Tamil to Tamil&English Dictionary

We are happy to provide you with the best Online Tamil to Tamil Dictionary/Translator.
For typing word in Tamil you can use our tool typing tool

  
Tamil WordTamil MeaningEnglish Meaning
மடங்கு2தன் அளவை ஒத்த மற்றொரு பங்கு அல்லது தன் அளவின் விகிதத்தில் குறைந்த பங்குfold (as in three-fold)
மட(ச்)சாம்பிராணி சிறிதும் அறிவில்லாத நபர்absolute nitwit
மடத்தனம் அறிவைப் பயன்படுத்தாத அல்லது சிந்திக்காத தன்மைstupidity
மடந்தை பெண்woman
மடப்பள்ளி (கோயில்) சமையல் அறைkitchen (attached to a temple)
மடம் (இந்து சமயத்தைச் சார்ந்த) தலைமைத் துறவி மற்ற துறவிகளோடு இருந்து சமயப் பணிகளை மேற்கொள்ளும் இடம்religious institution similar to a monastery
மடமட-என்று கடகட-என்றுquickly
மடமை புரிந்துகொள்ளும் திறனும் முன் யோசனையும் இல்லாத தன்மைincomprehension
மடல்1(தாழை போன்ற தாவரத்தின்) சற்று அகலமாக நீண்டிருக்கும் தடித்த இலைப் பகுதிflat leaf (of palm, screwpine, etc.)
மடல்2கடிதம்letter (written to s
மடல்3(திருநீறு, சந்தனம் போன்றவை வைப்பதற்கான) சற்று நீண்டு குழிந்திருக்கும் மரப் பெட்டி அல்லது சிறிய பாத்திரம்receptacle (for keeping sacred ash, etc.)
மடாதிபதி மடத்தின் தலைமைப் பொறுப்பேற்றிருக்கும் துறவிhead of a religious mutt
மடாலயம் மதத் துறவிகள் வசிக்கும் இடம்abode of monks
மடி1உயிர் இழத்தல்die
மடி2(விரிந்திருக்கும் அல்லது நீண்டிருக்கும் நிலையிலிருந்து) தன் மீதாகவே வரும்படி படிதல்be folded
மடி3(நீண்டிருக்கும் அல்லது விரிந்திருக்கும் ஒன்றை) தன் மீதாகவே படியும்படி செய்தல்fold (a paper, cloth, etc.)
மடி4(உட்கார்ந்திருக்கும்போது) மடக்கிய முழங்காலுக்கு மேல் உள்ள தொடைப் பகுதிlap
மடி5(குளித்துவிட்டு முதல் நாள் துவைத்த ஆடை அணிந்து) பிறரால் தொடப்படாமல் தூய்மையாக இருக்கும் நிலைceremonial purity
மடிசஞ்சி மடியை அனுசரிக்க வேண்டிய துணியை வைத்துக்கொள்வதற்கான பைbag to keep clothes ceremonially pure
மடிசார் மூன்று முனையாக மடித்த சேலையின் ஒரு முனையைக் கால்களுக்கு இடையில் கொடுத்துத் தொங்கும் வகையில் இடுப்பின் பின்புறத்தில் செருகிக் கட்டும் முறைa mode of wearing the saree by tucking one end of it at the back
மடிப்பிச்சை இடுப்புத் துணியை விரித்து ஏந்திப் பெறும் பிச்சைalms received in the part of the cloth worn around the waist
மடிப்பு (தாள், துணி முதலியவை) மடிக்கப்பட்டிருப்பதுcrease
மடு1சுனைwater-hole
மடை (வயலில், தோட்டத்தில், வீட்டில்) நீர் செல்வதற்கு ஏற்ற வகையில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சிறு வழிnarrow channel
மடையன் முட்டாள்fool
மண் (தாவரங்கள் முளைக்கும்) பூமியின் மேற்பரப்புearth
மண்டகப்படி திருவிழாக் காலத்தில் உற்சவமூர்த்தியை மண்டபத்தில் எழுந்தருளச்செய்யும் நிகழ்ச்சிthe ceremony of receiving the deity at a மண்டபம் during a festival
மண்டபம் (கோயில் விழாவுக்கான) கல் தூண்கள் தாங்கிய கூரையோடு நான்கு பக்கமும் திறப்பாக உள்ள சதுர அல்லது செவ்வக வடிவக் கட்டடம்stone pillared structure open on all sides
மண்டலச் சார்பற்ற நாடு தன் பகுதியில் உள்ள எந்தக் கூட்டமைப்புடனும் சேராத நாடுcountry which does not attach itself to any bloc
மண்டலம்1(பூஜை, விரதம் முதலியவை தொடர்பாக) நாற்பதிலிருந்து நாற்பத்தைந்து நாளுக்குக் குறையாத கால அளவுperiod of forty to fortyfive days (for a puja, etc.)
மண்டலம்2(ஒரு துறையின் வசதிக்காகப் பிரித்திருக்கும்) நிர்வாகப் பிரிவுdivision
மண்டலாபிஷேகம் (கோயிலில்) கும்பாபிஷேகம் முடிந்த நாளிலிருந்து ஒரு மண்டலம்வரை செய்யப்படும் அபிஷேகம்ceremony of anointing idols for a மண்டலம் after the கும்பாபிஷேகம்
மண்டி1(பாத்திரத்தின் அடியில் சிறிதளவு உள்ள திரவத்தின்) கலங்கல்/அடியில் படிந்திருப்பதுsediment/dregs
மண்டி2(பெரும்பாலும் காய்கறி, பழங்கள், உணவு தானியங்கள்) மொத்த அளவில் விற்பனைசெய்யப்படும் இடம்(of certain vegetables, fruits, grains) shop where things are sold wholesale or in large quantities
மண்டியிடு முழங்கால் முட்டியைத் தரையில் வைத்து இருத்தல்kneel (down)
மண்டு1பெருமளவில் நிறைந்து காணப்படுதல்be found in large quantities
மண்டு2(மிக நெருக்கமானவரை, பெரும்பாலும் வயதில் இளையவரைத் திட்டும்போது) முட்டாள்dunce
மண்டூகம் புரிந்துகொள்ளவும் புரிந்துகொண்டதைச் சரிவர வெளிப்படுத்தவும் தெரியாத நபர்dull-witted person
மண்டை முகம் நீங்கலாக உள்ள தலைப் பகுதிthe hardest part of the head
மண்டைக்கர்வம் தலைக்கனம்a swollen head
மண்டைகாய் (மிகவும் தீவிரமாக யோசிப்பதால்) கூர்மையை இழத்தல்go dry (as a result of thinking hard)
மண்டையிடி தலைவலிheadache
மண்டையைப்போடு (அனுதாபமற்ற முறையில் கூறும்போது) இறத்தல்(said unsympathetically) die
மண்டையோடு தலையின் எலும்புப் பகுதிskull
மண்டைவெல்லம் கோள வடிவில் திரட்டிய வெல்லம்jaggery or coarse cane sugar in spherical shape
மண்ணாங்கட்டி (ஏதாவதொரு வடிவில்) மொத்தமாக இருக்கும் மண்clod
மண்ணியல் நில இயல்geology
மண்ணீரல் இரத்தத்தின் சுத்தத் தன்மைக்குக் காரணமான உயிரணுக்களை உற்பத்திசெய்யும், இரைப்பையின் இடதுபுறத்தில் அமைந்திருக்கும் உறுப்புspleen
மண்ணுளிப்பாம்பு தலை எது, வால் எது என்று தெரியாத வகையிலான உடல் அமைப்பை உடையதும் மண்ணுக்குள் புதைந்து வாழ்வதுமான ஒரு வகை உயிரினம்sand boa
மண்ணெண்ணெய் கச்சா எண்ணெய்யைச் சுத்திகரிக்கும்போது கிடைக்கும், நீரைவிட அடர்த்தி குறைந்த (எரிபொருளாகப் பயன்படும்) எண்ணெய்kerosene
மண்ணைக்கவ்வு (பிறரின் பார்வையில் அவமானப்படும் விதத்தில்) மோசமாகத் தோல்வி அடைதல்bite the dust
மண்ணைப்போடு பெரும் பாதிப்பு அல்லது இழப்பு ஏற்படச்செய்தல்cause
மண்புழு உடலைச் சுருக்கி நீட்டி நகர்ந்துசெல்லும், மண்ணில் வாழும் பழுப்பு நிறப் புழுearthworm
மண்வாரி மண்ணை அள்ளி வெளியேற்றும் இயந்திரம்earth moving equipment
மண்விழு (இடையில் உருவாகும் ஏதாவது ஒரு காரணத்தால் ஆசை) நிறைவேறாமல்போதல்go unfulfilled
மண்வெட்டி (மண்ணை வெட்டி அள்ளிப் போடப் பயன்படுத்தும்) மரக் கட்டையில் தடித்த இரும்புத் தகடு பொருத்தப்பட்ட கருவிhoe with a short handle
மண1மணம் வீசுதல்emit fragrance
மண2திருமணம் செய்தல்marry
மணங்கு 11.25 கிலோகிராம் எடை உள்ள அளவa weight of 11.25 kg
மணத்தக்காளி கரும் பச்சை நிற இலைகளையும் பழுத்த நிலையில் கரு நிறமாக இருக்கும் சிறிய மணி போன்ற காய்களையும் உடைய ஒரு வகைச் செடிblack night shade
மணம்1இனிய வாசனைfragrance
மணமக்கள் புதிதாகத் திருமணம் செய்துகொண்டவர்கள்newly married couple
மணமகள் திருமணம் செய்துகொள்ளப்போகும் பெண்bride
மணமகன் திருமணம் செய்துகொள்ளப்போகும் ஆண்bridegroom
மணமுடி திருமணம் செய்தல்wed
மணமேடை திருமணச் சடங்குகளை நிகழ்த்துவதற்காக அமைக்கப்பட்டிருக்கும் மேடைdecorated platform for marriage
மணல் (கடற்கரை, பாலைவனம் போன்ற இடங்களில்) படிந்து காணப்படுவதும் பொடியாக இருப்பதுமான இறுக்கமற்ற துகள்கள்sand
மணல்வாரி தட்டம்மைmeasles
மணவறை (திருமணச் சடங்கின்போது) மணமேடையைச் சுற்றிக் கழிகளை நட்டு அலங்கரிக்கப்பட்ட அமைப்புchamber-like arrangement for the performance of marriage rites
மணவாட்டி மனைவிwife
மணவாளன் கணவன்husband
மணவிலக்கு விவாகரத்துdivorce
மணி1(பெரும்பாலும்) வெண்கலத்தால் செய்த, கவிழ்த்த கிண்ணம் போன்ற பகுதியின் நடுவில் தொங்கும் நாக்கால் அடிக்கப்பட்டு ஒலி எழுப்பும் சாதனம்bell (with tongue)
மணி2(ஆபரணம் முதலியவற்றில் பதிக்கும்) விலை உயர்ந்த கற்களைக் குறிக்கும் பொதுப்பெயர்(குறிப்பாக) நீலம்a general term for all precious stones
மணிக்கட்டு உள்ளங்கை முடியும் இடம்wrist
மணிக்கூடு கடிகாரம்clock
மணிக்கூண்டு கடிகாரம் பொருத்தப்பட்ட உயர்ந்த தூண் அல்லது கோபுரம் போன்ற அமைப்புclock tower
மணிச்சத்து பயிரின் கதிர், மணி ஆகியவற்றின் திரட்சிக்கான தாவரச் சத்துphosphate (for plants)
மணிப்பிரவாளம் (தமிழ்நாட்டில்) வடமொழிச் சொற்கள் அதிக அளவிலும் வடமொழி இலக்கண விதிகள் குறைந்த அளவிலும் பயன்படுத்தப்பட்ட ஒரு வகைத் தமிழ் உரைநடைa kind of Tamil prose (practised mainly by commentators) characterized by heavy Sanskrit loan words but fewer grammatical terminations
மணிப்புறா உடலில் புள்ளிகளோடு காணப்படும் சிறிய புறாspotted dove
மணியக்காரர் (முன்பு) கிராமத்தில் நில வரிவசூல் முதலியவற்றைக் கவனிப்பவர்(formerly) village official entrusted with the collection of land revenue, house tax, etc
மணிலா/மணிலாக்கொட்டை நிலக்கடலைpeanut
மணிவிழா அறுபது ஆண்டு நிறைவில் நடத்தும் கொண்டாட்டம்celebration on the occasion of the completion of sixty years
மணை அடியில் சிறு குமிழோ கட்டையோ பொருத்தப்பட்டு உட்கார்வதற்குப் பயன்படுத்தும் பலகைwooden plank used as seat fixed with knobs or short pieces
மத்தகம் (யானையின்) புடைத்த நெற்றிப் பகுதிforehead (of the elephant)
மத்தளம் நீண்ட மிருதங்கம் போன்ற வாத்தியம்an elongated two-sided drum
மத்தாப்பு பற்ற வைத்தால் வண்ணச் சுடர் எழுப்பக் கூடிய ரசாயனக் கலவை ஒரு முனையில் பூசப்பட்ட தீக்குச்சி வடிவப் பட்டாசுcoloured matchstick used as a sparkler
மத்தி மையம்mid
மத்திமம் நடுத்தரம்middling
மத்திய1மத்திய அரசைச் சார்ந்த/மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட(when government is referred to) belonging to the central
மத்திய2நடுவில் அமைந்தof the centre
மத்திய அரசு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற்ற கட்சியால் அமைக்கப்பட்ட அமைச்சரவைமூலம் நாட்டின் எல்லா மாநிலங்கள் மீதும் அதிகாரம் செலுத்த உரிமையுடைய அரசு(in India) central government
மத்தியஸ்தம் (தகராறு, பிரச்சினை முதலியவற்றை) நடுநிலை வகித்து எல்லாத் தரப்பினரிடமும் பேசிச் செய்யும் சமரசம்mediation
மத்தியஸ்தர் மத்தியஸ்தம் செய்பவர்mediator
மத்தியானம் நண்பகல்midday
மத்தியில் நடுவில்among
மத்து (கீரை முதலியவற்றை மசிப்பதற்காக) அரைக்கோள வடிவ அடிப்பகுதி கொண்ட அல்லது (வெண்ணெய் திரட்டுவதற்காக) விளிம்புகளோடு கூடிய அடிப்பகுதி கொண்ட சமையல் அறைச் சாதனம்a wooden stick with a hemispherical bottom to mash (cooked greens) or with a bottom having grooves to collect (butter)
மதகு (அணை, ஏரி முதலியவற்றில்) தேவையான நீரைச் சீராக வெளியேற்றுவதற்கு ஏற்ற வகையில் திறந்து மூடக் கூடிய அமைப்பைக் கொண்ட சாதனம்sluice
மதநீர் இனப்பெருக்க விழைவுக் காலத்தில் யானை வெளியேற்றும் கழிவுfluid secreted by elephants during rutting season
மதம்1இறைத் தத்துவத்தையும் ஆன்மீகத்தையும் அடிப்படையாகக் கொண்ட நெறிமுறைreligion
   Page 1 of 22   1 2 3 22