரை (விழா, நிகழ்ச்சி, கூட்டம் முதலியவற்றிற்குத்) தலைமை தாங்குபவர் நிகழ்த்தும் உரைaddress of the president or the chairman (of the meeting)
தலைமைச் செயலகம் ஓர் அரசு முதலியவற்றின் மொத்தமான செயல்பாடுகளையும் அவற்றின் கிளைகளின் செயல்பாடுகளையும் ஒருங்கிணைத்து நிர்வகிக்கும் முதன்மை அலுவலகம்headquarters
தலைமைதாங்கு (நிகழ்ச்சி, போராட்டம் போன்றவற்றை அல்லது ஓர் அமைப்பை) வழிநடத்தும் பொறுப்பு ஏற்றல்head or lead (a demonstration, etc.)
தலையங்கம் (ஒரு பத்திரிகை சார்பாக அதன் ஆசிரியர் அல்லது ஆசிரியர் குழு) நடப்புப் பிரச்சினைகுறித்துக் கருத்தைத் தெரிவித்து எழுதும் கட்டுரைeditorial
தலையணி (பெண்கள்) தலையில் அணிந்துகொள்ளும் (நெற்றிச்சுட்டி போன்ற) நகை/(நாடக நடிகர்கள்) தலையில் வைத்துக்கொள்ளும் (கிரீடம் போன்ற) அலங்காரம்(of women) jewel worn on the head/(of stage actors) headgear (such as crown)
தலையணை (படுக்கும்போது தலையைச் சற்று உயரமாக வைத்துக்கொள்வதற்காக) பஞ்சு போன்ற மென்மையான பொருள் அல்லது காற்று அடைக்கப்பட்ட பைpillow
தலையாட்டி பொம்மை எந்தத் திசையில் ஆட்டிவிட்டாலும் விழுந்துவிடாமல் பழைய நிலைக்கு வந்துவிடக் கூடிய உருண்டையான அடிப்பாகம் கொண்ட பொம்மைa doll which sways from side to side when tilted
தலையாட்டு சம்மதத்தை அல்லது உடன்பாட்டை எளிதில் தெரிவித்தல்nod (as a gesture that he would agree to any proposal without thinking it over)
தலையாய முதன்மை வாய்ந்தforemost
தலையாரி (கிராமத்தில்) விளைந்த பயிர் திருட்டுப்போகாமல் காவல்காத்தல், பாசனத்தை மேற்பார்வையிடுதல் முதலிய வேலைகளைச் செய்பவர்a village servant who guards the crops against theft and stray animals
தலையிடு (ஏதேனும் ஒரு காரணத்தை முன்வைத்து) ஒதுங்கி இருக்காமல் இறங்கிச் செயல்படுதல்interfere
தலையில்கட்டு (தனக்கு விருப்பம் இல்லாத வேலையை மற்றொருவர்) செய்யும்படியாகவைத்தல்(தேவையற்ற பொறுப்பையோ குறைபாடு உடைய பொருளையோ) ஏற்கச்செய்தல்palm (a work or thing) off (on s
தலையீடு தலையிடும் செயல்interference
தலையெழுத்து (வாழ்க்கையை நிர்ணயிப்பதாகக் கருதப்படும்) விதிfate
தலையைவாங்கு (சிறிய தவற்றுக்கு அல்லது குற்றத்திற்குப் பெரிய தண்டனை கிடைக்கப்போவதில்லை என்ற துணிச்சலில் கூறும்போது) தலையை வெட்டுதல் போன்ற கடுமையான தண்டனை தருதல்(in a context where one is convinced that a severe punishment cannot be given to a small mistake or crime) cause heads to roll
தலைவணங்கு (உரிய முறையில்) மதித்தல்give (due) respect
தலைவர் (அணி, கட்சி முதலியவற்றின் செயல், போக்கு, நிர்வாகம் முதலியவற்றிற்குக் காரணமாக இருந்து) வழிநடத்திச் செல்பவர்leader
தலைவலி தலைப் பகுதியில் ஏற்படும் தொல்லை மிகுந்த வலிheadache
தலைவாசல் (வீட்டின் உள்ளே நுழையும்போது இருக்கும்) முன் வாசல்front door
தலை வாழையிலை (முழு வாழையிலையில்) நுனிப் பகுதி இருக்குமாறு நறுக்கிய இலைத்துண்டுthe piece of plantain leaf with a pointed end
தலைவி தலைவன் என்பதன் பெண்பால்feminine of தலைவன்
தலைவிரிகோலம் (பயம், துக்கம் முதலியவற்றால் பாதிக்கப்பட்டு) விரிந்து கிடக்கும் முடியுடன் கூடிய அலங்கோலம்(of woman) distraught looks with dishevelled hair
தலைவிரித்தாடு (பஞ்சம், லஞ்சம், வன்முறை முதலியவை) கட்டுக்கடங்காமல் பரவிக் காணப்படுதல் அல்லது நிலவுதல்(of famine, bribe, etc.) be rampant
தவக்கம் தாமதம்delay
தவசி முனிவர்ascetic
தவசிப்பிள்ளை சைவச் சமையல் செய்பவர்cook engaged for preparing vegetarian food
தவணை தொகையை ஏதேனும் ஒரு விகிதப்படி பகுத்துக்கொண்டு குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்துவதுhire purchase
தவம் (முனிவர் போன்றோர்) ஒன்றை அடையக் கருதி ஐம்புலன்களையும் அடக்கி உடலை வருத்தி மனத்தை ஒருமுகப்படுத்திச் செய்யும் தியானம்(religious) austerities (to obtain that which is not normally obtainable)
தவலை (நீர் வைத்துக்கொள்ளவும் வெந்நீர் போடவும் பயன்படும்) அகன்ற வாயும் உருண்ட அடிப்பகுதியும் கொண்ட பெரிய உலோகப் பாத்திரம்pot made of metal with a wide mouth and a tapering bottom (to store or heat water)
தவழ் (குழந்தை நடப்பதற்குப் பழகும் முன்னர் தரையில்) கைகளை ஊன்றிக் கால் முட்டிகளைப் பயன்படுத்தி மெதுவாக நகர்தல்(of children) crawl
தவளை நீண்ட பின்னங்கால்களால் நிலத்தில் தாவியும் நீரில் நீந்தியும் செல்லும் சிறு பிராணிfrog
தவளைச்சொறி வலியோ புண்ணோ இல்லாமல் உடம்பில் கருப்பாகத் தடிப்புடன் சிறிய முள் போன்று இருக்கும் ஒரு வகைத் தோல் நோய்a kind of skin eruption
தவறணை மதுபானக் கடைtavern
தவறவிடு (பேருந்து, ரயில் முதலியவற்றில் ஏறாமல் அல்லது வேண்டிய இடத்தில் இறங்காமல்) விடும்படி நேர்தல்miss (a train, etc or a place where one has to get down)
தவறாக (தவறு என்று) தெரியாமல்by mistake
தவறாமல் எந்தக் காரணத்தை முன்னிட்டும் தவிர்த்துவிடாமல்without fail
தவறிப்போ இறத்தல்pass away
தவறு2(-ஆக, -ஆன) தப்புmistake
தவி (இல்லாமை, இயலாமை அல்லது இக்கட்டு முதலியவை ஏற்படுத்தும் சூழலில்) வருந்திக் கலங்குதல்be in distress
தவிடு (நெல், கோதுமை முதலிய தானியங்களை அரைத்து எடுக்கும்போது கிடைக்கும்) உமி அல்லாத கழிவுப் பொருள்bran
தவிடுபொடியாகு (ஒரு பொருள் உடைந்து அல்லது நொறுங்கி) சிறுசிறு துண்டுகளாதல்go to pieces
தவிப்பு (இல்லாமை, இயலாமை முதலியவற்றால்) வருந்திக் கலங்கும் நிலைa state of distress and helplessness
தவிர் (ஒன்று) நிகழாதவாறு பார்த்துக்கொள்ளுதல்avoid
தவிர்ந்த நீங்கலாகexcept
தவிரவும் (கூறப்பட்டது மட்டுமல்லாமல்) மேலும்further
தவில் ஒருபுறம் கையாலும் மறுபுறம் சிறு கோலாலும் அடித்து (நாதஸ்வரத்தோடு) வாசிக்கப்படும் சுற்றளவில் பெருத்த உருளை வடிவத் தோல் வாத்தியம்a kind of two headed drum played by tapping one side with the hand and the other with a stick (as an accompaniment to நாதஸ்வரம்)
தழல் தணல் live coals (of fire)
தழுதழு (துக்கம் முதலிய உணர்ச்சி மேலீட்டினால் குரல்) நெகிழ்தல்(நாக்கு) குழறுதல்(of voice or tongue) falter (as when one is overwhelmed by emotion)
தழும்பு (காயம், கொப்பளம் போன்றவை ஆறிய பின்) தோலில் இருந்ததற்கு அடையாளமாகத் தெரியும் பகுதிscar
தழுவல் (நாடகம், நாவல் முதலியவற்றைக் குறிக்கையில்) தழுவி உருவாக்கப்படுவது(of a novel, play,etc.) adaptation
தழுவிய (குறிப்பிடப்படும் பகுதி) முழுவதிலும்breadth and length (of a place)
தழுவு (அன்பை வெளிப்படுத்தும் வகையில் ஒருவரை) மார்போடு சேர்த்தல்embrace
தழை1தளிர்த்தல்sprout
தழை2(தளிர், இலை முதலியவற்றை அதிக அளவில் பெற்று) செழித்தல்(of plants) grow luxuriantly
தழை3(இருக்கும் நிலையிலிருந்து) தாழ்த்துதல்bring down (tucked up clothes)
தழை4(சிறு குச்சியோடு கூடிய) இலைக் கொத்துsprigs (as a fodder, etc.)
தழைச்சத்து பயிரின் மொத்த வளர்ச்சிக்கான தாவரச் சத்துnitrogen (for plants)
தழையுரம் அடியுரமாக இடப்படும் மரங்களின் தழைgreen manure
தள்ளாடு (நிற்கும்போது அல்லது நடக்கும்போது சுயக் கட்டுப்பாடு குறைந்து) அங்குமிங்கும் சாய்தல்falter
தள்ளாத காலம்/தள்ளாத வயது (நடக்கக்கூடச் சிரமப்படும்) முதுமைக் காலம்old age
தள்ளாமை செயல்பட முடியாத முதுமைinfirmity (due to old age)
தள்ளி (ஒரு பக்கமாக) விலகி/(குறிப்பிடப்படும்) தூரத்தில்(stand) aside/away
தள்ளிப்போ (முன்னரே நடைபெற வேண்டிய நிகழ்ச்சி மற்றொரு சந்தர்ப்பத்தில் நடைபெறும் வகையில்) பிந்துதல்get put off or delayed
தள்ளிப்போடு (குறிப்பிட்ட காலத்தில் செய்ய வேண்டிய நிகழ்ச்சியை அல்லது பணியைப் பின்னொரு சமயத்தில் செய்யலாம் என்று) விட்டுவைத்தல்defer
தள்ளிவிடு (தான் விரும்பாததை அல்லது தனக்கு வேண்டாததை மற்றொருவரிடம்) சேரச்செய்தல்shift
தள்ளிவை தள்ளிப்போடுதல்postpone
தள்ளு1(ஒருவரை அல்லது ஒன்றை) ஒரு திசையில் விசையுடன் உந்துதல்/(கீழே) விழுமாறு செய்தல்push
தள்ளு2முதன்மை வினை குறிப்பிடும் செயல் அளவுக்கு அதிகமாக நிகழ்வதைக் குறிக்கும் துணை வினைan auxiliary verb to indicate that the action expressed in the main verb is unending
தள்ளுபடி (பொருள்களின் விற்பனைகுறித்து வருகையில்) (குறித்த விலையைவிடக் குறைத்து விற்பதால் தரும்) சலுகைdiscount
தள்ளுபடிசெய் (வழக்கு, மனு, தீர்மானம் முதலியவற்றைத் தகுதி இல்லை என்று) நிராகரித்தல்reject (a petition)
தள்ளுவண்டி (பொருள்களை வைத்து அல்லது ஆள் அமர்ந்து) கையினால் தள்ளிச் செல்லக் கூடிய வகையில் சக்கரங்களை உடைய வண்டி(generally any type of) push cart
தளகர்த்தர் தளபதிgeneral (of an army)
தளபதி (நாட்டின்) படைகளை அல்லது படைப்பிரிவை நிர்வகிக்கும் தலைமைப் பொறுப்பு ஏற்றவர்general (of an army)
தளபாடம் மேஜை, நாற்காலி முதலியவைfurniture
தளம் (கட்டடம் போன்றவற்றின்) தரைfloor
தளர்ச்சி சோர்வுtiredness
தளர்நடை (குழந்தை ஆரம்பத்தில்) தட்டுத்தடுமாறி நடக்கும் நடைtoddling (of a child)
தளவாடம் (போர் செய்யத் தேவையான) ஆயுதம் முதலிய சாதனம்warfare materials
தளவாய் (அரசனின்) படைத்தலைவன்military commander (of a king)
தளிர்1துளிர் விடுதல்sprout
தளிர்2(மரம், செடி, கொடி ஆகியவற்றில்) புதிதாகத் துளிர்த்திருக்கும் மென்மையான இளம் இலைtender shoot
தளுக்கு (பேச்சு, உடல் அசைவு முதலியவற்றில் வெளிப்படுத்தும்) மிகையான கவர்ச்சி(in speech, body movements) showiness
தளை1கட்டுப்படுத்தும் தடைbondage
தளை2செய்யுளின் ஒரு சீரின் இறுதி அசைக்கும் அதனை அடுத்து வரும் சீரின் முதல் அசைக்கும் உள்ள ஓசை அடிப்படையிலான தொடர்புmetrical rhythm between the last syllable of any foot and the first syllable of the succeeding one
தளைநார் (பனை, தென்னை போன்ற) மரத்தில் ஏறுவதற்கு வசதியாகக் கால்களில் அணிந்துகொள்ளும் கயிற்று வளையம்a band of rope used by tree climbers
தற்காத்துக்கொள் (எதிரியின் தாக்குதலிலிருந்து தன்னை) பாதுகாத்துக்கொள்ளுதல்protect (oneself)
தற்காப்பு (தன்னை) பாதுகாத்துக்கொள்ளச் செய்யும் ஆயத்தம்self protection
தற்காலம் தான் வாழும் காலம்contemporary period
தற்காலிகம் குறிப்பிட்ட (குறைவான) கால வரையறைக்கு உட்பட்டதுtemporary
தற்காலிகமாக இப்போதைக்குfor the time being
தற்குறி எழுத, படிக்கத் தெரியாத நபர்illiterate person
   Page 3 of 23    1 2 3 4 5 23