Tamil to Tamil&English Dictionary

We are happy to provide you with the best Online Tamil to Tamil Dictionary/Translator.
For typing word in Tamil you can use our tool typing tool

  
Tamil WordTamil MeaningEnglish Meaning
நிரவு (மேடுபள்ளமாக உள்ள இடத்தைச் சமதளமாக்குதல்level
நிராகரி ஏற்க மறுத்தல்reject
நிராசை நிறைவேறாத ஆசைunfulfilled desire
நிராதரவு ஆதரவு இல்லாமைhelplessness
நிராயுதபாணி (தற்காத்துக்கொள்ளவும்) ஆயுதம் வைத்திருக்காதவர்one who is unarmed
நிரீச்வரவாதி நாஸ்திகன்atheist
நிருத்தம் நடனம்(classical) dance
நிருத்தியம் பாவங்களை அங்க அசைவில் வெளிப்படுத்தும் (சாகித்யம் இல்லாத) ஆடல் முறைgestures and movement of limbs to express emotions, ideas, etc
நிருபம் கடிதம்letter
நிருபர் (பத்திரிகை, வானொலி போன்றவற்றின் சார்பாக) பல இடங்களுக்குச் சென்று பலரிடத்தில் நேரடியாகச் செய்திகள் சேகரிக்கும் பணியைச் செய்பவர்reporter (of a newspaper, radio, etc.)
நிரூபணம் (நடந்த நிகழ்ச்சியை அல்லது ஒரு கூற்றை) உறுதியாக நிறுவும் விளக்கம்proof
நிரூபி (சான்று, பரிசோதனை, செயல்பாடு முதலியவை மூலமாக) உண்மையானது அல்லது சரியானது என்று காட்டுதல்prove
நிரையசை (யாப்பில்) இரு குறில் சேர்ந்தோ குறிலும் நெடிலும் இணைந்தோ இவ்விரண்டும் ஒற்றுடன் கூடியோ வரும் அசைa metrical syllable consisting of a combination of short, long vowels and a consonant
நில்2முதன்மை வினை குறிக்கும் செயல் தற்காலிகமானதாக இல்லாமல் நிலைத்து நீடிப்பதாகக் குறிப்பிடும் துணை வினைan auxiliary which shows that the action expressed in the main verb is not fleeting but enduring
நில அளவர் நிலங்களை அளந்து பதிவுசெய்து ஆவணமாக்கும் அலுவலர்surveyor (of land)
நில இயல் பூமியின் மேற்பரப்பாக அமைந்திருக்கும் மண், பாறை போன்றவற்றை விவரிக்கும் ஆய்வுத் துறைgeology
நில உடைமை தனிப்பட்ட முறையில் நிலம் சொத்தாக இருப்பதுlanded property
நிலக்கடலை (எண்ணெய் எடுக்கவும் உணவுப் பொருளாகவும் பயன்படும்) இரு பகுதிகளாக உடையக் கூடிய, சிறு நீள் உருண்டை வடிவ ஓட்டினுள் இருக்கும் பருப்பு/அந்தப் பருப்பையுடைய கடலை வேரில் காய்க்கும் சிறு செடிpeanut (the nut and the crop)
நிலக்கரி நிலத்தடியில் படிவுகளாக இருப்பதும் வெட்டியெடுத்து எரிபொருளாகப் பயன்படுத்துவதுமான கறுப்பு நிறக் கனிமம்coal
நிலக்கிழார் கணிசமான நிலத்தைச் சொத்தாக வைத்திருப்பவர்landowner
நிலச்சரிவு (மேடான இடத்திலிருந்து) மண், (மலையிலிருந்து) பாறை, கல் முதலியவை திடீரென்று பெயர்ந்து விழுதல்landslide
நிலச்சுவான்தார் நிலக்கிழார்landowner
நிலத்தடி நீர் பூமியின் அடியில் இருக்கும் நீர்ground water
நிலநடுக்கம் (உள் அடுக்குகள் நொறுங்கி நகர்வதன் மூலம்) பூமியின் மேல்பரப்பு அடையும் அதிர்வுearth tremor
நிலநடுக்கோடு இரு துருவங்களிலிருந்தும் பூமியைச் சம அளவில் பிரிக்கக் குறுக்குவாட்டில் இருப்பதாகக் கொள்ளும் கற்பனைக்கோடுequator
நிலப்பிரபுத்துவம் தனிநபர் பெருமளவு நிலத்தைச் சொந்தமாகக் கொண்டிருக்கும் முறைfeudalism
நிலபுலன் (ஒருவருக்குச் சொந்தமான) புன்செய், நன்செய் நிலம்(property in) dry and wet lands
நிலம் பயிர்செய்யும் இடம்land
நிலவரம் (நாடு, வீடு முதலியவற்றின்) நடப்பு நிலைcondition (of the country, home, etc.)
நிலவரி விளைச்சல், பாசன வசதி அடிப்படையில் விளை நிலத்துக்காக அரசு வசூலிக்கும் வருட வரிland revenue
நிலவறை பூமிக்கடியில் அமைத்த அறைcellar
நிலவாயு எரிவாயுnatural gas
நிலவு1அறியக் கூடிய வகையில் காணப்படுதல்be (in existence)
நிலவு2சந்திரன்moon
நிலா சந்திரன்moon
நிலுவை (வரவேண்டிய தொகையில், கடனில்) பாக்கிbalance
நிலை2இருக்கும் தன்மைstate
நிலை3கதவு பொருந்தி அடைத்துக்கொள்வதற்காகக் கட்டடங்களில் வைக்கப்படும் நீண்ட சதுர வடிவ மரச்சட்டம்door-frame
நிலைக்கண்ணாடி (சுவர் முதலியவற்றில்) முழு உருவத்தையும் பார்க்கக் கூடிய வகையில் பொருத்தப்படும் பெரிய கண்ணாடிlarge, stationary mirror (on a wall, etc.)
நிலைக்களம் (ஒன்றின்) இருப்பிடம்source or seat
நிலைக்குழு அவசியம் ஏற்படும் ஒவ்வொரு முறையும் அமைக்கப்படாமல் சில வகைப் பிரச்சினைகள் எப்போது எழுந்தாலும் அவற்றைக் கவனிக்க அமைக்கப்படும் குழு(any) standing committee
நிலைகுத்து (உயிர் பிரியும் நேரத்தில் கருவிழி) அசையாது நிலைத்தல்(of eyes) be fixed (at the time of death)
நிலைகுலை கட்டுப்பாட்டுடன் இருக்கும் சமநிலையை இழத்தல்lose balance
நிலைகொள் (ஓர் இடத்தில்) நிலையாக இருத்தல்come to stay
நிலைநாட்டு நிலைகொள்ளும்படிசெய்தல்enforce (peace, law and order)
நிலைப்படம் இயக்கமற்ற பொருள்களைக் காட்டும் ஓவியம்still life
நிலைப்படி (கதவு) நிலைdoor-frame
நிலைப்படுத்து (கீழே விழுந்துவிடாதபடி) உறுதியாக நிற்றல்(manage to) stand firm
நிலைப்பாடு (ஒன்றைக்குறித்து) கருத்து அல்லது கொள்கை ரீதியிலான முடிவுstand
நிலைபெறு உறுதிபெற்று அமைதல்be established
நிலைபேறு நிலைத்திருப்பதுeverlasting
நிலையம் மக்களுக்குக் குறிப்பிட்ட சேவையை அளிக்க அமைந்திருக்கும் கட்டடம்house or building (for any public service)
நிலையாமை நிலைத்த தன்மையற்றதுtransitoriness
நிவர்த்தி நீங்கும்படி மேற்கொள்ளும் ஏற்பாடுrelief
நிவாரணம் (புயல், வெள்ளம், வறட்சி போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களின்) குறைகளைத் தீர்க்கிற வகையில் வழங்கும் (பணம், பொருள் ரீதியான) உதவிrelief (measures, supplies, etc.)
நிவாரணி வலியிலிருந்து அல்லது நோயிலிருந்து விடுவிப்பது(pain) reliever
நிவேதனம் (கடவுளுக்கு) உணவுப் படையல்offering of food (to a deity)
நிவேதி (கடவுளுக்கு உணவுப் பொருளை) படைத்தல்offer (food, etc to a deity)
நிழல் (ஒளி தடைபட்டு எதிர்ப்பக்கத்தில் உருவாகும்) இருண்ட வெளிக்கோட்டுருவம் அல்லது பிம்பம்shadow
நிழலாடு தெளிவின்றித் தோன்றுதல்appear vaguely
நிழற்குடை (போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் காவலருக்கு அல்லது நிறுத்தத்தில் காத்திருக்கும் பயணிகளுக்கு) நிழல் தருவதற்காக வட்டமான அல்லது நீள் செவ்வகக் கூரையுடைய அமைப்புshelter (for the traffic police or for the passengers at a bus stop)
நிழற்கூத்து பாவையின் நிழலைத் திரையில் விழச்செய்து நடத்தும் ஆட்ட வகைshadow play
நிற்க (கடிதத்தில்) ஒரு செய்தி முடிவடைந்து அடுத்தது ஆரம்பிக்கிறது என்பதைத் தெரிவிக்கப் பயன்படுத்தும் சொல்a connective used mostly in letters to indicate the ending of a subject and the beginning of another
நிறம் இயற்கையாக அமைந்து அல்லது செயற்கையாக ஊட்டப்பட்டு ஒளியின் உதவியால் கண்ணுக்குத் தெரியும் கறுப்பு, மஞ்சள், சிவப்பு போன்றவற்றின் பொதுப்பெயர்colour
நிறமாலை வெண்ணிற ஒளி முப்பட்டகக் கண்ணாடியை ஊடுருவிச் செல்லும்போது ஏற்படும் (ஊதாவிலிருந்து சிவப்புவரை உள்ள) நிறத் தொகுப்புspectrum
நிறமி (தோல், முடி, இலை முதலியவற்றிற்கு) நிறம் தரும் இயற்கையான நுண்பொருள் அல்லது (பொருளுக்கு) நிறம் கொடுக்கும் நுண்ணிய ரசாயனப் பொருள்pigment
நிறவெறி மனித இனத்தில் சில இனத்தினர் உடல் நிற அடிப்படையில் தங்களை உயர்வானவர்களாகக் கருதிப் பிற நிறத்தவரைத் தாழ்வாக நடத்தும் தீவிரப் போக்குracism
நிறவேற்றுமை மனித இனத்தின் நிறத்தைக்கொண்டு உயர்வு தாழ்வு என்று வேற்றுமை கற்பிக்கும் போக்குdiscrimination on the grounds of colour (of skin)
நிறு (பொருளைத் தராசில் வைத்து) எடையைக் கணக்கிடுதல்weigh
நிறுத்தம் (பேருந்து) பயணிகளை ஏற்றிக்கொள்ளவும் இறக்கிவிடவும் குறிப்பிடப்பட்ட இடம்(bus) stop
நிறுத்தலளவை பொருள்களின் எடையைக் கணக்கிடுவதற்கான முறைmeasure of weight
நிறுத்தி தகுந்த இடைவெளிவிட்டுgiving pause
நிறுத்து (ஒரு காரணத்திற்காக வாகனத்தை) நிற்கச்செய்தல்stop (a vehicle, etc.)
நிறுவனம் ஊழியர், தொழிலாளர் முதலியோரைக் கொண்டு வியாபாரம், சேவை முதலியவற்றை மேற்கொள்வதற்காக நிர்வகிக்கப்படுவது/கல்விப் பணி நிகழும் மையம்firm
நிறை1நிரம்புதல்be or become full
நிறை2நிரப்புதல்fill
நிறை3எடைweight
நிறை4(ஒருவரிடம் அல்லது ஒன்றில் காணப்படும்) சிறப்புத் தன்மைmerit
நிறைகுடம் நிறைய விஷயங்கள் தெரிந்திருந்தும் அடக்கமாக இருப்பவர்learned man with humility
நிறைமதியம் நடுப்பகல்noon
நிறைமாதம் முழு வளர்ச்சி அடைந்த குழந்தையைப் பெற்றெடுக்கும் பத்தாவது மாதம்the last month of pregnancy
நிறைய (எண்ணிக்கையில் அல்லது அளவில்) அதிகமாக/அதிகமானa lot/a large quantity
நிறைவு (கோரிக்கை, தேவை முதலியவை) தீர்வு காணப்பட்ட நிலைfulfilment
நிறைவுவிழா ஒன்று முடிவுபெறும் நாளில் நிகழ்த்தப்படும் விழாconcluding function (of a series)
நிறைவேறு (மேற்கொண்ட நடவடிக்கையால்) முடிவு அல்லது பயன் கிடைத்தல்be completed
நின்றுபிடி தாக்குப்பிடித்தல்withstand
நினை1நினைவுக்குக் கொண்டுவருதல்think
நினை2(மறந்ததை) ஞாபகத்துக்குக் கொண்டுவருதல்think about
நினைவாலயம் (புகழ் பெற்றவரின் அல்லது உயர்ந்த நோக்கத்திற்காக உயிர்த் தியாகம் செய்தவரின்) நினைவாகக் கட்டப்படும் கட்டடம்memorial
நினைவு மனப் பதிவை வெளிக்கொண்டுவருவதுrecollection
நினைவுக் குறிப்புகள் ஒருவர் தனது சொந்த வாழ்வில் நிகழ்ந்த முக்கிய சம்பவங்களையும் சந்தித்த முக்கிய மனிதர்களையும் நினைவுகூர்ந்து எழுதிய செய்திகளின் தொகுப்புmemoirs
நினைவுச் சின்னம் நினைவில் நிறுத்துவதற்காகவும் நன்றியைத் தெரிவிப்பதற்காகவும் அடையாளமாக நிறுவப்படுவதுmemorial
நினைவு திரும்பு (ஒருவர் இழந்த) சுய உணர்வு மீண்டும் வருதல்regain consciousness
நினைவு நாள் (ஒருவருடைய மறைவிற்கு அஞ்சலி செலுத்துகிற) இறந்த நாள்death anniversary
நினைவுபடுத்து நினைவுக்குக் கொண்டுவருதல்recollect
நிஜம் (-ஆக, -ஆன) போலியோ நடிப்போ பொய்யோ அல்லாததுgenuine
நிஜார் கால்சட்டைshorts
நிஷ்களங்கம் களங்கம் இல்லாமைflawlessness
நிஷ்டூரம் தயவுதாட்சண்யம் இல்லாமைharshness
நிஷ்டை தியானம்meditation
   Page 4 of 13    1 2 3 4 5 6 13