Tamil to Tamil&English Dictionary

We are happy to provide you with the best Online Tamil to Tamil Dictionary/Translator.
For typing word in Tamil you can use our tool typing tool

  
Tamil WordTamil MeaningEnglish Meaning
வதக்கு (காய்கறி முதலியவற்றை வாணலியில் போட்டு சூடான எண்ணெய்யில்) துவளும்படிசெய்தல்cook (vegetables, etc.) in oil
வதங்கு (செடி, கொடி அல்லது காய்கறி) நீர்த்தன்மை குறைந்து துவளுதல்lose freshness
வதந்தி மக்களிடையே பரவிப் பரபரப்பாகப் பேசப்படும், உண்மை என்று கூற முடியாத செய்திrumour
வதம் (புராணங்களில்) (தீயவர்களை) அழிக்கும் செயல்(in puranas) destruction (of evil persons)
வதவத-என்று ஒன்றை அடுத்து ஒன்றாக நிறைந்த அளவில்to an excessive or annoying degree or extent
வதனம் முகம்face
வதுவை திருமணம்marriage
வதை1வேதனைக்கு உள்ளாகும்படி துன்புறுத்துதல்inflict cruelty on
வதை2மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கும் வகையில் விளைவிக்கப்படும் துன்பம்cruelty
வந்தனம் வணக்கம்a term of respectful greeting
வந்தேறி இடையில் வந்து குடியேறியவர்newcomer
வம்சாவளி ஒரு பரம்பரையில் வந்தவர்கள்line of descent
வம்பள தேவையில்லாதவற்றைப் பேசி நேரத்தை வீணாக்குதல்gossip
வம்பன் (ஏதேனும்) வம்பு செய்பவன்mischievous person
வம்பு அவசியமற்ற பிரச்சினைunnecessary trouble
வம்புச்சண்டை வலியச் சென்று ஏற்படுத்தும் சண்டைquarrel which one makes voluntarily
வம்புதும்பு வீண் வம்புunnecessary interference
வயசாளி வயதானவர்an aged person
வயசுப் பெண் பருவமடைந்த இளம் பெண்young girl of marriageable age
வயணம் சரியான விவரம்clear details
வயதாகு (குறிப்பிட்ட) வயது நிரம்புதல்complete (a certain) age
வயது பிறந்ததிலிருந்து அல்லது தோன்றியதிலிருந்து கணக்கிடப்படும் கால அளவுage
வயதுக்குவா (பெண்) பருவமடைதல்(of girls) come of age
வயதுவந்தோர் பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவர்adult
வயல் (பொதுவாக) பயிரிடப்படும் நிலம்(குறிப்பாக) நெல் பயிரிடும் நிலம்கழனி(generally) field
வயற்காடு வயல் நிறைந்த வெளிpaddy fields
வயிற்றிலடி (பெரும்பாலும் கேட்ட சம்பளத்தை அல்லது கூலியைக் கொடுக்காமல் குறைக்கும்போது பாதிக்கப்பட்டவர் கூறும் முறையில்) பிழைப்பைக் கெடுத்தல்deprive (a person) of his or her means of livelihood
வயிற்றுக்கடுப்பு வலியோடு கூடிய வயிற்றுப்போக்குdysentery with pain
வயிற்றுப்பிழைப்பு அன்றாட உணவுக்கான உழைப்புmeans of living
வயிற்றுப்போக்கு அதிக அளவில் நீர்த்தன்மையோடு மலம் கழிதல்diarrhoea
வயிற்றுவலி வயிற்றில் ஏற்படும் வலிstomach-ache
வயிற்றெரிச்சல் (இழப்பு, ஏமாற்றம் முதலியவற்றால்) எரிச்சல் உணர்வுfrustration
வயிற்றைக்கலக்கு பெரும் பீதி அடைதல்terrify
வயிற்றைக்கழுவு (உணவு, உடை போன்ற) அடிப்படைத் தேவைகளைப் பெறுதல்subsist
வயிற்றோட்டம் வயிற்றுப்போக்குdiarrhoea
வயிறு உணவு செரிப்பதற்கு உரிய உறுப்புகள் அல்லது கருப்பை அமைந்திருக்கும் பகுதிstomach
வயிறெரி (இழப்பு, ஏமாற்றம் முதலியவற்றால்) மனக்கொதிப்பு அடைதல்be frustrated
வயோதிகம் முதுமைold age
வர்க்கப் போராட்டம் உற்பத்திச் சாதனங்களைத் தன்வசத்தில் கொண்ட ஆளும் வர்க்கத்திற்கும் உழைக்கும் வர்க்கத்திற்கும் இடையில் நிகழும் சமூகப் போராட்டம்class struggle
வர்க்கம்1வருமானம், அதிகார உரிமை, தொழில் முதலியவற்றின் அடிப்படையில் பிரிக்கப்பட்ட பிரிவுclass (in society, based on income, privilege, profession, etc.)
வர்க்கம்2குறிப்பிட்ட ஓர் எண்ணை அதே எண்ணால் பெருக்கிக் கிடைக்கும் எண்square (of a number)
வர்க்கமூலம் கொடுக்கப்பட்ட எண்ணை வர்க்கமாகக் கொண்ட எண்square root
வர்ணம்2இசை கற்பவர்களுக்குப் பயிற்றுவிக்கப்படும் இரண்டாவது பாடம்the second lesson in music for the beginners (giving the possible ways of rendering the ஸ்வரம் of ராகம்)
வர்ணனை நேரில் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் பேச்சு அல்லது எழுத்துdescription
வர்த்தகச் சம்மேளனம் குறிப்பிட்ட பகுதியில் உள்ள வர்த்தகர்கள் ஒன்றுசேர்ந்து வர்த்தக முன்னேற்றத்திற்காக ஏற்படுத்திக்கொள்ளும் அமைப்புchamber of commerce
வர்த்தகம் (இரு நாடுகளுக்கு இடையே அல்லது ஒரு நாட்டினுள்) மொத்த அளவில் நடைபெறும் பொருள் விற்பனை முதலியவைtrade
வர்த்தகர் வர்த்தகம் செய்பவர்merchant
வர்மக்கலை உடலின் சில குறிப்பிட்ட நரம்புகளை அழுத்துவதன் மூலம் நரம்புப் பிடிப்பு, சுளுக்கு போன்றவற்றுக்கான சிகிச்சை முறை அல்லது ஒருவரைச் செயல் இழக்கச் செய்யும் தற்காப்பிற்கான பயிற்சி முறைmethod of curing nervous disorders by massaging certain nerve centres or the art of defending oneself by striking certain nerve centres which paralyses one for the time being
வரகு மணி போலச் சிறியதாக இருக்கும் பழுப்பு நிறத் தானியம்/மேற்குறிப்பிட்ட தானியப் பயிர்common millet (grain and the crop)
வரத்து (வியாபாரச் சரக்கு) வந்துசேர்தல்(அணை முதலியவற்றுக்கு நீர்) வருதல்supplies (of goods)
வரப்பு வயலைப் பகுதிபகுதியாகப் பிரிக்கும் சிறு கரைridge of a field
வரம் (புராணங்களில்) (கடவுள், முனிவர் ஆகியோர் தங்கள் சக்தியினால் பக்தர்களின்) விருப்பத்தைப் பூர்த்திசெய்வதாக வழங்குவதுboon (granted by gods, saints)
வரம்பு இதற்குள் அமைய வேண்டும் என்றோ இதற்கு மேற்படக்கூடாது என்றோ அமைக்கும் கட்டுப்பாடு(upper, lower) limit
வரலாறுகாணாத இதற்கு முன் இது போல் இருந்திராதunprecedented
வரவர காலம் செல்லச்செல்லof late
வரவழை (ஒருவரை) வரச்செய்தல்(ஒன்றை) வந்துசேரச்செய்தல்send for
வரவினம் (ஒருவருக்குப் பல்வேறு இடங்களிலிருந்து) பண வரவுheads of receipts
வரவுசெலவு வரவினமும் அதில் செய்யப்பட வேண்டிய செலவுகளும்receipts and expenditure
வரவுசெலவு அறிக்கை வரவுசெலவுத் திட்டத்தைக் கொண்டுள்ள அறிக்கைbudget report
வரவுசெலவுத் திட்டம் நாட்டுக்கு அல்லது நிறுவனத்துக்கு எதிர்வரும் ஆண்டில் கிடைக்கும் வருமானம், வருமானத்திற்கான வழிகள், செலவுகள், செலவுகளுக்கான ஒதுக்கீடு முதலியவை குறிக்கப்பட்ட திட்டம்budget
வரவுவை (வியாபாரம் முதலியவற்றில்) வரவாகக் கிடைத்த பணத்தைக் கணக்குவைத்தல்credit (to an account)
வரவேற்பு அறை (வீடு, அலுவலகம் முதலியவற்றில் நுழைவாயிலை அடுத்து) விருந்தினர் அமர்வதற்கான அறைdrawing room
வரவேற்பு மடல் விழாவுக்கு வரும் முக்கிய விருந்தினரை வரவேற்கும் முறையில் புகழ்ந்து கூறும் வாசகங்கள் அடங்கிய தாள்scripted address of welcome (to be read out)
வரவேற்புரை (விழாவுக்கு வந்துள்ளவரை) வரவேற்று நிகழ்த்தும் உரைaddress of welcome
வரன் பெண்ணுக்குத் திருமணம் செய்துவைக்கப் பார்க்கப்படும் இளைஞன்prospective bridegroom
வரன்முறை வரைமுறைlimit
வராகம் பன்றிboar
வராந்தா உள் அறைகளுக்கு வெளிப்புறமாகக் கட்டடத்தில் கூரையோடு அமைந்திருக்கும் நடை வழிsheltered corridor along the side or sides of a building
வரி1(அணிந்துகொள்ளும் முறையில் உடலில்) சுற்றுதல்tie around
வரி2(ஒருவரை) உறுதியாக ஏற்றல்accept firmly
வரி3மாற்ற முடியாதபடி மேற்கொள்ளுதல்accept
வரி4கோடுline
வரி5பொதுநலனுக்காகச் செலவிட வேண்டியிருப்பதால் அதற்கு ஆகும் செலவை ஈடுகட்ட அரசு வசூலிக்கும் கட்டணம்tax
வரி ஏய்ப்பு சட்டப்படி அரசுக்குச் செலுத்த வேண்டிய வரியைக் கட்டாமல் ஏமாற்றுதல்tax evasion
வரிக்குதிரை உடலில் கறுப்பு, வெள்ளைப் பட்டைகளை உடைய குதிரைக் குடும்பத்தைச் சேர்ந்த விலங்குzebra
வரிசை1(-ஆக, -ஆன) ஒருவருக்குப் பின் ஒருவராக அல்லது ஒன்றையடுத்து ஒன்றாக அமையும் ஒழுங்குline
வரிசைக்கிரமம் வரிசையின் ஒழுங்குproper or due order
வரிவடிவம் (மொழியில் உள்ள ஒலிகளை) எழுதுவதற்கான வடிவம்script (for language)
வரிவிலக்கு பொதுவான வரி விதிப்புக்கு உள்ளாகாமல் இருக்கத் தரும் அனுமதிtax exemption
வரிவிளம்பரம் பத்திரிகைகளில் வகைப்படுத்தப்பட்டு வெளியாகும் குறைந்த அளவு வரிகளைக் கொண்ட சிறிய விளம்பரம்classified advertisement (with a few lines)
வருகைதரு பேராசிரியர் பல்கலைக்கழகத்தின் அழைப்பின் பேரில் குறிப்பிட்ட காலத்துக்குப் பணியாற்ற வந்திருக்கும் பேராசிரியர்visiting professor
வருகைதா (பெரியோர், தலைவர் முதலியோர்) வருதல்pay a visit
வருகைப்பதிவு (மாணவர், ஊழியர் முதலியோர் தங்களின்) வருகையைத் தெரிவித்துப் பதிந்துகொள்ளுதல்marking attendance
வருகைப்பதிவேடு வருகையைப் பதிவுசெய்வதற்காக உள்ள ஏடுregister for attendance
வருங்காலம் இனி வரப் போகும் காலம்future
வருங்கால வைப்புநிதி ஊழியரின் மாத ஊதியத்திலிருந்து பிடிக்கப்படும் தொகையும், பணிக்கு அமர்த்திய நிறுவனம் தனது பங்காகச் செலுத்தும் தொகையும் கொண்டு ஏற்படுத்தப்படுவதும் ஓய்வு பெற்ற பின் அளிக்கப்படுவதுமான சேமிப்புfund made up of the contribution of the employee and of the employer payable at retirement
வருடம் ஆண்டுyear
வருடாந்தர/வருடாந்திர வருடத்திற்கு ஒரு முறையானannual
வருடு மென்மையாகத் தடவுதல்stroke gently
வருணன் மழைக்கான தெய்வம்god of rain
வருத்தக்காரன் நோயாளிailing or sick person
வருத்தம்2நோய்ailment
வருத்து துன்பப்படவைத்தல்make one sad
வருந்தி மிகவும் வேண்டிearnestly
வருந்து (ஒரு செயலுக்காகவோ இழப்பிற்காகவோ) துன்பம் அடைதல்grieve
வரும் (காலத்தைக் குறிக்கையில்) இனி வரப்போகும்(of time) coming
வரும்படி வருமானம்income
வருமதி (ஒருவருக்கு மற்றொருவரிடம் இருந்து) வரவேண்டிய தொகைamount due (from s
வருமானம் பணி, தொழில் முதலியவற்றின் மூலமாகக் கிடைக்கும் பணம்income
வருமான வரி (ஒருவருடைய வருட வருமானம் குறிப்பிட்ட அளவுக்கு மேற்படுமானால் அந்த) வருமானத்தின் மீது அரசு விதிக்கும் வரிincome tax
   Page 1 of 20   1 2 3 20