Tamil to Tamil&English Dictionary

We are happy to provide you with the best Online Tamil to Tamil Dictionary/Translator.
For typing word in Tamil you can use our tool typing tool

  
Tamil WordTamil MeaningEnglish Meaning
நடைபோடு பெருமிதத்துடன் முன்னேறுதல்take good strides
நடைமுறை (ஒரு திட்டம், கொள்கை முதலியவற்றை) செயல்படுத்தும் முறைpractice
நடைமுறைப்படுத்து (ஆட்சி, திட்டம், சட்டம் போன்றவற்றை) நடைமுறைக்குக் கொண்டுவருதல்bring into force
நடையன் நாய்dog
நடையியல் (பேச்சு மொழி, எழுத்து மொழி ஆகியவற்றின்) நடையைப்பற்றி ஆராயும் ஒரு மொழியியல் பிரிவுstylistics
நடையைக்கட்டு இருக்கும் இடத்தைவிட்டு நீங்குதல் அல்லது புறப்படுதல்buzz off
நடைவண்டி (குழந்தை நடை பழகுவதற்காக) நின்று பிடிப்பதற்கு ஏதுவாக மரச் சட்டத்தை உடைய மூன்று சிறிய சக்கரங்களைக் கொண்ட (விளையாட்டு) சாதனம்wooden frame with three wheels (which a child pushes along to support itself while learning to walk)
நண்டு இடுக்கியின் முன்பகுதி போன்ற இரு முன்னங்கால்களையும், ஓடு மூடிய உடலையும் கொண்ட நீரில் வாழும் உயிரினம்crab
நண்டுசிண்டுகள் சிறு குழந்தைகள்kids
நண்பகல் மதியம்noon
நண்பன் நட்பால் நெருங்கியவன்friend
நத்தார் இயேசு பிறந்த நாளைக் கொண்டாடும் பண்டிகைchristmas
நத்தை மிருதுவான உடலைத் தன் உடல் மேல் இருக்கும் சுருள் வடிவ ஓட்டினுள் நுழைத்துக்கொள்ளக் கூடியதும் மிகவும் மெதுவாக ஊர்ந்து செல்லக் கூடியதுமான ஒரு வகை உயிரினம்snail
நதி ஆறுriver
நதிமூலம் நதி உற்பத்தியாகிற இடம்source of river
நந்தவனம் (பெரும்பாலும் கோயிலை அல்லது அரண்மனையைச் சார்ந்த) பூந்தோட்டம்flower garden (belonging to a temple or a palace)
நந்தாவிளக்கு (பெரும்பாலும் கோயில் கருவறையினுள்) எப்போதும் எரிந்துகொண்டிருக்கும் விளக்குa lamp that burns ceaselessly (in the sanctum sanctorum of temples)
நந்தி (சிவன் கோயிலில்) சன்னிதியின் நேரெதிராக ஒரு பீடத்தின் மேல் படுத்திருப்பது போல் வடிவமைக்கப்பட்ட (சிவனின் வாகனமான) காளைthe stone image of bull, the mount of Siva, placed on a pedestal facing the sanctum sanctorum
நந்தியாவட்டை (பூஜைக்குப் பயன்படுத்தும்) மணம் இல்லாத வெள்ளை நிறப் பூ/மேற்குறிப்பிட்ட பூவைத் தரும் ஒரு வகைக் குத்துச் செடிeast Indian rosebay (the flower or the plant, the flower used in prayers)
நப்பாசை (நிறைவேறாது அல்லது நிறைவேறுவது கடினம் என்று தெரிந்தும்) ஒன்று எப்படியாவது நிகழாதா என்ற எதிர்பார்ப்புfond hope
நபர் (ஆண் பெண், பெரியவர் சிறியவர் போன்ற பாகுபாடு இல்லாமல் பொதுவாகக் குறிக்கையில்) மனிதன்person
நபும்சகன் ஆண்தன்மை இழந்தவன்man who is impotent
நம்பகம் நம்பத் தகுந்ததுtrustworthiness
நம்பிக்கை (-ஆன) (ஒருவரின் அல்லது ஒன்றின் மேல்) அனுபவம் ஏற்படுத்தும் உறுதிfaith
நம்பிக்கை நட்சத்திரம் (குறிப்பிட்ட ஒரு துறையில்) சாதனை நிகழ்த்தும் விதத்தில் சிறப்பாகச் செயல்படுவார் என்று நம்பப்படும் நபர்person showing great promise
நம்பிக்கையில்லாத் தீர்மானம் அமைச்சரவையின் மேல் நம்பிக்கை இல்லை என்று கூறி அவையில் எதிர்க்கட்சியினர் கொண்டு வரும் தீர்மானம்motion of no-confidence (moved by the opposition)
நம்பிக்கை வாக்கு அமைச்சரவையின் மேல் நம்பிக்கை இருக்கிறது என்பதை உறுதிசெய்யப் பிரதமர் அல்லது முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்தின் மீது அவை உறுப்பினர்கள் அளிக்கும் வாக்குthe casting of vote in a vote of confidence
நம்பிக்கை வாக்கெடுப்பு நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்படும்போது நடத்தப்படும் வாக்கெடுப்புvote of confidence
நம்பு உறுதியான எண்ணம் கொள்ளுதல்believe
நமர் (அப்பளம் முதலிய உணவுப் பொருள்கள் அல்லது பட்டாசு முதலியவை) ஈரம் ஏற்று மொரமொரப்புத் தன்மையை அல்லது தீப் பற்றும் தன்மையை இழத்தல்lose crispness
நமாஸ் தொழுகைprayer
நமூனா (விபரங்கள் இந்த வரிசையில் தரப்பட வேண்டும் என்று காட்டும் வகையில் அமைக்கப்படும்) விண்ணப்பப் படிவம்form (of application)
நமை நமைச்சல் ஏற்படுதல்itch
நமைச்சல் உடலில் ஏற்படும் சொறியத் தூண்டும் உணர்வுitch
நய (குறிப்பிட்ட காரணத்திற்காக ஒருவரிடம் பேசுதல், பழகுதல் போன்றவற்றில்) கனிவை வெளிப்படுத்துதல்cajole
நயம்1(கதை, கவிதை முதலியவற்றில்) மகிழ்விப்பதாக அமையும் தன்மை(artistic, literary) beauty
நயம்2(பொருளின்) விலைக் குறைவு(of price of commodities) inexpensiveness
நயவஞ்சகம் இனிமையாகப் பழகித் தீங்கு விளைவிக்கும் விதம்duplicity
நயனம் கண்eye
நர்த்தகி (தொழில்முறை) நாட்டியக்காரி(professional) dancer
நர்த்தனம் நடனம்dance
நரகம் (பாவம் செய்தவர்கள் இறந்த பிறகு சென்று சேர்வதாக நம்பப்படும்) கொடுமையும் துன்பங்களும் நிறைந்த உலகம்hell
நரகல் மலம்excrement
நரபலி (தெய்வத்துக்குக் காணிக்கையாகச் செலுத்தும்) மனித உயிர்ப் பலிhuman sacrifice
நரம்பியல் நரம்புகளின் அமைப்பையும் செயல்பாடுகளையும் நோய்களையும் பற்றிய மருத்துவத் துறைneurology
நரம்பு மூளையிலிருந்து உடலின் பல பாகங்களுக்கும் உணர்வுகளைக் கொண்டுசெல்லும் மெல்லிய இழைnerve
நரம்புத் தளர்ச்சி (கட்டுப்பாடு இல்லாமல் உடல் உறுப்புகள் ஆடுகிற வகையில்) நரம்பில் ஏற்படும் உறுதிக் குலைவுnervous debility
நரம்பு மண்டலம் (சிந்தித்தல், உணர்வுகளைப் புரிந்துகொள்ளுதல், உறுப்புகளை அசைத்தல் போன்ற செயல்களைச் செய்யும்) மூளை, தண்டுவடம், நரம்புகள் ஆகியவற்றை உள்ளடக்கிய அமைப்புnervous system
நரமாமிசம் மனித உடலில் உள்ள சதைhuman flesh
நரிக்குறத்தி நரிக்குறவன் என்பதன் பெண்பால்feminine of நரிக்குறவன்
நரிக்குறவன் நரி முதலிய சிறிய காட்டு விலங்குகளையும் பறவைகளையும் வேட்டையாடி விற்றுப் பிழைப்பவன்a person who hunts foxes and certain birds and makes a living by selling them
நரை1(பெரும்பாலும் முதுமையின் அறிகுறியாக முடி) வெள்ளை நிறமாக மாறுதல்(of hair) grow grey
நரை2வெள்ளை நிறமாக மாறிய முடிgrey hair
நரைதிரை (முதுமையின் அறிகுறியான) நரை முடியும் தோல் சுருக்கமும்grey hair and wrinkles (as signs of old age)
நல் நல்ல (என்பதன் முதல் மூன்று பொருளிலும்)see நல்ல ( first three senses)
நல்கு (பெரும்பாலும் பொருள் அல்லாத பிறவற்றை) அளித்தல்bestow
நல்கை (கல்வி நிறுவனங்களுக்கு) நிதி உதவிgrant (to educational institutions)
நல்ல (மனிதர்களிடம்) எதிர்பார்க்கப்படும் ஒழுங்கு, முறை முதலியவை கொண்டமைந்த/(பிறவற்றில்) மகிழ்ச்சியையும் மன நிறைவையும் தரக் கூடிய தன்மை கொண்ட(a positive attribute) good
நல்லகாலமாக அதிர்ஷ்டவசமாகluckily
நல்லபடியாக (வாழ்க்கையில்) வசதிகளுடன் சிறப்பாகprosperously
நல்லபாம்பு தலையை உயர்த்திப் படம் எடுத்துச் சீறக் கூடிய விஷப் பாம்புcobra
நல்லவிளக்கு கடலை எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி, திரி போட்டு சாமிக்கு முன் ஏற்றிவைக்கும் விளக்குa lamp with a wick burnt with certain kinds of oil, placed in front of a deity (at home)
நல்லுறவு (நாடுகளுக்கிடையே அல்லது அமைப்புகளுக்கிடையே) இணக்கமான தொடர்புfriendly and happy relations (between countries, etc.)
நல்லெண்ணம் (நாடுகளுக்கிடையே) நல்லுறவைப் பேணும் நோக்கம்good will
நல்லெண்ணெய் எள்ளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்sesame oil
நலங்கு திருமணத்தில் மணமக்களை அமரச்செய்து சந்தனம் முதலியவை பூசி (மகிழ்ச்சி தரும்) சில விளையாட்டுகள் விளையாடச்செய்யும் சடங்குa ritual game at the time of wedding, played by the bride and the groom
நலமடி காயடித்தல்castrate (the bull)
நலி மோசமான நிலைக்குத் தாழ்தல்decline (in progress, prosperity, etc.)
நலிவு நல்ல நிலையிலிருந்து மோசமான நிலைக்குப் போகிற சரிவுdecline
நலுங்கு1(பெரும்பாலும் எதிர்மறை வடிவங்களில்) (உடல்) வருந்துதல்strain (oneself)
நவ பழமையிலிருந்து விடுபட்டுப் புதுமையை நோக்கியmodern
நவச்சாரம் (ஈயம் பூசப் பயன்படுத்தும்) பளபளப்பான வெள்ளை நிறமும் காரத் தன்மையும் உடைய பொருள்(solid) ammonium chloride
நவதானியம் அவரை, உளுந்து, எள், கடலை, கொள்ளு, கோதுமை, துவரை, நெல், பாசிப்பயறு ஆகிய ஒன்பது தானியங்கள்nine kinds of grains, viz
நவம் (பெரும்பாலும் பிற சொற்களோடு இணைந்து) ஒன்பது(mostly a combined form) nine
நவமி அமாவாசை அல்லது பௌர்ணமி கழிந்த ஒன்பதாவது நாள்the ninth lunar day after the new moon and after the full moon
நவராத்திரி (துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய பெண் தெய்வங்களுக்கு) புரட்டாசி மாதம் வளர்பிறையின் முதல் நாளிலிருந்து ஒன்பது இரவுகள் கொண்டாடப்படும் பண்டிகைa festival for the Goddesses Durga, Lakshmi, Saraswathi celebrated for nine days
நவரை தாளடிக்குப் பிறகு பயிரிடப்படும் நெல் சாகுபடிthe third crop of paddy in a year cultivated after தாளடி
நவீனம்1(பழமையிலிருந்து மாறுபட்டு) புதிய மாற்றங்களுக்கும் தேவைகளுக்கும் ஏற்ற முறைகளையும் தன்மையையும் கொண்டமைவதுmodernity
நவீனம்2புதினம்novel
நவீனமயமாக்கு (தொழில், கல்விமுறை போன்றவற்றை) புதிய சாதனங்கள், அணுகுமுறை ஆகியவற்றின் உதவிகொண்டு தற்காலத் தேவைகளுக்கு ஏற்ப மாற்றி அமைத்தல்modernize
நழுவல் (பேச்சில் அல்லது நடத்தையில்) எதிலும் மாட்டிக்கொள்ளாமல் தப்பித்துக்கொள்கிற தன்மைevasion
நழுவு தடுப்போ பிடிப்போ இல்லாததால் மென்மையாக விலகுதல் அல்லது சரிதல்slide
நள்ளிரவு இரவு பன்னிரண்டு மணி அல்லது அதை ஒட்டிய நேரம்midnight
நளபாகம் தேர்ச்சி பெற்றவரின் சமையல்excellent cooking
நற்சான்றிதழ் (ஒருவரின்) நடத்தைகுறித்து அளிக்கிற சான்றிதழ்conduct certificate
நற்செய்தி இயேசுவின் வாழ்வு, போதனை ஆகியவற்றைக் குறித்துப் புதிய ஏற்பாட்டில் நால்வர் எழுதிய வாசகங்கள்gospel
நற்செய்தியாளர் புதிய ஏற்பாட்டில் நற்செய்தியை எழுதியவர்கள்evangelist
நறணை அரணைskink
நறுக்-என்று (குட்டுதல், கிள்ளுதல் குறித்து வருகையில்) சுள்ளென்று வலிக்கும்படியாக(of knuckle, pinch) sharply
நறுக்கு1(காய்கறி, பழம் முதலியவற்றைக் கத்தி போன்றவற்றால் சிறு துண்டாக) வெட்டுதல்cut (vegetables, fruits, etc into small pieces)
நறுக்கு2(ஓலை, புகையிலை போன்றவற்றின் நறுக்கப்பட்ட) துண்டுpiece (of tobacco, palm leaf, etc.)
நறுக்குத்தெறித்தாற்போல் (ஒரு விஷயம் சொல்லப்படும் விதத்தில்) தெளிவாகவும் சுருக்கமாகவும்succinctly
நறுங்கு உரிய வளர்ச்சி இல்லாமல் இருத்தல்be deficient
நறுமணம் இனிய மணம்fragrance
நன்கொடை (கோயில், கல்வி நிறுவனம் போன்றவற்றின் வளர்ச்சிக்காக) மனம் உவந்து வழங்கும் தொகை அல்லது பொருள்donation (of a large sum)
நன்செய் (ஆறு, ஏரி முதலியவற்றின் மூலம்) பாசன வசதி பெற்று நெல் பயிரிடப்படும் நிலம்wet land
நன்மை (-ஆன) சாதகமாக இருக்கும் விளைவுbenefit
நன்றிக்கடன் செய்த உதவிக்கு நன்றி செலுத்த விரும்பும் கடமை உணர்வுdebt of gratitude
நன்னாரி சர்பத் தயாரிப்பதில் பயன்படுத்தும் ஒரு வகைக் கொடியின் மணம் நிறைந்த வேர்sarsaparilla (added in sherbet)
நனவோடை (உரைநடை இலக்கியத்தில்) குறிப்பிட்ட நேரத்தில் மனத்தில் எழும் எண்ணங்களையும் உணர்வுகளையும் தொடர்ச்சியாக எழுதுதல்stream of consciousness (as a presentation technique in prose writing)
   Page 1 of 13   1 2 3 13