Tamil to Tamil&English Dictionary

We are happy to provide you with the best Online Tamil to Tamil Dictionary/Translator.
For typing word in Tamil you can use our tool typing tool

  
Tamil WordTamil MeaningEnglish Meaning
பத்ரகாளி உக்கிரமான தோற்றத்தை உடைய காளிthe goddess காளி in her fearsome appearance
பதநீர் (புளித்துப்போகாமல் இருப்பதற்காக உட்புறம் சுண்ணாம்பு தடவப்பட்ட கலயத்தில் சேகரிக்கப்படும்) பனை மரப் பாளையின் இனிப்பான சாறுsap of palmyra (collected in a pot lined with slaked lime to prevent fermentation)
பதம்1பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் பக்குவமாக இருக்கும் தன்மைfit condition (for specific purposes)
பதம்2சொல்word
பதம்3சிருங்கார ரசம் நிறைந்த பாடலுக்கு ஆடப்படும் நாட்டிய வகைa composition on the theme of love rendered in slow tempo in dance recitals
பதம்பார் (ஒருவரிடமிருந்து கற்றதை அவரிடமே பயன்படுத்தி) சோதித்தல்test
பதர் உள்ளீடற்ற நெல்empty ears of grain
பதவி (நிர்வாகத்தில்) அதிகாரமுள்ள பொறுப்பு/(தொழிற்சாலை, அலுவலகம் முதலியவற்றில்) பணியிடம்(responsible) position/(in an organization, etc.) post
பதவி இறக்கம் (இருக்கும் பதவியைக்காட்டிலும்) அதிகாரத்திலும் மதிப்பிலும் குறைந்த பதவிdemotion
பதவி உயர்வு (பதவியில்) அடுத்த மேல்நிலைpromotion
பதவிப்பிரமாணம் (அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர், நீதிபதி முதலியோர்) பதவி ஏற்கும்போது அதிகாரபூர்வமாக எடுத்துக்கொள்ளும் உறுதிமொழிswearing in (ceremony)
பதவியேல் (பதவிப்பிரமாணம் செய்து) பதவியை ஒப்புக்கொள்ளுதல்be sworn in
பதவுரை (செய்யுளின்) ஒவ்வொரு சொல்லுக்கும் கூறும் பொருள்word for word meaning (of a verse)
பதற்றம் செயல்படுவதில் நிதானம் இழந்து காட்டும் பரபரப்புexcitement
பதறு நடுங்கிக் கலங்குதல்/(கை, கால்) நடுங்குதல்panic/(of limbs) tremble
பதனம் கவனம்care
பதனிடு (விலங்கின் தோலை ரசாயனப் பொருள்களின்மூலம் பொருள்கள் செய்வதற்கான) பக்குவத்துக்கு வரும்படிசெய்தல்tan
பதாகை தூக்கிச் செல்வதற்கு வசதியாகக் கம்புகளில் கட்டப்பட்ட, வாசகங்கள் தாங்கிய செவ்வக வடிவத் துணிbanner
பதார்த்தம் (சோறு நீங்கலாக ஏனைய) தயாரிக்கப்பட்ட உணவுப் பண்டம்eats
பதி3கணவன்husband
பதிகம் (குறிப்பிட்ட இடத்தில் எழுந்தருளியுள்ள) தெய்வத்தின் மேல் பாடப்படும் பத்துப் பாடல்கள்poem of ten verses on the presiding deity (of a place)
பதிப்பகம் (புத்தகம் முதலியவற்றை) வெளியிடும் நிறுவனம்publishing house
பதிப்பாசிரியர் (பிறரின் கட்டுரைகளையோ நூலையோ) தொகுத்து அல்லது முறைப்படுத்தித் தரும் பொறுப்பை ஏற்றவர்editor (of a work)
பதிப்பாளர் (புத்தகம் முதலியவற்றை) வெளியிடும் பணியைச் செய்பவர்publisher
பதிப்பி (புத்தகம் முதலியவற்றை வெளியிடுவதற்காக) ஒழுங்குபடுத்துதல்/(புத்தகம் முதலியவற்றை) வெளியிடுதல்edit (a book, etc.)/publish
பதிப்பு (புத்தகம் முதலியவை) விற்பனைக்காக ஒரு முறை குறிப்பிட்ட எண்ணிக்கையில் அச்சிடப்படுவதுedition (of a book)
பதிப்புரிமை (புத்தகம், திரைப்படம் முதலியவற்றின் பயன்பாடு, வெளியீடு முதலியவற்றை) உருவாக்கியவர் அனுமதியில்லாமல் மற்றொருவர் பயன்படுத்த முடியாத வகையில் காப்பளிக்கப்படும் உரிமைcopyright
பதியம்போடு (மல்லிகை, ரோஜா முதலிய) செடியின் கிளையை வளைத்து மண்ணில் புதைத்து அந்தக் கிளை வேர் விட்ட பின் முதல் செடியிலிருந்து வெட்டிவிடுதல்graft (a plant)
பதியன் பதியம்போடுவதால் தனியாக முளைத்துவரும் செடிgraft
பதில் கேள்வி, வேண்டுகோள் முதலியவற்றுக்கு விபரம், விளக்கம், ஒப்புதல் என்ற வகையில் எழுத்துமூலமாகவோ பேச்சுமூலமாகவோ தரப்படுவதுanswer
பதிலடி பாதிப்பு அடையச்செய்தவர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் எதிர் நடவடிக்கைretaliation
பதிவாளர் (சில அரசுத் துறைகளில்) குறிப்பிட்ட விபரங்களை அதிகாரபூர்வமான முறையில் ஆவணங்களில் பதிவு செய்வதற்கு உரிய பொறுப்பு வகிக்கும் அதிகாரிa government official responsible for registering and maintaining records (as relating to land records, births and deaths, etc.)
பதிவிரதை பத்தினிshe who is totally devoted to her husband
பதிவு ஒரு பரப்பில் ஒன்று பதிந்ததன் அடையாளம்impression (left on a surface)
பதிவு அஞ்சல் முகவரியில் உள்ளவருக்குச் சேர்ப்பிக்கப்படும் என்பதை உறுதிசெய்வதற்காகக் கூடுதல் கட்டணம் செலுத்திச் சான்று பெற்றுக் கடிதம் முதலியவை அனுப்பும் அஞ்சல்registered post
பதிவுநாடா ஒலிப்பதிவுசெய்வதற்கும் ஒளிப்பதிவுசெய்வதற்கும் பயன்படுத்தும் ரசாயனப் பொருள் பூசப்பட்ட மெல்லிய நாடாmagnetic tape for audio and video recording
பதிவேடு (அலுவலகம், நிறுவனம் முதலியவற்றில்) செய்தியை, விபரத்தை அதிகாரபூர்வமாகக் குறிக்கப் பயன்படும் ஏடுregister (as in an office)
பதுக்கல் (வெளிச்சந்தையில் எளிதில் கிடைக்காத பொருளை அல்லது நியாய விலைக்கு விற்க வேண்டிய பொருளை விற்காமல்) சட்டவிரோதமாக மறைத்து வைத்திருப்பதுhoarding
பதுக்கு (பொருள், பணம் முதலியவற்றை அதிக அளவில்) சட்டவிரோதமாக மறைத்துவைத்தல்hoard
பதுங்கு (வெளியில் இருப்பது ஆபத்து அல்லது நோக்கத்துக்கு இடையூறு என்ற நிலைமையால்) ஒளிதல்hide (in order to be safe or not to be seen till the objective is accomplished)
பதுங்கு குழி (எதிரியின் குண்டுவீச்சு, துப்பாக்கிச்சூடு போன்றவற்றிலிருந்து) பாதுகாத்துக்கொள்ளும் விதத்தில் மறைந்துகொள்ள வெட்டப்படும் ஆழமான குழிtrench
பதுமை (மனித அல்லது தெய்வ உருவ) பொம்மைdoll
பதை (பாதிக்கப்பட்டு) பொறுக்க முடியாமல் தவித்தல்be in a state of agony
பதைபதை (மிகுதியைக் காட்டி அழுத்தம் தருவதற்கு) பதை என்னும் வினையின் இரட்டித்த வடிவம்reduplication of the verb பதை (to intensify the meaning)
பந்த் (கட்சி, சங்கம் போன்ற அமைப்பு ஒரு கோரிக்கைக்காக அல்லது ஒன்றிற்கு எதிர்ப்பைத் தெரிவிக்கும் விதத்தில்) போக்குவரத்து, வியாபாரம் போன்றவற்றை நடைபெறவிடாமல் தடுத்தல்total stoppage (of business activities in a town, etc.)
பந்தம்1நுனியில் துணி சுற்றப்பட்டு எண்ணெய்யில் முக்கியெடுத்த, எரிப்பதற்கு வசதியான கம்புtorch (consisting of some combustible substance)
பந்தம்2உறவுrelation
பந்தயம் (விளையாட்டு போன்றவற்றில்) பலர் கலந்துகொள்வதாகவும் ஒருவர் வெற்றி பெறுவதாகவும் அமையும் நிகழ்ச்சிcontest
பந்தயம் கட்டு (பணம் கட்டி அல்லது பொருள் வைத்து) பந்தயத்தில் இறங்குதல்make a bet
பந்தல் நான்கு பக்கமும் கழிகளை நட்டு அதன் மேல் படுக்கைவாட்டில் குறுக்கும் நெடுக்குமாகக் கம்புகள் வைத்துக் கீற்றுகளைப் போட்டு அல்லது கனமான துணியைக் கட்டிச் செய்யும் அமைப்புa temporary shed with a roof made of plaited coconut leaves or cloth (for a function, purpose, etc.)
பந்தா (தன் பதவி, அந்தஸ்து முதலியவற்றை வெளிப்படுத்தக் கூடிய) மிடுக்கான தோரணைoverbearing attitude
பந்தாடு (ஒருவரை) ஒன்றிலும் நிலைக்க விடாமல் அலைக்கழித்தல்kick around
பந்தி (திருமணம் போன்ற விழாவில்) விருந்து உணவிற்கான வரிசைan arrangement during feasts in which the invited guests are seated in rows
பந்து1(கீழே போட்டால் மேலெழக் கூடிய) உருண்டை வடிவ விளையாட்டுச் சாதனம்ball
பந்து2(பெரும்பாலும் பன்மையில்) உறவினர்(often in plural) relative
பந்துவீச்சு (கிரிக்கெட்டில்) மட்டையுடன் விளையாடத் தயாராக இருப்பவரை நோக்கிப் பந்தை வீசுதல்bowling (in cricket)
பந்தோபஸ்து பாதுகாப்புsecurity
பப்படம் (உப்பக் கூடிய) ஒரு வகை அப்பளம்a kind of அப்பளம்
பப்பாளி மஞ்சளும் பச்சையும் கலந்த நிறத்தில் தோலும் சிவந்த மஞ்சள் நிறத்தில் சதைப் பகுதியும் கொண்ட ஒரு வகைப் பெரிய பழம்/மேற்குறிப்பிட்ட பழம் தரும் மரம்papaya (the fruit and the tree)
பம்பரம் கீழ்ப்பகுதி கூம்பு வடிவிலும் அதன் நுனியில் ஆணியும் இருக்கும் விளையாட்டுச் சாதனம்top
பம்பளிமாசு தடித்த தோலும் புளிப்புச் சுவையும் உடைய, இளம் சிவப்பு நிறச் சுளைகளைக் கொண்ட, ஆரஞ்சு வகையைச் சேர்ந்த பழம்pomelo
பம்பை தோலால் இழுத்துக் கட்டப்பட்ட இரு வட்ட வடிவப் பக்கத்துடன் சுருங்கிய நடுப்பகுதியைக் கொண்ட, நீளமாக இருக்கும் தாள வாத்திய இணைa pair of elongated two-sided drums
பம்மாத்து வெறும் நடிப்புbluff
பம்மு (ஒருவரைக் கண்டு வெளிவரப் பயந்து) ஒளிதல்hide (so as not to be seen by s
பய1(தீங்கு அல்லது ஆபத்து நேரக் கூடிய சூழ்நிலையில்) பாதுகாப்பு இல்லை என்பது போன்ற கலக்க உணர்வு தோன்றுதல்be scared
பய2(நன்மை, தீமை முதலியவற்றை) உண்டாக்குதல்give (benefit)
பயங்கரம் அச்சம் தருவது/கொடிய தோற்றமுடையதுthat which causes fright
பயங்கரவாதம் அரசியல் நோக்கத்திற்காக மக்கள் இடையே பீதியைக் கிளப்பும் வகையில் வன்முறையை மேற்கொள்ளும் போக்குterrorism
பயங்கரவாதி பயங்கரவாத முறைகளை மேற்கொள்பவர்terrorist
பயணச்சீட்டு பயணம் செய்வதற்கு உரிய கட்டணத்தைச் செலுத்திப் பெறும் சீட்டுticket
பயணச்சீட்டுப் பரிசோதகர் பேருந்து, ரயில் முதலியவற்றில் பயணம் செய்கிறவர்களின் பயணச்சீட்டு, சுமைக்கான கட்டணச் சீட்டு முதலியவற்றைக் கேட்டு வாங்கிச் சரிபார்க்கும் பணியைச் செய்பவர்ticket examiner (in a bus, train, etc while travelling)
பயண நூல் ஒருவர் தான் சென்று வந்த நாட்டைப்பற்றியும் சந்தித்த மக்களைப்பற்றியும் எழுதும் நூல்literature of travel
பயணப் படி அலுவலக வேலையின்பொருட்டு வெளி இடங்களுக்குச் செல்லும் பணியாளரின் பயணச் செலவை ஈடுகட்டக் குறிப்பிட்ட விகிதத்தில் வழங்கப்படும் தொகைtravelling allowance (abbreviated to T
பயணப்படு பயணம் மேற்கொள்ளுதல்go on a journey
பயணம் இருக்கும் ஊர், நகரம் முதலியவற்றிலிருந்து மற்றொன்றிற்குச் செல்லுதல்travel
பயணி1(பெரும்பாலும் வாகனத்தில்) பயணம் செய்தல்travel
பயணி2பயணம் மேற்கொள்பவர்one who undertakes a journey
பயத்தம்பருப்பு பாசிப்பருப்புgreen gram
பயந்தாங்கொள்ளி சற்றும் தைரியம் இல்லாத நபர்chicken-hearted person
பயப்படு (தீங்கு, துன்பம் முதலியவை வந்துவிடுமோ என்று எண்ணி) பயம்கொள்ளுதல்be afraid of
பயபக்தி பயத்தோடு கூடிய பணிவு அல்லது மரியாதைreverential attitude
பயம் தீங்கு, இழப்பு, ஆபத்து முதலியவை நேரக் கூடிய சூழ்நிலையில் ஒருவருக்கு ஏற்படும் உணர்வுfear
பயமுறுத்து பயம்கொள்ளச்செய்தல்frighten
பயல் சிறுவனை அன்புடன் அழைக்கப் பயன்படுத்தும் சொல்a term of endearment used esp
பயன் (செயலின்) விளைவுresult (of an action)
பயன்படு நன்மை விளைவிப்பதாக அல்லது உதவியாக இருத்தல்be useful
பயன்படுத்து (தேவையை நிறைவேற்றும்பொருட்டு அல்லது நன்மை, வசதி போன்றவற்றைப் பெறும்பொருட்டு) கையாளுதல்use
பயன்பாடு பயன்தரும் அல்லது பயன்படக் கூடிய தன்மைuse
பயனாளி (குறிப்பிட்ட திட்டம், சட்டம் முதலியவற்றிலிருந்து) பயன்பெறுபவர்beneficiary
பயனிலை ஒரு வாக்கியத்தில் எழுவாயின் நிலையைத் தெரிவிப்பது அல்லது எழுவாய்க்கான செயலின் முடிவைத் தெரிவிப்பதுpredicate
பயிர் (நன்செய் அல்லது புன்செய் நிலத்தில் உண்டாக்கப்படும்) நெல், பருத்தி, கரும்பு, சோளம் போன்ற தாவரம்crop
பயிர் ஊக்கி பயிரினுடைய சீரான வளர்ச்சிக்கு ஊக்கம் தரக் கூடிய ரசாயனப் பொருள்plant hormone
பயிர்ச் சுழற்சி சில பயிர்களைச் சுழல் முறையில் பயிரிடுதல்crop rotation
பயிர்த்தொழில் விவசாயம்agriculture
பயிராகு பயிர் விளைதல்be cultivated
பயிரிடு (நிலத்தில்) பயிர் விளைவித்தல்grow crops
பயில் (கல்வி, கலை முதலியவை) கற்றல்(பள்ளியில்) படித்தல்learn (a subject, an art, etc.)
பயில்வான் மல்யுத்தம் புரிபவன்wrestler
பயிலகம் (தட்டச்சு, சுருக்கெழுத்து முதலியவற்றில்) பயிற்சியளிக்கும் நிறுவனம்institute offering training (in typing, shorthand, etc.)
பயிற்சி (வேலை, விளையாட்டு போன்றவற்றில் அனுபவ அறிவு பெற) தேவையான செயல் குறிப்புகளைப் பல முறை செய்து பழக்கப்படுத்திக்கொள்ளும் முறைtraining
   Page 3 of 33    1 2 3 4 5 33