Tamil To Tamil Dictionary
Tamil Word | Tamil Meaning |
எ | ஏழாம் உயிரெழுத்து ஏழ் என்னும் தமிழெண் வினாவெழுத்து பஞ்சபட்சிகளுள் கோழியைக் குறிக்கும் எழுத்து |
எஃகம் | கூர்மை ஆயுதப் பொது ஈட்டி வேல் சக்கரப்படை வாள் பிண்டிபாலம் சூலம் |
எஃகு | கூர்மை உருக்கு ஆயுதப்பொது வேற்படை கத்தரிகை கத்தி மதிநுட்பம் வேல் |
எஃகு | (வி) எஃகுஎன் ஏவல் நெகிழ் நீள் அவிழ் எதிர்தாக்கு தாழ்ந்தெழும்பு எட்டு உதைத்தேறு பஞ்சு முதலியன கொட்டு ஆராய் |
எஃகு | (கடினத் தன்மை உடையதும் வார்ப்பு இரும்பிலிருந்து குறிப்பிட்ட அளவு கரித் தன்மையை நீக்குவதால் கிடைப்பதுமான) இரும்பின் வகைகளில் ஒன்று |
எஃகுகோல் | பஞ்சுகொட்டும்வில் |
எஃகுகோல் | பஞ்சு கொட்டும் வில் |
எஃகுச்செவி | நுனித்தறியுஞ் செவி |
எஃகுதல் | பஞ்சு முதலியன பன்னுதல், பஞ்சு கொட்டுதல் பஞ்சு பறித்தல் ஆராய்தல் எட்டுதல் ஏறுதல் நெகிழ்தல் அவிழ்தல் நிமிர்தல் தாழ்ந்தெழும்பல் |
எஃகுபடுதல் | இளகிய நிலையை அடைதல் |
எஃகுறுதல் | அறுக்கப்படுதல் பன்னப்படுதல் |
எஃது | எது |
எக்கச்சக்கம் | மிக அதிகம் |
எக்கச்சக்கம் | தாறுமாறு, ஒழுங்கின்மை இசகுபிசகு |
எக்கச்சக்கம் | (கூட்டம், செலவு முதலியன) மிக அதிகம் |
எக்கச்சக்கமாக | தப்பிக்க முடியாதபடி |
எக்கச்சக்கமாக | வசமாக |
எக்கண்டப்பரப்பு | ஒன்றான முழுத் துண்டு |
எக்கண்டம் | முழுக்கூறு கண்ணோட்டமின்மை |
எக்கம் | ஒற்றை நரம்பு கட்டிய நரம்புக் கருவி, ஏகதந்திரி தாளம் ஒருதலைப் பறைவகை |
எக்கமத்தளி | ஒரு முழவுவகை |
எக்கர் | இடுமணல் நுண்மணல் மணற்குன்று இறுமாப்புடையவர் அவையல் கிளவி |
எக்கரணம் | முக்காரம், தமக்குள் மோதும் எருதுகளின் உரப்பொலி |
எக்கரவம் | முக்காரம், தமக்குள் மோதும் எருதுகளின் உரப்பொலி |
எக்கல் | எக்கர்,இடுமணல் நுண்மணல் மணற்குன்று நெருக்கம் எட்டல் ஏறுதல் குவித்தல் சொரிதல் பொருதல் வயிற்றை உள்ளிழுத்தல் வயிற்றையெக்கல் |
எக்கழுத்தம் | இறுமாப்பு |
எக்களி | (சாதனையின் பயனாக) பெருமகிழ்ச்சி அடைதல் |
எக்களிக்க | மகிழ்ச்சி மிக |
எக்களித்தல் | குதூகலித்தல், மிக மகிழ்தல் குமட்டுதல் |
எக்களிப்பு | வெற்றி மகிழ்ச்சி |
எக்களிப்பு | செருக்கோடுகூடிய மிகுமகிழ்ச்சி |
எக்களிப்பு | (சாதனையால்) இறுமாப்புடன் கூடிய மகிழ்ச்சி |
எக்காளம் | எக்காளம் என்பது சமயச் சடங்குகளில் பயன்படுத்தப்படும் கிராமிய இசைக் கருவிகளில் ஒன்றாகும். இது நான்கு பித்தளை அல்லது தாமிரக் குழாய்கள் சேர்ந்து வாய் வைத்து ஊதும் துளையுடன் கூடிய இசைக் கருவி ஆகும் எக்காளம் ஊதுவது வெற்றியின் அடையாளமாக கருதப்படுகிறது |
எக்காளம் | மகிழ்ச்சி ஆரவாரம் ஓர் ஊதுகுழல் காகளம் செருக்கு ஏளனம் |
எக்காளம்2 | ஏளனம் |
எக்கி | நீர் முதலியன வீசுங்கருவி |
எக்கியம் | யாகம் |
எக்கியம் | வேள்வி |
எக்கியோபவீதம் | பூண் நூல் |
எக்கு | (இறுக்கமான ஆடையை அணிந்துகொள்ளவோ பிறவற்றிற்காகவோ வயிற்றை) உள்ளிழுத்தல் |
எக்குத்தக்கு | தாறுமாறு, ஒழுங்கின்மை இசகுபிசகு |
எக்குத்தப்பாக/எக்குத்தப்பான | இசகுபிசகாக/இசகுபிசகான |
எக்குதல் | குவிதல் மேலே செல்ல வீசுதல் எட்டுதல் ஊடுருவிச் செல்லுதல் வயிற்றை உள்ளிழுத்தல் |
எக்கே | வருத்தக் குறிப்பு. எக்கே யிதுவென் (திவ். பெரியதி. 10 8 8) |
எக்கே | வருத்தக் குறிப்பு |
எகடம் | தென்னை |
எகணை | எதுகைத்தொடை, செய்யுளடிகளிலாயினும் சீர்களிலாயினும் முதலெழுத்து அளவொத்து நிற்க இரண்டாமெழுத்து ஒன்றிவருவது பொருத்தம் |
எகத்தாளம் | எள்ளல் தன்மை |
எகத்தாளம் | ஏளனம், பரிகாசம் |
எகத்தாளி | ஏளனம், பரிகாசம் |
எகமாய் | ஒன்றாய் |
எகிருதல் | துள்ளுதல் |
எகின் | அன்னம் கவரிமா அழிஞ்சில்மரம் செம்மரம் புளியமரம் நீர்நாய் நாய் |
எகினப்பாகன் | பிரமன் |
எகினம் | அன்னம் கவரிமா அழிஞ்சில்மரம் செம்மரம் புளியமரம் நீர்நாய் நாய் |
எகினன் | பிரமன் நாய் |
எகுன்று | குன்றிக்கொடி |
எங்க | எங்கே |
எங்கண் | எவ்விடம் |
எங்கணும் | எங்கும் |
எங்கள் | யாங்கள் யாங்கள் என்பது வேற்றுமையுருபை யேற்கும்போது அடையும் உருவம். எங்கள் பெருமானை யிமையோர் தொழுதேத்தும் (தேவா. 410. 7) |
எங்கித்தை | எவ்விடத்தில் |
எங்கு | எவ்விடம் |
எங்குத்தை | எவ்விடம் |
எங்குத்தைக்கு | எவ்விடத்துக்கு |
எங்கும் | எவ்விடத்தும் |
எங்கும் | எல்லாவிடத்தும், யாண்டும் |
எங்கும் | (குறிப்பிடப்படும் இடத்தின்) எல்லாப் பகுதியிலும் |
எங்கே | எவ்விடம் |
எங்கே | எங்கு, எவ்விடம் |
எங்கை | என் தங்கை |
எங்கை | எம் தங்கை |
எங்ஙன் | எங்ஙனம் |
எங்ஙன் | எத்தன்மை, எவ்விதம், எவ்வாறு எப்படி எவ்விடம் |
எங்ஙனம் | எவ்வாறு எவ்விடம் |
எங்ஙனம் | எவ்வாறு |
எங்ஙனே | எங்ஙனம் |
எசகுபிசகு | முறைகேடு, தவறான வழி |
எச்சம் | எஞ்சி நிற்பது, மிச்சம் கால்வழி, மக்கள் மகன் எச்சில் பறவை மலம் ஒரு மணப்பண்டம் குறைவு பிறப்பிலே வரும் குறை : குருடு, ஊமை, செவிடு, கூன், குறள், மா, மருள், உறுப்பில் பிண்டம் என்னும் எட்டு வகை ஊனம் எக்கியம், வேள்வி செல்வம் முன்னோர் வைப்பு தொக்கி நிற்பது உருபு முற்று எச்சங்கள் கொண்டு முடியும் பெயர் வினைகள் பெயரெச்ச வினையெச்சங்கள் |
எச்சம் | (உயரே பறந்து செல்லக் கூடிய பறவைகளின் அல்லது கூரை, சுவர் முதலியவற்றில் ஊர்ந்து செல்லும் பல்லி முதலியவற்றின்) கழிவு |
எச்சமிடுதல் | பறவைகள் மலங்கழித்தல் |
எச்சரி | (பாதகமான விளைவுகள் ஏற்பட இருப்பதைக்குறித்து) கவனமாக இருக்கும்படி கூறுதல் |
எச்சரிக்கை | சாக்கிரதை விழிப்பாய் இருக்குமாறு குறிப்பிடுதல் முன்னறிவிப்பு அமைதியாயிருக்கச் சொல்லுகை எச்சரிக்கை கூறுகை எச்சரிக்கைப் பாட்டு |
எச்சரித்தல் | முன்னறிவித்தல் விழிக்கப் பண்ணுதல் தூண்டுதல் கண்டித்தல் புத்தி சொல்லுதல் |
எச்சரிப்பு | எச்சரித்தல் முன்னறிவிப்பு |
எச்சவனுமானம் | காரியங் கொண்டு காரணமறிதல், ஆற்றில் நீர்வரக் கண்டவன் மலைக் கண் மழையுண்டென அறிதல் போல்வது |
எச்சவாய் | குதம் |
எச்சவாய் | குதம், எருவாய், மலவாய் |
எச்சவும்மை | எஞ்சியதைக் காட்டும்மை |
எச்சன் | வேள்வி செய்வோன் வேள்வித் தலைவன் அக்கினி, தீக்கடவுள் யாக தேவதை வேள்வியின் அதிதேவதையான திருமால் |
எச்சில் | உமிழ்நீர் உமிழ்நீர் பட்டுத் தூய்மை கெடும் பொருள் உண்டு கழிந்த மிச்சில் மிச்சம் மலசலம் முதலியன வேள்வித் தீயிலிடும் அரிசி மாவாலாகிய ஓமப் பொருள் உச்சிட்டம் |
எச்சில் மாற்றுதல் | எச்சிலிலையை எடுத்தெறிந்துவிட்டு இடத்தைத் துப்பரவு செய்தல் |
எச்சில்வாய் | உச்சிட்டவாய் |
எச்சிலன் | பிசுனன் |
எச்சிலன் | கடும்பற்றுள்ளன், பிசுனன் |
எச்சிலாக்குதல் | ஒருபொருளின் மேல் வாயெச்சில் படுதல் ஒன்றன் தூய்மையைக் கெடுத்தல் |
எச்சிலார் | இழிஞர் |
எச்சிலார் | எச்சிலுடையவர் இழிந்தோர் |
எச்சிலிடுதல் | உண்ட இடத்தைச் சாணமிட்டு மெழுகுதல் |
எச்சிலிலை | உணவுண்டு எச்சிலான இலை |
எச்சிலூண் | உச்சிட்டவுணவு |
எச்சிற் புரட்டுதல் | எச்சிலிடுதல் |
எச்சிற்கலப்பு | கணவன் எச்சிலை மனைவி உண்ணும் சடங்கு மணமக்கள் ஒருவர்பின் ஒருவர் ஒரு கலத்தில் பாலுண்ணுகை |
எச்சிற்கல்லை | எச்சிலிலை |
எச்சிற்கல்லை | உண்ட தையல் இலைக்கலம், எச்சிலிலை |
எச்சிற்கிதம் பாடுதல் | இழிந்த பொருளுக்காக ஒருவரைப் புகழ்ந்து கூறுதல் தகாத நோக்கத்தோடு குற்றத்திற்கு இணங்குதல் |
எச்சிற்படுத்தல் | எச்சிலாக்குதல் புண்படுத்துதல் கன்னிமை கெடுத்தல் |
எச்சிற்படுதல் | உமிழ்நீர் பட்டுத் தூய்மை கெடுதல் |
எச்சிற்பருக்கை | சிந்திக்கிடக்குஞ்சோறு |
எச்சிற்பேய் | ஒருவகைப் பேய் கொடுமையான சிறுதெய்வம் பெருந்தீனிக்காரன் |
எச்சிற்றழுதணை | எச்சில் தழும்பு, படர்தாமரை என்னும் நோய் |
எச்சிற்றழும்பு | எச்சில் தழும்பு, படர்தாமரை என்னும் நோய் |
எச்சிற்றேமல் | எச்சில் தழும்பு, படர்தாமரை என்னும் நோய் |
எச்சு | உயர்வு மிகுதி உயர்ந்த ஓசை குறைவு இசையில் நீண்ட ஓசை ஓரு வாத்தியக் கருவி |
எச்சுதேவன் | யாகதேவன் |
எசப்புச் செலவு | தரகு கொடுத்தற்குப் பிடிக்குஞ் செலவு |
எசம் | நரம்பு |
எசம் | நரம்பு, நாடி |
எசமாட்டி | தலைவி |
எசமாட்டி | தலைவி, குடும்பத் தலைவி |
எசமான் | எசமானன் |
எசமான் | தலைவன் கணவன் வேள்வித் தலைவன் |
எசமான் | (கிராமத்தில்) வீட்டில் அல்லது நிலத்தில் வேலைசெய்ய ஆள் வைத்துக்கொள்பவர் |
எசமானத்துவம் | தலைமை |
எசமானன் | தலைவன் கணவன் வேள்வித் தலைவன் |
எசமானி | எசமாட்டி தலைவி |
எசமானி | எசமான் என்பதன் பெண்பால் |
எசமானிக்கை | தலைமை |
எசமானினி | தலைவி |
எசர் | உலைநீர் |
எசர்கட்டு | உலை நீர்வை |
எசர்கட்டுதல் | உலைநீர் வைத்தல் |
எசல் | எசலாட்டம் |
எசலாட்டம் | இகலாட்டம் |
எசு | எசுர், நான்மறைகளுள் ஒன்று, இரண்டாம் மறை |
எசுர்வேதம் | எசுர், நான்மறைகளுள் ஒன்று, இரண்டாம் மறை |
எஞ்சணி | எஞ்சிநிற்குஞ்சொல் |
எஞ்சணி | சொல்லலங்கார வகையுள் ஒன்று, சொல் வெளிப்படாமல் எஞ்சி நிற்பது எஞ்சி நிற்கும் சொல் |
எஞ்சலார் | புதியவர் |
எஞ்சலித்தல் | குறைவு செய்தல் |
எஞ்சாமை | குறையாமை, ஒழியாமை, முழுமை |
எஞ்சிநிற்றல் | குறைந்த நிற்றல், தொக்கு நிற்றல், ஒழிந்து நிற்றல் |
எஞ்சியசொல்லி னெய்தக் கூறல் | நூல் உத்திகள் முப்பத்திரண்டனுள் ஒன்று, சொன்னவற்றால் சொல்லாதவற்றையும் உய்த்தறியுமாறு கூறுகை |
எஞ்சியசொல்லினெய்தக்கூறல் | ஒருதந்திரயுத்தி |
எஞ்சு | (கழிந்தது போக) மீதி அல்லது மிச்சம் இருத்தல் |
எஞ்சுதல் | எஞ்சல் |
எஞ்சுதல் | குறைதல் கெடுதல் இறத்தல், சாதல், ஒழிதல் மிஞ்சுதல் தொக்கு நிற்றல் கடத்தல் செய்யாதொழிதல் தனக்குப்பின் உரிமையாக வைத்தல் |
எஞ்ஞம் | எக்கியம், ஓமம், வேள்வி |
எஞ்ஞான்றும் | எப்போழ்தும் |
எஞ்ஞான்றும் | எகக்காலமும், எப்பொழுதும், எப்போதும் |
எட்கசி | எள்ளால் செய்யப்பட்ட உணவு, எள்ளுருண்டை |
எட்கசிவு | எள்ளால் செய்யப்பட்ட உணவு, எள்ளுருண்டை |
எட்கிடை | எள்ளுக்கிடத்தற்கு வேண்டிய இடம், எள்ளளவு |
எட்கை | தென்னை |
எட்கோது | எள்ளுக்காய்த் தோல் |
எட்சத்து | எண்ணெய் |
எட்சத்து | நல்லெண்ணெய் |
எட்சி | எழுச்சி, உதயம் |
எட்சிணி | யட்சினி |
எட்சித்தோஷம் | குழந்தை நோய்வகை |
எட்ட | தூரமாக |
எட்ட | தொலைவாக, தூரமாக |
எட்ட | (ஓர் இடத்தைவிட்டு) தள்ளி |
எட்டக்கட்டுதல் | நெருங்கி வாராதிருத்தல் |
எட்டடிப்பறவை | சிம்புள், சரபப்பறவை |
எட்டடிவிரியன் | ஒரு விரியன்பாம்புவகை |
எட்டத்தில் | தூரத்தில் |
எட்டம் | நீளம் தொலைவு அடைதற்கு எளிதாந் தன்மை |
எட்டம்பற்றுதல் | கிடைத்தல் |
எட்டமன் | எட்டயபுரத்து அரசர்களின் பட்டப்பெயர் |
எட்டமன் | எட்டையபுரம் சமீன்தார்களின் பட்டப்பெயர் |
எட்டர் | மங்கலப்பாடகர் |
எட்டர் | மங்கலப் பாடகர் மூடர் |
எட்டல் | எட்டுதல் |
எட்டன் | எட்டமன் மூடன், அறிவிலான் |
எட்டன்மட்டம் | தாளவகை |
எட்டாக்கை | தூரம் |
எட்டாக்கை | தொலைவான இடம் |
எட்டாரச்சக்கரம் | மிறைக்கவி, எட்டு ஆரமுள்ள சக்கரத்துள்ளே எழுத்தெல்லாம் அமையப் பாடும் சித்திரகவி |
எட்டாரைச்சக்கரம் | மிறைக்கவி, எட்டு ஆரமுள்ள சக்கரத்துள்ளே எழுத்தெல்லாம் அமையப் பாடும் சித்திரகவி |
எட்டி | காஞ்சிரைமரம் வணிகர் பெறும் பட்டம் வணிக மாதர் பெறும் பட்டம் வணிகச் சாதி |
எட்டி1 | (சற்று) தள்ளி(சற்று) தூரத்தில்எட்ட |
எட்டி2 | (உடலை அல்லது உடலின் ஓர் உறுப்பை) நீட்டி |
எட்டி3 | மருந்தாகப் பயன்படும் காயைத் தரும் ஒரு வகை மரம் |
எட்டிக்காய் | வழவழப்பான மேற்புறத்தையும் சற்றுக் கடினமான மேல் ஓட்டையும் நச்சுத் தன்மையையும் கொண்ட, எட்டி மரத்தின் சாம்பல் நிறக் காய் |
எட்டிகம் | சிலந்தி சீந்தில் |
எட்டிகம் | ஒரு குருவிவகை சீந்திற்கொடி |
எட்டிநோக்குதல் | அண்ணாந்து பார்த்தல் தாவிப் பார்த்தல் |
எட்டிப்பார் | (கிடைக்கும் குறைந்த நேரத்தில் ஒருவரை) பார்க்க வருதல் |
எட்டிப்பிடி | (இலக்கு முதலியவற்றை) முயன்று அடைதல் |
எட்டிப்புரவு | வாணிகத்தாற் சிறந்தோர்க்கு அரசன் கொடுக்கும் நிலம் |
எட்டிப்பூ | எட்டிப்பட்டம் பெற்ற வணிகர்க்கு அரசர் கொடுக்கும் பொற்பூ |
எட்டிப்போடு | (காலை நீட்டி நடப்பதன்மூலம் நடையை) வேகப்படுத்துதல் |
எட்டிமரம் | கஞ்சிரைமரம் |
எட்டிவிரியன் | ஒருபாம்பு |
எட்டிற்பத்தில் | இடையிடையே |
எட்டினர் | நட்பினர், சிநேகிதர் |
எட்டு | எட்டு என்னும் எண் ஆசை இறந்தவர்களுக்குச் செய்யும் எட்டாம் நாள் சடங்கு |
எட்டு | (வி) எட்டுஎன் ஏவல் தொடு அடை விலகு |
எட்டு2 | (நடக்கும்போதோ தாவும்போதோ) இரு காலுக்கு இடையில் உள்ள தூரம் |
எட்டு3 | ஏழு என்னும் எண்ணுக்கு அடுத்த எண் |
எட்டுக்கண் விட்டெறிதல் | எங்குந் தன் ஆணை செல்லுதல் |
எட்டுக்கால்பூச்சி | ஒரு வகைச் சிறிய சிலந்தி |
எட்டுக்காற்பூச்சி | சிலந்திப்பூச்சி |
எட்டுக்கொண்டார் | அட்டமூர்த்தி, சிவபெருமான் |
எட்டுச்சித்தி | அட்டசித்திகள், எண் வகைப் பேறுகள் அணிமா, மகிமா, கரிமா, லகிமா, பிராத்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம் |
எட்டுணை | எள்ளளவு |
எட்டுத் தொகை | நற்றிணை குறுந் தொகை ஐங்குறுநூறு பதிற்றுப் பத்து பரி பாடல் கலித் தொகை அக நானூறு புற நானூறு |
எட்டுதத்திசை | எண் திசை : கிழக்கு முதலிய நான்கு பெருந்திசையும், தென்கிழக்கு முதலிய நான்கு கோணத்திசையும் |
எட்டுத்திக்கு | எண் திசை : கிழக்கு முதலிய நான்கு பெருந்திசையும், தென்கிழக்கு முதலிய நான்கு கோணத்திசையும் |
எட்டுத்தொகை | சங்க காலத்தில் தொகுக்கப் பட்ட எட்டு நூல்கள் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு என்பன |
எட்டுதல் | கிட்டுதல், நெருங்குதல், அகப்படுதல் புலப்படுதல் தாவிப் பாய்தல் விலகுதல் நீளம் போதியதாதல் |
எட்டுமூர்த்தி | அட்டமூர்த்தி நிலம், தீ, நீர், காற்று, வானம், சூரியன், சந்திரன், இயமானன் என்னும் எண்வகை வடிவுகளில் பரந்து விளங்கும் இறைவன் |
எட்டுவரி விரியன் | ஒரு பாம்புவகை |
எட்டேகால்லக்ஷணம் | அவலக்ஷணம் |
எட்பிரமாணம் | எள்ளளவு |
எடாதஎடுப்பு | தொடங்காத தொடக்கம்பெரியகாரியம் |
எடாதவெடுப்பு | செய்ய இயலாத செயல், அரிய செயல் தகாத செயல் |
எடார் | வெளிநிலம், மைதானம், பெரும்பரப்பு நிலம் |
எடு | (வி) தூக்கு ஒன்றிலிருந்தெடு தொடங்கு அங்கீகரி ஆராய்ந்தெடு இசையெடு தெரிந்துகொள் சும வாந்தியெடு |
எடுக்கல் | தூக்கல் அளவிட்டறிதல் |
எடுகூலி | சுமைகூலி |
எடுகூலி | சுமைகூலி, சுமை கொண்டு போதற்குத் தரும் கூலி |
எடுகூறு | பாகப்பிரிவு, பங்குப்பிரிவு |
எடுகோள் | கருதுகோள் |
எடுத்த எடுப்பில் | ஆரம்பத்தில் |
எடுத்த எடுப்பில் | தொடங்கியவுடன் |
எடுத்தடிமடக்கு | திடுகூறு துணிவு |
எடுத்தடிமடக்கு | ஒருவர் சொன்னதைக் கொண்டே மறுத்துரைத்தல் முன்சென்று தடுக்கை இடையில் தடுத்துப் பேசுகை அஞ்சவேண்டியதற்கு அஞ்சாமை |
எடுத்தடிவைத்தல் | மெள்ள அடிபெயர்த்து வைத்தல், தளர்நடையாய் நடத்தல் |
எடுத்ததெற்கெல்லாம் | தேவையற்ற போது |
எடுத்தபடி | உடனே முன்னாயத்தமின்றி |
எடுத்தபடி | முன் ஆயத்தமின்றி, உடனே |
எடுத்தமொழி | எடுத்துக்காட்டு |
எடுத்தமொழியின் எய்தவைத்தல் | நூல் உத்திகள் முப்பத்திரண்டனுள் ஒன்று அதாவது தான் சொல்லும் இலக்கணம் தான் எடுத்துக் காட்டிய சொற்களுக்கே பொருந்தவைத்தல், தான் கூறும் இலக்கியத்திலேயே இலக்கணம் அமைந்திருப்பதைக் காட்டுதல் |
எடுத்தமொழியினெய்தவைத்தல் | ஒருயுத்தி |
எடுத்தல் | நிறுத்தலளவு எடுத்தலோசை உயர்த்துதல் சுமத்தல் தூக்குதல் நிறுத்தல் திரட்டுதல் உரத்துச் சொல்லுதல் குரலெடுத்துப் பாடுதல் மேம்படுத்திச் சொல்லுதல் பாதுகாத்தல் எழுப்புதல் தொடங்கல் ஏற்றுக்கொள்ளுதல் எடுத்து வீசுதல் வீடுமுதலியன கட்டல் இடங்குறித்தல் கைக்கொள்ளுதல் தாங்குதல் |
எடுத்தலளவு | நிறைவு |
எடுத்தலளவை | நிறை, எடை எடுத்தலளவையாகுபெயர் நால்வகை அளவையாகுபெயர்களில் ஒன்று |
எடுத்தலளவை | நிறை, நிறுத்தலளவை |
எடுத்தலளவை | நிறுத்தலளவை |
எடுத்தலளவையாகுபெயர் | எடுத்தலளவைப் பெயர் அதனோடு இயைபுடைய பிறிதின் பொருள் உணர்த்துகை, இரண்டு கிலோ என்பது இரண்டு கிலோ அளவுள்ள பொருளைக் குறித்தல் போல்வது |
எடுத்தலோசை | உயர்த்திக் கூறும் ஒசை |
எடுத்தவோசை | குமுறலானவோசை |
எடுத்தளவு | நிறை ஒரு பழைய வரி |
எடுத்தன் | பொதிமாடு |
எடுத்தாட்சி | வழக்கம் |
எடுத்தாட்சி | எடுத்தாளுதல் வழக்கு |
எடுத்தார்கைப்பிள்ளை | எவர்சொல்வதையுங்கேட்டு நடப்பவன் |
எடுத்தாள் | (சிறப்பாகக் கூறும்பொருட்டு உதாரணமாக, மேற்கோளாக) கையாளுதல் |
எடுத்தாளுதல் | கைக்கொண்டு வழங்குதல் |
எடுத்தியல்கிளவி | சான்று, திருட்டாந்தம் |
எடுத்து | சுமை, பொதி |
எடுத்துக்கட்டி | சுவரின் தலைவரிக் கட்டு கைப்பிடிச் சுவர் |
எடுத்துக்கட்டு | கட்டுக்கதைபொய் |
எடுத்துக்கட்டுதல் | உயரத்திக் கட்டுதல் இல்லாத செயலைப் புனைந்து கூறல் கற்பிதம் பின்னல் மயிரைச் சுருட்டிக் கட்டுதல் கட்டுக்கதை கூறல் பொய் சொல்லுதல் தாலியை அறுத்துக் கட்டுதல் |
எடுத்துக்காட்டல் | ஒருவகையுத்தி |
எடுத்துக்காட்டு | பொது விதிக்கு அல்லது கூற்றுக்கு விளக்கமாக அமையும் உண்மை |
எடுத்துக்காட்டு | மேற்கோள், உதாரணம் |
எடுத்துக்காட்டு1 | (ஒன்று அடிப்படையாக அமைந்து) வெளிப்படுத்துதல் |
எடுத்துக்காட்டு2 | உதாரணம் |
எடுத்துக்காட்டுதல் | நூல் உத்திகள் முப்பத்திரண்டனுள் ஒன்று, தான் சொல்லும் இலக்கணத்திற்குத் தானே இலக்கியத்தை எடுத்துக் காட்டுதல் |
எடுத்துக்காட்டுவமை | உபமானம், உபமேயம் என்னும் இரண்டும் தனித்தனியே ஒவ்வொரு தொடராய் உவம உருபின்றி வரும் அணி |
எடுத்துக்காரர் | பொதிமாட்டுக்காரர் |
எடுத்துக்கூட்டுதல் | பிசகினதை ஒருபடிசரிப்படுத்தல் |
எடுத்துக்கூட்டுதல் | சிதறியவற்றை ஒருங்கு திரட்டி வைத்தல் ஒழுங்குபடுத்தல் |
எடுத்துக்கைநீட்டி | கோயில் அருச்சகனுக்குப் பூசைக் கருவிகளை எடுத்துக் கொடுப்பவன் |
எடுத்துக்கைநீட்டுதல் | கைத்தொண்டுசெய்தல் |
எடுத்துக்கைநீட்டுதல் | கைத்தொண்டு செய்தல் |
எடுத்துக்கொள் | (தனக்கு) உரிமையாக்கிக்கொள்ளுதல் |
எடுத்துக்கொள்ளுதல் | ஏற்றுக்கொள்ளல் தனதாக்கிக் கொள்ளல் தத்தெடுத்துக்கொள்ளுதல் தூக்கிக் கொள்ளுதல் சாவால் கடவுள் தம்மிடம் அழைத்துக்கொள்ளுதல் |
எடுத்துக்கோள் | மேற்கோள், திருட்டாந்தம் மேற்கோள் வரி |
எடுத்துக்கோள்வரி | கையறவெய்தி வீழ்தலைக் கண்டு பிறர் எடுத்துக்கொள்ளும்படி நடிக்கும் நடம் |
எடுத்துச் சொல்லுதல் | சிறப்பித்துச் கூறுதல் விளக்கமாகக் கூறுதல் புத்திசொல்லுதல் |
எடுத்துச்செல் | (கருத்தை, செய்தியை) பரப்புதல் |
எடுத்துச்செலவு | படையெடுத்துச் செல்லுகை |
எடுத்துச்சொல்லுதல் | அறிவு கூறுதல் |
எடுத்துத் தொடுத்தல் | இல்லாததைக் கட்டிக் கூறுதல் பொய்வழக்கிடுகை |
எடுத்துநிலை | போனதை மீட்டு நிறுத்துகை |
எடுத்துப்பேசுதல் | துதித்தல் ஒருவனுக்காக வழக்குப் பேசுதல் ஒரு பொருள்குறித்து விளக்குதல் புகழ்ந்து கூறுதல் பிறர் குற்றங்களை எடுத்துத் தூற்றுதல் |
எடுத்துப்போடல் | தள்ளிப்போடல் |
எடுத்துப்போடுதல் | நீக்குதல் திடுக்கிடச் செய்தல் |
எடுத்துமொழிதல் | விளங்கச் சொல்லுதல் |
எடுத்துரைத்தல் | விளங்கச் சொல்லுதல் |
எடுத்துரைமலைவு | செய்யுட் குற்றங்களுள் ஒன்று |
எடுத்துவளர்த்தல் | தத்து எடுத்து வளர்த்தல் வீட்டு உயிரினங்களை எடுத்து வளர்த்தல் |
எடுத்துவிடு | அதிகமாகச் சொல்லுதல் |
எடுத்துவிடுதல் | படையெடுத்தல் படையை விட்டு நீங்குதல் குழந்தையை முலையுண்ணச் செய்தல் |
எடுத்தெறிதல் | பறை முழக்குதல் பொருட் படுத்தாதிருத்தல், மதிப்பின்றி நடத்தல் |
எடுத்தெறிந்து | அலட்சியமாக |
எடுத்தெறிந்து பேசு | (ஒருவரை) பொருட்படுத்தாமல் அல்லது அலட்சியப்படுத்தும் வகையில் பேசுதல் |
எடுத்தேத்து | எடுத்துப் புகழ்தல், புகழ்ச்சி |
எடுத்தேற்றம் | குறிப்பின்மை இணக்கமின்றியிருப்பது இல்லாததைப் பேசுவது |
எடுத்தேற்றி | இணக்கமின்றியிருப்பது, மதியாமை |
எடுத்தேறு | பறை முழக்குதல் பொருட் படுத்தாதிருத்தல், மதிப்பின்றி நடத்தல் |
எடுத்தோத்து | எடுத்து ஓதுவது எடுத்துக் கூறும் விதி |
எடுபட்டவள் | கற்பழிந்து குடும்பத்தினின்று வெளிப்போந்தவள் நிலையில்லாதவள் |
எடுபட்டவன் | நிலையற்றவன் |
எடுபட்டவன் | ஒழுக்கக்கேட்டால் விலக்கப் பட்டவன் நிலையில்லாதவன் |
எடுபடு | (ஒரு குழுவினரிடையே) வரவேற்கப்படுதல் |
எடுபடுதல் | நீக்கப்படுதல் நிலைபெயர்தல் அதிர்தல் விற்றழித்தல் நிலைதவறுதல் அழிந்துபோதல் வெளிவருதல் கைக்கொள்ளபபடுதல் மேம்படுதல் |
எடுப்பல் | எடுப்புதல், எழுப்புதல் அகற்றல் |
எடுப்பார் கைப்பிள்ளை | சுயமாகச் சிந்திக்காமல் பிறர் சொல்கிறபடியெல்லாம் நடப்பவர் |
எடுப்பார்கைப்பிள்ளை | எளிதாகப் பிறரால் வசப்படுத்தக்கூடியவர் |
எடுப்பார்கைப்பிள்ளை | யாவர்க்கும் வசப்படக் கூடியவன், சூதறியாதவன் |
எடுப்பார்கைப்பிள்ளை | (மற்றவர்கள் சொல்வதைச் சரியென நம்பிச் செயல்படும்) சுய சிந்தனை அற்ற ஒருவர் |
எடுப்பானவன் | மேட்டிமைக்காரன் |
எடுப்பானவன் | உயரமானவன் தோற்றப் பொலிவுடையவன் இறுமாப்புள்ளவன் |
எடுப்பித்தல் | எடுக்கச் செய்தல் |
எடுப்பு | இறுமாப்பு உயர்வு, ஏற்றம் புதையல் நிந்தை தொடங்குதல் எடுத்தல் நிந்தித்தல் தூக்குகை எழுப்புகை |
எடுப்பு1 | ஒரு பாட்டு அதற்கு உரிய தாளத்தில் ஆரம்பிக்கும் இடம் |
எடுப்பு2-ஆக/-ஆன | (உடலமைப்பில் அல்லது தோற்றத்தில்) கவர்ச்சியாக/கவர்ச்சியான |
எடுப்புச்சாப்பாடு | உணவு விடுதியிலிருந்து (அடுக்குப் பாத்திரத்தில்) எடுத்துவரப்படும் உணவு |
எடுப்புச்சாய்ப்பு | ஒப்புரவான நடை, தராதரமறிந்து நடக்கும் நடை உயர்வு தாழ்வு |
எடுப்புத்தேர் | சுமந்து செல்லும் தேர் |
எடுப்புதல் | எழுப்புதல், துயிலெழுப்புதல் இசையெழுப்புதல் போக்குதல் |
எடுப்பெடுத்தல் | சூழ்ச்சியை மேற்கொள்ளுதல் படையெடுத்துப் பொருதல் அரியதை முயலுதல் செருக்குக்கொள்ளுதல் |
எடுபாடு | செல்வாக்கு பகட்டு உயர்ச்சி, மேட்டிமை நிலையின்மை குலைவு அழிகை |
எடுபிடி | முயற்சி விருது மதிப்பு குற்றேவலாள் |
எடுபிடி | (மிகுந்த பொறுப்புடையதாக இல்லாத) சிறு பணி |
எடுவுதல் | எடுத்தல் |
எடை | திடப்பொருளின் நிறை கனம், பாரம் |
எடை | எடுத்தல், தூக்குதல் நிறை நிறுக்கை, நிறையிடல் எழுப்புகை மிகுதல் |
எடை | (ஒருவரை அல்லது ஒன்றை) நிறுத்துக் கணக்கிடப்படும் நிறை அளவு |
எடைக்கட்டு | நிறுக்கப்படும் பொருளுக்கு ஆதாரக்கலத்தின் கழிவு நிறை, எடைகட்டுதல் |
எடைக்கல் | (நிறுப்பதற்குப் பயன்படுத்தும்) நிறை குறிக்கப்பட்ட உலோகக் கட்டி |
எடைகட்டு | தராசில் வைக்கும் பாத்திரத்தின் எடைக்குச் சமமான எடைக்கற்களை வைத்தல் |
எடைபோடு | எடையைக் கணக்கிடுதல் |
எண் | எண்ணிக்கை கணக்கிடுதல் எண்ணம் ஆலோசனை அறிவு மனம் கவலை மதிப்பு இலக்கம் கணக்கு சோதிடநூல் இலக்கியம் வரையறை தருக்கம் மாற்று மந்திரம் அம்போதரங்கம் எளிமை வலி எள் |
எண் | (வி) எண் என்னும் ஏவல் நினை, கருது |
எண்1 | (எத்தனை உள்ளன என்பதை) கணக்கிட்டுச் சொல்வதற்கு உதவும் 1, 2, 3 முதலிய கணிதக் குறியீடு |
எண்கண்ணன் | பிரமன் |
எண்கணன் | பிரமன் |
எண்காற்புள் | சரபம் |
எண்கு | கரடி |
எண்குணத்தான் | எட்டுக் குணங்களையுடைய கடவுள் அருகன் சிவன் |
எண்குணம் | கடவுளின் எட்டுக் குணங்கள் தன்வயத்தனாதல், தூய உடம்பினனாதல், இயற்கை உணர்வின்னாதல், முற்றுமுணர்தல், இயல்பாகவே பாசங்களினின்று நீங்கல், பேரருளுடைமை, முடிவிலாற்றலுடைமை, வரம்பிலின்பமுடைமை |
எண்குணன் | அருகன் கடவுள் சிவன் |
எண்குற்றம் | அறிவைக் கெடுக்கும் எட்டுவகைக் குற்றங்கள் இவற்றைச் சமணர் ஞானா வரணீயம், தரிசனாவரணீயம், வேதநீயம் மோகநீயம், ஆயு நாமம், கோத்திரம், அந்தராயம் என்று குறிப்பிடுவர் |
எண்கூட்டிப்பெருக்கல் | உழலல் |
எண்கோணம் | எட்டுக்கோணம் எட்டுமூலையையுடைய உருவம் |
எண்கோணம் | எட்டு (சம) கோணமுடைய வடிவம் |
எண்கோவை | காஞ்சி என்னும் அரையணி |
எண்சட்டம் | மணிச்சட்டம் |
எண்சாத்திரம் | கணிதம் |
எண்சிறப்பு | அருகனுக்குச் செய்யப்படும் எண்வகைச் சிறப்புகள் தூபதீபக் காட்சி, தேவதுந்துபி, தெய்வத்துவனி, சிங்காதனம், பிண்டி, வெண்சாமரை, புட்பமாரி, முக்குடை |
எண்சிறப்புள்ளோன் | அருகன் |
எண்சுவடி | கணக்கேடு |
எண்சுவடி | கணக்கேடு, பெருக்கல் வாய்பாட்டு நூல் |
எண்சுவடி | (பெருக்கல் முதலியவை அடங்கிய) வாய்பாட்டுப் புத்தகம் |
எண்சுவை | எட்டுச் சுவைகள் நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை |
எண்செய்யுள் | எண்ணாற் பெயர்பெறும் நூல், பத்து முதல் ஆயிரம் அளவும் பாடிப் பாடல் எண் அளவால் பெயர்பெறும் இலக்கியம் |
எண்சோதிடம் | (பிறந்த தேதி, மாதம், வருடம், பெயருக்கான மதிப்பு ஆகியவற்றைக் கூட்டி அதன் அடிப்படையில் ஒருவரின்) குணநலன்கள், எதிர்காலப் பலன்கள் முதலியவற்றைக் கணித்துக் கூறும் கலை |
எண்டிக்கு | எண்டிசை |
எண்டிக்கு | எட்டுத்திக்கு கிழக்கு, தென்கிழக்கு, தெற்கு, தென்மேற்கு, மேற்கு, வடமேற்கு, வடக்கு, வடகிழக்கு |
எண்டிசை | எட்டுத்திக்கு |
எண்டோளன் | சிவன் |
எண்டோளன் | எட்டுத் தோள்களுடையோன் சிவன் திருமால் |
எண்டோளி | காளி துர்க்கை |
எண்டோளி | எட்டுக் கைகளையுடையாள், காளி கொற்றவை, துர்க்கை |
எண்ணக்கரு | கருத்தாக்கம் |
எண்ணக்குறிப்பு | நினைவு |
எண்ணக்குறிப்பு | நோக்கம் |
எண்ணங்குலைதல் | மனம் கலங்குதல் எண்ணம் வீணாதல் மதிப்புக்கெடுதல் |
எண்ணங்கொண்டிருத்தல் | நோக்கங்கொண்டிருத்தல் நம்பி எதிர்பார்த்தல் கவலைப்படுதல் சிந்தித்தல் |
எண்ணத்தப்பு | நினைவு மயக்கம் மதிகேடு மதியாமை ஏமாறுகை கெட்ட எண்ணம் |
எண்ணத்தவறு | நினைவு மயக்கம் மதிகேடு மதியாமை ஏமாறுகை கெட்ட எண்ணம் |
எண்ணப்படுதல் | கணிக்கப்படுதல், மதிக்கப்படுதல் |
எண்ணம் | நினைப்பு நோக்கம் நாடிய பொருள் மதிப்பு இறுமாப்பு நம்பிக்கை சூழ்ச்சி கவலை கருத்து ஆலோசனை குறிப்பு கணிதம் |
எண்ணம் | நினைப்பு |
எண்ணர் | மந்திரியர் கணிதர் தருக்கம் செய்பவர் |
எண்ணல் | பொருட்களின் எண்ணிக்கையை அறிய ஏற்படுத்தும் கணக்கீடு எண்களால் எண்ணி அறிதல் |
எண்ணல் | தேர்ச்சி கருத்து கணக்கிடுகை எண்ணலளவை ஆலோசனை எண்ணுதல் நினைத்தல் குறித்தல் மதித்தல் இறுமாத்தல் கணக்கிடுதல் கவலைப்படல் |
எண்ணலங்காரம் | ஒன்று இரண்டு முதலாக எண்ணுப்பெயர்கள் முறையே வரும் அணி |
எண்ணலர் | எண்ணார், மதியாதவர், பகைவர் |
எண்ணலளவை | இலக்கத்தால் எண்ணும் அளவு |
எண்ணலார் | எண்ணார், மதியாதவர், பகைவர் |
எண்ணவி | நல்லெண்ணெய் |
எண்ணாட்டிங்கள் | எட்டாம் பிறை, அட்டமிச் சந்திரன் |
எண்ணாதகண்டன் | துணிவுள்ளவன், அஞ்சா நெஞ்சன் அஞ்சவேண்டுவதற்கு அஞ்சாதவன் |
எண்ணாதநெஞ்சன் | துணிவுள்ளவன், அஞ்சா நெஞ்சன் அஞ்சவேண்டுவதற்கு அஞ்சாதவன் |
எண்ணாதவன் | துணிந்தவன் |
எண்ணாதவன் | எதனையும் ஆராய்ந்து பாராதவன் எதனையும் பொருட்படுத்தாதவன் கவலையற்றவன் |
எண்ணாப்பு | இறுமாப்பு |
எண்ணார் | பகைவர் |
எண்ணி | (வழக்கமாக எதிர்பார்ப்பதற்கும்) குறைந்த அளவில் |
எண்ணிக்கை | எச்சரிக்கை எண் கணிப்பு சங்கை மதிப்பு |
எண்ணிக்கை | எண் கணிப்பு மதிப்பு எச்சரிக்கை |
எண்ணிக்கை | எத்தனை அல்லது எவ்வளவு என்னும் கணக்கு |
எண்ணிடல் | கணக்கிடல் |
எண்ணிடுதல் | கணக்கிடுதல் |
எண்ணிடைச்சொல் | எண்ணுப் பொருளைக் காட்டும் இடைச்சொல் உம், ஏ முதலியன |
எண்ணியற்பெயர் | எண்ணாகிய இயல்புபற்றி வரும் உயர்திணைப் பெயர் |
எண்ணியார் | எண்ணங்கொண்டவர், நோக்கங் கொண்டவர் |
எண்ணில்கண்ணுடையோன் | புத்தன் கடவுள் |
எண்ணில்கண்ணுடையோன் | யாண்டும் நோக்குகின்ற கண்ணுடைய கடவுள் புத்தன் |
எண்ணில்காலம் | அளவில்லாதகாலம் |
எண்ணிலார் | எண்ணார், மதியாதவர், பகைவர் |
எண்ணிலி | எண்ணில் அடங்காதது, அளவற்றது |
எண்ணிறந்த | எண்ணமுடியாத. எண்ணிறந்த வமணர்களும் (தேவா. 575 10) |
எண்ணிறந்த | எண்ண முடியாத |
எண்ணு | யோசித்தல் எண்ணுதல் |
எண்ணு1 | (வரிசையாக அல்லது முறைப்படி) எண்களைக் கூறுதல்/(எத்தனை இருக்கின்றன என்று) கணக்கிடுதல் |
எண்ணு2 | (நினைவுக்குக் கொண்டுவந்து ஒன்றை) சிந்தித்தல் |
எண்ணுண்மி | கோப்புகளின் அலகு 8 நுண்மிகள்(bit) கொண்ட ஓர் அலகு கணினிக் கட்டுமானத்தின் அடிப்படை பதிவக அலகு |
எண்ணுதல் | எண்ணல் |
எண்ணுதல் | எண்ணல், நினைத்தல் ஆலோசித்தல் மதித்தல் தியானித்தல் முடிவுசெய்தல் கணக்கிடுதல் மதிப்பிடுதல் துய்த்தல் |
எண்ணும்மை | எண்ணுப்பொருளில் வரும் உம்மை இடைச்சொல் நிலனும் தீயும் நீரும் என்றாற்போல வருவது |
எண்ணுவண்ணம் | இருபது வண்ணங்களுள் ஒன்று, எண்ணிடைச்சொல் பயின்றுவரும் சந்தம் |
எண்ணுறுத்தல் | உறுதிப்படுத்துதல் |
எண்ணூல் | கணிதநூல் தருக்கநூல் |
எண்ணெய் | தைலம் |
எண்ணெய் | எள்ளின் நெய், நல்லெண்ணெய் எண்ணெய்ப் பொது ஒரு மரவகை |
எண்ணெய் | தாவர வித்துகளிலிருந்தும் மிருகக் கொழுப்பிலிருந்தும் பெறப்படுவதும் உணவுப்பண்டங்கள் முதலியவை தயாரிக்கப் பயன்படுவதுமான திரவம் |
எண்ணெய் மணி | ஒருவகை அணிகலன், கழுத்தணி |
எண்ணெய் வழுக்கு | எண்ணெய் மினுக்கு |
எண்ணெய் வாணிகன் | எண்ணெய் விற்போன், செக்கான் |
எண்ணெய்க் கறுப்பு | மினுக்கான கறுப்பு நிறவகை |
எண்ணெய்க்காப்பு | எண்ணெயபிஷேகம் |
எண்ணெய்க்காப்பு | எண்ணெய் முழுக்கு சாத்தும் எண்ணெய் |
எண்ணெய்க்காரன் | எண்ணெய் வாணிகன், எண்ணெய் விற்போன் |
எண்ணெய்க்காரை | கருவேம்பு |
எண்ணெய்க்கிணறு | நிலத்தடியிலிருந்து எண்ணெய் எடுப்பதற்காகத் தோண்டப்படும் துளை |
எண்ணெய்ச் சீலை | எண்ணெயில் நனைத்ததுணி மெழுகுசீலை |
எண்ணெய்ச் சுத்திகரிப்பு ஆலை | நிலத்தடியிலிருந்து கிடைக்கும் கச்சா எண்ணெய்யைச் சுத்தப்படுத்தி அதிலிருந்து மண்ணெண்ணெய் போன்றவற்றைத் தனியாகப் பிரித்தெடுக்கும் தொழிற்சாலை |
எண்ணெய்ச்சாணை | ஒருவிதமான சாணைக்கல் |
எண்ணெய்ச்சாயம் | எண்ணெய் சேர்த்துச் செய்யப்படும் சாயம் எண்ணெயில் தோய்த்து ஏற்றும் சாயம் |
எண்ணெய்ச்சிக்கல் | எண்ணெய் வயிற்றில் தங்குதலால் வரும் செரியாமை மயிரிலிருந்து எண்ணெய் நீங்காமையால் ஏற்படும் சிக்கல் எண்ணெய் நாற்றம் ஒரு பொருளின்மேல் தோய்ந்த எண்ணெய் அழுக்கு |
எண்ணெய்தடவுதல் | மருந்தெண்ணெய் பூசுதல் |
எண்ணெய்த்தண்டு | எண்ணெய் பெய்து வைக்கும் குழாய் |
எண்ணெய்ப்பற்று | எண்ணெய்ச் சிக்கு |
எண்ணெய்ப்பனையன் | பனைவிரியன் பாம்பு |
எண்ணெய்ப்பிசுக்கு | எண்ணெய்ச் சிக்கு |
எண்ணெய்ப்புல்லிடுதல் | நெசவு பாவுக்கெண்ணெயிடுதல் |
எண்ணெய்ப்புல்லிடுதல் | நெசவுப் பாவுக்கு எண்ணெயிடுதல் |
எண்ணெய்பொருத்துதல் | மருந்தெண்ணெய் பூசுதல் |
எண்ணெய்மணி | வெள்மட்டமணி |
எண்ணெய்வடித்தல் | எண்ணெய் ஊற்றுதல் |
எண்ணெய்வாணிபன் | எண்ணெய்விற்போன் |
எண்ணெய்வித்து | எண்ணெய் எடுக்கப் பயன்படும் தாவரங்களின் விதை, பருப்பு முதலியன |
எண்ணெழுத்து | எண்ணும் எழுத்தும் இலக்கம் எண்ணுக் குறியீடான எழுத்து இலக்கிய இலக்கணம் |
எண்ணேகாரம் | எண்ணுப் பொருளில் வரும் ஏகார இடைச்சொல் |
எண்ணேயம் | நல்லெண்ணெய் |
எண்ணோகாரம் | எண்ணுப் பொருளில் வரும் ஓகார இடைச்சொல் |
எண்படுதல் | அகப்படுதல் |
எண்பதம் | எளிய செவ்வி, தக்க காலம் எண்வகைத் தவசம் நெல், புல், வரகு, தினை, சாமை, இறுங்கு, துவரை, கேழ்வரகு |
எண்பது | எட்டுப்பத்து, எட்டுமுறை பத்து |
எண்பது | பத்தின் எட்டு மடங்கைக் குறிக்கும் எண் |
எண்பி | நிரூபணம் செய் |
எண்பி | நிரூபித்தல் |
எண்பித்தல் | மெய்ப்பித்தல், சான்று காட்டி நிறுவுதல் |
எண்பெருந்துணைவர் | எண்பேராயம், அரசர்க்குரிய எட்டுவகை ஆயத்தார் |
எண்பேராயம் | எண்பெருந்துணைவர் கரணத்தியலவர், கரும விதிகள், கனகச் சுற்றம், கடை காப்பாளர், நகரமாந்தர், படைத்தலைவர், யானைவீரர், இவுளி மறவர் அரசர்க்குச் சாந்து, பூ, கச்சு, ஆடை, பாக்கு, வெற்றிலை, கஞ்சுகம், நெய் ஆகியவற்றை ஆராய்ந்து கொடுப்போர் |
எண்பொருள் | எளிதில் அடையும் பொருள் வேர் முதல் வித்து ஈறான எட்டுப்பொருள் வேர், கிழங்கு, பட்டை, பிசின், இலை, பூ, கனி, வித்து |
எணம் | மதிப்பு |
எண்மடங்கு | எட்டுத்தடவை |
எண்மயம் | எண்வகைப் பெருமிதம் பிறப்பு, குலம், கல்வி, செல்வம், வனப்பு, சிறப்பு, தவம், உணர்வு |
எண்மர் | எட்டுப் பேர் கணிதர் |
எண்மானம் | எண்ணை எழுத்தால் எழுதுதல் |
எண்மை | எளிமை தாழ்மை கணிசம் |
எண்மையவன் | இலேசானவன் எளியவன் |
எண்மையன் | எளியவன் |
எண்வகை மணம் | எட்டுவகையான திருமண நிகழ்ச்சிகள் பிரம மணம், பிரசாபத்திய மணம், ஆரிட மணம், தெய்வ மணம், காந்தருவ மணம், ஆசுர மணம், இராக்கத மணம், பைசாச மணம் |
எண்வகை மாலை | போர்க்காலத்து அணியும் எட்டுவகை மலர்மாலை வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை, வாகை |
எண்வகைக்காட்சி | ஐயுறாமல் அறஞ்செயல், அவாவின்மை, உவர்ப்பில் அறிவுடைமை, மூடமறுத்தல், மிகப் பழி மறுத்தல், அழிந்தோரை நிறுத்தல், அறம் விளக்கல், அறுசமயத்தவரன்பு |
எண்வகைத்துணைவர் | எண்பெருந்துணைவர் கரணத்தியலவர், கரும விதிகள், கனகச் சுற்றம், கடை காப்பாளர், நகரமாந்தர், படைத்தலைவர், யானைவீரர், இவுளி மறவர் அரசர்க்குச் சாந்து, பூ, கச்சு, ஆடை, பாக்கு, வெற்றிலை, கஞ்சுகம், நெய் ஆகியவற்றை ஆராய்ந்து கொடுப்போர் |
எண்வகைப்பத்தி | சிவத்தொண்டருக்கு உரிய எட்டுப் பக்திச் செயல்கள் தொண்டரடி தொழுதல், சிவபூசை மகிழ்ச்சி, சிவார்ச்சனை, சிவப் பணிவிடை, சிவசரிதம் கேட்டல், பத்தியால் புளகமுறல், சிவன்புகழ் சிந்திக்கை, திருப்பணிப் பொருளைக் கவர்ந்து கொள்ளாமை |
எண்வகைவிடை | எண்ணிறை, எட்டுவகையான பதிலுரை சுட்டுவிடை, மறைவிடை, நேர்விடை, ஏவல்விடை, வினாவிடை, உற்றதுரைத்தல் விடை, உறுவது கூறல் விடை, இனமொழி விடை |
எத்தன் | ஏமாற்றுவோன், விரகுள்ளவன் இதஞ்சொல்லி வஞ்சிப்போன் |
எத்தன் | துணிச்சலாக ஏமாற்றுபவன் |
எத்தனம் | முயற்சி ஆயத்தம் கருவி |
எத்தனி | முயற்சி செய் |
எத்தனி | முயற்சிசெய்தல் |
எத்தனித்தல் | முயலுதல் |
எத்தனை | எவ்வளவு. எத்தனைகாலமும் (திவ். பெரியாழ். 5, 3, 8) பல. எத்தனைபகலும் பழுதுபோயொழிந்தன. (திவ். பெரியதி. 1, 1, 2) |
எத்தனை | அளவில் மிக்கன என ஒழிந்த பொருளை அவாவி நிற்கும் ஒரு வினாமொழி, எவ்வளவு பல |
எத்தனை | (எண்ணப்படக் கூடியதில்) எவ்வளவு |
எத்தாப்பு | ஆடை வேட்டி |
எத்தி | ஏமாற்றுபவள் |
எத்தினம் | எத்தனம் |
எத்து | வஞ்சகம், உபாயம் |
எத்து | (வி) வஞ்சி, இதஞ்சொல்லி வஞ்சி |
எத்துக்கண்ணி | புல்லுருவி |
எத்துணை | எவ்வளவு |
எத்துதல் | வஞ்சித்தல், இதஞ்சொல்லி மோசம் செய்தல் |
எத்தும் | எவ்வகையாலும். எத்துந் தமதுரை தேறிநின்றேனை (தஞ்சைவா. 26) |
எத்தும் | எத்திறத்தும், எவ்வகையாலும் |
எத்துவாதம் | அகடவிகடம் |
எத்துவாதம் | எதிர்ப் பேச்சு ஏமாற்றுப் பேச்சு |
எத்தேசகாலமும் | எப்போழ்தும் |
எதளா | புளியமரம் |
எதற்கெடுத்தாலும் | எடுத்ததற்கெல்லாம் |
எதா | எப்படி |
எதா | எப்படி, எவ்வாறு |
எதாசக்தி | தன் வலிமைக்குத் தக்கபடி, கூடியவரை, இயன்றவரை |
எதாசத்தி | கூடியவரை. பொருந்திய வெதாசத்தி யீந்தான் (மச்சபு. தீர்த்தயாத். 5) |
எதாப்பிரகாரம் | வழக்கம்போல் எதாப்பிரகாரம் நடக்கட்டும் |
எதாப்பிரகாரம் | வழக்கம்போல |
எதார்த்தம் | வெளிப்படை நடப்பியம் உண்மை |
எதார்த்தம் | (-ஆக, -ஆன) (எதையும் மறைக்காத) வெளிப்படை |
எதாஸ்து | அப்படியாகட்டும் |
எதி | துறவி, சன்னியாசி |
எதிர | ஓர் உவமவுருபு. (தண்டி. 33.) |
எதிர் | முன்னுள்ளது கைம்மாறு. சூலையினுக் கெதிர்செய்குறை யென்கொல் (பெரியபு. திருநாவுக். 73) வருங்காலம். எதிரதுதழீஇய வெச்சவும்மை இலக்கு. மற்றெதிர் பெறாமையின் வெளிபோகி (இரகு. திக்குவி. 169). -adv. முன். என்வில்வலிகண்டு போவென் றெதிர்வந்தான் (திவ். பெரியாழ். 3, 9, 2) உவமைச்சொல் |
எதிர் | வருங்காலம் எதிரிடை முன் முன்னுள்ளது முரண் கைம்மாறு இலக்கு போர் |
எதிர் | (வி) எதிர் என்னும் ஏவல் |
எதிர் நீச்சல் | தடை முதலானவற்றை எதிர்த்துப் போராடுதல் |
எதிர்1 | (ஒருவரை, ஒரு போக்கை, ஒரு நிலையை) மறுத்து மாறான நிலை மேற்கொள்ளுதல் |
எதிர்2 | நேர் முன்னால் இருப்பது |
எதிர்க்கட்சி | எதிரான கூட்டம் மறுபக்கம் |
எதிர்க்கட்சி | ஆளும் கட்சியை (கொள்கை அடிப்படையில்) எதிர்க்கும் கட்சி |
எதிர்க்கடை | போட்டியாயுள்ள கடை எதிர்ப்பு |
எதிர்க்களித்தல் | குமட்டுதல் |
எதிர்க்கெடுத்தல் | குமட்டுதல், உண்ட உணவு மேலே திரும்புதல் |
எதிர்க்கை | மேற்கூரையின் எதிர்மரம் பகைத்தல் |
எதிர்கட்சி | முன்பக்கம் |
எதிர்கழறுதல் | மாறு கூறுதல் ஒத்தல் |
எதிர்காலம் | வருகாலம் |
எதிர்காலம் | வருங்காலம், வினைச்சொல்லின் காலவகை |
எதிர்காற்று | நேர்காற்று |
எதிர்காற்று | நோக்கிச் செல்லும் திசையிலிருந்து மாறாக வரும் காற்று நேர்காற்று எதிர்த்து அடிக்கும் காற்று |
எதிர்கொள் | (வருபவரை நோக்கி) சென்று சந்தித்தல் |
எதிர்கொள்ளுதல் | வந்தவர்க்கு முன்சென்று அளவளாவுதல், வரவேற்றல் ஏற்றுக் கொள்ளுதல் |
எதிர்கோள் | எதிர்கொள்ளல் |
எதிர்கோள் | எதிர்கொள்ளுகை |
எதிர்ச்சாட்சி | மாறான சான்று எதிர் வழக்காடியின் சாட்சி |
எதிர்ச்சி | எதிர்க்கை |
எதிர்ச்சீட்டு | எதிர்முறி |
எதிர்ச்சீட்டு | எதிரிடை முறி |
எதிர்ச்செட்டு | போட்டி வாணிகம் வாங்கி விற்கும் வாணிகம் |
எதிர்செய்குறை | ஒருவர் செய்த உதவிக்குச் செய்யும் மாற்றுதவி, கைம்மாறு |
எதிர்செலவு | வரவேற்க எழுந்து செல்லுதல் |
எதிர்சோழகம் | நேர்தெற்கிலிருந்து வீசும் காற்று |
எதிரடையோலை | அடையோலை எழுதித் தருபவருக்குக் கொடுக்கும் ஆதரவுச்சீட்டு |
எதிரணி | (விளையாட்டில், தேர்தலில்) எதிர்த்துப் போட்டியிடும் பிரிவு |
எதிர்த்தட்டு | எதிர்ப்பக்கத்துத் தராசின் தட்டு எதிரிடை |
எதிர்த்தரப்பு | ஒருவரை எதிர்த்துப் போட்டியிடுபவரின் பக்கம் அல்லது எதிரியின் பக்கம் |
எதிர்த்தல் | சந்தித்தல் மாறுபடுதல் தாக்குதல் தடுத்தல் |
எதிர்த்தலை | எதிர்த்தட்டு |
எதிர்த்தாற்போல் | எதிரே |
எதிர்த்து | ஏற்றுக்கொள்ளாமல் மறுத்து |
எதிர்த்துத் தருதல் | ஒத்துக்கொடுத்தல் |
எதிர்த்துப்பேசு | (மரியாதைக்கு உரியவர்களை) மதிக்காமல் மறுப்பாகப் பேசுதல் |
எதிர்த்துப்பேசுதல் | மாறு சொல்லுதல் அடங்காமல் பேசுதல் |
எதிர்தல் | தோன்றுதல் உண்டாதல் முன்னாதல் மலர்தல் மாறுபடுதல் சந்தித்தல் தம்மிற்கூடுதல் எதிர்காலத்து வருதல் எதிர்த்தல், மலைதல் பொருந்துதல் கொடுத்தல் ஏற்றுக்கொள்ளுதல் பெறுதல் |
எதிரதாக்காத்தல் | வரக்கடவதாகிய ஒன்றை முன்னே அறிந்து அதன் காரணத்தை விலக்குதல் |
எதிரது தழுவுதல் | உத்தி முப்பத்திரண்டனுள் ஒன்று, முன்னில்லாதனவாயினும் தற்கால வழக்காயின் அவற்றை ஏற்றுக் கொள்ளுதல் |
எதிரது போற்றல் | உத்தி முப்பத்திரண்டனுள் ஒன்று, முன்னில்லாதனவாயினும் தற்கால வழக்காயின் அவற்றை ஏற்றுக் கொள்ளுதல் |
எதிரதுநோக்கிய வெச்சவும்மை | எதிர்மறைச் சொல்லைக்காட்டி நிற்குமும்மை |
எதிரதுபோற்றல் | ஒருவகையுத்தி |
எதிர்நடை | மூலப்படி மாறுபட்ட ஒழுக்கம் |
எதிர்நடைக்கணக்கு | கூட்டாளிகளின் தனிக்கணக்கு |
எதிர்ந்தோர் | பகைவர் |
எதிர்நாள் | எதிர்நோக்கு நட்சத்திரம் |
எதிர்நிரனிறை | முறை மாறி வரும் நிரல்நிறை |
எதிர்நிலை | எதிர்நிற்றல் மாறுபட்டு நிற்றல் கண்ணாடி |
எதிர்நிலையணி | உவமான உபமேயங்களை மாற்றிச் சொல்லும் அணி உவமானத்திற்குக் குறைவுதோன்றச் சொல்வது |
எதிர்நிற்றல் | முன்னிற்றல் மாறுபட்டு நிற்றல் போர் செய்தல் எதிர்த்து நிற்றல் |
எதிர்நீச்சல்போடு | (வாழ்க்கையில் ஏற்படும் தடை, தொல்லை முதலியவற்றை) எதிர்த்துப் போராடுதல் |
எதிர்நீச்சு | வெள்ளப் போக்கிற்கு எதிராக நீந்துகை செயதற்கு அரிய செய்கை |
எதிர்நூல் | பிறர் கொள்கையை மறுக்கும் நூல், தன்கோள் நிறுவிப் பிறன்கோள் மறுப்பது |
எதிர்நோக்கு | எதிர்பார்த்துக் காத்திருத்தல்(ஒன்றை) அடைய அல்லது பெற வேண்டிய நிலையில் இருத்தல் |
எதிர்நோக்கு நட்சத்திரம் | எதிர்நாள்பக்கநாள் |
எதிர்நோக்குநட்சத்திரம் | See எதிர்நாள் |
எதிர்ப்படு | (தற்செயலாக) எதிரில் வருதல் |
எதிர்ப்படுதல் | முன்தோன்றுதல் சந்தித்தல் ஒப்பாதல் நேரிடுதல், நேரே வருதல் |
எதிர்ப்பாடு | நேரிடுதல், சந்திக்கை |
எதிர்ப்பாய்ச்சல் | எதிராகப் பாய்கை எதிரான நீரோட்டம் |
எதிர்ப்பாளர் | எதிர்த்தரப்பில் இருப்பவர் |
எதிர்ப்பு | எதிர்க்கை சகுனம் |
எதிர்ப்பு | உடன்படவோ ஏற்கவோ ஒத்துப்போகவோ முடியாத ஒன்றிற்கு ஒருவர் தெரிவிக்கும் கண்டனம் அல்லது மேற்கொள்ளும் எதிர்ச் செயல் |
எதிர்ப்பை | கைம்மாறு |
எதிர்ப்பை | அளவுகுறித்து வாங்கி அவ்வாறே திருப்பிக் கொடுக்கும் பொருள் |
எதிர்பாடு | நேரிடுதல் |
எதிர்பார் | (வர இருப்பதை அல்லது நிகழ இருப்பதை) முன்கூட்டியே பார்த்தல்(ஒன்று இவ்வாறு நடக்க வேண்டும் என்று) நினைத்தல் |
எதிர்பார்த்தல் | ஒன்றை நோக்கியிருத்தல் வரவு பார்த்திருத்தல் பிறருதவி நோக்கல் |
எதிர்பார்ப்பு | (விளைவை, வருகையை, நிகழ்ச்சியை) முன்கூட்டியே எண்ணிப்பார்ப்பது |
எதிர்பார்ப்பு ஜாமீன் | காவல் துறையினரால் கைதுசெய்யப்பட நேர்ந்தால் ஜாமீனில் வருவதற்கு வழி செய்யும் வகையில் முன்கூட்டியே நீதிமன்றத்தில் விண்ணப்பித்துப் பெறப்படும் உத்தரவு |
எதிர்பால்சேர்க்கை | எதிர்பாலினத்தவரிக்கிடையே இடம்பெறும் ஈர்ப்பு அல்லது உடலுறவு எதிர்பால்சேர்க்கை. ஆதாவது ஆணுக்கு பெண்ணுக்கும் இடையே ஏற்படும் சேர்க்கை |
எதிரம்பு கோத்தல் | ஒருவர் எய்யும் அம்பிற்கு எதிராக அம்பு விடுகை எதிர்த்து நிற்றல் |
எதிர்மலர் | புதிய மலர் |
எதிர்மறுப்பு | முன்னொடுபின் முரணக் கூறுகை |
எதிர்மறை | எதிர்மறுப்பு, உடன்பாட்டிற்கு மாறானது, முரண் |
எதிர்மறையிடைநிலை | எதிர்மறைப் பொருளைக் காட்டும் ஆ, அல், இல் என்னும் இடை நிலைகள் |
எதிர்மறையிலக்கணை | தனக்கு எதிர்மறையாகிய பொருளைக் குறிப்பாலுணர்த்துவது |
எதிர்மறையும்மை | எதிர்மறைப் பொருளில் வரும் உம் என்னும் இடைச்சொல் |
எதிர்மறைவினை | உடன்பாட்டிற்கு மாறாக வினைச்சொல் |
எதிர்மாறு | உடன்படாத நிலை |
எதிர்மீன் | நீர்ப்பாய்ச்சலுக்கு எதிரே வரும் மீன் |
எதிர்முகம் | நேரெதிர், முன்னிலை |
எதிர்முகமாக | நேர் எதிராக அல்லது எதிர்ப்பக்கத்தில் |
எதிர்முகவேற்றுமை | விளிவேற்றுமை |
எதிர்முழி | நேருக்குநேராய் |
எதிர்முறி | கள்ளச்சீட்டு |
எதிர்மூச்சுப்போடுகை | எதிரெதிராக நின்று மூச்சு வாங்க நெற்குற்றுகை |
எதிர்மை | எதிர்காலத்தில் நிகழ்வது |
எதிர்மொழி | மறுமொழி மறுப்புரை வழக்கில் எதிர்வழக்காடி கொடுக்கும் பதிலுரை |
எதிர்வ | முன்னே வருவன |
எதிர்வட்டி | செலுத்தும் மூலத்தொகைக்கு ஏற்பக் கழிக்கும் வட்டி |
எதிர்வரல் | விரோதமாகவரல் |
எதிர்வரவு | பிற்காலத்து வருகை |
எதிர்வரும் | இனி வரும் |
எதிர்வழக்காடி | வழக்குத் தொடுத்தோனுக்கு எதிராக வழக்காடுபவன், பிரதிவாதி |
எதிர்வழக்கு | எதிர்வியாச்சியம் |
எதிர்வழக்கு | எதிர்வாதம், பிரதிவாதம் |
எதிர்வாக்கு | பதிலுரை |
எதிர்வாதம் | பிரதிவாதியின் வாதம் மாறுபடக் கூறுகை |
எதிர்வாதி | பிரதிவாதி |
எதிர்வாதி | எதிர் வழக்காடி, வழக்கிற் பிரதிவாதி தன் பக்கத்துக்கு எதிராக வாதிப்பவன் எதிர்க்கட்சி பேசுவோன் |
எதிர்வாய் | ஏரியின் முன்வாய் |
எதிர்வார்த்தை | பதிலுரை |
எதிர்விளைவு/எதிர்வினை | ஒரு செயலால் ஏற்படும் (பின்) விளைவு |
எதிர்விற்பனை | போட்டி வாணிகம் |
எதிர்வினை | எதிர்காலத்துச் செய்கை, எதிர் காலத்தில் நேரவிருக்கும் செயல்கள் எதிர்மறை வினை |
எதிர்வு | எதிர்ப்படுகை எதிர்காலம் நேரவிருப்பது |
எதிர்வெட்டு | மறுதலை, மறுப்பு |
எதிர்வைத்தல் | சரிவைத்தல் |
எதிரழற்சி | எரிப்புண்டாக்கும் மருந்து |
எதிராக | முன் |
எதிராசன் | துறவிகளுள் சிறந்தவராகிய இராமானுசர் |
எதிராப்பு | கழலாதபடி வைக்கிற ஆப்பு |
எதிராப்பு | கழலாதபடி வைக்கும் ஆப்பு |
எதிராளி | பகைவன் எதிர்வழக்காடி, பிரதிவாதி எதிரிடைக்காரன், போட்டி போடுபவன் சமமாயிருப்பவன் |
எதிராளி | எதிரி |
எதிரி | பகைவன் எதிர்வழக்காடி, பிரதிவாதி எதிரிடைக்காரன், போட்டி போடுபவன் சமமாயிருப்பவன் |
எதிரி | பெரும் தீங்கு விளைவிப்பது |
எதிரிடுதல் | எதிர்ப்படுதல் எதிர்த்தல் மாறுபடுதல் |
எதிரிடை | எதிர்க்கை பகை போட்டி சமமாயிருப்பது எதிரிடை முறி |
எதிரிடை | (கொள்கை, இயக்கம் முதலியவற்றிற்கு) நேர்மாறு |
எதிரிடைக்காரன் | விரோதஞ் செய்வோன் |
எதிரிடைச்சீட்டு | அடையோலை எழுதித் தருபவருக்குக் கொடுக்கும் ஆதரவுச்சீட்டு |
எதிரிடைமுறி | எதிரிடைச்சீட்டு |
எதிரில் | எதிர்ப்பக்கத்தில் |
எதிரிலி | எதிரில்லாதவன், எதிர்ப்பார் எவரும் இல்லாதவன் ஒப்பில்லாதவன் |
எதிருக்கெடுத்தல் | குமட்டுதல், உண்ட உணவு மேலே திரும்புதல் |
எதிருத்தரம் | மறுமொழி |
எதிரும் புதிருமாக | நேருக்கு நேராக |
எதிரும்புதிருமாக | நேருக்கு நேர் பார்க்கும்படியாக |
எதிருரைத்தல் | எதிர்த்துப் பேசுதல் மறுமொழி உரைத்தல் |
எதிரூன்றுதல் | எதிரூன்றல், போருக்கு உறுதியாய் எதிர்நிற்றல் |
எதிரெடுத்தல் | எதிர்(ரு)க்கெடுத்தல் |
எதிரேவல் | ஒருவன் செய்த ஏவலின்பொருட்டு மாறாக அவன் மீது ஏவுகை ஏவலையெடுக்கச் செய்கை |
எதிரேற்றம் | மாறாக எதிரே போதல் போருக்கு எதிரேறிச் செல்லுகை |
எதிரேற்றல் | எதிர்கொள்ளுதல், எதிர்கொண்டு வரவேற்றல் பிறன்மேல் வருவதைத் தானேற்றல் எதிர்த்தல் எதிரேவல் தடுத்தல் |
எதிரேறு | வலிமை எதிர்கொள்ளல் |
எதிரொலி | நம்மால் அல்லது எதாவது பொருலால் ஏற்படுத்தும் ஒலி மீண்டும் மீண்டும் ஒலித்தல் |
எதிரொலி | மாற்றொலி |
எதிரொலி2 | (சுவர், மலை ஆகியவற்றில் பட்டு) மீண்டும் கேட்கும்படி திரும்பி வரும் ஒலி |
எதிரொலித்தல் | பிரதித்தொனி செய்தல், எதிரொலி காணல் |
எதிரொளி1 | (கண்ணாடி போன்ற பளபளப்பான பரப்பில் படும்) ஒளி திரும்பி வருதல் |
எதிரொளி2 | (கண்ணாடி போன்ற பளபளப்பான பரப்பில் பட்டு) திரும்ப ஒளிரும் ஒளி |
எதிரோட்டம் | எதிர்த்து வரும் (நீரின்) போக்கு |
எது | யாது |
எதுகுலகாம்போதி | ஒரு பண்வகை |
எதுகுலம் | யதுகுலம், யதுவின் மரபுவழி |
எதுகை | எதுகைத்தொடை, செய்யுளடிகளிலாயினும் சீர்களிலாயினும் முதலெழுத்து அளவொத்து நிற்க இரண்டாமெழுத்து ஒன்றிவருவது பொருத்தம் |
எதுகை | செய்யுளின் அடிகளில் (அல்லது சீர்களில்) இரண்டாவது எழுத்து அதே எழுத்தாகவோ அல்லது அதன் இனமான எழுத்தாகவோ இருக்கும் ஒலி இயைபு |
எதுகைத்தொடை | எதுகைத்தொடை, செய்யுளடிகளிலாயினும் சீர்களிலாயினும் முதலெழுத்து அளவொத்து நிற்க இரண்டாமெழுத்து ஒன்றிவருவது பொருத்தம் |
எதுகைமோனை | (பேச்சில்) அலங்காரமான ஒலிநயம் |
எதேச்சாதிகாரம் | எல்லா உரிமைகளையும் தானே எடுத்துக்கொண்டு தன் விருப்பப்படி ஆளும் அல்லது நடந்துகொள்ளும் ஆதிக்கப் போக்கு |
எதேச்சாதிகாரி | தன் விருப்பப்படி ஆளுபவர் அல்லது நடந்துகொள்பவர் |
எதேச்சை | தன்னுடைய விருப்பப்படி(தன்விருபபம்) |
எதேச்சை | தன் விருப்பப்படி செயல்படுவது |
எதேச்சையாக | தற்செயலாக : எதிர்பாராமல் |
எதேச்சையாக | தற்செயலாக |
எதேஷ்டம் | தேவைக்கு அதிகம் |
எதேஷ்டமாய் | இஷ்டப்படி மிகுதியாய் |
எதோள் | எவ்விடம் |
எதோளி | எதோள் |
எந்த | எந்தவெந்த வெஞ்சாயகம். கொடுத்தார் (பாரத. பதினெட். 30) |
எந்த | வினா, வினாப் பொருளில் வரும் பெயர்ச் சொல்லுக்கு முன்வரும் ஓர் இடைச்சொல் |
எந்தானம் | பொருட்கள் வைக்கு உயரமான இடம் |
எந்திரக்கிணறு | நீரை நிறைத்தற்கும் வடித்தற்குமுரிய பொறியையுடைய கிணறு |
எந்திரகாரன் | சூத்திரக்காரன் |
எந்திரநாழிகை | நீர் வீசும் ஒருவகைக் கருவி |
எந்திரப்பொருப்பு | பல்வகைப் பொறிகள் அமைக்கப்பட்ட செய்குன்று |
எந்திரம் | சூத்திரப்பொறி மதிலுறுப்பு கரும்பு ஆலை தேர்ச்சக்கரம் குயவன் திரிகை பஞ்சு கொட்டும் எந்திரம் செக்கு தீக்கடைகோல் மந்திரச் சக்கரம் |
எந்திரவச்சு | பண்டியச்சு |
எந்திரவாவி | எந்திரக் கிணறு, நீரை நிரப்பவும் வடிக்கவும் உரிய பொறியையுடைய நீர்நிலை |
எந்திரவில் | தானே எய்யும் விற்பொறி |
எந்திரவூசல் | பிறராட்டாத நிலையில் தானே ஆடும் பொறியமைந்த ஊசல் |
எந்திரவூர்தி | சூத்திரத்தால் தானே இயங்கும் ஊர்தி |
எந்திரவெழினி | பொறியினால் எழவும் விழவும் கூடியபடி அமைக்கப்பட்ட திரை |
எந்திரன் | இயந்திர மனிதன் இயந்திரன் |
எந்திரன் | தேர் |
எந்திரி | பாவையை ஆட்டுவிப்போன் |
எந்து | எப்படி என்ன |
எந்து | என்ன எப்படி ஏன் |
எந்தை | எம் தந்தை எம் தலைவன் எம் தமையன் |
எந்தைபெயரன் | எம் தந்தையின் பெயர் தாங்கிய என் மகன் |
எப்படி | எவ்வண்ணம், எவ்விதம், எவ்வாறு |
எப்படி | எந்த விதமாக |
எப்படிப்பட்ட/எப்பேர்ப்பட்ட | (ஒருவரின் அல்லது ஒன்றின் தன்மையைக் குறிக்கையில்) எந்த விதமான |
எப்பிறப்பு | எம்மை |
எப்பேர்ப்பட்ட | எவ்வகையான மற்றும் எப்பேர்ப்பட்ட உபாதிகளும் (S. I. I. i, 104) |
எப்பொருட்குமிறைவன் | எல்லாவற்றிற்கு மதிபன் கடவுள் |
எப்பொழுது | எக்காலம் |
எப்பொழுது | எக்காலம், எப்பபோது |
எப்பொழுது/எப்போது | எந்த நேரத்தில் |
எப்பொழுதும் | எக்காலமும் |
எப்பொழுதும் | எக்காலமும், எல்லாக் காலமும் |
எப்போது | எப்பொழுது |
எப்போதும் | எப்பொழுதும் |
எப்போதைக்கும் | எப்பொழுதும் |
எப்போழ்து | எப்பொழுது |
எப்போழ்தும் | எக்காலமும், எல்லாக் காலமும் |
எம் | எங்கள் |
எமகண்டம் | ஒவ்வொரு நாளிலும் யமனுக்கு உரியதாகக் கருதப்படுகிற, நற்காரியங்கள் செய்வதற்கு உரியதல்லாத (மூன்று நாழிகை) பொழுது |
எமகண்டன் | திறமைசாலி |
எமகணம் | எமனுடைய கூட்டத்தார் |
எமகாதகன் | எந்தச் செயலையும் முடிக்கும் ஆற்றல் உள்ளவன் |
எமகாதகன் | பெருந்திறல் படைத்தவன் |
எமகாதகன் | மிகச் சிரமமான காரியத்தையும் முடிக்கும் ஆற்றல் உடையவன் |
எமகிங்கரன் | எமனுடைய ஏவல் செய்வோன், எமனுடைய வேலையாள் |
எமகிங்கரன் | (தலையில் கொம்பு உடையவனாகக் காட்டப்படும்) யமனின் சேவகன் |
எமதங்கி | சமதக்கினி, பரசுராமனின் தந்தை |
எமதருமன் | யமன் |
எமதூதன் | யமனுடைய தூதன் நல்லபாம்பின் நச்சுப் பற்களுள் ஒன்று |
எமதூதி | நாகப்பாம்பின் நச்சுப் பற்களுள் ஒன்று |
எமநாகம் | அசமதாகம் ஊமத்தை |
எமநாகம் | ஊமத்தை ஓமம் |
எமநாமம் | ஊமத்தை |
எம்பர் | எவ்விடம் |
எம்பரும் | எவ்விடத்தும் |
எமபாசம் | யமனுடைய கயிறு |
எம்பி | என்றம்பி |
எம்பி | எமக்குப்பின் பிறந்தவன், எம் தம்பி, இளையவன் |
எம்பிக்குதி | மேலே உந்தி எழும்பு |
எம்பிராட்டி | எங்கள் தலைவி |
எம்பிரான் | எங்கள் தலைவன் எங்கள் தேவன் கடவுள் |
எம்பு | (உயரத்தில் இருப்பதை எடுப்பதற்கு அல்லது வேகமாகக் குதிப்பதற்கு) காலை உந்தி உடலை உயர்த்துதல் |
எம்புகம் | நிலக்கடம்பு |
எம்புரம் | யமனுடைய தலைநகர், வைவச்சுத நகரம் |
எம்பெருமாட்டி | எங்கள் தலைவி |
எம்பெருமான் | எம்பிரான் |
எம்பெருமான்வெட்டு | ஒரு பழைய நாணயவகை |
எம்பெருமானார் | இராமானுசர் |
எம்மட்டு | எவ்வளவு |
எம்மர் | எம்முடையோர், எமது சுற்றத்தார் |
எம்மவர் | எம்முடையோர், எமது சுற்றத்தார் |
எம்மனை | எம் தாய், தாய் |
எம்மனோர் | எம்மோடொத்தவர் |
எம்மனோர் | எம்மை ஒத்தவர், எம்மோடொத்தவர் நாங்கள் |
எம்மாத்திரம் | எவ்வளவு |
எம்மான் | எம் தந்தை எம் கடவுள் : எம் மகன் |
எம்முன் | எம் தமையன் |
எம்மை | எப்பிறப்பு எம் தலைவன் எவ்வுலகு |
எம்மையோர் | எம்முடையோர், எமது சுற்றத்தார் |
எம்மோர் | எம்முடையவர் |
எம்மோன் | எம் தலைவன் |
எமர் | எம்மவர் எம்போலியர் |
எமரங்கள் | எம்மவர்கள், எம் சுற்றத்தவர்கள் |
எமரன் | எம்மைச் சேர்ந்தவன் எமன் |
எமராசன் | யமன் |
எமன் | யமன், எம்முடையன், சுற்றத்தான் |
எமார் | எமர் |
எமி | தனிமை கூடியிருப்போன்(ள்) |
எமுனை | யமுனையாறு |
எய் | முள்ளம்பன்றி அம்பு ஓர் உவமவுருபு |
எய் | (வி) எய்என் ஏவல், அம்பு செலுத்து |
எய் | (வில்லில் அம்பைப் பொருத்தி இழுத்து) விரைந்துசெல்லும்படி விடுதல் |
எய்த | நன்றாக நிரம்ப |
எய்த்தல் | இளைத்தல் குறைவடைதல் மேய் வருந்துதல் ஓய்தல் வறுமையடைதல் காலூன்றி நிற்கும்படி நீர் ஆழமில்லாது இருத்தல் அறிதல் |
எய்தல் | அடைதல், சேர்தல் அம்பைச் செலுத்தல் நிகழ்தல் சம்பவித்தல் பெறுதல் |
எய்து | (ஒரு நிலை, உணர்ச்சி முதலியவற்றை) அடைதல் |
எய்துதல் | அணுகுதல் அடைதல், சேர்தல் பணிதல் நீங்குதல் பொருந்துதல் நிகழ்தல் உண்டாதல் போதியதாதல் பயன் நுகர்தல் |
எய்ப்பன்றி | முட்பன்றி |
எய்ப்பன்றி | முள்ளம்பன்றி |
எய்ப்பாடி | வேடரூர் |
எய்ப்பாடி | வேடர் ஊர் |
எய்ப்பினில்வைப்பு | கேட்டில் உதவும் பொருள், இளைத்த காலத்தில் உதவுதற்காகச் சேர்த்து வைக்கும் பொருள் சேமநிதி தான் தளர்ந்தும் பிறரைத் தாங்குவது |
எய்ப்பு | இளைப்பு தளர்ச்சி, ஒடுக்கநிலை வறுமைக்காலம் |
எய்ப்போத்து | ஆண் முள்ளம்பன்றி |
எய்ம்மான் | முள்ளம்பன்றி |
எய்யாமை | அறியாமை |
எய்யுந்தொழில் | எய்யுந்தொழில். ஏமாண்ட நெடும்புரிசை (பு. வெ. 5 5) |
எயில் | மதில் ஊர் நகரம் |
எயில்காத்தல் | அகத்தோன் உள்ளிருந்து கோட்டையைக் காத்து நிற்பக் கூறும் புறத்துறை |
எயிறதைப்பு | பல்லின் அடிவீக்கம் |
எயிறலைத்தல் | பற்கடிப்பு, பல்லைக் கடித்தல் சினத்தால் பல்லைக் கடித்தல் |
எயிறலைப்பு | பற்கடிப்பு |
எயிற்றம்பு | அலகம்பு |
எயிற்றி | எயினச்சாதிப் பெண், பாலைநிலப் பெண், வேட்டுவப் பெண் |
எயிற்றுவலி | பல்ல¦று வளர்தலால் உண்டாகும் நோவு |
எயிறிலி | சூரியன் |
எயிறிலை | சூரியன் |
எயிறு | பல் பல்லின் விளிம்பு யானைக்கோடு பன்றிக்கொம்பு கணு |
எயிறு | ஈறு |
எயிறுதின்றல் | பற்கடித்தல் சினத்தால் பல்லைக் கடித்தல் |
எயிறுதின்னுதல் | பற்கடித்தல் சினத்தால் பல்லைக் கடித்தல் |
எயின் | வேடச்சாதி, பாலைநில மக்கள், மறவர் |
எயின்கடன் | பலிக்கடன் |
எயின்சேரி | வேடரது ஊர் |
எயினன் | வேடன் |
எரங்காடு | பாழ்நிலம் பருத்தி விளைதற்குரிய செழித்த புன்செய் நிலம் |
எரி | நெருப்பு வேள்வித் தீ தீக்கடைகோல் ஒளி அக்கினிதேவன் நரகம் கார்த்திகை புனர்பூசம் கந்தகம் இடபராசி கேட்டை வால்மீன்வகை |
எரி | (வி) எரிஎன் ஏவல் ஒளிர் அழல் பொறாமைகொள் சினங்கொள் வயிறெரி |
எரி உலை | (தொழிற்சாலைகளில் உலோகம் முதலியவற்றை உருக்குவதற்குப் பயன்படுத்தப்படும்) அதிக வெப்பச் சக்தியுடன் எரியும் அடுப்பு |
எரி நட்சத்திரம் | (புவியீர்ப்பு விசையால் காற்றுமண்டலத்துக்குள் நுழையும்போது) ஒளியுடன் எரியும் அல்லது எரிந்து கீழே விழும் விண்வெளிப் பொருள் |
எரி1 | (தீ) சுவாலையுடன் மேல் எழுதல் |
எரி2 | (ஒன்றை) தீயினால் அழித்தல் |
எரிக்கொடி | நெருப்பின் கொழுந்து முடக்கொற்றான் சோதிக்கொடி |
எரிகதிர் | சுடுகதிர் கதிரவன், சூரியன் |
எரிகரும்பு | விறகு |
எரிகலக்காம்போதி | ஓரிராகம் |
எரிகறி | சுண்டற்கறி |
எரிகாசு | அகிற்கூட்டைந்தினொன்று. அஃது காசுக்கட்டி |
எரிகாசு | காசுக்கட்டி |
எரிகாலி | காட்டாமணக்கு |
எரிகுஞ்சி | செம்மயிர் |
எரிகுட்டம் | குட்டநோய்வகை |
எரிகுடல் | எரிவயிறு, மிகு பசி |
எரிகுடலன் | மிகுந்த பசியுடையவன் |
எரிகும்பவாயு | வயிற்றுநோய்வகை |
எரிகுன்மம் | ஒருநோய் |
எரிகுன்மம் | குன்மநோய்வகை |
எரிகொள்ளி | கொள்ளிக்கட்டை |
எரிகொள்ளி | கொள்ளிக்கட்டை, கடைக்கொள்ளி |
எரிசக்தி | நிலக்கரி, மண்ணெண்ணெய் முதலிய பொருள்களை எரிப்பதால் கிடைக்கும் சக்தி |
எரிச்சல் | எரிவு அழற்சி உறைப்பு சினம் பொறாமை பெருங்காயம் வெறுப்பு |
எரிச்சல் | (பொறுத்துக்கொள்ள முடியாத நிலையில் ஏற்படும்) கோப உணர்வு |
எரிச்சலூர்மலாடனார் | ஒருபுலவர் இவர்கடைச்சங்கக்காலத்துள்ளோர் |
எரிசனம் | நரகர், நிரயத்திருப்போர் |
எரிசாராயம் | எளிதில் தீப் பற்றிக்கொள்ளும் தன்மை உடையதும் ஆவியாகக் கூடியதுமான திரவ நிலையில் உள்ள எரிபொருள் |
எரிசாலை | மருந்துப் பூண்டுவகை |
எரிசினம் | கடுங்கோபம் |
எரிசுடர் | அக்கினி செவ்வொளி விளக்கு |
எரிசுடர் | எரியும் நெருப்பு மிக்க ஒளி செவ்வொளி தீ விளக்கு |
எரிசோடா | பெரும்பாலும் துணிகளைச் சலவை செய்வதற்குப் பயன்படும், அரிப்புத் தன்மை உடைய ஒரு வகை உப்பு |
எரித்தல் | தீயில் வேகச்செய்தல் அழற்றுதல் செரிக்கச் செய்தல் விளக்கை எரியச்செய்தல் மருந்து முதலியன புடமிடுதல் |
எரித்திங்கள் | ஆனிமாதம் |
எரிதல் | சுடருண்டாதல் ஒளிவிடுதல் எரிச்சலுண்டாதல் பொறாமை கொள்ளுதல் சினத்தல் துயரமடைதல் |
எரிதுரும்பு | விறகு |
எரிதூவுதல் | தீப்பற்றுதல் |
எரிதைலம் | கடைச்சரக்கிட்டுக் காய்ச்சிய எண்ணெய் |
எரிநகை | வெட்சிமலர் |
எரிந்து விழு | சினந்து பேசு கடுமையாகப்பேசு |
எரிந்து விழு | (பொறுமை இல்லாமல்) கோபத்துடன் கடுமையாகப் பேசுதல் |
எரிந்துவிழுதல் | சினமாகப் பேசுதல் மூர்க்கங் காட்டுதல் |
எரிநரகம் | ஒருநரகம் |
எரிநரகம் | ஏழு நரகத்துள் ஒன்று |
எரிபடுவன் | பிளவை நோய்வகை |
எரிபந்தம் | தீவட்டி உடலெரிச்சல் |
எரிபந்தம் | தீவட்டி |
எரிப்பு | கார்ப்புச் சுவை பொறாமை நெஞ்செரிப்பு எரிக்கை |
எரிப்புரம் | நரகம் |
எரிப்புறம் | நரகம் |
எரிப்பூ | எரிபோலும் நிறமுள்ள பூ |
எரிபரல்வட்டம் | ஏழு நரகத்துள் ஒன்று |
எரிபிடாரி | எரிச்சலுடையவள் உக்கிரமாகாளி, கொற்றவை |
எரிபுழு | தொட்டால் எரிச்சலுண்டாக்கும் புழு கம்பளிப்பூச்சி |
எரிபொத்துதல் | நெருப்பு மூட்டுதல் |
எரிபொருள் | (விறகு, மண்ணெண்ணெய் போன்ற) எரிப்பதற்குப் பயன்படும் பொருள் |
எரிபொழுது | மாலைவேளை செவ்வானப் பொழுது |
எரிமணி | ஒளியுள்ள மணி, மாணிக்கம் |
எரிமருந்து | சுடுமருந்து |
எரிமருந்து | எரித்தெடுக்கும் மருந்து உறைப்பான மருந்து வெடிமருந்து |
எரிமலர் | முருக்கமலர் செந்தாமரை |
எரிமலை | நெருப்பைக் கக்கும் மலை |
எரிமலை | பூமியின் ஆழத்திலிருந்து கொதிக்கும் பாறைக் குழம்பு முதலியவற்றை வெடிப்புடன் வெளியே தள்ளும் திறப்பு உடைய மலை |
எரிமுகி | சேங்கோட்டைமரம் |
எரிமுகி | சேங்கொட்டை மரம் |
எரிமுட்டைப்பீநாறி | வெதுப்படக்கி |
எரியல் | எரிவு ஒளிவிடுகை எரிந்தது |
எரியவிட்ட மருந்து | நீற்றின பற்பம் |
எரியவிட்டமருந்து | நீற்றினபஸ்பம் |
எரியவிழித்தல் | சினத்தோடு நோக்குதல் |
எரியாடி | ஊழித்தீயில் நின்று ஆடுவோன், அழலைக் கையிலேந்தி ஆடுபவன், சிவன் |
எரியிடுதல் | எரியவைத்தல் |
எரியூட்டு | (சடலத்தைச் சிதையில் வைத்து) நெருப்புவைத்தல் |
எரியூட்டுதல் | தீக்கொளுத்துதல், நெருப்புக்கு இரையாக்குதல் வேள்வித் தீ வளர்த்து வழிபடல் |
எரியோம்புதல் | வேள்வி செய்தல் |
எரியோன் | அக்கினிதேவன், தீக்கடவுள் |
எரிவட்டம் | ஏழு நரகத்துள் ஒன்று |
எரிவண்டு | எரிச்சலுண்டாக்கும் வண்டு, பட்ட இடம் எரியும் வண்டு கண்ணில் அடிக்கும் வண்டு |
எரிவந்தம் | எரிச்சல் சினம் |
எரிவரியன் | ஒருபாம்பு |
எரிவளர்ப்போர் | வேள்வித்தீ வளர்ப்போர் |
எரிவனம் | சுடுகாடு |
எரிவாயு | நிலத்தடியிலிருந்து எடுக்கப்பட்டு எரிபொருளாகப் பயன்படும் வாயு |
எரிவிரியன் | எரிச்சலை உண்டாக்கும் விரியன் பாம்புவகை |
எரிவிழித்தல் | தீக்கண்ணாற் பார்த்தல், சினந்து நோக்குதல் |
எரிவிளக்குறுத்தல் | நடைவிளக்கெரித்துத் தண்டித்தல், குற்றவாளியின் தலைமேல் எரியும் விளக்கை வைத்து நகரைச் சுற்றிவரச் செய்யும் தண்டனை |
எரிவு | எரிகை, உடலெரிச்சல் பொறாமை சினம் |
எரு | உரம் சாணி வறட்டி பசளை மலம் |
எரு | மக்கி மாறும் தாவரக் கழிவு, சாணம் முதலிய பயிர்களுக்கான ஊட்டச் சத்து |
எருக் குழி | (உரமாக மாறுவதற்கு) தாவரக் கழிவுகள், சாணம் முதலியவை கொட்டப்படும் பள்ளம் |
எருக்கட்டு | கிடைவைத்த கொல்லை |
எருக்கட்டுதல் | கிடைவைக்குதல் |
எருக்கட்டுதல் | பயிரிடும் நிலத்தில் எருவிடும் பொருட்டு ஆடு மாடு முதலியவற்றைக் கிடைவைத்தல் |
எருக்கட்டுதல் | கிடைவைத்தல் சாணம் சேர்த்தல் |
எருக்கம் | எருக்கஞ்செடி எருக்கம்பூமாலை |
எருக்கழித்துக் கொடுத்தல் | வைக்கோலில் சாணியிட்டுக் கொடுத்து மாட்டின் விற்பனையை உறுதிப்படுத்துதல் |
எருக்களம் | ஆனிலை எருவிருக்குமிடம் |
எருக்களம் | எருவிருக்குமிடம், எருச் சேமிக்கும் இடம் |
எருக்கு | எருக்கஞ்செடி வெள்ளெருக்கு துன்பம் |
எருக்கு | பயிரிடாமல் தானாக முளைக்கும், தண்டுகளில் பால் நிறைந்த சாம்பல் நிறச் செடி |
எருக்குதல் | எருக்கல் |
எருக்குதல் | வருத்துதல் கொல்லுதல் வெட்டுதல் தாக்குதல், அடித்தல் அழித்தல் சுமத்துதல் தாக்கி ஒலியெழச் செய்தல் |
எருக்குரல் | தாக்குதலால் ஏற்பாடும் ஒலி |
எருக்கொடுத்தல் | வைக்கோலில் சாணியிட்டுக் கொடுத்து மாட்டின் விற்பனையை உறுதிப்படுத்துதல் |
எருச்சாட்டி | எருப்பட்டநிலம் |
எருச்சாட்டி | எருவிட்ட நிலம் |
எருதடித்தல் | உழுதல் சூடடித்தல், நெற்கதிரைக் கடாவிட்டுத் துவைத்தல் |
எருத்தடி | ஈற்றயலடி |
எருத்தடி | செய்யுளின் ஈற்றயலடி |
எருத்தம் | தரவு பிடர் |
எருத்தம் | கழுத்து பிடர் தோள், கலிப்பாவின் உறுப்புகளுள் ஒன்றாகிய தரவு செய்யுளின் ஈற்றயலடி |
எருத்தன் | காளைபோன்ற வலிமையுடையவன் |
எருத்து | ஈற்றயல் பிடர் |
எருத்து | கழுத்து தரவு என்னும் கலிப்பாவின் முதலுறுப்பு செய்யுளின் ஈற்றயலடி |
எருத்துக்கரணம் | எருகரணம் |
எருத்துக்காளை | இளவெருது |
எருத்துத்திமில் | விடைமுரிப்பு |
எருத்துத்திமில் | மாட்டுக்கொண்டை, விடையின் முரிப்பு மாட்டின் முசுப்பு |
எருத்துப்புரை | மாட்டுக்கொட்டில் |
எருத்துப்பூட்டு | ஏர்ப்பூட்டு |
எருத்துப்பூட்டு | ஏர்ப்பூட்டு நல்ல நாளில் ஏர் பூட்டி உழத் தொடங்குதல் |
எருத்துமாடு | எருது |
எருத்துமாடு | எருது, காளை பொதிமாடு |
எருத்துவாலன் | ஒருகுருவி |
எருத்துவாலன் | நீண்ட வாலுள்ள ஒரு குருவிவகை கோரைக்கிழங்கு |
எருது | இடபம் காளை ஏறு பகடு |
எருது | இடபம், காளைமாடு இடபராசி |
எருது | (எருமை அல்லாத) மாட்டினத்தில் ஆண் |
எருதுகட்டி | சல்லிக்கட்டில் காளையை மடக்குவோன் |
எருதுகட்டு | சல்லிக்கட்டு |
எருதுமறித்தல் | பசுவுடனே காளை சேர்த்தல், எருது பொலிதல் |
எருந்தி | இப்பி எராமுட்டி |
எருந்தி | இப்பி, கிளிஞ்சில் |
எருந்து | உரல் கிளிஞ்சில் |
எருந்து | உரல் காண்க : எருந்தி |
எருமணம் | செங்குவளை சாணி நாற்றம் |
எருமன்றம் | எருக்குவித்து வைக்கும் இடம் இடையர் சேரியிலுள்ள அம்பலம் |
எருமுட்டை | எருவராட்டி |
எருமுட்டை | காய்ந்த சாணம், வறட்டி |
எருமுட்டைப்பீநாறி | வெதுப்படக்கி |
எருமை | காரா |
எருமை | எருமைமாடு, காரான் எருமைமறம் யமன் |
எருமை | நீண்டு வளைந்த கொம்பும் கரிய நிறமும் தடித்த தோலும் கொண்ட ஒரு வகை மாடு |
எருமைக் கற்றாழை | ஒருவகைக் கற்றாழை |
எருமைக் காஞ்சொறி | ஒருவகைக் காஞ்சொறிப்பூடு |
எருமைக்கடா | பகடு |
எருமைக்கடா | ஆண் எருமை |
எருமைக்கடாரி | பெண் எருமை |
எருமைக்கப்பல் | புகையிலைவகை |
எருமைக்கற்றாழை | ஒரு கற்றாழை |
எருமைக்காஞ்சொறி | ஒரு காஞ்சொறி |
எருமைக்கொற்றாள் | ஒருகொடி |
எருமைக்கொற்றான் | ஒருவகைக் கொற்றான் கொடி |
எருமைச்சுறா | ஒருமீன் |
எருமைச்சுறா | ஒரு மீன்வகை |
எருமைத் தக்காளி | சீமைத் தக்காளி, பெருந் தக்காளி |
எருமைத்தக்காளி | ஒருசெடி |
எருமைநாக்கள்ளி | ஒருகள்ளி |
எருமைநாக்கி | ஒருமீன் சாணாக்கி |
எருமைநாக்கி | ஒரு மீன்வகை சனகிப் பூடு |
எருமைநாக்கு | ஒருமீன் |
எருமைநாகு | எருமைப் பெண்கன்று |
எருமைப்பாச்சோற்றி | ஒருபூண்டு |
எருமைப்பால்குடித்தவன் | மந்தன் |
எருமைப்போத்து | எருமைக்கடா |
எருமைமறம் | பகைவர் படையைத் தனியனாய் நின்று வீரனொருன் தாக்குகை, வீரன் ஒருவன் தன் படை முதுகிடவும் பகைவர் படையைத் தான் அஞ்சாது எதிர்த்து நிற்கும் புறத்துறை |
எருமைமுல்லை | ஒருமுல்லை |
எருமைமுல்லை | ஒருவகை முல்லை |
எருமைமுன்னை | முன்னைமரவகை |
எருமையின்றிசை | யமன் திக்கு, தெற்கு |
எருமையூர்தி | யமன் |
எருவண்டு | எருவிலிருந்து உண்டாகும் ஒருவகை வண்டு |
எருவராட்டி | காய்ந்த எரு |
எருவறட்டி | காய்ந்த சாணம், வறட்டி |
எருவாரம் | எருச்செய்கைப்பங்கு |
எருவாரம் | எரு உரம் இட்டதற்காகக் கொடுக்கும் தவசப் பங்கு |
எருவிடுவாசல் | குதம் |
எருவை | பருந்து கழுகு கொறுக்கச்சி பஞ்சாய்க் கோரை கோரைக்கிழங்கு செம்பு அரத்தம் கழுதை |
எல் | ஒளி சூரியன் வெயில் பகல் இரவு நாள் பெருமை இகழ்ச்சி, இகழ்மொழி |
எல்கை | எல்லை |
எல்ல | எல்லா, ஏல, ஏடி, தோழி முன்னிலைப் பெயர் |
எல்ல¦ரும் | நீவிர் யாவிரும், எல்லார் நீங்களும், நீங்களெல்லாம் |
எல்லம் | இஞ்சி |
எல்லரி | கைமணி ஒரு வகை இசைகருவி அகல வாயையுடைய கருவி ‘கடிகவர் பொலிக்கும் வல்லாய் எல்லரி‘ (மலைபடுகடாம் 10) |
எல்லரி | கைம்மணி ஒருவகைப் பறை, சல்லி என்னும் வாத்தியம் |
எல்லவர் | எல்லாரும் |
எல்லவரும் | யாவரும் |
எல்லவன் | சூரியன் சந்திரன் |
எல்லா | விளிப்பெயர் முன்னிலைப் பெயர் |
எல்லாத்துக்கும் | அனைத்துக்கும் |
எல்லாம் | முழுதும் |
எல்லார் | தேவர் |
எல்லாரும் | சகலரும் |
எல்லி | சூரியன் பகல் இரவு இருள் |
எல்லிநாதன் | கதிரவன் சந்திரன் |
எல்லிநாயகன் | கதிரவன் சந்திரன் |
எல்லிப்பகை | சூரியன் |
எல்லிமன் | கதிரவன் சந்திரன் |
எல்லிமனை | சூரியன் மனைவி, தாமரை |
எல்லியறிவன் | இரவுப்பொழுதை அறியும் கோழிச்சேவல் |
எல்லியறிவான் | கோழிச்சேவல் |
எல்லிருள் | விடியற்காலத்திருள் இரவின் இருள் |
எல்லினான் | எல்லோன், கதிரவன் |
எல்லுதல் | ஒளி மழுங்குதல் |
எல்லே | தோழியை விளிக்கும் சொல், ஒரு வியப்பு இரக்கச் சொல் வெளிப்படையாக வெளியே |
எல்லேமும் | எல்லார் நாங்களும், நாமெல்லாரும் |
எல்லேலெனல் | ஓர் ஒலிக்குறிப்பு |
எல்லை | வரம்பு அளவு அவதி வரையறை தறுவாய் முடிவு ஐந்தாம் வேற்றுமைப் பொருள் சூரியன் பகல்வேளை நாள் இடம் கூப்பிடு தொலைவு |
எல்லை | (நாடு, மாநிலம் ஆகியவை) முடியும் இடம் |
எல்லைக்கட்டு | கட்டுப்பாடு வரம்பு |
எல்லைக்கல் | எல்லையறிய நாட்டி வைக்கும் கல் |
எல்லைக்காவல் | எல்லையறிய நாட்டி வைக்கும் கல் |
எல்லைக்காவல் | ஊர்ப்புற எல்லைக்காவல் |
எல்லைக்காவல் படை | நாட்டின் எல்லைகளைக் காக்கும் பணிக்கு ஏற்படுத்தப்பட்ட காவல் பிரிவு |
எல்லைக்குறிப்பு | எல்லையடையாளம் |
எல்லைக்குறிப்பு | எல்லை அடையாளம் வழி அளவைக் காட்டுங் குறி |
எல்லைக்கெட்டநேரம் | ஒவ்வாதநேரம் |
எல்லைகட்டுதல் | தீர்த்தல் வரம்பு வைத்தல் முடிவுசெய்தல் வரையறுத்தல் கட்டுப் படுத்துதல் |
எல்லைகடத்தல் | வரம்புமீறுதல், அளவிறத்தல் நியாயம் மீறுதல் |
எல்லைகுறித்தல் | எல்லைகட்டுதல் வரம்பேற் படுத்துதல் |
எல்லைச்சதிரி | பெருஞ்சமர்த்தன் |
எல்லைத்தரிசு | ஊர் ஓரங்களிலுள்ள கரம்பு நிலம் |
எல்லைத்தீ | ஊழித்தீ |
எல்லைத்தீ | ஊழித்தீ, வடவைத்தீ |
எல்லைப்படுத்துதல் | எல்லை கட்டுதல் முடிவு படுத்துதல் |
எல்லைப்பத்திரம் | எல்லை வழக்குத் தீர்த்து எழுதும் பத்திரம் |
எல்லைப்பிடாரி | ஊர்ப்புற எல்லைக் காவல் பெண் தெய்வம் |
எல்லைமால் | நான்கு எல்லை |
எல்லைமானம் | அளவு எல்லை |
எல்லைமானம் | எல்லை அளவு |
எல்லையின்மை | அளவின்மை |
எல்லையோடல் | எல்லையைச்சுற்றிவரல் |
எல்லையோடுதல் | எல்லையயைச் சுற்றிவருதல் |
எல்லைவிருத்தி | ஊரெல்லையைக் காக்கும் பணி |
எல்லோ | அதிசயவிரக்கச்சொல் |
எல்லோ | ஒரு வியப்பிரக்கச் சொல் |
எல்லோமும் | எலலேமும் |
எல்லோரும் | சகலரும் |
எல்லோரும் | எல்லாரும், அனைவரும் |
எல்லோன் | சூரியன் |
எலவளி | பெருங்காற்று |
எல்வை | காலம் நாள் |
எல்வை | ஏல்வை, காலம், பொழுது, நாள் |
எலா | நண்பினரை விளிக்கும் ஒரு விளிப்பெயர். (தொல். பொ. 220 உரை.) |
எலா | நண்பினரை விளிக்கும் ஒரு விளிப்பெயர் |
எலாம் | எல்லாம், முற்றும் |
எலி | ஒரு சிறு நாற்கால் உயிரி பெருச்சாளி கள்ளிமரம் பூரநாள் கள் |
எலி | சிறிய தலையும் நீண்ட வாலும் சற்றுப் பெருத்த வயிறும் உடைய பாலூட்டி இனத்தைச் சேர்ந்த பிராணி |
எலிக்காது | எலியின் செவி போன்ற இலையை உடைய ஒரு செடிவகை, சவரியார் கூந்தல் என்னும் ஒருவகைப் பூண்டு கொடியாள் கூந்தல் என்னும் கொடி |
எலிக்குச்சிப்புல் | இராவணன்புல் |
எலிக்குஞ்சப்புல் | இராவணன்புல் |
எலிச்செவி | எலியின் செவி போன்ற இலையை உடைய ஒரு செடிவகை, சவரியார் கூந்தல் என்னும் ஒருவகைப் பூண்டு கொடியாள் கூந்தல் என்னும் கொடி |
எலிச்செவிக்கள்ளி | கள்ளிவகை |
எலிச்செவித்துத்தி | எலிச்செவிப் பூண்டு |
எலித்திசை | வடமேற்றிசை |
எலித்திசை | வடமேற்கு |
எலித்துருமம் | தான்றி |
எலித்துன் | எலி தோண்டிய பொந்து |
எலிப்பகை | பூனை |
எலிப்பயல் | பொடியன், சிறு பையன் |
எலிப்பயறு | வயல் வரப்பில் காணப்படும் காட்டுப் பயறுவகை |
எலிப்பாகம் | எலியாமணக்கு, காட்டாமணக்கு |
எலிப்பிடுக்கன் | ஒருபூடு |
எலிப்புலி | பூனை |
எலிப்புலி | காணக : எலிப்பகை |
எலிப்புற்று | எலிவளை |
எலிப்பொந்து | நிலத்தினடியில் தங்க எலி தோண்டும் புரை |
எலிப்பொறி | எலியைப் பிடிக்கும் எந்திரம் |
எலிப்பொறி | எலியைப் பிடிப்பதற்கோ கொல்லுவதற்கோ மரத்தாலும் கம்பியாலும் ஆன அமைப்பு |
எலியளை | நிலத்தினடியில் தங்க எலி தோண்டும் புரை |
எலியன் | பொடியன், சிறு பையன் |
எலியாமணக்கு | ஒருமரம் |
எலியால் | எலியாமணக்கு, காட்டாமணக்கு |
எலியாலங்காய் | காட்டாமணக்கு விதை |
எலியிடுக்கி | எலியைப் பிடிக்கும் எந்திரம் |
எலியெலும்பன் | குறைந்த வலிமையுடையவன் |
எலியொட்டி | ஒட்டொட்டி |
எலியொட்டி | ஒட்டொட்டி ஒட்டங்காய்ப் புல் |
எலியோட்டி | குருக்குப்பூடு |
எலியோட்டி | குருக்குப் பூண்டு |
எலியோடி | நடுமுகட்டிலே வைக்கும் உருட்டு மரம் |
எலிவளை | நிலத்தினடியில் தங்க எலி தோண்டும் புரை |
எலிவாணம் | வாணவகை |
எலு | கரடி பிஞ்சு தோழமை |
எலும்பன் | எலும்பு தோன்ற மெலிந்தவன் |
எலும்பி | ஒருமரம் |
எலும்பி | எலும்பு தோன்ற மெலிந்தவள் ஒரு மரவகை, காட்டுமஞ்சரி |
எலும்பிலி | ஒருமரம் புழு |
எலும்பிலி | ஒரு மரவகை புழு முதலிய எலும்பில்லாத உயிரினம் |
எலும்பு | என்பு |
எலும்பு | உடலுக்கு உரம் தரும் உள்ளுறுப்பு, அஸ்தி |
எலும்பு | தசையினுள் அமைந்து உடலுக்கு உருவத்தைத் தரும் உறுதியான வெண்ணிறப் பகுதி |
எலும்புக்கூடு | எலும்புக்கோவை கங்காளம் |
எலும்புக்கூடு | எலும்புக் கோவை, கங்காளம் |
எலும்புக்கூடு | உடலின் எலும்புக் கட்டமைப்பு |
எலும்புக்கோறை | எலும்புத் துளை |
எலும்புச்சீப்பு | தந்தச் சீப்பு விலாவெலும்பு |
எலும்புப்பிசகல் | எலும்பின் பொருத்து நிலை மாறுகை |
எலும்பும்தோலுமாக | (நோயால் அல்லது சத்துக் குறைவால்) உடல் வற்றி எலும்பு இருப்பது தெரியும்படியாக |
எலும்புமுரிவு | எலும்பு ஒடிகை |
எலும்புருக்கி | ஒருநோய் ஒருபூடு ஒருமரம் |
எலும்புருக்கி | உடம்பை வாட்டி எலும்பை வற்றச் செய்யும் ஒரு நோய், சயரோகம் கருப்பமேகம், ஒருவகைப் பூடு ஒரு மரவகை |
எலும்புருக்கி | (உடலை வற்றச் செய்யும்) காச நோய் |
எலும்புவிரணம் | எலும்பைப்பற்றிய புண் |
எலும்புவீக்கம் | எலும்பைச் சுற்றிய தசையின் வீக்கம் |
எலுமிச்சந்துளசி | பெருந்துளசி |
எலுமிச்சம்பழச்செண்டு | எலுமிச்சம்பழத்தைத் தலையிலுடைய செண்டுவகை |
எலுமிச்சம்பழச்சோறு | எலுமிச்சம்பழத்தின் சாறுவிட்டுப் பிசைந்த சோறு |
எலுமிச்சம்பழவுப்பு | உப்புவகை |
எலுமிச்சை | எலும்பிச்சை சீதளை |
எலுமிச்சை | ஒரு மரவகை, எலுமிச்சைவகை எலுமிச்சம்பழம் தித்திப்பெலுமிச்சை |
எலுமிச்சை | வெளிர் மஞ்சள் நிறத்தில் புறத் தோலையும் புளிப்புச் சுவையையும் உடைய, உருண்டை வடிவப் பழம்/மேற்குறிப்பிட்ட பழத்தைத் தரும் மரம் |
எலுவ | தோழன் முன்னிலைப் பெயர் |
எலுவல் | தோழன் |
எலுவன் | தோழன் |
எலுவை | தோழி |
எலைக்கேரி | ஒவ்வாமை |
எவ் | எவை எவ்வந்தன |
எவ் | எவை |
எவட்சாரம் | வெடியுப்பு |
எவண் | எவ்விடம் |
எவண் | எவ்விடம் எவ்வண்ணம், எப்படி |
எவர் | படர்க்கை இடத்து ஒருவரை மரியாதையுடன் குறிப்பிடும் வினாச் சொல் |
எவர்சில்வர் | (பாத்திரம் முதலியவை செய்யப் பயன்படும்) இரும்பும் துத்தநாகமும் கலந்த (எளிதில் துருப்பிடிக்காத) வெள்ளி நிறக் கலப்பு உலோகம் |
எவரும் | யாரும், எல்லாரும் |
எவ்வது | எவ்விதம் |
எவ்வது | எவ்விதம், எவ்வாறு |
எவ்வம் | துன்பம் தீராநோய் குற்றம் இகழ்ச்சி, இழிவு இளிவரவு இழிவான சொல் மானம் கவடம் வெறுப்பு |
எவ்வரும் | யாரும். ஆங்கவை யெவ்வரும் பெறுகிலர் (கந்தபு. மயை யுப. 14) |
எவ்வளவு | எம்மட்டு |
எவ்வளவு | எத்துணை, எம்மட்டு |
எவ்வனம் | இளமை |
எவ்வாறு | எவ்வழி |
எவ்வாறு | எவ்வழி எப்படி |
எவ்விடம் | எந்தவிடம் |
எவ்வு | (உயரத்தில் இருக்கும் பொருளை எடுப்பதற்காக) எம்புதல் |
எவ்வுதல் | எழும்புதல் செலுத்துதல் தாவுதல் துன்பமிழைத்தல் |
எவ்வெலாம் | உள்ளவெல்லாம். எவ்வெலாவண்டத் துறைதரு மருத்தும் (கந்தபு. சூரனர. 11) |
எவ்வெலாம் | உள்ளனவெல்லாம் |
எவ்வெவர் | எவரெவர் |
எவ்வெவை | எவையெவை |
எவ்வேழு | ஏழேழு தனித்தனி ஏழு |
எவ்வை | எம் தங்கை கவலை |
எவள் | யாவள் |
எவள் | (பெரும்பாலும் மரியாதைக் குறைவாக) படர்க்கை இடத்துப் பெண்ணைக் குறிப்பிடும் வினாச் சொல் |
எவற்று | எது. (யாழ். அக.) |
எவற்றையும் | எல்லாவற்றையும் |
எவன் | யாவன் யாது, யாவை. வானுயர் தோற்ற மெவன்செய்யும் (குறள், 272). எவ்வண்ணம் அருளோனாவதை யெவனோ (ஞானா. 46, 6). ஏன். அதிசய விரக்கச் சொல். (சூடா.) |
எவன் | யாவன் எவ்வண்ணம் எப்படி யாது யாவை என்ன ஏன் வியப்பு இரக்கச் சொல் |
எவன் | (பெரும்பாலும் மரியாதைக் குறைவாக) படர்க்கை இடத்து ஆணைக் குறிப்பிடும் வினாச் சொல் |
எவை | யாவை |
எவை | அஃறிணைப் பொருள்களைப்பற்றிய வினாச் சொல் |
எவையும் | யாவையும் |
எழல் | எழும்பல் கிளர்ச்சி தோன்றுதல் புறப்படுதல் உதித்தல் மேற்பட்டு வருதல் துயரம் |
எழவாங்குதல் | தொலைவிற்போதல் |
எழாநிலை | யானை கட்டும் கூடம் |
எழால் | புல்லாறு என்னும் பறவை யாழ் யாழ் எழும் இன்னிசை மக்கள் மிடற்றிசை |
எழில் | அழகு |
எழில் | அழகு இளமை வண்ணம் தோற்றப்பொலிவு உயர்ச்சி பருமை குறிப்பு சாதுரிய வார்த்தை வலி |
எழில்காட்டுதல் | அழகு காட்டுதல், நொடித்துக் காட்டுதல் |
எழில்சொல்லுதல் | குறிப்பிற் சொல்லுதல் |
எழில்நலம் | வடிவழகு |
எழில்பிடித்தல் | மணம் பிடித்தல் |
எழிலி | மேகம் |
எழிலிய | அழகுவாய்ந்த. எழிலிய செம்பொறியாகத்து (புறநா. 68 5) |
எழிலிய | அழகுபொருந்திய |
எழிற்கை | அழகுபெறக் காட்டுங்கை |
எழினி | கடையெழு வள்ளல்களில் ஒருவன் |
எழினி | இடுதிரை, திரைச்சீலை உறை கடையேழு வள்ளல்களுள் ஒருவன் |
எழு | தூண் படைக்கலவகை கதவை உள்வாயிற்படியில் தடுக்கும் மரம் |
எழு1 | (படுத்த நிலையிலிருந்து அல்லது இருந்த நிலையிலிருந்து) நிமிர்ந்த நிலைக்கு, நிற்கும் நிலைக்கு அல்லது மேல்நோக்கி உயரும் நிலைக்கு வருதல் |
எழு2 | முதன்மை வினை தெரிவிக்கும் உணர்ச்சி நிலை மிகுந்த வேகத்துடன் வெளிப்படுவது என்பதைக் குறிப்பிடப் பயன்படும் ஒரு துணை வினை |
எழுகடல் | உப்பு, நீர், பால், தயிர், நெய், கருப்பஞ்சாறு, தேன் இவற்றை உடைய ஏழுவகைக் கடல்கள் |
எழுகளம் | போர்க்களம் |
எழுகூற்றிருக்கை | சித்திரகவி வகையுள் ஒன்று, ஒன்று முதல் ஏழு வரையும் எண்கள் முறையே ஒவ்வொன்றாக ஏறியும் இறங்கியும் வருமாறு கூறப்படும் மிறைக்கவிவகை |
எழுச்சி | ஊக்கம், முயற்சி இறுமாப்பு எழுகை, எழும்புகை பள்ளியெழுச்சிப் பாட்டு காதிலெழும்பும் புண் கண்ணோயுள் ஒன்று புறப்பாடு உற்பத்தி ஆதி |
எழுச்சி | (குன்றிய நிலையிலிருந்து அல்லது வீழ்ச்சிக்குப் பின்) புதிய வேகத்துடன் கூடிய வளர்ச்சி |
எழுச்சிக்கண்ணோவு | கண் கூச்சமுண்டாக்கும் நோய் |
எழுச்சிக்கொட்டுதல் | புறப்பாட்டுக்கு உரிய வாத்தியம் முழக்குதல் |
எழுச்சிக்கொடி | கண்ணினிற் படரும்ஒருநோய் |
எழுச்சிக்கொடி | கண்ணோய்வகை, கண்ணிற்படருமொரு நோய் |
எழுச்சிபாடுவான் | அரசர் முதலியோருக்கு பள்ளியெழுச்சி பாடுவோன் |
எழுச்சிமுரசம் | பள்ளியெழுச்சி முரசம் புறப்பாட்டு முரசம் |
எழுச்சியிலை | கண்ணோயக்குரிய மருந்திலை |
எழுஞாயிறு | கதிரவன் தோற்றம் உதயசூரியன் ஒருவகைத் தலைநோய் |
எழுதகம் | சிற்ப வேலையில் ஒன்று சித்திரவேலை தூணின் அடிக்கல் |
எழுத்தச்சு | அச்சிட உதவும் எழுத்தமைந்த உரு |
எழுத்தடைத்தல் | எழுத்துகளை அறைவகுத்து அடைத்தல் மந்திரங்களின் எழுத்துகளை அவ்வவற்றிற்குரிய சக்கரங்களின் அறைக்குள் பொருத்தி எழுதுதல் |
எழுத்ததிகாரம் | எழுத்திலக்கணம் கூறும் பகுதி |
எழுத்தந்தாதி | ஒரு செய்யுளின் ஈற்றெழுத்து அடுத்த செய்யுளின் முதலெழுத்தாகவோ ஓரடியின் ஈற்றெழுத்து அடுத்த அடியின் முதல் எழுத்தாகவோ வரத் தொடுப்பது |
எழுத்தர் | அலுவலகத்தில் எழுதுதல், பதிவுசெய்தல் போன்ற பணிகள் செய்யும் இடைநிலை ஊழியர் |
எழுத்தலங்காரம் | எழுத்தணி எழுத்தைக் கூட்டல் குறைத்தல் மாற்றங்களால் தோன்றும் அழகு |
எழுத்தலிசை | எழுத்தோசையாகாத முற்கு, வீளை, செருமுதல் முதலியவை |
எழுத்தறப்படித்தல் | எழுத்தோசை தெளிவாகப் படித்தல், எழுத்துகள் நன்றாகப் புலப்படும்படி படித்தல் |
எழுத்தறிவு | கல்வியறிவு |
எழுத்தாணி | ஓலையில் எழுதுதற்குரிய கருவி, ஓலையில் எழுதும் இரும்பாணி ஒருவகைப் பூண்டு |
எழுத்தாணி | (பனை ஓலையில்) எழுதுவதற்குப் பயன்படுத்தும், கூர்மையான நுனிப்பகுதி உடைய, ஆணி போன்ற சாதனம் |
எழுத்தாணிக்கள்ளன் | கள்ளக் கணக்கு எழுதுவோன் |
எழுத்தாணிக்குருவி | மரங்கொத்தி |
எழுத்தாணிக்குருவி | மரங்கொத்திக் குருவி |
எழுத்தாணிப்பூச்சி | பூச்சிவகையுள் ஒன்று |
எழுத்தாணிப்பூடு | கூத்தன் குதம்பைஎனும் பூடு |
எழுத்தாவெழுத்து | அச்செழுத்து |
எழுத்தாளர் | (பெரும்பாலும்) கதை, கட்டுரை எழுதுபவர் |
எழுத்தாளன் | எழுதுவோன் புலவன் |
எழுத்தாற்றல் | லிகிதம் |
எழுத்தானந்தம் | பாடப்படுவோன் பெயரைச் சார்த்தி எழுத்தளபெழப் பாடுவதாகிய செய்யுட் குற்றம் |
எழுத்தியல் | எழுத்திலக்கணம் கூறும் நூற்பிரிவு |
எழுத்திலக்கணம் | அக்கரவிலக்கணம் |
எழுத்திலாஓசை | எழுத்தலிசை, தனக்கு அறிகுறியாக எழுத்துகள் அமையப் பெறாத ஒலி |
எழுத்தின்கிழத்தி | கலைமகள் |
எழுத்து | அக்கரம் கல்வி எழுதப்பட்ட தாள், கடிதம் கையெழுத்து ஆதாரச் சீட்டு கைரேகை உடன்படிக்கைச் சீட்டு இலக்கணம் அட்டவணை சித்திரம் |
எழுத்து | (மொழியில் உள்ள ஒலிகளுக்குத் தரப்பட்டுள்ள) வரி வடிவம் |
எழுத்து வருத்தனம் | ஓரெழுத் தொருமொழியாய்ப் பின் அதனோடு எழுத்துகள் ஒவ்வொன்றாய்ச் சேர வேறு வேறு பொருள் தந்து நிற்கை |
எழுத்து வாங்குதல் | அடிமையாவதற்கு அறிகுறியாக ஆண்டான் பெயரை மார்பில் எழுதிக்கொள்ளுதல் கையெழுத்து வாங்குதல் |
எழுத்துக்கிறுக்கு | உடன்படிக்கையெழுதுகை |
எழுத்துக்கிறுக்கு | உடன்படிக்கை எழுதுகை உடன்படிக்கைப் பத்திரம் |
எழுத்துக்குற்றம் | எழுத்திலக்கண வழு |
எழுத்துக்கூட்டு | (மொழியைக் கற்கும் ஒருவர் எழுதும்போது அல்லது படிக்கும்போது) சொல்லின் ஒவ்வொரு எழுத்தையும் உச்சரித்தல் |
எழுத்துக்கூட்டுதல் | எழுத்துகளை தனித்தனியே ஒலித்துப் படித்தல் |
எழுத்துகாரியஸ்தன் | எழுத்துக்காரன் |
எழுத்துச்சந்தி | எழுத்துகளின் புணர்ச்சி |
எழுத்துச்சந்தி | எழுத்துப் புணர்ச்சி |
எழுத்துச்சாரியை | ஓரெழுத்தான் வருஞ்சாரியை |
எழுத்துச்சாரியை | எழுத்துகளைச் சொல்லுகின்ற போது சேர்க்கப்படுகிற சாரியைச் சொற்கள் கரம் காரம், கான் போன்றவை |
எழுத்துச்சிற்றாடை | சித்திரவேலைப்பாடு அமைந்த சிற்றாடைவகை |
எழுத்துச்சீலை | சித்திரம் தீட்டிய சீலை |
எழுத்துச்சுதகம் | அக்கரச்சுதகம் |
எழுத்துச்சுருக்கம் | சொல்லின் எழுத்துச் சுருங்குவதற்காக இடையிற் சிறு கோடிட்டு முதல் இறுதி எழுத்துகளை மட்டும் எழுதுவது, முழுப்பெயர்களைச் சுட்டும் சுருக்க முதற்குறிப்புகள், அக்கரச்சுதகம் |
எழுத்துநடை | எழுத்துவாசனை |
எழுத்துநடை | எளிய இனிய நடை |
எழுத்துப்பட்சி | உயிரெழுத்துக்களுக்குரியவாகச் சோதிடத்திற் கூறப்படும் பறவைகள். (சோதிடகிரக. 253.) |
எழுத்துப்படிதல் | கையெழுத்து ஒருநிலைப் படுதல் |
எழுத்துப்பானை | ஓவியம் தீட்டப்பெற்ற பானை |
எழுத்துப்பிசகு | எழுத்திலக்கண வழு, எழுத்துத் தவறு |
எழுத்துப்பிழை | எழுத்திலக்கண வழு, எழுத்துத் தவறு |
எழுத்துப்புடவை | சித்திரவஸ்திரம் |
எழுத்துப்புடைவை | சித்திரச்சேலை |
எழுத்துப்பொருத்தம் | ஒரு காப்பியத்தின் தொடக்கச் செய்யுளின் முதல் மொழி ஒற்றெழுத்துட்பட மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது என்னும் எழுத்துகள் கொண்ட ஏதேனும் ஒன்றைப் பெற்றுவரும் செய்யுள் முதல் மொழிப் பொருத்தம் பிறந்த நட்சத்திரங்களுக்குரிய எழுத்துகளில் ஒன்றோடு தொடங்கப் பெயரிடுதல் |
எழுத்துமடக்கு | சொல்லணி மடக்கு வகையுள் ஒன்று ஓரெழுத்தையே பின்னும் மடக்கிக் கூறுதல் |
எழுத்துமறைவேளை | மாலைப்பொழுது |
எழுத்துவாசனை | எழுத்துநடை |
எழுத்துவாசனை | எழுத்துநடை எழுதவும் படிக்கவும் அறிதல் |
எழுத்துவெட்டுதல் | எழுத்துப்பொறித்தல் கல் உலோகம் பாண்டம் முதலியவற்றில் எழுத்துச் செதுக்குகை |
எழுத்துவேலை | இராயசம் சீலைச் சித்திரத்தொழில் |
எழுத்தூசி | எழுத்தாணி |
எழுத்தெண்ணிப் படி | நுணுக்கமாகப் படித்தல் |
எழுத்தெண்ணிப்படித்தல் | ஒன்றும் விடாமல் படித்தல் நன்றாகப் படித்தல் எழுத்துக்கூட்டிப் படித்தல் |
எழுதம் | சிற்ப வேலையில் ஒன்று சித்திரவேலை தூணின் அடிக்கல் |
எழுதல் | எழுந்திருத்தல் மேல் எழும்புதல் தோன்றுதல் புறப்படுதல் தொழிலுறுதல் பெயர்தல் மனங் கிளர்தல் மிகுதல் வளர்தல் உயிர்பெற்றெழுதல் துயிலெழுதல் பரவுதல் தொடங்குதல் |
எழுதாக்கிளவி | மறை,வேதம் |
எழுதாக்கேள்வி | மறை,வேதம் |
எழுதாவெழுத்து | அச்செழுத்து |
எழுதிக்கொள்ளுதல் | பதவிசெய்தல், அடிமையாக்குதல் விண்ணப்பம் செய்தல் |
எழுதிவை | (உயிலில் சொத்துகளை) பங்கிட்டு ஒதுக்குதல் |
எழுதிவைத்தல் | சாசனம் செய்துவைத்தல் |
எழுதீவு | நாவல், இறலி, இலவம், கிரவுஞ்சம், குசை, தேக்கம், புட்கரம் என்னும் ஏழு தீவுகள் |
எழுதுகொடி | முலைமேல் எழுதும் தொய்யில் |
எழுதுகோல் | தூரியக்கோல் ஓவியம் வரையும் கோல் எழுத்து வரையும் கோல் |
எழுதுகோல் | எழுதுவதற்குப் பயன்படுத்தும் கருவி |
எழுதுதல் | எழுதல் |
எழுதுதல் | எழுத்து வரைதல் ஓவியம் வரைதல் இயற்றுதல் விதியேற்படுத்துதல் பாவை முதலியன ஆக்குதல் அழுந்தப் பதித்தல் பூசுதல் |
எழுதுபடம் | கிழி |
எழுதுபடம் | துணிமேல் எழுதிய படம் |
எழுதுபொருள் | எழுதுவதற்குத் தேவைப்படும் (தாள், மை, கடித உறை முதலிய) பொருள் |
எழுதுவரிக்கோல் | பத்திக்கற்று |
எழுதுவரிக்கோலம் | மகளிர் ஆகத்து எழுதுங்கோலம் |
எழுதுவரிகோலம் | மகளிர் ஆகத்து எழுதுங்கோலம் |
எழுதுவினைஞர் | எழுத்தர் |
எழுநகரம் | புவி தன்னின் மேலவாய்வீடருள்கின்ற வெழுநகரத்துள் (கந்தபு. திருநகரப். 75) |
எழுநகரம் | சிறப்புடைய ஏழு புண்ணிய நகரங்கள் அயோத்தி, மதுரை, மாயை, காசி, காஞ்சி, அவந்தி, துவாரகை |
எழுந்தபடி | கண்டபடி |
எழுந்தபடி | நிலைத்தபடி, நேரிட்டபடி, கண்டபடி |
எழுந்தமானம் | யோசனை பண்ணாமை |
எழுந்தருள்படி | தெய்வத் திருமேனிப் புறப்பாடு பெரியோர் வருகை |
எழுந்தருளியிருத்தல் | தெய்வம் குடிகொண்டருளுதல் பெரியோர் வீற்றிருத்தல் |
எழுந்தருளிவிக்கிரகம் | வெளிகொண்டுவருகிற விக்கிரகம் |
எழுந்தருளுதல் | வருதல் புறப்படுதல் தோன்றல் சிலை முதலியவற்றினிடமாகத் தெய்வம் வெளிப்படுதல் |
எழுந்தருளுந்திருமேனி | உற்சவமூர்த்தி, திருவிழாவில் எழுந்தருளப் பண்ணும் தெய்வத் திருமேனி |
எழுந்தருளுநாயகர் | உச்சவ விக்கிரகம் உற்சவமூர்த்தி |
எழுந்திரு | நிற்கும் நிலைக்கு வருதல் |
எழுந்திருத்தல் | எழுந்தருளுதல் |
எழுந்திருத்தல் | எழுதல் இருக்கையை விட்டு எழுதல் எழுந்து பின் இருத்தல் |
எழுந்திருப்பு | எழும்புதல் எழுந்து நிற்கை |
எழுந்தேற்றம் | இறுமாப்பு துணிவு எழுந்தமானம் கவனிப்பின்மை பெருமை விழாவில் சாமி புறப்பாடு |
எழுநயம் | சமணர் கூறும் எழுவகை வாதமுறை, இதனை வடமொழியில் சப்தபங்கி நியாயம் என்பர் |
எழுநரகம் | எழுவகையான நரகங்கள் அள்ளல், இரௌரவம், கும்பிபாகம், கூடசாலம், செந்துத் தானம், பூதி, மாபூதி, (சமணர் கருத்துப்படி) பெருங்களிற்று வட்டம், பெருமணல் வட்டம், எரிபரல் வட்டம் அரிபடை வட்டம் புகை வட்டம் பெருங்கீழ் வட்டம், இருள் வட்டம் என்பன |
எழுநா | அக்கினி கொடுவேலி |
எழுநா | ஏழு நாக்கு ஏழு நாவையுடையதாகிய அக்கினி, நெருப்பு கொடிவேலி |
எழுநாமித்திரன் | வாயு |
எழுநாயிறு | கதிரவன் தோற்றம் உதயசூரியன் ஒருவகைத் தலைநோய் |
எழுநிலைக்கோபுரம் | ஏழடுக்குக் கட்டடமாய் ஒன்றன்மேல் ஒன்றாய் அமைக்கப்பட்ட கோபுரம் |
எழுநிலைமாடம் | ஏழடுக்கு மாளிகை |
எழுபது | பத்தின் ஏழு மடங்கைக் குறிக்கும் எண் |
எழுப்பம் | எழும்புகை, எழுகை, உயர்வு கிளர்ச்சி |
எழுப்பில் | எற்றல் |
எழுப்பு | துயிலெழுப்பு |
எழுப்பு | (வி) துயிலெழுப்பு தூக்கு உயிரோடெழுப்பு சண்டைமூட்டு கிளப்பிவிடு வீடெழுப்பு இசையெழுப்பு |
எழுப்பு | (கோட்டை, நினைவுச் சின்னம் முதலியன) உருவாக்குதல் |
எழுப்புதல் | எழும்பச்செய்தல் துயில்எழுப்புதல் உயிர்பெற்றெழச் செய்தல் ஒலியெழுப்புதல் ஊக்கம் உண்டாக்குதல் கலகம் முதலியென மூட்டுதல் |
எழுபவம் | உயர்பிறப்பு எழுவகைப் பிறவி |
எழுபிறப்பு | எழுவகைப் பிறப்பு தேவர், மனிதர், விலங்கு, பறப்பன, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் மேல்வரும் பிறப்பு |
எழுபோது | விடியற்காலம் உதயகாலம் |
எழுமதம் | நூலாசிரியருக்குரிய எழுவகைக் கொள்கைகள் அவை, உடன்படல், மறுத்தல், பிறர்தம் மதம் மேற்கொண்டு களைதல், தான் ஒன்றனை நாட்டி அதனை நிலைநிறுத்தல், இருவர் மாறுகோள் ஒருதலை துணிவு, பிறர்நூற் குற்றங் காட்டல், பிறர் மதத்தைக் கொள்ளல் என்பன, யானைமதம், கன்னம் இரண்டு, கண் இரண்டு, கைத்துளை இரண்டு, குறி ஒன்று ஆகிய ஏழிடத்திலிருந்து தோன்றும் மதநீர் |
எழும்பல் | நில விவரம்பற்றிய கைக்குறிப்புப் புத்தகம் |
எழும்பு | எழுதல் |
எழும்புதல் | உயர்தல் உறக்கம்விட்டெழுதல் |
எழுமலை | கதிரவன் தோன்றும் மலை, உதயகிரி ஏழு பெருமலைகள் கயிலை, இமயம், மந்தரம், விந்தம், நிடதம், ஏமகூடம், நீலகிரி |
எழுமான் | எழுமான் பூண்டு |
எழுமான்புலி | எழுமான் பூண்டு |
எழுமீன் | ஏழு நட்சத்திரங்கள், சப்தரிஷி மண்டலம் |
எழுமுகனை | தொடக்கம் |
எழுமுடி | வெல்லப்பட்ட ஏழரசர் முடியாற் செய்த சேரன் மாலை |
எழுமுரசு | எழுச்சி முரசு, அரசன் பயணத்தை அறிவிக்கும் முரசு |
எழுமுனிவர் | இருடிகள் எழுவர் அகத்தியன், புலத்தியன், அங்கிரசு, கௌதமன், வசிட்டன், காசிபன், மார்க்கண்டன், எனப் பிங்கல நிகண்டு கூறும் வடமொழி நூல்களுள் அத்திரி, பிருகு, குச்சன், வசிட்டன், கௌதமன், காசிபன், அங்கிரசு என்றும் மரீசி, அத்திரி, அங்கிரசு, புலத்தியன், புலகன், சிரது, வசிட்டன் என்றும் வெவ்வேறாக உரைப்பர் |
எழுமை | உயர்ச்சி ஏழ்வகை ஏழுவகைப் பிறப்பு ஏழுமுறை பிறக்கும் பிறப்பு |
எழுவகை அளவை | நிறுத்தளத்தல்,பெய்தளத்தல், சார்த்தியளத்தல், நீட்டியளத்தல், தெறித்தளத்தல், தேங்க முகந்தளத்தல், எண்ணியளத்தல் என்பன |
எழுவகை நதி | ஏழு புண்ணிய ஆறுகள் கங்கை, குமரி, யமுனை, நருமதை, காவிரி, சரசுவதி, கோதாவரி |
எழுவகை மேகம் | சம்வர்த்தம், ஆவர்த்தம், துரோணம், புட்கலாவர்த்தம், காளமுகி, சங்காரித்தம், நீலவருணம் என்பன. இவை பொழிவன முறையே மணி, நீர், பொன், பூ, மண், கல், தீ |
எழுவகைத் தாது | உடம்பில் உள்ள எழுவகைப் பொருள்கள் இரதம், குருதி, எலும்பு, தோல், இறைச்சி, மூளை, சுக்கிலம் |
எழுவகைப் பிறப்பு | எழுவகைப் பிறப்பு தேவர், மனிதர், விலங்கு, பறப்பன, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் மேல்வரும் பிறப்பு |
எழுவகைப் பெண்பருவம் | பெண்களின் வளர்சசியில் உள்ள ஏழு நிலைகள் பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண். இவற்றின் அகவை முறையை 7,11,13,19,25,31,40 ஆகும் |
எழுவரைக் கூடி | ஒருவகைப் பாடாணம், சவ்வீரம் என்னும் நஞ்சு |
எழுவரைக்கூடி | சவ்விரபாஷாணம் |
எழுவாய் | தொடக்கம், உற்பத்தி முதல் முதல் வேற்றுமை கருத்தா |
எழுவாய் வேற்றுமை | முதலாம் வேற்றுமை, பெயர் வேற்றுமை, பெயர் தோன்றிய துணையால் உருபும் விளியும் ஏலாது பிறிதொன்றனொடு தொகாது நிற்கும் நிலைமை |
எழுவாயெழுஞ்சனி | மகநாள் |
எழுவான் | கிழக்கு |
எழுவான் | கிழக்குத் திசை |
எழுவுதல் | எழுப்புதல், எழச்செய்தல் ஓசையுண்டாக்குதல் |
எள் | ஒருவகைச் செடி, ஒரு தவசம் ஒரு சிறிய அளவு நிந்தை |
எள் | (வி) எள்என் ஏவல், நிந்தி, இகழ் |
எள் | நல்லெண்ணெய் எடுக்கப் பயன்படும் கருப்பு நிறத்தில் உள்ள மிகச் சிறிய விதை/அந்த விதையைத் தரும் பயிர் |
எள்குதல் | இகழ்தல், அஞ்சுதல் ஏய்த்தல் கூசுதல் வருந்துதல் |
எள்ள | ஓர் உவமவுருபு. எள்ளவிழைய... பயனிலையுவமம் (தொல். பொ. 289) |
எள்ளல் | இகழ்தல் நிந்தித்தல் இழிவாகப் பேசல் தள்ளல் சிரித்தல் |
எள்ளல் | ஒருவருடைய முட்டாள்தனத்தை அல்லது ஓர் அமைப்பினுடைய முரண்பாடுகளை (சிரிக்கும்படியாக) சுட்டிக்காட்டும் பரிகாசம் |
எள்ளளவும் | சிறிதளவும் |
எள்ளற்பாடு | இகழ்ச்சி |
எள்ளற்பாடு | இகழ்ச்சி, நிந்தை, நகைப்பு |
எள்ளி நகையாடு | (அவமானம் அடையும்படி) கேலிசெய்தல் |
எள்ளிடை | எள்ளளவு |
எள்ளு | எள் |
எள்ளுக்கடை | எள்ளுத்தாள் |
எள்ளுச்செவி | ஒருபூண்டு |
எள்ளுண்டை | ஒரு சிற்றுண்டி |
எள்ளுண்டை | எள்ளுருண்டை, எள்ளும் வெல்லமும் கலந்து செய்யப்படும் சிற்றுண்டி |
எள்ளுதல் | இகழ்தல், இழிவாகப் பேசுதல் தள்ளுதல் ஒப்பாதல் |
எள்ளுதான் | கொடுத்த பணம் திரும்பி வராது |
எள்ளுநர் | இகழ்பவர் |
எள்ளுப்பிண்ணாக்கு | எண்ணெய் ஆட்டி எடுத்த எள்ளின் சக்கை |
எள்ளுருண்டை | ஒரு சிற்றுண்டி |
எள்ளுருண்டை | சர்க்கரைப் பாகில் எள்ளைப் போட்டு உருண்டையாகப் பிடித்த தின்பண்டம் |
எள்ளுரை | இகழ்ச்சியுரை |
எள்ளோரை | எள்ளுச்சாதம் |
எள்ளோரை | எள்ளுச்சோறு, எள்ளோதனம் |
எளிஞர் | எளியவர் |
எளிஞர் | எளியவர் செல்வம் முதலியன குறைந்தவர் வறிஞர் நல்லூழில்லாதவர் |
எளித்தல் | தாழ்த்திக் கூறுதல் |
எளிதரவு | எளிமைத்தனம் |
எளிதரவு | தாழ்மை வறுமை |
எளிதல் | எளிமையடைதல் |
எளிதாதல் | இலகுவாதல் சுலபமாகத் தருதல் |
எளிது | சுலபம் கனமற்றது |
எளிது | எளியது இலேசு சுலபம் அருமையற்றது இலகு தாழ்ந்தது |
எளிது | கஷ்டம் இல்லாதது |
எளிமை | இலகு தாழ்வு தளர்வு அறியாமை வறுமை தனிமை வலியின்மை அடிமை |
எளிமை | சிக்கல் அற்ற தன்மை |
எளிய | சிக்கல் அற்ற |
எளியவன் | வறியவன் இலகுவாய் அடையப்படுபவன் வலியில்லாதவன் அறிவில்லாதவன் குணத்தில் தாழ்ந்தவன் |
எளியன் | வறியவன் இலகுவாய் அடையப்படுபவன் வலியில்லாதவன் அறிவில்லாதவன் குணத்தில் தாழ்ந்தவன் |
எளியார் | பொருள் வசதி இல்லாதவர் |
எளிவரல் | எளிதாகவரல் |
எளிவருதல் | இலகுவாதல், சுலபமாதல் எளிதிற்கிட்டுதல் இழிவடைதல் |
எளிவிலையன் | விலை குறைந்த பண்டம் |
எளிவு | எளிவரவு, சுலபம் |
எற்செய்வான் | சூரியன் |
எற்சோறு | பழைய காலத்திலிருந்த ஒரு வரி |
எறட்டுதல் | வீசி இறைத்தல் |
எற்பாடு | பிற்பகல், மாலைப் பொழுதுக்குமுன் பத்துநாழிகை நேரம் மாலை காலை |
எற்பு | என்பு, எலும்பு |
எற்புச்சட்டகம் | உடல் |
எற்றம் | மனத்துணிவு |
எற்றல்மரம் | நீர் இறைமரம் |
எற்றற்கொட்டு | இறைமரக்கொட்டு |
எற்றற்பட்டை | சீலாப்பட்டை |
எற்றற்பட்டை | இறைகூடை |
எற்றன்மரம் | நீர் இறைக்கும் கருவிவகை தோணிமரம் |
எற்றித்தல் | இரங்கல் |
எற்றிழிவு | உயர்வுதாழ்வு பெருமை சிறுமை மேடுபள்ளம் |
எற்று | எத்தனமைத்து. எற்றென்னை யுற்ற துயர் (குறள் 1256). அதிசய விரக்கக்குறிப்பு |
எற்று | எற்றுகை எத்தன்மையது வியப்பிரக்கக் குறிப்புச்சொல் |
எற்று | (காலால்) உதைத்தல் |
எற்றுண்ணுதல் | எறியப்படுதல் |
எற்றுதல் | அடித்தல், புடைத்தல் உதைத்தல் மோதுதல் எறிதல் குத்துதல் வெட்டுதல் கொல்லுதல் உடைத்தல் நீக்குதல் நூல்தெறித்தல் இறங்குதல் எழுப்புதல் நீங்குதல் |
எற்றுநூல் | மரக்கோட்டம் பார்க்கும் நூல் மரம் அறுக்க அடையாளம் காட்டும் நூல் |
எற்றுள்ளும் | எவற்றுள்ளும் |
எற்றே | See எற்று. (பிங்.) |
எற்றே | ஒரு வியப்புமொழி ஓர் இரக்கச்சொல் எத்தன்மைத்து |
எற்றை | என்று |
எற்றைக்கும் | என்றென்றைக்கும், எந்நாளும் |
எற்றோ | See எற்று. எற்றோமற் றெற்றோமற் றெற்று (தனிப்பா. i 109 49) |
எற்றோ | எற்று, எத்தன்மைத்து வியப்பிரக்கச்சொல் |
எற்றோகரம் | சூரியோதயம் |
எறி | வீச்சு. ஓர் எறியில் விழச்செய்தான் உதை அடிக்கை. சூறை மாருதத் தெறியது வளியின் (திருவாச. 3, 11) குறிப்பாகச்சொல்லுகை. ஓர் எறி எறிந்து அதற்கு வைக்கவேண்டும் |
எறி | குத்து தள்ளு அறை அடி வெட்டு வீச்சு உதை அடிக்கை குறிப்பாகச் சொல்லுகை |
எறி1 | (தள்ளி விழும்படி) வேகத்துடன் வீசுதல் |
எறி2 | முதன்மை வினையின் செயல் ஒரு வேகத்துடனும் தீவிரத்துடனும் நிகழ்த்தப்படுவது என்பதைக் குறிப்பிடும் துணை வினை |
எறிகணை | வளிக்குள் ஏவப்படும் பொருள் (படையியல்) ஏவப்பட்டப் பின்னர் பயணப் பாதையை மாற்ற முடியாத ஏவுகணை |
எறிகால் | பெருங்காற்று |
எறிகாலி | உதைகாற் பசு, காலால் உதைக்கும் பசு |
எறிசக்கரம் | எறியுஞ்சக்கரம் |
எறித்தல் | ஒளிவீசுதல் வெயிற்காலம் தைத்தல் உறைத்தல் பரத்தல் |
எறிதல் | உதைத்தல் வீசுதல் வெட்டுதல் முறித்தல் அறுத்தல் பறித்தல் அழித்தல் ஓட்டுதல் குத்தல் அடித்தல் |
எறிநாடா | தறியில் ஊடையைச் செலுத்தக் கையால் இயக்கும் சாதாரண நாடாவைவிட அகலத்திலும் நீளத்திலும் சிறிய நாடா |
எறிபடுதல் | ஒதுக்கப்படுதல் உதைபடுதல் |
எறிபடை | கைவிடுபடை |
எறிபடை | கைவிடுபடை வேல் ஈட்டி |
எறிபந்து | நடுவில் கட்டியிருக்கும் வலையில் படாமல் ஒரு பெரிய பந்தை ஓர் அணியினர் எறிய, எதிர் அணியினர் அதைப் பிடித்துத் திருப்பி எறிந்து விளையாடும் (மகளிர்) விளையாட்டு |
எறிப்பு | ஒளிசெய்தல், வெயிலெறிக்கை கடுவெயில் |
எறிபாவாடை | தெய்வங்கள், பெரியோர்களுக்கு முன் விரிக்கும் பாவாடை விருது |
எறிபுலம் | வெட்டிச் சுட்டகொல்லை நிலம் |
எறிபுனம் | வெட்டிச் சுட்டகொல்லை நிலம் |
எறிமணி | சேமக்கலம் |
எறிமணி | சேமக்கலம், சேகண்டி |
எறிமுத்து | சிறிய அம்மை |
எறியல் | கோடரி |
எறியாயுதம் | கைவிடுபடை வேல் ஈட்டி |
எறியால் | ஒருமீன் |
எறியுப்பு | கல்லுப்பு |
எறிவ | எறியப்படுவன, எறியப்படும் ஆயுதங்கள் |
எறிவல்லயம் | கை விட்டெறியும் ஓர் ஆயுதம் |
எறிவளையம் | சக்கராயுதம் |
எறிவளையம் | உருளை சக்கரப்படை |
எறிவு | எறிதல் |
எறும்பி | யானை |
எறும்பி | யானை எறும்பு |
எறும்பு | பிபீலிகை இறும்பி |
எறும்பு | மூன்று பகுதியாக உள்ள உடலைக் கொண்ட, ஒன்றுகூடி அமைப்போடு வாழும் சிறு உயிரினம் |
எறும்புதின்னி | இரவு நேரத்தில் எறும்பு, கரையான் முதலியவற்றைத் தன் நீண்ட நாக்கால் இழுத்து உண்பதும், தாக்கப்பட்டால் பந்து போல் சுருண்டுகொள்வதுமான ஒரு பிராணி |
எறுழ் | வலிமை தண்டாயுதம் தடி தூண் செந்நிறப் பூவுடைய குறிஞ்சி நிலத்து மரவகை |
எறுழம் | எறுழ்மரம் |
எறுழ்வலி | மிகுந்த வலிமை மிக்க வலிமையுடையோன் |
எறுழி | பன்றி காட்டுப் பன்றி |
எறே | எறே. (அகநா. 41 உரை.) |
என | என்று (தொல். சொல். 260.) ஒருவமவுருபு புலியெனப் பாய்ந்தான் |
என | என்னுடைய என்ன என்று ஓர் உவமவுருபு |
என் | இது ஒருவருடைய கூற்று, கருத்துரை என்பதைத் தெரிவிக்கும் பொருட்டு அவற்றின் பின் வரும்போது என்ன. நீ வந்ததென் ஓரிகழ்ச்சிக்குறிப்பு. (பிங்.) எது அல்லது எதையெனப் பொருள்படும் இடைச்சொல். என்னுடைய ரேனுமிலர் (குறள், 430) |
என்கை | என்று சொல்லுகை |
என்ப | அசைச்சொல். (தொல். சொல். 298 உரை.) |
என்ப | எனறு சொல்லப்படுவன என்று சொல்லுவர் ஓர் அசைச்சொல் |
என்பவன் | என்று சொல்பவன் என்று சொல்லப்படுபவன் |
என்பாபரணன் | சிவன் |
என்பான் | என்று சொல்பவன் என்று சொல்லப்படுபவன் |
என்பித்தல் | என்று சொல்லுவித்தல் விளக்கமுறச் செய்தல் சான்றுகாட்டி நிறுவுதல் |
என்பிலது | எலும்பில்லாத உயிரி, புழு |
என்பிலி | புழு |
என்பு | எலும்பு எலும்புக்கூடு உடம்பு புல் |
என்புதின்றி | கழுதைக்குடத்தி |
என்புதின்றி | கழுதைக்குடத்திப் பூண்டு |
என்புருக்கி | எலும்புருக்கி ஒருபூடு |
என்புருக்கி | எலும்புருக்கிநோய் |
என்மர் | என்ப, என்று சொல்வர் |
என்மனார் | என்ப, என்று சொல்வர் |
எனவ | என்னுடையவை |
எனவெஞ்சணி | எனவென்னெச்சம் |
எனவே | ஆகவே |
என்ற | ஓர் உவமவாய் பாடு. வாயென்ற பவளம் (தொல். பொ. 286 உரை) |
என்றவன் | see கதிரவன் |
என்றவன் | என்று சொன்னவன் என்று சொல்லப்பட்டவன் சூரியன் |
என்றா | ஓரெண்ணிடைச்சொல். ஒப்பிற் புகழிற்பழியினென்றா (தொல். சொல். 73) |
என்றா | ஓர் எண்ணிடைச் சொல் |
என்றால் | என்று சொல்லின் (அப்படி) ஆனால் |
என்றால் | விதிநிலை வினையெச்சமாக வருவது |
என்றாலும் | என்று சொன்னாலும் ஆயினும். உடலு நடுங்காநின்றாரென்றாலும் (கம்பரா. தைல. 71) |
என்றாலும் | என்று சொன்னாலும், எனினும் ஆயினும், ஆனாலும் |
என்றிசின் | என்றேன் |
என்றிசினோர் | என்றுசொல்லுவார் |
என்றிய | எதற்காக எப்படி |
என்று | என்றுசொல்லி In special or elliptical constructions, in which it is used as a connective part (a) between verbs, as in நரை வரு மென்றெண்ணி (நாலடி, 11) (b) between a noun and a pronoun, as in பாரியென் றெருவனுளன் (c) between an int. and a verb, as in திடீரென்றுவந்தான்:நரை வரு மென்றெண்ணி (நாலடி, 11) பாரியென் றெருவனுளன் திடீரென்றுவந்தான் ஒல்லென் றொலித்தது பச்சென்று பசந்தது வினை பெயர் குறிப்பு இசை பண்பு எண் என்ற பொருள்பற்றி வரும் இடைச் சொல். (தொல். சொல். 261, உரை: நன். 424.) ஒரு சொல்லசை கலியாணத்துக்கென்று பணம் வைத்திருக்கிறேன் |
என்று | எந்த நாள், எப்போது, என்றைக்கு என்று சொல்லி ஓர் இடைச்சொல் சூரியன் |
என்று1 | எந்த நாள் |
என்று2 | எந்த நாளில் |
என்றும் | என்றைக்கும், எந்நாளும், எப்போதும் |
என்றுமபாவம் | என்றும் இன்மை, ஒருபோதும் இல்லாமையைத் தெரிவிக்கும் தன்மை |
என்றூழ் | சூரியன் வெயில் கோடைக்காலம் |
என்றூழி | என்றைக்கும், எப்போதும் |
என்றென்றைக்கும் | எக்காலத்தும் ஒரு நாளும் ஒருபொழுதும் |
என்றைக்கு | எந்நாள், எப்போதைக்கு |
என்றைக்கும் | எக்காலத்தும் ஒரு நாளும் ஒருபொழுதும் |
என்ன | யாது |
என்ன | யாது என்ன பயன் ஓர் உவமவுருபு |
என்னணம் | எவ்வண்ணம், எவ்வாறு, எவ்வகையாக, எப்படி |
என்னது | எது. நீ என்னது சொல்கிறாய் |
என்னது | என்ன (முதல் பொருளிலும் ஐந்தாவது பொருளிலும்) |
என்னதும் | சிறிதும் |
என்னம்பு | என்னது |
என்னம்புது | என்னது |
என்னர் | ௯யாவர் சிறிதும் |
என்னர் | யாவர் எத்தன்மையினர், எத்தகையினர் சிறிதும் |
என்னவன் | யாவன் எப்படிப்பட்டவன். நீத்தோ ரென்னவர் தங்கட் கேனும் (கந்தபு. கிரவுஞ். 4) |
என்னவன் | யாவன் எப்படிப்பட்டவன் என்னைச் சேர்ந்தவன், எனக்குரியவன் |
என்னவோ | ஒருவர் சொல்வதை முழுமையாக ஏற்காது ஐயம் காட்டுதல் |
என்னவோ | ஒரு நிகழ்ச்சி நடந்ததாக ஒத்துக்கொண்டாலும் அவ்வாறு நடந்ததற்கு ஏதோ ஒரு நியாயம் இருப்பதாக ஒருவர் உணர்வதை வெளிப்படுத்த உதவும் சொல் |
என்னன் | See என்னவன். என்ன னெவ்விடத்தன் (இரகு. யாக. 96) |
என்னாங்கு | என்னிடத்து |
என்னுக்கு | எதற்கு |
என்னுங்காட்டில் | என்பதைக்காட்டிலும். (ஈடு.) |
என்னுங்காட்டில் | என்பதைக் காட்டிலும் |
என்னும் | யாவும் |
என்னும் | யாவும், எல்லாம் என்று சொல்லப்படும் யாதும் சிறிதும் |
என்னென்ன | உமக்கு என்னென்ன வேணும் |
என்னே | என்ன ஓர் அதிசய விரக்கக் குறிப்பு. என்னேயெ னேகருணை விளையாட்டிருந்தவாறு (தாயு. எங்குநிறை. 2) அதிசயவிரக்கச்சொல் |
என்னே | ஒரு வியப்பிரக்கக் குறிப்பு |
என்னை | See என்ன |
என்னை | என் தந்தை என் தாய் என் தலைவன் என் இறைவன் யாது என்ன ஓர் இகழ்ச்சிக் குறிப்பு |
என்னோ | See என்னே |
என்னோட | என்னுடன் |
என்னோரும் | எத்தன்மையோரும் எல்லாரும், யாவரும் |
எனா | Connective of things enumerated, as in நிலனெனா நீரெனா ஓரெண்ணிடைச் சொல். (நன். 428.) |
எனா | என்று ஓர் எண்ணிடைச் சொல் |
எனாது | எனது |
எனின் | என்று சொல்லின் என்கையால். அவையவை முனிகுவமெனினே (பொருந. 107) |
எனின் | என்றால், என்று சொல்லின் என்கையால் |
எனினும் | என்று சொல்லினும் ஆனாலும். யாவரே யெனினும் (கந்தபு. அரசு. 5) |
எனினும் | என்று சொல்லினும் ஆனாலும் |
எனும் | சிறிதும் |
எனும் | என்கின்ற சிறிதும் |
எனை | எல்லாம். சுட்டுணர்வெனப்படுவ,தெனைப்பொருளுண்மைகாண்டல் (மணி. 27, 62) எவ்வளவு எனைப்பகை யுற்றாரும் (குறள், 207) |
எனை | என்ன எவ்வளவு எல்லாம் |
எனைத்து | எத்தன்மைத்து எத்தனை எவ்வளவு |
எனைத்துணை | எவ்வளவு எனை |
எனைத்தும் | சிறிதும் எவ்வளவும் எவ்வளவாயினும் எல்லாம் முழுதும் |
எனைப்பல | எத்தனையோ பல எனைப் பல தீர்த்தங்கட்கும் (திருவிளை. தீர்த்த. 11) |
எனைப்பல | எத்தனையோ பல |
எனையதும் | சிறிதும் |
எனையவர் | எத்தனை பேர் யாவர் |
எனையவன் | see எனைவன் |
எனையவன் | எத்தன்மையன் எவன் |
எனையன் | எத்தன்மையன் எவன் |
எனைவர் | யாவர் எனைவராயினும் (பெருங். வத்தவ. 3 22) |
எனைவன் | யாவன் |
எனைவீர் | எல்லாநீர் |
எனைவோரும் | யாவரும் |
எஜமான் | முதலாளி |
எஜமானி | எஜமான் என்பதன் பெண்பால் |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.
