Tamil to Tamil&English Dictionary

We are happy to provide you with the best Online Tamil to Tamil Dictionary/Translator.
For typing word in Tamil you can use our tool typing tool

  
Tamil WordTamil MeaningEnglish Meaning
மருந்தியல் மருந்தில் உள்ள மூலப் பொருள்பற்றியும் நலன்கள்பற்றியும் விவரிக்கும் அறிவியல் துறைpharmacology
மருந்து (நோய், காயம் முதலியவற்றை) குணப்படுத்தும் பொருள்medicine
மருந்துக்கடை மருந்துகள் விற்கும் கடைmedical shop
மருந்துக்குக்கூட (எதிர்மறைச் சொற்களோடு மட்டும்) சிறிதளவுகூட, (எதிர்பார்க்கப்படும்) குறைந்த அளவிலும்even a little
மருமகள் மகனின் மனைவிdaughter-in-law
மருமகன் மகளின் கணவன்son-in-law
மருள் (பயத்தால்) மிரளுதல்be frightened
மரூஉ மாற்றம் அடைந்து வழங்கும் சொல்word that undergoes changes such as contraction
மரை (திருகாணி போன்றவற்றின்) நுனியிலிருந்து மேல் நோக்கிச் சுற்றிச் செல்லும் கோடு போன்ற பதிவுthread (of a bolt or nut)
மரைக்கார் (முஸ்லிம் வழக்கில்) பள்ளிவாசல் நிர்வாக உறுப்பினர்trustee
மல் அதிக கனமில்லாத இழைகளால் நெய்யப்பட்ட துணிfabric woven with medium count yarns
மல்கு (கண்ணீர்) நிறைதல்(of tears) well up
மல்கோவா திட்டுதிட்டாகப் பச்சை நிறம் காணப்படுகிற மஞ்சள் நிறத் தோலையும், திரட்சியான சதைப் பகுதியையும், மிகுந்த இனிப்புச் சுவையையும் உடைய ஒரு வகை மாம்பழம்a variety of mango
மல்யுத்தம் முதுகு தரையில் படும்படி பிடிபோட்டுத் தள்ளி விழச்செய்வதால் வெற்றியடையும் விளையாட்டுwrestling
மல்லன் மல்யுத்தம் செய்வதில் தேர்ச்சி பெற்றவன்wrestler
மல்லாடு (ஒன்றைச் செய்துமுடிக்க, சமாளிக்க) சிரமப்படுதல்struggle
மல்லாத்து மல்லாந்து இருக்கும்படிசெய்தல்make
மல்லிகை மணம் மிகுந்த சிறு கூம்பு வடிவ வெண்ணிறப் பூ/அந்தப் பூப் பூக்கும் செடிa variety of jasmine (the flower and the plant)
மல்லுக்கட்டு1மற்போர் செய்தல் wrestle
மல்லுக்கட்டு2மற்போர்wrestling match
மல்லுக்கு நில் (எதிர்த்துப் பேசி) சண்டைபோடுதல்/(எதிர்க்கும் நபரோடு) போராடுதல்contend with
மலச்சிக்கல் (எளிதில் அல்லது சரிவர) மலம் வெளியேறாதிருக்கும் நிலைconstipation
மலடன் பெண்ணைக் கருத்தரிக்கச்செய்ய முடியாத உடல் குறைபாடு உடையவன்sterile man
மலடி கருத்தரிக்க முடியாத உடல் குறைபாடு உடையவள்barren woman
மலடு கருத்தரிக்க அல்லது கருத்தரிக்கச்செய்ய இயலாத உடல் குறைபாடு உள்ள நிலைsterility
மலம்1(மனித உடலிலிருந்து) ஆசனவாய் வழியாக வெளியேறும் கழிவு(human) faeces
மலம்2(சைவ சித்தாந்தத்தில்) பாசம்(in Saiva siddhanta) the binding principle
மலமிளக்கி குடலில் மலத்தை இளக்கி எளிதாக வெளியேறச்செய்யும் தன்மை கொண்ட மருந்துlaxative
மலர்1மொட்டு விரிதல்(of buds) open (into a flower)
மலர்2பூflower
மலர்3விழா, பண்டிகை போன்றவற்றுக்கான ஒரு பத்திரிகையின் அல்லது நிறுவனத்தின் சிறப்பு வெளியீடுbumper issue (of a journal)
மலர்க்காட்சி பூச்செடிகளையும் அலங்காரச் செடிகளையும் பார்வைக்கு வைத்திருக்கும் கண்காட்சிflower show
மலர்த்து விரியத் திறத்தல்open wide
மலர்வளையம் (இறந்தவர்க்கு அஞ்சலி செலுத்தும் விதத்தில் வைக்கும்) இலைகளாலும் சிறிய மலர்களாலும் கட்டிய வளையம்wreath (for the dead)
மலி (பொருள்) அதிக அளவில் கிடைத்தல்be abundant
மலிவான தரம் இல்லாதcheap
மலிவு (பொருளின் விலை) குறைவுcheap (in price)
மலிவுப் பதிப்பு குறைந்த விலையில் விற்கப்படும் (நூலின்) பதிப்புlow priced edition (of a book)
மலினம் உரிய நிலையிலிருந்து தரம் தாழ்த்திக் கேவலப்படுத்துவதாக அமைவதுbeing degraded
மலை2(பூமியின் மேற்பரப்பில்) மேல்நோக்கி உயர்ந்து அமைந்திருக்கும் உறுதியான பாறைகளின் தொகுதிmountain
மலைச்சாரல் மலையின் சரிவான பகுதிslope of a mountain
மலைப்பழம் (மலைப் பிரதேசங்களில் பயிரிடப்படும்) ஒரு வகை வாழைப்பழம்a kind of banana (cultivated in hilly areas)
மலைப்பாம்பு நீண்ட, தடித்த உடலால் விலங்குகளைச் சுற்றி நெரித்து விழுங்கக் கூடிய விஷமற்ற பாம்புpython
மலைப்பு (-ஆன) விளங்கிக்கொள்ள முடியாமல் வியப்புற்ற நிலைastonishment
மலைமலையாக (ஒன்றின் அளவைக் குறிக்கையில்) மிக அதிகமாகin great heaps
மலையாளம் (கேரள மாநிலத்தில் உள்ளவர்களால் பேசப்படுகிற, தமிழ் மொழியோடு நெருங்கிய ஒப்புமை உடைய) திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மொழிmalayalam (language)
மலையேறு (ஒருவரைப் பிடித்திருக்கும் தெய்வ ஆவேசம் அவரை) விட்டு நீங்குதல்leave
மலைஜாதி மலைப் பகுதியில் வசிக்கும் பழங்குடிhill tribe
மவுசு (தேவை அல்லது சந்தர்ப்பம் காரணமாக ஏற்படுகிற) மதிப்பு அல்லது வரவேற்புmarket
மவுத்து (முஸ்லிம் வழக்கில்) சாவுdeath
மழமழப்பு உராய்வு ஏற்படுத்தக் கூடியதாக இல்லாமல் இருக்கும் வழவழப்புsmoothness
மழலை (குழந்தைகளின்) திருத்தமற்ற இனிய பேச்சுlisp
மழி (தலையில், முகத்தில் உள்ள) முடியை நீக்குதல்shave
மழு சிறிய கைப்பிடியின் முனையில் கோடாலியில் இருப்பது போன்ற பட்டையான வெட்டும் பகுதி இணைக்கப்பட்ட ஓர் ஆயுதம்axe-like weapon
மழுக்கு மொன்னையாக்குதல்make blunt
மழுங்கல் கூர்மை இல்லாமைbluntness
மழுங்கு (கத்தி போன்றவற்றில்) கூரிய முனை தேய்தல்become blunt or dull
மழுப்பு (கேள்விக்கு) சரியான விளக்கம் தராமல் விடுதல்dodge
மழை மேகங்களிலிருந்து துளித்துளியாகப் பூமிக்கு இறங்கும் நீர்rain
மழைமானி ஓர் இடத்தில் பெய்யும் மழையின் அளவைக் கணக்கிடப் பயன்படும் கருவிrain-gauge
மளமள-என்று மடமடவென்றுin a swift and brisk manner
மளிகை பலசரக்குgrocery
மற்ற (குறிப்பிடுவது நீங்கலாக) மேலும் உள்ளother
மற்றபடி (குறிப்பிட்டதை அல்லது கவனிக்க வேண்டியதை) நீக்கிவிட்டுப் பார்த்தால்otherwise
மற்றவன் (குறிப்பிட்ட நபரைத் தவிர்த்து) இன்னொருவன்(குறிப்பிட்ட ஒன்றில்) சம்பந்தப்படாத ஒருவன்பிறன்the other one
மற்றைய மற்றother
மற்றொரு (தொடர்புடையவற்றைக்குறித்து வருகையில்) (குறிப்பிடப்படுவதோடு கூட) இன்னும் ஒருanother
மற நினைவிலிருந்து நீக்குதல் அல்லது தப்பவிடுதல்forget
மறதி (வேண்டியதை) நினைவில் வைத்துக்கொள்ள முடியாத தன்மைforgetfulness
மறம் வீரம்bravery
மறவன் வீரன்brave man
மறி (ஒருவரை அல்லது ஒன்றைத் தொடர்ந்து போகவிடாமல்) குறுக்கே தடுத்தல்intercept
மறித்து திரும்பagain (and again)
மறியல்1(தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க) (பணிபுரிவோரை) செல்லவிடாமல் அல்லது (வாகனங்களை) ஓடவிடாமல் தடுக்கும் செயல்picketing or blocking (traffic)
மறியல்2சிறைprison
மறு1எதிர்த்தல்disagree with
மறு3மீண்டும் ஒரு முறைonce again
மறுகு ஏங்கி வருந்துதல்languish
மறுதலி1மறுத்து ஒதுக்குதல்turn down
மறுதலி2(நோய் முதலியவை) திரும்ப வருதல்relapse
மறுப்பாளர் ஏற்க மறுப்பவர்one who refuses to accept
மறுப்பு கூறப்பட்டது தவறு என்றோ ஏற்கப்பட முடியாதது என்றோ தெரிவிப்பதுdenial
மறுபடி இன்னொரு முறைagain
மறுபிறவி (இறந்து) மீண்டும் பிறப்பதாக நம்பும் பிறப்புrebirth
மறுபேச்சு (ஒருவர் கூறியதற்கு) பதிலாகப் பேசும் பேச்சுdisputing
மறுமணம் திருமணமானவர் மீண்டும் செய்துகொள்ளும் திருமணம்remarriage
மறுமலர்ச்சி (கலை, இலக்கியம், சமுதாயம் போன்றவற்றின்) வளர்ச்சியில் மந்த நிலை நீங்கி ஏற்படும் புதிய எழுச்சிrenaissance
மறுமை மறுபிறவிrebirth
மறுமொழி பதில்reply
மறுவாழ்வு இயல்பான வாழ்க்கையை இழந்தோர்க்குத் திரும்ப அமைத்துத்தரப்படும் வாழ்க்கைrehabilitation
மறை1கண்ணுக்குப் புலப்படாமல் இருத்தல்go out of sight
மறை2எளிதில் கண்ணுக்குப் புலப்படாதவாறு ஆக்குதல்hide
மறை3வேதம்the Veda
மறைத்திரு (தெய்வத் தொண்டில் ஈடுபட்டுள்ளவரைக் குறிப்பிடும்போது) வணக்கத்துக்கு உரிய(when referring to persons who serve god) reverend
மறைப்பு ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கம் போகாதபடி அல்லது தெரியாதபடி அமைக்கப்படுவதுscreen
மறைமுகம் நேரடியானதாகவோ வெளிப்படையானதாகவோ அல்லாமல் இருப்பதுindirect
மறைமுக வரி பொருள்களை விற்கும்போது நுகர்வோரிடமிருந்து வசூலித்து வர்த்தகர் செலுத்தும் வரிindirect tax
மறைவிடம் மறைந்திருப்பதற்குப் பயன்படுத்தும் இடம்hide-out
மறைவு (-ஆக, -ஆன) இருப்பது வெளியே தெரியாததுcover
மன்மதன் (புராணத்தில்) ஆண்பெண் இடையே காதலைத் தோற்றுவிப்பவனாகவும் அழகில் சிறந்த ஆணாகவும் கூறப்படும் கடவுள்god of love
   Page 3 of 22    1 2 3 4 5 22