We are happy to provide you with the best Online Tamil to Tamil Dictionary/Translator.
For typing word in Tamil you can use our tool typing tool
Tamil Word | Tamil Meaning | English Meaning |
அக்கக்காக | தனித்தனியாக | part by part |
அக்கடா-என்று | (கடும் வேலைக்குப் பின்) ஓய்வாக | (after hectic activity) leisurely |
அக்கப்போர் | தகராறு | squabble |
அக்கம்பக்கம்1 | சுற்றியிருக்கும் பகுதி | neighbourhood |
அக்கரை | வெளிநாட்டுக்கு உரிய அல்லது வெளிநாட்டைச் சேர்ந்த | foreign |
அக்கரைச் சீமை | அயல்நாடு | foreign country or land |
அக்கறை | (ஒரு துறையில் அல்லது ஒருவர் மேல்) ஈடுபாடு | interest (in a field or in a person) |
அக்கா | உடன்பிறந்தவருள் தன்னைவிட மூத்தவள் | elder sister |
அக்காக்குருவி | எளிதில் பார்க்க முடியாததாக, குரலை மட்டும் கேட்கக் கூடியதாக இருக்கும் குயிலினத்தைச் சேர்ந்த பழுப்பு நிறப் பறவை | hawk cuckoo |
அக்கார அடிசில் | நிறைய நெய் ஊற்றிச் செய்த சர்க்கரைப் பொங்கல் | boiled rice mixed with sugar and clarified butter |
அக்கி | அடையடையாக வேர்க்குரு போல் தோன்றிச் சிவந்து அரிப்பு ஏற்படுத்தும் தோல் நோய் | herpes |
அக்கிரமம் | கொடும் செயல் | unjust or unfair act |
அக்கினி | (பெரும்பாலும் சமயச் சடங்குகளில்) நெருப்பு | fire |
அக்கினி சாட்சியாக | (திருமணச் சடங்கில்) தீ வளர்த்து அதன் முன்னிலையில் | in the presence of sacred fire |
அக்கினி நட்சத்திரம் | கோடையில் (சித்திரை, வைகாசியில்) மிகுந்த வெப்பமான நாட்கள் | hottest days (in May) |
அக்கினி மூலை | தென்கிழக்குப் பக்கம் | south-east part |
அக்குவேறுஆணிவேறாக | கூறுகூறாக | in bits and pieces |
அக்குள் | தோள்மூட்டின் கீழ் உள்ள குழிவு | armpit |
அக்ரகாரம் | நீண்ட காலமாக பிராமணர் குடியிருந்துவரும் பகுதி | the area (in a village or town) where Brahmins traditionally live |
அகங்காரம் | இறுமாப்பு | haughtiness |
அகச்சான்று | ஒரு கருத்தை நிறுவ ஒரு நாட்டின் மொழி, இலக்கியம், வரலாறு முதலியவற்றிலேயே கிடைக்கும் ஆதாரம் | internal evidence |
அகட்டு | (கால்களை) பரப்புதல் | keep (the legs) apart (while standing) |
அகடவிகடம் | சிரிப்பு வருவிக்கும் கோமாளிச் செயல்கள் | antics |
அகண்ட | விசாலமான | wide |
அகத்தி | கீரையாகப் பயன்படுத்தும் இலைகளை உடையதும் கொடிக்காலில் நடப்படுவதுமான ஒரு வகை மரம் | west Indian pea-tree |
அகத்திக்கீரை | (உணவாகப் பயன்படுத்தும்) அகத்தி மரத்தின் கரும் பச்சை நிற இலை | leaves of the tree அகத்தி (used as greens) |
அகதி | சமயம், அரசியல் போன்ற நிலைமைகளால் தம் நாட்டிலிருந்து வெளியேறிப் பிற நாட்டில் அடைக்கலம் புகுந்தவர் | refugee |
அகந்தை | இறுமாப்பு | arrogance |
அகப்படு | பிடிபடுதல் | get caught |
அகப்பை | நீண்ட கைப்பிடியுள்ள மரக் கரண்டி | wooden ladle |
அகம்1 | வெளியில் தெரியாதபடி அமைந்திருப்பது | that which is inside |
அகம்பாவம் | அகங்காரம் | arrogance |
அகரவரிசை | ஒரு மொழிக்கு உரிய எழுத்து வரிசையில் சொற்களை அமைக்கும் முறை | alphabetical order |
அகராதி | சொற்களை அகரவரிசையில் அமைத்துப் பொருள் முதலியன தரும் நூல் | dictionary (of a language) |
அகராதி பிடித்தவன் | பிறரை மதிக்காமல் எதிர்த்துப் பேசுபவன் | one who is impudent |
அகல்1 | அப்பால் செல்லுதல்(திரை முதலியன) விலகுதல் | leave (a place) |
அகல்2 | (சுட்ட மண்ணாலோ உலோகத்தாலோ செய்து) எண்ணெய்யும் திரியும் இட்டு ஏற்றப்படும் குழிவு அதிகம் இல்லாத விளக்கு | small shallow lamp (made of fired clay or metal) |
அகல | (கண், வாய் அல்லது கதவு, ஜன்னல் முதலியவற்றைக் குறிப்பிடும்போது) பெரிதாக | (of eyes, mouth, door, window, etc.) wide |
அகலம் | (நீளம் அல்லது உயரம் உள்ள பொருளில்) இரு பக்கங்களுக்கும் இடையே உள்ள தூரம் | breadth |
அகவயம் | (தன்னையே பரிசோதிப்பதான) உள்நோக்கு | introspection |
அகவல் | தமிழின் நான்கு வகைச் செய்யுள்களுள் ஒன்று | one of the four major metres of Tamil prosody |
அகவிலைப் படி | விலைவாசி ஏற்றம் காரணமாக அடிப்படை ஊதியத்தோடு தரப்படும் கூடுதல் தொகை | a special allowance given along with the basic pay according to the cost of living index |
அகவு | (மயில்) கரகரப்பான குரலில் ஒலி எழுப்புதல் | (of peacock) crow |
அகவை | வயது | age |
அகழ் | (புதைந்து கிடக்கும் பொருளை அறிந்துகொள்ளும் அல்லது வெளிக்கொண்டுவரும் முறையில்) தோண்டுதல் | excavate |
அகழாய்வு | பண்டை நாகரிகச் சின்னங்களைத் தோண்டியெடுத்து வெளிப்படுத்தும் ஆராய்ச்சி | archaeological excavation |
அகழி | (கோட்டை மதிலைச் சுற்றித் தற்காப்பு ஏற்பாடாக) ஆழமாகத் தோண்டி நீர் நிரப்பிய அமைப்பு | moat |
அகற்று | நீக்குதல் | remove |
அகன்ற | அகலமான | broad |
அகஸ்மாத்தாக | முன்னேற்பாடு இல்லாமல் | accidentally |
அகாரணமாக | காரணம் இல்லாமல் | without (proper) reason |
அகாலம் | (பெரும்பாலும் இரவில்) உரிய நேரம் அல்லாத நேரம் | unearthly time |
அகால மரணம் | வாழ வேண்டிய வயதில் (ஒருவருக்கு) ஏற்படும் மரணம் | premature or untimely death |
அகிம்சை | உயிர்களுக்குத் தீங்கு செய்வதிலிருந்தும் வன்முறையில் ஈடுபடுவதிலிருந்தும் நீங்கிய நிலை | non-violence |
அகில் | கட்டைகளாக வெட்டி நறுமணப் பொருளாகப் பயன்படுத்தும் ஒரு வகை மரம் | eagle-wood |
அகில | நாடு அல்லது உலகு தழுவிய | all |
அகிலம் | அனைத்து உலகம் | entire world |
அகோரம் | அருவருப்பான தோற்றம் | unsightliness |
அகௌரவம் | அவமதிப்பு | disrespect |
அங்ககீனம் | உறுப்புக் குறை | deformity |
அங்கங்கே | தொடர்ச்சியாக இல்லாமல் பரவலாக | here and there |
அங்கசேஷ்டை | உடல் உறுப்புகளின் மிகையான அசைவு | antics |
அங்கணம் | (பழங்காலத்து வீடுகளில்) பயன்படுத்திய நீர் வெளியேறுவதற்காக ஏற்படுத்தப்பட்ட குழிவான அமைப்பு | a ridged drainage basin in front of the house or in a corner of a room |
அங்கத்தவர் | (ஓர் அமைப்பு, கட்சி முதலியவற்றின்) உறுப்பினர் | member |
அங்கத்தினர் | உறுப்பினர் | member (of an organized group) |
அங்கத்துவம் | (ஓர் அமைப்பு, கட்சி முதலியவற்றில் ஒருவருக்கு உள்ள) உறுப்பினர் தகுதி | membership |
அங்கதம் | (இலக்கியம், நாடகம் போன்றவற்றில்) மரபுகளை, பழக்கவழக்கங்களைப் பழித்துக் கேலிக்கு உள்ளாக்கும் முறை | satire |
அங்கப்பிரதட்சிணம் | (வேண்டுதலை நிறைவேற்ற) கோயில் பிரகாரத்தில் படுத்துப் புரண்டு வலம் வருதல் | rolling oneself clockwise around the inner passage of a temple (in fulfilment of a vow) |
அங்கம் | ஒரு முழுமையின் அல்லது அமைப்பின் பகுதி | part of a whole or an organization |
அங்கலாய் | குறையைத் தெரிவித்துப் புலம்புதல் | complain persistently |
அங்கலாய்ப்பு | மனக்குறை | complaint |
அங்கவஸ்திரம் | (ஆண்கள் தோளில் போட்டுக்கொள்ளும்) அடுக்கடுக்கான மடிப்புகள் உள்ள நீண்ட துண்டு | a long pleated piece of ornamental cloth (worn by men) on the shoulder |
அங்காடி | பல பொருள்களை விற்பனைசெய்யும் பெரிய கடை அல்லது பல கடைகளின் தொகுதி | (modern) market |
அங்காத்தல்/அங்காப்பு | (மொழியில்) ஓர் ஒலியை ஒலிப்பதற்காக வாயைத் திறத்தல் | opening of the mouth in pronouncing a sound |
அங்கி | நீண்ட மேலுடை | a long loose upper garment |
அங்கீகரி | ஏற்றுக்கொள்ளுதல் | accept |
அங்கீகாரம் | (ஒரு அமைப்புக்கோ தனி நபருக்கோ வழங்கப்படும்) ஒப்புதல் | approval |
அங்குசம் | யானையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க (பாகன்) பயன்படுத்தும் கருவி | goad (used by mahouts) |
அங்குலம் | ஓர் அடியின் பன்னிரண்டில் ஒரு பாகம் | an inch |
அங்குஸ்தான் | (தைக்கும்போது குத்தாமல் இருக்க) விரல் நுனியில் அணியும் உலோக உறை | thimble |
அங்கே | அந்த இடத்தில் | there |
அங்ஙனம்/-ஆக | அவ்வாறு | in that manner |
அச்சகம் | அச்சுத் தொழில் நடைபெறும் இடம் | printing press |
அச்சம் | தீங்கு, இழப்பு, ஆபத்து முதலியவை நேரக் கூடிய சூழ்நிலையில் ஒருவருக்கு ஏற்படும் உணர்வு | fear |
அச்சவாரம் | முன்பணம் | advance |
அச்சாகு | அச்சிடப்படுதல் | get printed |
அச்சாணி | சக்கரம் கழலாமல் இருக்க வண்டி இருசில் செருகப்படும் முளை | axle pin (of a wheel) |
அச்சாரம் | முன்பணம் | money given in advance (to confirm a contract) |
அச்சிடு | (எழுத்து, படம் முதலியவற்றை அச்சுப்பொறிகொண்டு) பதித்தல் | print (a book, etc.) |
அச்சு1 | (நூல் முதலியன) அச்சிடுவதற்கான (பெரும்பாலும் உலோகத்தால் செய்த) எழுத்து, எண் முதலியன | type in printing |
அச்சு2 | வாகனத்தின் இரு சக்கரங்களையும் இணைக்கும் இரும்புத் தண்டு | axle |
அச்சுக்கோ | (இயந்திரத்தின்மூலம் தாளில் பதிப்பதற்கு ஏற்ற வகையில்) உலோக அச்சு எழுத்துகளை உரிய வரிசையில் அமைத்தல் | (of printing) compose |
அச்சு நாடுகள் | இரண்டாம் உலகப் போரில் கூட்டாக இயங்கிய ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகள் | the Axis |
அச்சுப் பிழை | அச்சிடும்போது நேரிடும் எழுத்து மாற்றம், எழுத்து விடுபடுதல் முதலிய தவறுகள் | errors in printing |
அச்சுப்பொறி | நூல் முதலியன அச்சிடுவதற்கான இயந்திரம் | printing machine |
அச்சுவெல்லம் | அச்சைப் பயன்படுத்திச் செய்யப்படும் சிறு வெல்லம் | jaggery moulded in the shape of a cone with the top flattened |
அச்சுறுத்தல் | பயப்படும்படியான கெடுதலுக்குக் காரணமாக இருப்பது | threat |
அச்சுறுத்து | பயமுறுத்துதல் | threaten |
அச்சேற்று | (நூலை) அச்சிடுதல் | get (a work) printed |
அச்சேறு | (நூல்) அச்சிடப்படுதல் | get printed |