Tamil to Tamil&English Dictionary

We are happy to provide you with the best Online Tamil to Tamil Dictionary/Translator.
For typing word in Tamil you can use our tool typing tool

  
Tamil WordTamil MeaningEnglish Meaning
மதம்2(யானைக்கு) இனப்பெருக்க விழைவுக் காலத்தில் ஏற்படும் வெறிrut (of an elephant)
மதர்த்த செருக்கானproud
மதர்ப்பு (உடலைக் குறிப்பிடும்போது) செழிப்பு(of body) healthy sheen of youthfulness
மதலை குழந்தைchild
மதாளித்து கொழுத்துluxuriantly
மதி1(ஒருவரின் வயது அல்லது ஒன்றின் விலை, அளவு முதலியவற்றை) கணக்கிடுதல்estimate
மதி2அறிவுintellect
மதி3நிலவுmoon
மதிகேடன் அறிவுகெட்டவன்foolish person
மதிப்பிடு (அளவு, விலை முதலியவற்றின்மூலம் அல்லது தரத்தின் அடிப்படையில்) கணக்கிடுதல்estimate
மதிப்பீடு (விலை, அளவு, தரம் முதலியவை குறித்துச் செய்யும்) கணிப்புestimate
மதிப்பு (ஒரு பொருளுக்கு விலையாக) நிர்ணயிக்கப்பட்ட அளவுworth
மதிப்புரை (நூல் முதலியவற்றின்) தரம்பற்றிய கருத்து அல்லது கணிப்புreview (of a book, etc.)
மதிப்பூதியம் (மாத ஊதியம் போல் அல்லாமல்) ஒருவர் பணிக்குச் சிறப்பாக அளிக்கப்படும் தொகைhonorarium
மதிப்பெண் (எழுத்துத் தேர்வு, போட்டி போன்றவற்றில்) திறமை, செயல்பாடு போன்றவற்றை மதிப்பீடு செய்து அளிக்கப்படும், தர அளவுக்கான குறியீடுmark (in an examination)
மதியம் சூரியன் உச்சிக்கு வரும் நேரம்noon
மதியூகம் கூர்மையான அறிவுsagacity
மதில் (அரண்மனையை உள்ளடக்கிய) கோட்டையின் வெளிச்சுவர்/(கட்டடத்தின்) சுற்றுச்சுவர்wall around a fort/compound wall
மதிள் (வீட்டின்) மதில்compound wall
மது நொதிக்கவைத்துத் தயாரிக்கப்பட்ட போதை ஊட்டும் பானம்alcohol (except toddy)
மதுபானம் போதை தரக் கூடிய மது வகைகள்alcoholic drinks
மதுரம் இனிமைdelightful
மதுவிலக்கு (சட்டப்படி) மது அருந்துவதற்குத் தடைprohibition (of making and selling of alcoholic drinks)
மந்தகாசம் புன்சிரிப்புsmile
மந்தம் இயக்கக் குறைவுsluggishness
மந்தமாருதம் தென்றல்breeze
மந்தி1(அஜீரணம் போன்ற காரணத்தால்) பசியற்ற நிலையில் இருத்தல்(of stomach) be sluggish
மந்தி2(பொதுவாக) குரங்கு(குறிப்பாக) பெண் குரங்கு(generally) monkey
மந்திரக்கோல் (மந்திரவாதி வைத்திருக்கும்) அபூர்வ சக்தி வாய்ந்ததாகக் கருதப்படும் சிறு கோல்magic wand
மந்திரம் (வழிபாடு, சடங்கு முதலியவற்றில் கூறப்படும்) சக்தி வாய்ந்த புனித வார்த்தைகள் அல்லது ஒலிகள்sacred words or sounds
மந்திரவாதம் மந்திரத்தால் நிகழ்த்தும் வித்தைmagical feats
மந்திரவாதி மந்திரம் கூறி அசாதாரணமான செயல்களை நிகழ்த்தக் கூடிய நபர்sorcerer
மந்திரி1(மந்திரவாதி போன்றோர் விஷத்தை இறக்கவோ நோய் முதலியவற்றை நீக்கவோ) மந்திரம் சொல்லுதல்utter mantras (for effecting cure, etc.)
மந்திரி2(அரசனின்) அமைச்சன்minister (to a king)
மந்திரிசபை அமைச்சரவைcabinet
மந்தை கால்நடைகளின் தொகுதிflock
மந்தைவெளி மேய்ச்சலுக்கான மைதானம்pasture ground
மப்பு1(மழை வருவதற்கு அறிகுறியான) கரு மேக மூட்டம்overcast (sky)
மப்பு2(வயிற்றில் அஜீரணம் முதலியவற்றால்) பசியற்ற மந்த நிலை(of stomach) sluggishness
மப்பும்மந்தாரமுமாக (மழை வருவதற்கு அறிகுறியாக) வானம் இருட்டிக்கொண்டு கரிய மேக மூட்டத்துடன்overcast
மமதை இறுமாப்புhaughtiness
மய்யத் உயிரற்ற உடல்dead body
மயக்கமருந்து மயக்கம் ஏற்படுத்தும் மருந்துany preparation that causes loss of consciousness or fainting
மயக்கு கவர்ச்சிக்கு உள்ளாக்கிக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருத்தல்charm (s.o.)bring (s.o.) under a spell.
மயங்கு கவர்ச்சிக்கு உள்ளாகிக் கட்டுப்படுதல்come under the spell
மயானம் இறந்தவர்களைப் புதைக்கும் அல்லது எரிக்கும் இடம்a place for burying or cremating the dead
மயான வைராக்கியம் இறந்தவரை மயானத்தில் எரிப்பதைக் காணும்போது வாழ்க்கை நிலை இல்லாதது, உலகப் பொருள் மீது விருப்பம் கொள்வது தேவையற்றது என்ற வகையில் எடுக்கும் தற்காலிக உறுதிa weak resolve to be less attached to worldly things at the sight of death
மயிர் முடிhair
மயிர்க்கால் ரோமக்கால்root of the hair
மயிர்க்கூச்செறி உடல் முடி குத்திட்டு நிற்றல்get goose-flesh
மயிர் மாணிக்கம் (தோட்டங்களிலும் வீட்டு முகப்புகளிலும் அழகுக்காக வளர்க்கப்படும்) கம்பி போன்ற சிறிய இலைகளையும் சிவப்பு நிறப் பூக்களையும் உடைய ஒரு வகைக் கொடிcypress vine
மயில் மினுமினுப்பான கருநீல நிற உடலும் நீண்டு வளைந்த மெல்லிய கழுத்தும் உடைய பறவைpeacock
மயில் துத்தம் (சாயமேற்றவும் பூச்சிக்கொல்லியாகவும் பயன்படும்) கருநீல நிறப் படிகம்copper sulphate
மயிலாட்டம் மயில் இறகுகளைக் கோத்து இடுப்பில் கட்டிக்கொண்டு மயில் ஆடுவது போல் ஆடும் ஒரு வகை நாட்டுப்புற நடனம்a folk dance in which the dancer ties round his or her waist peacock feathers strung together
மயிலை (காளை, பசு முதலியவற்றின் நிறத்தைக் குறிப்பிடும்போது) சாம்பல் நிறம்(of cattle) mixed colour of white and black
மர்ம (நாவல், திரைப்படம் தொடர்பாக) எதிர்பாராத திருப்பங்களுடன் திகில் அம்சங்கள் நிறைந்த(of fiction, film, etc.) suspense-packed
மர்மம் தெளிவாக விளங்காமலும் வெளிப்படையாக இல்லாமலும் மறைமுகக் காரணங்கள் கொண்டதாகவும் அமைவதுsomething puzzling
மர்மஸ்தானம் (ஆணின்) உயிர்நிலையான இனவிருத்தி உறுப்புvital part of the body
மர (இரத்த ஓட்டத் தடையால் தசை) கனத்து விறைப்பாக இருத்தல்(of limbs) get stiff
மரக்கலம்/மரக்கலன் (பொதுவாக) நீரில் செல்லும் மரத்தாலான போக்குவரத்துச் சாதனம்(குறிப்பாக) மரக் கப்பல்(generally) vessel in waterways
மரக்கறி (சைவ உணவான) காய்கறி, கீரை முதலியவை(vegetarian food such as) vegetables, greens, etc
மரக்கால் (தானியம் அளக்கும் முகத்தலளவையில்) எட்டு லிட்டர் கொண்ட அளவுa measure of eight litres
மரகதம் விலை உயர்ந்த பச்சை நிறக் கல்emerald
மரங்கொத்தி மரத்தைக் கொத்தித் துளைத்துப் பூச்சியைத் தின்பதற்கு ஏற்ற வகையில் அமைந்த நீண்ட, உறுதியான அலகையுடைய பறவைwoodpecker
மரச்சீனிக்கிழங்கு மரவள்ளிக்கிழங்குtapioca
மரண அடி மரணம் ஏற்படுவதற்குக் காரணமாகும் விதத்தில் விழும் பலத்த அடிsevere blow (that causes death)
மரண தண்டனை கொலை முதலிய கடும் குற்றம் புரிந்தவரின் உயிரைப் போக்குமாறு நீதிமன்றம் வழங்கும் தண்டனைsentence of death
மரணப்படுக்கை (நோய் முதலியவற்றால்) மரணம் நெருங்கும் கட்டம்deathbed
மரணம் சாவுdeath
மரணவாக்குமூலம் மரணம் நெருங்கும் தறுவாயில் உள்ள ஒருவர் தரும் வாக்குமூலம்testimony of a dying person
மரணி மரணமடைதல்die
மரநாய் பகலில் மரப் பொந்துகளில் இருப்பதும் இரவில் நடமாடுவதுமான கரும் பழுப்பு நிற (பூனை போன்ற) விலங்குtoddy-cat
மரப்பாச்சி (பெண்) குழந்தைகளுக்கான மரப் பொம்மைwooden doll (for little girls)
மரபியல் சொல் வழங்கும் மரபைக் கூறும் இலக்கணப் பகுதிthe part of ancient grammar works which deals with convention of words
மரபு (பண்பாட்டின் எல்லா அம்சங்களிலும்) பல காலமாகப் பின்பற்றப்பட்டு வருவது அல்லது பலரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நியதிestablished usage
மரம் பருத்த அடிப்பாகத்தையும் கிளைகளையும் உடையதாக உயரமாக வளரும் தாவரம்tree
மரமண்டை அறிவில்லாதவன்blockhead
மரவள்ளிக்கிழங்கு தடித்த பழுப்பு நிறத் தோலுடைய (உணவாகும்) ஒரு வகைக் கிழங்குtapioca
மரவுரி (முற்காலத்தில் முனிவரும் காட்டில் வந்து வசிப்போரும்) ஆடையாகப் பயன்படுத்திய மரப் பட்டைbark of tree used as clothing (formerly by ascetics, etc.)
மரவேலை மரச் சாமான்கள் செய்யும் வேலைcarpentry
மரவை (திருநீற்று) மடல்receptacle (for sacred ash)
மராமத்து கட்டடம், குளம், சாலை முதலியவற்றைப் பழுதுபார்க்கும் வேலைrepairs and maintenance (of public utilities)
மரி சாதல்die
மரியன்னை இயேசுநாதரின் அன்னைmother Mary
மரியாதை (வயது, அந்தஸ்து, பதவி முதலியவை அடிப்படையில்) (ஒருவருக்கு) காட்டும் அல்லது ஏற்பட்டிருக்கும் மதிப்புrespect (shown to or won by s
மரியாதைப் பன்மை பன்மையாக இருந்தாலும் உயர்வு கருதி ஒருவரைக் குறிப்பிடும் முறையில் வழங்கும் சொல்honorific plural
மரியாள் இயேசுநாதரின் அன்னையைக் குறிப்பிடும் பெயர்mary
மரு1பாலுண்ணிwart
மருக்கொழுந்து நறுமணம் மிகுந்த துளிர்களை இலைகளாகக் கொண்ட ஒரு வகைக் குத்துச் செடிsouthern wood
மருங்கு (ஓர் இடத்தின்) ஓரம்side (of a place)
மருட்சி பயத்தின் விளைவான கலக்கம்perplexity due to fright
மருட்டு பயமுறுத்துதல்frighten
மருத்துவச்சி (கிராமப்புறங்களில்) நிறைந்த அனுபவத்தால் பிரசவம்பார்ப்பவள்midwife (in villages)
மருத்துவம் நோய்க்கான காரணத்தைக் கண்டறிதலையும் நோயைக் குணப்படுத்துதலையும் நோக்கமாகக் கொண்ட சோதனைமுறையிலான வழிமுறைpractice of medicine
மருத்துவமனை நோயாளிகள் சென்று அல்லது தங்கியிருந்து சிகிச்சை பெறும் இடம்hospital
மருத்துவர் முறையாக மருத்துவம் பயின்று சிகிச்சை அளிப்பதற்குத் தகுதி பெற்றவர்medical practitioner
மருதம் (ஐந்து வகை நிலப் பாகுபாட்டில்) வயலும் வயல் சார்ந்த இடமும்(one of the fivefold divisions of land) agricultural tract
மருதாணி அரைத்துப் பூசிக்கொண்டால் (உள்ளங்கை, நகம் முதலியவற்றில்) சிவப்பு நிறம் தரும் ஒரு வகை இலை/அந்த இலையை உடைய செடிleaves of the plant henna crushed and used as dye (applied on the palms and nails)/(the plant) henna
மருந்தகம் தனிப்பட்ட முறையில் நோயாளிகளைக் கவனித்து அனுப்புவதற்காக மருத்துவர் ஏற்படுத்திக்கொண்ட இடம்dispensary
மருந்தாளுநர் (ஆங்கில) மருந்துகளைத் தயாரிக்கும் முறையைப் பயின்றவர்pharmacist
   Page 2 of 22    1 2 3 4 22