Tamil to Tamil&English Dictionary

We are happy to provide you with the best Online Tamil to Tamil Dictionary/Translator.
For typing word in Tamil you can use our tool typing tool

  
Tamil WordTamil MeaningEnglish Meaning
மேலாக1மேல்பரப்பை ஒட்டிய பகுதியில்on the surface
மேலாக2(காலத்தைக் குறிக்கையில்) அதிகமாகmore than
மேலாடை (உள்ளாடைக்கு மேல்) வெளியே தெரியும்படியாக அணியும் ஆடைouter garments
மேலாண்மை (ராணுவம், பொருளாதாரம் முதலியவற்றால்) பிறரைக் கட்டுப்படுத்தக் கூடிய பலம்dominance
மேலாண்(மை) இயக்குநர் நிர்வாகத்துக்காக அரசின் ஒப்புதலுடன் நியமிக்கப்படும் விசேஷ அதிகாரங்கள் தரப்பட்ட உயர் அதிகாரிmanaging director (appointed with the approval of government)
மேலாதிக்கம் (மற்றொரு அரசின், இனத்தின் மீது செலுத்தும்) முறையற்ற அதிகாரம்hegemony (of a country)
மேலாளர் (அலுவலகம், நிறுவனம், விற்பனை நிலையம் முதலியவற்றில்) முதன்மை நிர்வாகப் பொறுப்பு வகிப்பவர்manager
மேலான (குறிப்பிடப்படும் அளவுக்கு) அதிகமானmore than
மேலிடம் (கட்சி, நிறுவனம் முதலியவற்றில்) செயல்பாடுகளை நிர்ணயிக்கும் தலைமைப் பொறுப்புக் கொண்ட உயர்மட்ட அமைப்பு அல்லது குழு(in a political party, organization, etc.) decision making body
மேலிடு (உணர்ச்சி) பொங்குதல்(of emotions) overcome
மேலீடு மேலிடுதல்being overwhelmed
மேலுக்கு (மருந்தைப் பயன்படுத்தும் முறையாகக் கூறும்போது) உடம்பின் மேல்பகுதியில்(in connection with application of medicine) over the body
மேலுரம் நிலத்தில் பயிர் நட்ட பிறகு இடப்படும் உரம்(of application of fertilizer) top-dressing
மேலெழுந்தவாரியாக/மேலெழுந்தவாரியான ஊன்றிக் கவனிக்காமல்superficially/superficial
மேலே (பொருளை) ஒட்டியபடி மேல்over (an object)
மேலை மேற்கத்தியwestern
மேலைக் காற்று மேற்கிலிருந்து வீசும் காற்றுwesterly wind
மேலோங்கு (குறிப்பிடப்படும் ஒன்று மற்றவற்றைவிட) கூடுதலாகத் தெரிதல்prevail over
மேலோட்டம்-ஆக/-ஆன ஊன்றிக் கவனிக்காமல்/ஊன்றிக் கவனிக்காதsuperficially/superficial
மேவு (பள்ளத்தில் அல்லது ஒரு பரப்பில் மணல் முதலியவை) படிதல்spread
மேளக்காரர் தவில் வாசிப்பவர்one who plays on தவில்
மேளதாளத்துடன் (மேளம் போன்ற இசைக் கருவிகள் முழங்க) கோலாகலமாகin a rousing manner (accompanied by music)
மேளம் (பொதுவாக) தாள வாத்தியக் கருவி(குறிப்பாக) தவில்(generally) musical instruments
மேற்கட்டி விதானம்canopy
மேற்கண்ட (விளம்பரம், கேள்வித்தாள், கட்டுரை முதலியவற்றில்) மேலே கொடுக்கப்பட்டுள்ளgiven above
மேற்கத்திய (இந்தியாவுக்கு) மேற்கில் உள்ள, (பெரும்பாலும்) அமெரிக்காவையும் ஐரோப்பாவையும் சேர்ந்தwestern
மேற்கு சூரியன் மறையும் திசைwest
மேற்கூரை மேல்தளம்ceiling
மேற்கொண்டு (குறிப்பிட்ட நிகழ்ச்சிக்கு அல்லது நேரத்துக்குப் பிறகு) தொடர்ந்துfurther
மேற்கொள் (திட்டம், முயற்சி போன்றவற்றை) நடத்துதல்conduct
மேற்கோள் வேறொருவர் கூறியதைக் கூறப்பட்ட வடிவத்திலேயே எடுத்துக்காட்டுவதுquotation
மேற்சொன்ன மேலே குறிப்பிட்டmentioned above
மேற்பட்ட (குறிப்பிடப்படும் எண்ணிக்கையைவிட) அதிகமானmore than
மேற்படாத (குறிப்பிடப்படும் எண்ணிக்கையைவிட) அதிகம் இல்லாதnot exceeding
மேற்படி முதலில் அல்லது முன்னால் குறிப்பிட்டgiven above
மேற்படிப்பு (படித்து முடித்த கல்விக்கு அடுத்த கட்டமாக இருக்கும்) மேல்நிலைப் படிப்புfurther studies
மேற்பரப்பு பார்க்கும் விதத்தில் உள்ள பரப்புsurface
மேற்பார்வை பணிபுரிபவர்களையும் நடைபெறும் பணிகளையும் கண்காணிக்கும் பொறுப்புsupervision
மேற்பார்வையாளர் மேற்பார்வையிடும் பணி புரிபவர்supervisor (in an examination hall, a polling booth, etc.)
மேன்மேலும் தொடர்ந்து அதிகமாகmore and more
மேன்மை சிறப்புexcellence
மேனாமினுக்கி பகட்டாக ஆடை அணிந்து பேசித் திரிபவள்woman of show and vanity
மேனி1(மனித) உடல்(human) body
மேனி2(நிலத்தின்) சராசரி விளைச்சல்average yield (of a crop)
மேனி3வீதம்per
மேனிக்கு/மேனியாக (பெயரெச்சத்தின் பின்) படிas
மேனிலைப் பள்ளி பத்தாம் வகுப்பிற்கு மேல் இரண்டு ஆண்டுகள் படிக்க வேண்டிய படிப்புத் திட்டம் கொண்ட உயர்நிலைப் பள்ளிhigher secondary school (which has a two year course after the tenth standard)
மேஜஸ் கொழுப்புfat
மேஜை (பெரும்பாலும்) நான்கு கால்களின் மேல் பொருள்களை வைப்பதற்கும், எழுதுதல் போன்ற செயல்கள் செய்வதற்கும் உரிய பரப்புக் கொண்ட சாதனம்table
மேஷம் ஆடு என்னும் விலங்கைக் குறியீட்டு வடிவமாக உடைய முதல் ராசிfirst constellation of the zodiac having the ram as its sign
மேஸ்திரி (கட்டட வேலையில் கொத்தனாரையும் சித்தாளையும்) கண்காணிப்பவர்head mason
மை (பெரும்பாலும் பெண்கள் கண்ணில் தீட்டிக்கொள்ளப் பயன்படுத்தும்) ஒட்டும் தன்மையுடைய கருப்பு நிற அலங்காரச் சாதனம்black pigment (applied on the edge of the eyelashes mostly by women)
மைசூர்ப்பாகு கடலை மாவைச் சீனிப் பாகில் போட்டுக் கிளறித் தட்டில் ஊற்றிச் சிறுசிறு துண்டுகளாக ஆக்கிய இனிப்புப் பண்டம்a kind of sweet made by adding chick-pea flour to sugar treacle and cut to pieces
மைதா கோதுமையிலிருந்து தயாரிக்கப்படும், நார்ச்சத்துக் குறைந்த, வழுவழுப்புத் தன்மை கொண்ட மாவுrefined wheat flour
மைதானம் (பொதுக்கூட்டம், விளையாட்டு முதலியவை நடக்கும்) திறந்தவெளி இடம்(play) ground
மைதுனம் உடலுறவுcopulation
மைந்தன் மகன்son
மை போடு (தீமை விளைவிக்க அல்லது தொலைந்துபோன பொருளைக் கண்டுபிடிக்க) மந்திர மையைப் பயன்படுத்துதல்employ magic pigment (for sorcery or to trace lost property)
மைய அரசு மத்திய அரசு(in India) the union or central government
மையம் (இடத்தில், பரப்பில்) நடுmidpoint
மையம்கொள் (கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்த மண்டலம்) நகராமல் ஒரு குறிப்பிட்ட இடத்தில் சுழன்றுகொண்டிருத்தல்(of cyclone, etc.) be centred
மையல் காதல் மயக்கம்infatuation
மைல் (தூரத்தைக் கணக்கிடுவதற்கான) 1609 மீட்டர் கொண்ட ஓர் அளவுa mile
மைல்கல் நெடுஞ்சாலையின் ஓரத்தில் ஊரின் தூரம் இவ்வளவு என்பதை அறிவதற்காக அமைத்திருக்கும் கல்milestone
மைனர் (சட்டப்படி சொத்து உரிமை முதலியவை வந்துசேரும்) பதினெட்டு வயது நிரம்பாதவர்minor (in age)
மைனர் சங்கிலி (ஆண்கள் போட்டுக் கொள்ளும்) தங்கத்தாலான மெல்லிய சங்கிலிthin gold chain (worn by men)
மைனா கால்களும் அலகும் மஞ்சளாகவும் உடல் கருப்பாகவும் உள்ள, சீட்டியடிப்பது போல் கூவும் ஒரு பறவைmynah
மொக்கு மொட்டு(flower) bud
மொக்கை1மொண்ணைbluntness (of a knife, etc.)
மொக்கை2பருமன்big
மொகலாயர் மத்திய ஆசியாவிலிருந்து படையெடுத்து வந்து இந்தியாவில் ஒரு பேரரசை நிறுவிய இஸ்லாமியர்the Moguls
மொச்சை மெல்லிய பழுப்பு நிறத் தோல் மூடிய அரை வட்ட வடிவிலிருக்கும் அவரை இனப் பயறு/அந்தப் பயறு விளையும் செடிhyacinth bean and the creeper
மொச்சைக்கொட்டை மொச்சைக் காயினுள் உட்குழிந்த அரை வட்ட வடிவிலிருக்கும் விதைhyacinth bean
மொட்டாக்கு முக்காடுa cloth covering the head
மொட்டு பூவின் இதழ் விரியாமல் இருக்கும் நிலை(flower) bud
மொட்டை (தலையில்) முடி முழுவதுமாக மழிக்கப்பட்ட நிலைshaven or hairless (state, esp
மொட்டைக் கடிதம் குற்றமோ குறையோ கூறிக் கையெழுத்தும் முகவரியும் இல்லாமல் அனுப்பப்படும் கடிதம்anonymous letter
மொட்டைமாடி கூரை எதுவும் இல்லாமல் சுற்றுச்சுவருடன் மட்டும் இருக்கும் (கட்டடத்தின்) மேல்தளம்the flat roof of a house open to the sky
மொடமொட-என்று (துணி, காகிதம் போன்றவற்றைக் குறிக்கையில்) மடங்காமலும் சுருங்காமலும் விறைப்பாகstiff (as a starched cloth or a fresh currency note, etc.)
மொடமொடப்பு (துணி, காகிதம் போன்றவற்றைக் குறிக்கையில்) மடங்காமல் விறைப்பாக இருக்கும் தன்மைstiffness
மொண்ணை (கூரிய முனை உடையவற்றைக் குறித்து வருகையில்) கூர்மை இழந்த தன்மைbluntness
மொத்தத்தில் எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு பார்க்கையில்in sum
மொத்தம்1(கணக்கிட்டுப் பார்த்த பின்) முடிவாகக் கிடைப்பதுtotal
மொத்தம்2பருமன்thick
மொத்து1பலமாக அடித்தல்beat severely
மொத்து2பலமான அடிblow
மொந்தன்பழம் தடித்த தோலை உடைய ஒரு வகை வாழைப்பழம்a thick-skinned plantain fruit
மொந்தை (பெரும்பாலும் கள் வடிக்கப் பயன்படுத்தும்) சிறு பானை போன்ற மண் பாத்திரம்small earthen pot (used mostly in tapping palmyra sap, etc.)
மொய்1(ஈ முதலியவை கூட்டமாக ஒன்றை அல்லது ஒன்றில்) சுற்றிச்சூழ்தல் அல்லது சூழ்ந்திருத்தல்swarm round
மொய்2(திருமணம் முதலிய சடங்கின்போது மணமக்களுக்கு) பரிசாக அளிக்கப்படும் பணம்money presented (at the time of wedding, etc by well-wishers)
மொய்யெழுது (திருமணம் முதலிய சடங்கின்போது) பணம் பரிசாக அளித்தல்present money (at the time of wedding, etc.)
மொரமொரப்பு (பொரித்த அப்பளம், வறுவல் முதலியவை) ஈரப்பதம் இல்லாமல் உண்ணும்போது படபடவென்று நொறுங்கக் கூடியதாக இருக்கும் நிலைcrispness
மொழி1கூறுதல்declare
மொழி2கருத்தையும் உணர்வையும் வெளிப்படுத்துவதற்கு உதவும் ஒலிக் குறியீட்டுத் தொகுதிlanguage
மொழிபெயர் ஒரு மொழியில் தெரிவிக்கப்பட்டதைப் பொருள் மாறாமல் மற்றொரு மொழியில் தெரிவித்தல்translate
மொழிபெயர்ப்பாளர் (கதை, கட்டுரை முதலியவற்றை) மொழிபெயர்ப்பவர்translator
மொழிபெயர்ப்பு மொழிபெயர்த்தல்translation
மொழிமாற்றம் மொழிபெயர்ப்புtranslation
மொழியாக்கம் மொழிபெயர்ப்புtranslation
மொழியியல் மொழிகளின் அமைப்பை அறிவியல் அடிப்படையில் வெளிப்படுத்தும் பொது அணுகுமுறை கொண்ட துறைlinguistics
   Page 20 of 22    1 18 19 20 21 22