Tamil to Tamil&English Dictionary

We are happy to provide you with the best Online Tamil to Tamil Dictionary/Translator.
For typing word in Tamil you can use our tool typing tool

  
Tamil WordTamil MeaningEnglish Meaning
நீலக்கல் (ஆபரணங்களில் பதிக்கப்படும்) நீல நிறமுடைய விலை உயர்ந்த கல்sapphire
நீலம்பாரி (பொதுவாக) நீல நிறம் பரவுதல்(குறிப்பாக) (இரத்தத்தில் விஷம் கலப்பதால் உடல்) நீல நிறமாக மாறுதல்(generally) become blue
நீலாம்பல் நீல நிற அல்லிblue nelumbo
நீலி தீங்கு நினைக்கும் பசப்புக்காரிwicked woman who feigns innocence
நீவு (உடலின் பகுதியை விரலால்) தடவுதல்stroke (gently)
நீள்1நீளத்தில் கூடுதல்increase in length
நீள்2(பெரும்பாலும் வடிவங்களைக் குறிக்கும் சொற்களுக்கு அடையாக வரும்போது) பக்கவாட்டில் நீண்டு செல்கிற(with reference to a cylinder) long
நீள்சதுரம் செவ்வகம்rectangle
நீளம் இரு அகலப் பக்கங்களுக்கு இடையே உள்ள அளவு(கம்பி, நூல் போன்றவற்றில்) இரு முனைகளுக்கு இடையே உள்ள அளவுlength
நீளம்தாண்டுதல் (விளையாட்டில்) ஓடிவந்து குறிப்பிட்ட இடத்தில் காலை ஊன்றி எழும்பி முடிந்த அளவுக்குத் தூரத்தைத் தாண்டுதல்long jump
நீளமாக/நீளமான சராசரி நீளத்தைவிட அதிகமாக/சராசரி நீளத்தைவிட அதிகமானlong
நீற்று (வெள்ளையடிப்பதற்கு ஏற்ற வகையில் சுண்ணாம்புக் கட்டிகளை நீரில் போட்டு) குழையச் செய்தல்slake (lime)
நுகத்தடி (வண்டி, ஏர் முதலியவற்றை இழுத்துச்செல்வதற்காக மாட்டின் கழுத்தில்) பிணைப்பதற்கான நீண்ட தடிyoke
நுகர் (புலன்களால்) உணர்ந்து அனுபவித்தல்experience
நுகர்பொருள் மக்கள் அன்றாடத் தேவைகளுக்காக வாங்கிப் பயன்படுத்தும் பொருள்consumer goods
நுகர்வு அனுபவித்தல்experience
நுகர்வோர் தன் சொந்தப் பயன்பாட்டுக்காகப் பொருள் வாங்குபவர் அல்லது சேவையைப் பெறுபவர்consumer
நுங்கு இளம் பனங்காயின் உள்ளே இருக்கும் இனிப்புச் சுவையுடைய வழவழப்பான சதைப் பகுதிkernel of a tender palmyra fruit
நுங்கும்நுரையுமாக (நீர், பால் முதலியவற்றில்) மேலெழும் நுரையுடன்with foam
நுட்பம் பல அம்சங்கள் கொண்ட சிக்கலான ஒன்றில் மிகச் சிறிய அம்சம்/ மேலோட்டமாகத் தெரியாத உள்ளடங்கிய அம்சம்minuteness/subtlety
நுண்கணிதம் காலத்தையும் இடத்தையும் பொறுத்து மாறுபடும் அளவுகளைக் கணக்கிடுவதற்கான ஒரு கணிதப் பிரிவுcalculus
நுண்கலை அழகியலை அடிப்படையாகக் கொண்ட (ஓவியம், இசை போன்ற) கலைfine arts (such as painting, music, etc.)
நுண்கிருமி மனிதனுக்கு நோயையும் பொருள்களில் ரசாயன மாற்றத்தையும் ஏற்படுத்தும் நுண்ணுயிர்virus
நுண்ணிய (பருப்பொருளில்) மிகச் சிறிய(of concrete objects) small
நுண்ணுயிர்/நுண்ணுயிரி நுண்ணோக்கியினால் மட்டுமே பார்க்கக் கூடிய மிகச் சிறிய (பல வகையான) உயிரினம்microorganism
நுண்ணூட்டச் சத்து பயிர்களுக்கு மிகச் சிறிய அளவில் அளிக்கப்படும் கனிமச் சத்துmicronutrients
நுண்ணோக்கி சாதாரணமாகக் கண்ணுக்குப் புலப்படாத மிகச் சிறிய பொருள்களையும் நுண்கிருமிகளையும் பார்ப்பதற்கு ஏற்ற வகையில் அவற்றின் உருவத்தைப் பெரிதாக்கிக் காட்டக் கூடிய ஆடிகளைக் கொண்ட ஓர் அறிவியல் சாதனம்microscope
நுண்மை கண்ணுக்குப் புலப்படாத வகையில் மிகச் சிறியதாக இருப்பதுbeing microscopic
நுணா முறுக்கிக் கொண்டாற்போல் அமைந்த கிளைகளையும் மணமுள்ள வெள்ளை நிறப் பூக்களையும் கொண்ட ஒரு வகைச் சிறு மரம்a variety of mulberry
நுணுக்கம் நுட்பம்minuteness
நுணுக்கு (கல் முதலியவற்றால் தட்டி அல்லது அம்மியில் வைத்து) பொடியாக்குதல்powder
நுணுக்குக்காட்டி நுண்ணோக்கிmicroscope
நுதல் நெற்றிforehead
நுரை1நுரை உருவாதல்foam
நுரை2(திரவங்களில்) அடர்த்தியான வெள்ளை நிறக் குமிழிகளின் தொகுப்புfoam
நுரைதள்ளு (வாயில்) நுரை வெளிப்படுதல்foam (at the mouth)
நுரையீரல் மார்புக்கூட்டினுள் இரு பிரிவாக அமைந்துள்ள, சுருங்கி விரியக் கூடிய பை போன்ற சுவாச உறுப்புlung
நுழை2(குறுகிய இடைவெளி உள்ளதில்) போகச்செய்தல்insert
நுழைவாயில் (கட்டடம், மைதானம் முதலியவற்றினுள் செல்வதற்கு) வெளி எல்லையில் உள்ள திறப்புentrance
நுழைவு (பெரும்பாலும் தொடர்களில்) (ஒன்றில்) இடம்பெறுவதற்கு உரியது அல்லது அனுமதிக்கப்படுவதற்கு உரியது(often in combination) entrance
நுளம்பு கொசுmosquito
நுனிப்புல்மேய் (ஆழ்ந்த, முழுமையான ஈடுபாடு இல்லாமல்) மேலோட்டமாகச் செய்தல்do
நூதனசாலை அருங்காட்சியகம்museum
நூதனம் இதுவரையில் பார்த்திராததுnovelty
நூல்1(கையால் அல்லது இயந்திரத்தின் உதவியால்) இழைகளைச் சேர்த்து மெல்லிய நீண்ட தொடராக இருக்கும்படி சுற்றுதல்(நூல்) முறுக்குதல்spin
நூல்2(பஞ்சு, கம்பளி முதலியவற்றைத் திரித்துத் தயாரிக்கப்படும்) முறுக்குடைய மெல்லிய இழைyarn
நூல்3புத்தகம்book
நூல்கண்டு சிறு உருளையில் அல்லது அட்டையில் சுற்றப்பட்ட நூல்ball of thread
நூல்கோல் அடிப்பகுதி தவிர்த்த மேல்பகுதி முழுவதிலும் நீண்ட காம்புடைய இலைகள் கொண்ட வெளிர்ப் பச்சை நிறக் கிழங்குturnip
நூல்நிலையம்/நூலகம் துறைவாரியாகப் பிரிக்கப்பட்டு எண்ணிடப்பட்டு அடுக்கப்பட்டுள்ள (பெரும்பாலும் வாங்கிச்சென்று படிப்பதற்கான) புத்தகங்கள் உள்ள இடம்library
நூலகர் நூலகத்தை நிர்வகிக்கும் பொறுப்பாளர்librarian
நூலகவியல் நூலகம் அமைத்தல், நூல்களை வகைப்படுத்துதல் முதலியவற்றை விளக்கும் துறைlibrary science
நூலாம்படை ஒட்டடைdusty cobweb
நூலேணி இரு நீண்ட கயிறுகளுக்கு இடையே மரத் துண்டோ முறுக்குக் கயிறோ படிகளாக அமைக்கப்பட்ட ஏணிrope-ladder
நூற்குண்டு (கட்டட வேலையில் செங்குத்தான அமைப்பைச் சரிபார்க்கப் பயன்படுத்தும்) நீண்ட உறுதியான நூலின் ஒரு நுனியில் சிறு மரக்கட்டையையும் மற்றொரு நுனியில் உலோகக் குண்டையும் உடைய சாதனம்plumb-line
நூற்பா (பெரும்பாலும் இலக்கண, தத்துவ நூல்களில் விதிகள் ஆக்குவதற்குப் பயன்படுத்தும் பா வகையான) சூத்திரம்metre, terse in form (mostly employed in grammatical or philosophical treatises to formulate rules or concepts)
நூற்பாலை நூல் நூற்கும் தொழிற்சாலைspinning mill
நூற்றாண்டு நூறு வருடங்கள் கொண்ட காலம்century
நூறு பத்தின் பத்து மடங்கைக் குறிக்கும் எண்(the number) hundred
நெக்குருகு மனம் நெகிழ்தல்get melted in heart
நெகிழ்ச்சி (அன்பு, பரிவு, பாசம் போன்றவற்றால் மனத்தில்) கனிவு(குரலில்) தளர்ச்சி(of attitudes, feelings, etc.) moving
நெகிழ்த்து (ஆடை அணிந்திருப்பதில் அல்லது பிடிப்பில் உள்ள இறுக்கத்தை) தளர்த்துதல்loosen (a knot, etc.)
நெசவாலை துணி நெய்யும் தொழிற்சாலைweaving mill or factory
நெசவாளர்/நெசவாளி (தறியில்) துணி நெய்பவர்weaver
நெசவு (தறியின்மூலம் நீளவாக்கிலும் குறுக்காகவும் நூல் முதலியவற்றைச் செலுத்தி) பின்னித் துணி முதலியவை தயாரிக்கும் முறைweaving
நெஞ்சம் (உணர்வுகளின் இருப்பிடமாகக் கருதப்படும்) மனம்heart (considered to be the seat of memory, feeling, etc.)
நெஞ்சழுத்தம் (பிறரைப்பற்றி அல்லது விளைவைப்பற்றிக் கவலையோ இரக்கமோ இல்லாத) மன இறுக்கம்hardheartedness
நெஞ்சுரம் எதையும் எதிர்கொள்ளத் தயங்காத, எதற்கும் கலங்காத மன வலிமைstrong will
நெஞ்செரிச்சல் (அஜீரணம் போன்றவற்றால்) மார்புப் பகுதியில் உணரப்படும் எரிச்சல்heartburn
நெட்டி இறகு போன்ற இலைகளை உடைய, தண்ணீரில் மிதக்கும் ஒரு வகைத் தாவரம்pith plant
நெட்டித்தள்ளு (ஒருவரை) விசையோடு கையால் தள்ளுதல்push violently
நெட்டுக்குத்தலாக/நெட்டுக்குத்தாக செங்குத்தாகin a vertical position
நெட்டுயிர் பெருமூச்சுவிடுதல்let out a deep breath
நெட்டுயிர்ப்பு பெருமூச்சுdeep breath
நெட்டுருப்பண்ணு மனப்பாடம்செய்தல்learn by rote
நெட்டை (சராசரியைவிட அல்லது எதிர்பார்த்ததைவிட) அதிக உயரம்tallness
நெடி முகர்வதற்கு ஏற்றதாக இல்லாத வாசனைpungent odour
நெடிய நீளமானlong
நெடில் (குறிலைவிட ஒரு மாத்திரை அளவு) நீண்டு ஒலிக்கும் உயிரெழுத்துlong vowel
நெடுக/நெடுகிலும் (பாதை, வழி, எல்லை முதலியவற்றின்) முழு நீளத்திலும்all along (a road, etc.)
நெடுங்கதை (சிறுகதை அல்லாத) நீண்ட கதைlong story or short novel
நெடுஞ்சாண்கிடையாக (வணங்குகையில்) உடம்பு முழுவதும் தரையில் படும்படியாகprostrating at full length
நெடுஞ்சாலை அரசுத் துறையின் நேரடிப் பராமரிப்பில் இருக்கும் முக்கியமான பொதுச் சாலைhighway
நெடுந்துயில் (மங்கல வழக்காக) மரணம்(euphemism for) death
நெடுநெடு-என்று குறிப்பிடத் தக்க அளவுக்கு உயரமாகvery tall
நெடும் (காலம், நீளம் குறித்து வருகையில்) நீண்டlong (in time and length)
நெத்தியடி செயல் இழக்கச்செய்யும் தாக்குதல் அல்லது பாதிப்புcrushing defeat
நெத்திலி வெள்ளை நிறத்தில் இருக்கும் ஒரு வகைச் சிறிய கடல் மீன்small silvery fish
நெம்பு (ஏதேனும் ஒரு கருவி, கழி போன்றவற்றை ஒரு பொருளின் அடியில் கொடுத்து) மேலே உயரும்படி விசையுடன் அழுத்துதல்lever
நெம்புகோல் (ஒரு பொருளை நகர்த்தவோ உயர்த்தவோ பயன்படும்) ஒரு புள்ளியை ஆதாரமாகக்கொண்டு இயக்கப்படும் கம்பி அல்லது கருவிlever
நெய்1(துணி, பாய் முதலியவற்றை உருவாக்குவதற்காகத் தறியில்) நீளவாட்டில் நூலை அல்லது கோரையை வைத்துக் குறுக்குவாட்டில் கோத்துப் பின்னுதல்weave (cloth, mat, etc.)
நெய்2உருக்கிய வெண்ணெய்clarified butter
நெய்க்குறி நீர்க்குறி நெய்யில் சிறுநீரை விட்டுச் செய்யும் பரிசோதனைexamining the urine by testing it in ghee
நெய்தல் (ஐந்து வகை நிலப் பாகுபாட்டில்) கடலும் கடல் சார்ந்த இடமும்(one of the fivefold divisions of land) the sea and the region close to it
நெய்ப்பந்தம் (இறந்தவரின் சிதைக்குக் கொள்ளி வைப்பதற்காக) நெய்யில் நனைத்த தீப்பந்தம்torch fed with ghee (used for lighting funeral pyre)
நெய்விளக்கு (கோயில்களில்) நெய் ஊற்றி எரிக்கும் விளக்கு(in temples) a lamp fed with ghee
நெரிகட்டு (புண் முதலியவற்றில் உள்ள கிருமிகள் உடலில் பரவாமல் தடுப்பதற்கு அதன் அருகில் உள்ள நிணநீர் முடிச்சு) வீக்கம் அடைதல்develop a swelling (of lymph glands or nodes)
நெரிசல் (ஓர் இடத்தில் அளவுக்கு அதிகமாக மக்கள் அல்லது வாகனங்கள் குவிவதால் ஏற்படும்) நெருக்கித்தள்ளும் கூட்டம் அல்லது ஒழுங்கற்ற நிலைjam
நெருக்கடி பிரச்சினைகளும் சிரமங்களும் மிகுந்த நிலைcrisis
நெருக்கடிநிலை போர், உள்நாட்டுக் கலகம் போன்றவை ஏற்படும் சமயத்தில் அரசு கூடுதல் அதிகாரங்களை மேற்கொண்டு செயல்பட வேண்டிய நிலைstate of emergency (in a country)
   Page 11 of 13    1 9 10 11 12 13