Tamil To Tamil Dictionary
| Tamil Word | Tamil Meaning |
| ய | ஓர் உயிர்மெய்யெழுத்து (ய் + அ) |
| யக்கதரு | ஆலமரம் |
| யக்கராசன் | இயக்கர்களுக்கு அரசனான குபேரன் |
| யக்கியபுருடன் | திருமால் |
| யக்கியம் | வேள்வி துவாபரயுகம் |
| யக்கியாரி | தக்கன் யாகத்தை அழித்த சிவபிரான் |
| யக்ஞம் | வேள்வி |
| யசசு | புகழ் |
| யசனம் | வேள்விசெய்கை |
| யசுர் | இரண்டாம் வேதம் |
| யசோதை | கண்ணனை வளர்த்த தாய் |
| யஞ்ஞம் | வேள்வி |
| யஞ்ஞமூர்த்தி | திருமால் அக்கினிதேவன் |
| யஞ்ஞவராகம் | திருமாலின் பன்றிப்பிறப்பு |
| யஞ்ஞன் | தீக்கடவுள் |
| யட்சகானம் | (கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த) ஒரு வகை நாட்டிய நாடகம் |
| யட்சம் | நாய் மந்திரம் |
| யட்சிணி | இயக்கி குபேரன் மனைவி துர்க்கைக்குப் பணிசெய்யும் பெண்தேவதை |
| யட்டி | அதிமதுரம் தண்டாயுதம் ஊன்றுகோல் முத்துமாலை |
| யதார்த்தவாதி | உண்மைபேசுவோன் |
| யதாஸ்தானம் | முன் இருந்த இடம் |
| யதி | துறவி சீரோசை முடியுமிடம் தாளப்பிரமாணம் பத்தனுள் அங்கம் பலவற்றை ஒழுங்குசெய்வது அடக்கம் இளைப்பாற்றி ஒன்றிப்பு மோனை கைம்பெண் |
| யதிவழு | ஓசையறும்வழி நெறிப்பட வாராமல் நிற்பது |
| யதேச்சதிகாரம் | சர்வாதிகாரம் |
| யதேச்சாதிகாரம் | விருப்பப்படி ஆணை செலுத்துகை |
| யதேச்சை | மிகுதியாய் விருப்பின்படி |
| யதேச்சையாய் | மிகுதியாய் விருப்பின்படி |
| யதேந்திரியம் | கற்புடைமை |
| யந்திரம்2 | தீய சக்திகளை விரட்டி நன்மைகளைத் தரும் என்ற நம்பிக்கையோடு (வாசல்படியில் அல்லது பூஜை அறையில் வைக்கப்படும்) மந்திரங்கள் முதலியவை எழுதி மந்திரிக்கப்பட்ட செப்புத் தகடு |
| யந்திரு | ஆளுவோன் குதிரைப்பாகன் தேர்ப்பாகன் |
| யமகண்டம் | ஒருவன் வாழ்நாளில் உயிருக்கு அபாயமான காலம் யமனுக்குரிய மூன்றே முக்கால் நாழிகைப் பொழுது |
| யமகண்டம்பாடுதல் | உயிருக்குக் கேடுபயக்கும் விதிமுறைக்குட்பட்டுப் பாப்புனைதல் |
| யமகண்டன் | வலியோன் ஒரு காணாக் கோள் யமனுக்குரிய மூன்றே முக்கால் நாழிகைப் பொழுது |
| யமகண்டி | பொல்லாதவள் |
| யமகம் | ஓர் அடியின் முதலில் வந்த சொற்களே மற்ற அடிகளின் முதலிலும் வரும் செய்யுள் அணி |
| யமகிங்கரன் | யமனது ஏவலன் |
| யமதர்மன்/யமன் | (புராணங்களில்) (வரையறுக்கப்பட்ட வாழ்நாள் முடிந்ததும்) உயிரைக் கொண்டுசெல்ல (எருமை வாகனத்தில்) வரும் தெய்வம் |
| யமதூதன் | யமனது தூதன் யமதூதி. (யாழ். அக.) |
| யமபடன் | யமனது வேலையாள் |
| யமப்பிரியம் | ஆலமரம் அத்திமரம் |
| யமம் | யோகத்திற்குரிய எட்டுறுப்புகளுள் ஒன்று கொலை, களவு முதலியவற்றை நீக்கிப் புலனடக்குதல் தடை |
| யமரதம் | யமனது ஊர்தியாகிய எருமைக் கடா |
| யமலோகம் | யமனுடைய உலகம் நரகம் |
| யமவாகனம் | யமனது ஊர்தியாகிய எருமைக் கடா |
| யமவிரதம் | இயமத்தைக் கடைப்பிடித்தல் ஒரு சார்பின்றி அரசுமுறை நடத்தல் |
| யமளம் | இரட்டை |
| யமன் | தென்திசைக்குரிய கடவுள் பாம்பின் நச்சுப்பல் |
| யமாந்தகன் | யமனுக்குப் பகைவனான சிவபிரான் |
| யமாரி | யமனுக்குப் பகைவனான சிவபிரான் |
| யமி | முனிவன் யமுனையாறு |
| யமுனாசனகன் | யமுனையின் தந்தையான சூரியன் |
| யமுனை | ஓர் ஆறு |
| யமுனைத்துறைவன் | கண்ணபிரான் இராமானுசருக்கு ஆசிரியராகிய ஆளவந்தார் |
| யயு | அசுவமேதக் குதிரை |
| யவசி | கழுதைப்பாலை |
| யவபலம் | மூங்கில் |
| யவம் | நெல் வாற்கோதுமை |
| யவன் | See யாவன் உயற்வற வுயர்நல முடையவன் யவனன்(திவ். திருவாய் 1,1,1) |
| யவன் | எவன் |
| யவனத்தச்சர் | யவனநாட்டுத் தச்சர் |
| யவனப்பிரியம் | மிளகு |
| யவனப்பேழை | யவனநாட்டு வேலைப்பாடமைந்த பெட்டி |
| யவனம் | ஒரு நாடு விரைவு வரிப்பணம் |
| யவனர் | யவனநாட்டார் கண்ணாளர் சித்திரகாரர் தோற்கருவி வாசிப்பவர் |
| யவனாள் | யுவதி |
| யவனிகை | இடுதிரை |
| யவாகு | கஞ்சி |
| யவை | வாற்கோதுமை நீட்டலளவை துவரை நெல்வகை |
| யா | மரம் |
| யா | ஓர் உயிர்மெய்யெழுத்து (ய்+ஆ) யாவை ஓர் அசைச்சொல் ஒரு மரவகை அகலம் |
| யா | (பாடல், நூல்) இயற்றுதல் |
| யாககுண்டம் | வேள்விக்குழி |
| யாக்கை | தேகம் மேனி |
| யாக்கை | கட்டுகை உடம்பு |
| யாக்கைக்குற்றம் | கொட்டாவி, நெட்டை, குறுகுறுப்பு, கூன் கிடை, நட்டுவிழல் என்பனவாகிய மெய்க்குற்றம் யாக்கைக்குரிய பசி, நீர் வேட்கை முதலிய பதினெட்டு வகைக் குற்றங்கள் |
| யாக்கைக்குறுகுற்றம் | கொட்டாவி, நெட்டை, குறுகுறுப்பு, கூன் கிடை, நட்டுவிழல் என்பனவாகிய மெய்க்குற்றம் யாக்கைக்குரிய பசி, நீர் வேட்கை முதலிய பதினெட்டு வகைக் குற்றங்கள் |
| யாகசாலை | வேள்விச்சாலை கோயிலுள் வேள்விசெய்யும் மண்டபம் |
| யாகசாலை | (பெரும்பாலும் கோயிலில்) யாகம் செய்வதற்காக அமைக்கப்பட்ட மண்டபம் |
| யாகத்திரவியம் | வேள்விப்பொருள் |
| யாகநிலை | வேள்விச்சாலை |
| யாகபத்தினி | வேள்விசெய்பவன் மனைவி திரௌபதி |
| யாகபதி | வேள்விசெய்யும் தலைவன் இந்திரன் |
| யாகப்பிறையான் | தக்கனது வேள்வித்தீயில் தோன்றிய சந்திரன் |
| யாகபன்னி | யாகபதியின் மனைவி |
| யாகபேரம் | கோயிலுள் வேள்விச்சாலைக்குரிய மூர்த்தி |
| யாகபோசனர் | வானோர் |
| யாகம் | வேள்வி பதினெண்வகை வேள்வி |
| யாகம் | (ஒரு நன்மைக்காக, நற்பயன் வேண்டி) தீ வளர்த்து மந்திரம் ஓதிச் செய்யப்படும் சடங்கு |
| யாகமண்டபம் | வேள்விச்சாலை கோயிலுள் வேள்விசெய்யும் மண்டபம் |
| யாகவிபாகம் | வேள்வியிற் கிடைக்கும் அவிர்ப்பாகம் |
| யாங்கண் | எவ்விடம் |
| யாங்கணும் | எங்கும் |
| யாங்கர் | அரக்கர் |
| யாங்கனம் | எங்கு எப்படி எவ்வாறு எவ்விடம் |
| யாங்கு | எங்கு எப்படி எவ்வாறு எவ்விடம் |
| யாங்ஙனம் | எங்கு எப்படி எவ்வாறு எவ்விடம் |
| யாசகம் | இரப்பு மதயானை பட்டத்தியானை |
| யாசகன் | இரவலன் வேள்வி இயற்றுபவன் |
| யாசி | இரந்து பெறுதல் |
| யாசித்தல் | இரத்தல் |
| யாசிதம் | இரப்புத்தொழில், வட்டி அல்லது வாடகையின்றித் திருப்பிக்கொடுப்பதாகப் பெற்ற பொருள் |
| யாடம் | ஒரு செடிவகை |
| யாடு | ஆடு |
| யாண்டு | எங்கு எப்பொழுது ஆண்டு |
| யாண்டும் | எப்போதும் எவ்விடத்தும் |
| யாண்டை | எவ்விடம் |
| யாணர் | புதிதுபடல் புதிய வருவாய் வளமை செல்வம் நன்மை முறைமை அழகு தச்சர் |
| யாணன் | அழகுள்ளவன் |
| யாணு | அழகு |
| யாத்தல் | செய்யுளமைத்தல் கட்டுதல் பிணித்தல் நீர் முதலியன அணைத்தல் விட்டு நீங்காதிருத்தல் சொல்லுதல் |
| யாத்தார் | உற்ற நண்பர் |
| யாத்திரிகர்விடுதி | பயணஞ்செய்வோர் தங்குமிடம் |
| யாத்திரிகன் | புண்ணிய இடங்கட்குப் பயணம் செய்வோன் |
| யாத்திரிகன் | பயணம் மேற்கொண்டவன் |
| யாத்திரை | பயணம் படையெழுச்சி காலட்சேபம் வழக்கம் திருவிழா கூத்து |
| யாத்திரை | புனிதத் தலங்களைத் தரிசிப்பதற்காக மேற்கொள்ளும் பயணம் |
| யாத்து | தைப்பு |
| யாதபதி | கடல் வருணன் |
| யாதம் | யானைத்தோட்டி காண்க : யாதவம் |
| யாதவம் | மாட்டுமந்தை |
| யாதவர் | யதுகுலத்தவர் இடையர் |
| யாதவன் | கண்ணபிரான் இடையன் |
| யாதவி | குந்தி உமை யதுகுலத்தவள் |
| யாதனம் | தெப்பம் மரக்கலம் வேதனை துயரம் |
| யாதனாசரீரம் | நரகம் நுகர்தற்குரிய உடம்பு |
| யாதனை | வேதனை நரகவேதனை துன்பம் |
| யாதிகன் | வழிச்செல்வோன் |
| யாது | எது இராக்கதன் பிசாசு கள் நினைவு |
| யாதுதானன் | இராக்கதன் |
| யாதும் | எதுவும் |
| யாதொரு | எந்த ஒரு |
| யாப்பண்டம் | கருவுற்றவள் விரும்பும் தின்பண்டம் |
| யாப்பதிகாரம் | செய்யுளிலக்கணங் கூறும் நூற்பகுதி |
| யாப்பறை | கற்பில்லாதவள் |
| யாப்பியம் | பொழுதுபோக்கு காலவரையறையுள்ளது புல்லியது நோய்வகை |
| யாப்பிலக்கணம்/யாப்பு | செய்யுளின் கட்டமைப்பை அடிப்படைக் கூறுகளால் விளக்கும் இலக்கணம் |
| யாப்பு | கட்டுகை கட்டு செய்யுள் யாழ்ப்பத்தரிற் குறுக்கே வலிவுறச் செய்யுங் கட்டு சிறப்புப்பாயிர இலக்கணம் பதினொன்றனுள் இன்ன நூல் கேட்டபின் இன்னது கேட்கத் தக்கதென்னும் தொடர்பு அன்பு உறுதி சூழ்ச்சி பொருத்தம் பாம்பு |
| யாப்புறவு | தள்ளத்தகாத நியதி தகுதி |
| யாப்புறுத்தல் | வலியுறுத்தல் |
| யாப்புறுதல் | பொருள் நிரம்பியிருத்தல் ஏற்புடையதாதல் ஈட்டுதல் |
| யாபனம் | பொழுதுபோக்குதல் இகழுதல் தாமதிக்கை |
| யாபித்தல் | பொழுதுபோக்குதல் நுகர்தல் கவர்தல் |
| யாம் | தன்மைப்பன்மைப் பெயர். (தொல்.சொல்.164.) |
| யாம் | தன்மைப் பன்மைப் பெயர் |
| யாம் | நாம் |
| யாமக்கோட்டம் | அந்தப்புரம் |
| யாமகோடம் | சேவல் நாழிகைவட்டில் |
| யாமங்கொள்பவர் | ஊர்காவலர் நாழிகைக் கணக்கர் |
| யாமசரிதன் | இரவில் திரிபவனான அரக்கன் |
| யாமபதி | சந்திரன் |
| யாமபேரி | இரவில் ஒவ்வொரு சாமத்தின் தொடக்கத்திலும் கொட்டும் பேரிகை |
| யாமம் | நள்ளிரவு சாமம் இரவு இடக்கை மேளம் மாலைப்பொழுதின் பின் பத்து நாழிகை அகலம் தெற்கு |
| யாமம் | சாமம் |
| யாமயாழ் | நள்ளிரவில் மீட்டும் யாழ் |
| யாமவதி | இரவு |
| யாமளபுராதனர் | காளியின் படைவீரர் |
| யாமளம் | காளியைத் தெய்வமாகக் கொண்ட ஒரு வேதம் இரட்டை பச்சை இளமை |
| யாமளை | பார்வதி காளி |
| யாமி | இராத்திரி யமன்தேவி கற்புடையாள் உடன்பிறந்தாள் தெற்கு மகள் மருமகள் |
| யாமிகன் | இரவில் நகரைக் காக்கும் காவற்காரன் |
| யாமியம் | தெற்கு சந்தனம் தவம் |
| யாமினி | மூன்று யாமங்களையுடைய இரவு |
| யாமுனம் | அஞ்சனக்கல் |
| யாமை | ஆமை இரவு காண்க : யாழ்பதங்காளி தெற்கு |
| யாமைமணை | ஆமையின் வடிவமைந்த ஓர் இருக்கை |
| யாய் | தாய் |
| யார் | யாவர் காண்க : நத்தைச்சூரி |
| யார்1 | உயர்திணையில் வரும் வினாச்சொல் |
| யார்2 | கஜம் |
| யாரள் | See யாவள் பல்லிருங்கூந்தல் யாரளோ நமக்கே (குறுந். 19) |
| யாரள் | எவள் |
| யாரி | கதவு கள்ளக்கணவன் எதிரி |
| யாரும் | எவரும் |
| யாரோ | இன்னார் என்று பெயர் குறிப்பிடப்பட முடியாதவர் |
| யாலம் | ஆச்சாமரம் இரவு |
| யாவகம் | செம்பஞ்சு காண்க : பெரும்பயறு |
| யாவச்சீவம் | வாழ்நாளுள்ள வரை. யாவச்சீவம் பிறருக்குழைத்தான் சீவியவரலாறு எல்லாமும். அவனுடைய யாவச்சீவமு மறிவேன் |
| யாவண் | எவ்விடம. இருள் யா வணதோநின் னிழல் வாழ்வோர்க்கே (புறநா. 102) |
| யாவது | எது. காரியம் யாவது கழறுவீர் (கந்தபு. தக்கன்மக. 6) எவ்விதம். கொணரும்வகை யாவதென (கம்பரா. திருவவ. 38) |
| யாவது | எது எவ்விதம் |
| யாவதும் | சிறிதும். யாவது மனங்கவல் பின்றி (பொருந. 94) யாவும். யானைவெண் மருப்பினாலியற்றி யாவதும் (சீவக. 1201) |
| யாவதும் | சிறிதும் காண்க : யாவும் |
| யாவர் | எவர். யாவர்வாய் திறக்க வல்லார் (கம்பரா. பூக்கொய். 6) |
| யாவர் | எவர் |
| யாவர் | உயர்திணைப் பன்மையில் வரும் வினாச்சொல் |
| யாவரும் | எல்லோரும் |
| யாவள் | எவள் யாவளோ வெம் மறையாதீமே (ஐங்குறு. 370) |
| யாவன் | எவன். யாவனோ வொருவ னென்றாள் (கம்பரா. உலாவியர். 11) |
| யாவும் | எல்லாம் |
| யாவை | எவை |
| யாழ | ஒரு முன்னிலையசைச்சொல். யாழநின் மைந்துடை மார்பிற் சுணங்கு நினைத்துக்காண் (கலித். 18) |
| யாழ | ஒரு முன்னிலை யசைச்சொல் |
| யாழ் | ஒரு வகை இசைக்கருவி யாழின் வகைகள் : பேரியாழ் மகர யாழ் சகோட யாழ் செங்கோட்டு யாழ் |
| யாழ் | பேரியாழ், சகோடயாழ், மகரயாழ், செங்கோட்டியாழ் என்னும் நால்வகை நரம்புக் கருவி மிதுனராசி அசுவினிநாள் திருவாதிரை நாள் பண் ஆந்தை |
| யாழ் | (வீணையை ஒத்த) பண்டைய இசைக் கருவி |
| யாழ்க்கரணம் | யாழ்மீட்டற்குரிய செய்கை |
| யாழ்செய்தல் | பாடுதல் |
| யாழ்த்திறம் | பண் ஐந்து சுரமுள்ள இசை |
| யாழ்தரித்தாள் | பார்வதிதேவி |
| யாழ்பதங்காளி | செவ்வழி யாழ்த்திறத்துள் ஒன்று |
| யாழ்ப்பாணர் | யாழ்மீட்டும் பாணர் வகையினர் யாழ்ப்பாண நாட்டார் |
| யாழ்முனிவர் | நாரதர் |
| யாழல் | கறையான் |
| யாழ்வல்லோர் | கந்தருவர் |
| யாழோர் | கந்தருவர் |
| யாழோர்கூட்டம் | எண்வகை மணத்துள் ஒன்றான கந்தருவமணம் |
| யாழோர்மணவினை | எண்வகை மணத்துள் ஒன்றான கந்தருவமணம் |
| யாளி | யானையின் துதிக்கையும் சிங்கத்தின் முகமுமுடைய விலங்கு அரிமா சிம்மராசி யானை இறைகூடைவகை |
| யாளி | (புராணங்களில் கூறப்படுவதும் கோயில்களில் சிற்பமாகச் செதுக்கப்பட்டிருப்பதுமான) சிங்க முகமும் யானையின் துதிக்கையும் தந்தமும் கொண்ட விசித்திர மிருகம் |
| யாளியூர்தி | யாளியை ஊர்தியாக உடைய காளி |
| யாற்றுநீர் | அடிதொறும் ஆற்றுநீர் ஒழுக்குப் போல நெறிப்பட்டு அற்றுஅற்று ஒழுகுவதான எண்வகைப் பொருள்கோளுள் ஒன்று |
| யாறு | ஆறு |
| யான் | தன்மை யொருமைப் பெயர் |
| யான் | நான் |
| யானஞ்செய்தல் | செல்லுதல் |
| யானம் | ஊர்தி சிவிகை மரக்கலம் போர்ச்செலவு அறைவீடு கள் |
| யான்மை | அகங்காரம் |
| யானெனதெனல் | தன்முனைப்பும் பற்றுடைமையும் வெளிப்படப் பேசுதல் |
| யானை | ஆனை அத்தினி அரசுவா அல்லியன் தும்பு கரி அஞ்சனம் இருள் இபம் கஜேந்திரன் கருமா சாகசம் சிந்துரம் சூகை தந்தாயுதம் துருமாரி தெட்டி தெள்ளி பஞ்சநகம் பண்டி பிள்ளுவம் பிரளயம் நூழில் பகடு வாரங்கம் மதங்கம் மத்தவாரணம் மத்மா |
| யானை | துதிக்கையுடைய விலங்குவகை ஆனை மரம் |
| யானை | துதிக்கையும் முறம் போன்ற காதுகளும் பெரிய உடலும் கொண்ட மிருகம் |
| யானை நெருஞ்சில் | பெரு நெருஞ்சில் |
| யானைக் கற்றாழை | ஆனைக் கற்றாழை |
| யானைக்கச்சை | யானையின் கழுத்திலிடும் கயிறு |
| யானைக்கண் | சிறுகண் இலை, காய் முதலியவற்றில் விழும் புள்ளி |
| யானைக்கதி | நடனம், துரிதம், மந்தரம், ஓட்டம் என்னும் நான்கு வகைப்பட்ட யானை நடை |
| யானைக்கவடு | யானைபோல் மனத்துள் மறைத்துவைத்திருக்கும் பகைமை |
| யானைக்கன்று | யானைக்குட்டி |
| யானைக்கால் | ஒரு நோய்வகை |
| யானைக்கால்(வியாதி) | (ஒரு வகைக் கொசு கடிப்பதால் பரவும்) முழங்காலுக்குக் கீழ், காலைப் பெருமளவில் வீங்கிப் பருக்கச்செய்யும் ஒரு நோய் |
| யானைக்குப்பு | சதுரங்கம் |
| யானைக்குருகு | சக்கரவாகப்புள் |
| யானைக்கை | தும்பிக்கை கைவீக்கங் காணும் நோய்வகை |
| யானைகைக்கோள் | பகைவரை எறிந்து அவர் யானையையும் காவலையும் கைக்கொண்டதைக் கூறும் புறத்துறை |
| யானைச்சாலை | யானைகள் கட்டுமிடம் |
| யானைச்சொறி | (சாம்பல் நிறத்திலோ சிவந்த நிறத்திலோ) தடிப்புகளையும் வெள்ளை நிறச் செதில்களையும் ஏற்படுத்தும் ஒரு வகைத் தோல் நோய் |
| யானைத்தண்டம் | யானை செல்லும் வழி |
| யானைத்தந்தம் | யானைக்கொம்பு யானையின் எலும்பு |
| யானைத்தலைவன் | யானைக் கூட்டத்துள் தலைமைதாங்கும் யானை |
| யானைத்தறி | யானைகட்டும் கம்பம் |
| யானைத்திசை | வடக்கு |
| யானைத்திப்பிலி | ஒரு திப்பிலிவகை |
| யானைத்தீ | தணியாப் பசியைத்தரும் நோய் |
| யானைத்தூண் | யானைகட்டும் கம்பம் |
| யானைத்தொழு | யானைகள் கட்டுமிடம் |
| யானைநெருஞ்சி | பெருநெருஞ்சி |
| யானைப்பட்டம் | யானையின் முகவோடை |
| யானைப்படுகுழி | யானையை அகப்படுத்துங்குழி |
| யானைப்பல் | யானையின் கொம்பு |
| யானைப்பாகன் | யானையை நடத்துவோன் |
| யானைப்போர் | யானைகள் ஒன்றோடொன்று செய்யும் போர் |
| யானைபாய்ச்சுதல் | யானையை மதம்படுமாறு செய்தல் |
| யானைமதம் | யானையினின்று பாய்வதாகக் கருதப்படும் மதநீர் |
| யானைமறம் | அரசனது யானையின் போர் வீரத்தைச் சிறப்பித்துக் கூறும் புறத்துறை |
| யானைமால் | யானைகள் கட்டுமிடம் |
| யானைமுகவற்கிளையோன் | முருகன் வீரபத்திரக் கடவுள் |
| யானைமுகவன் | விநாயகன் |
| யானையடி | சதுரங்க ஆட்டத்தில் யானை செல்லும் நெறி நேர்வழி பெரிய வட்டமாயுள்ளது செடிவகை |
| யானையுண்குருகு | ஆனையிறாஞ்சிப்புள் காண்க : யானைக்குருகு |
| யானையுரித்தோன் | யானையின் தோலை உரித்தவனாகிய சிவபிரான் |
| யானையேற்றம் | யானைமீதேறி அதனையடக்கி நடத்தும் வித்தை |
| யானைவணங்கி | சிறுசெடிவகை |
| யானைவாரி | யானைகள் கட்டுமிடம் |
| யானைவீரர் | எண்பெருந் துணைவருள் யானைமேலிருந்து போர்புரியும் வீரர் |
| யானைவென்றி | ஒரு யானை பிறிதொன்றோடு பொருது வெற்றிபெறுதலைக் கூறும் புறத்துறை |
| யானைவேட்டுவன் | யானைவேட்டையாடுவோன் |
| யு | ஓர் உயிர்மெய்யெழுத்து (ய்+உ) |
| யுகதருமம் | யுகபேதத்தினா லுண்டாகும் நடைமுறை |
| யுக்தி | கையாளும் முறை |
| யுக்தி | கூரிய அறிவு பொருத்தம் அனுமானம் நியாயம் சூழ்ச்சி ஆராய்வு வழிவகை அறிவுக்கூர்மை புத்திமதி |
| யுகந்தரம் | ஏர்க்கால் ஒரு நாடு |
| யுகப்பிரளயம் | நான்கு யுகத்தின் முடிவில் நிகழும் அழிவு |
| யுகம் | கிரேதாயுகம் - 17,28,000 ஆண்டு திரேதாயுகம் - 12,96,000 ஆண்டு துவாபரயுகம் - 8,64,000 ஆண்டு கலியுகம் - 4,32,000 ஆண்டு |
| யுகம் | கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் என்று நால்வகைப்பட்ட யுகங்கள் இரட்டை நுகத்தடி நாலுமுழங்கொண்ட அளவு பூமி |
| யுகம் | (புராணங்களில் கூறப்படும் நான்கு வகையான) நீண்ட காலம் |
| யுகளம் | இரட்டை |
| யுகளி | இரட்டை |
| யுகாதி | அருகன் கடவுள் தெலுங்கர், கன்னடர் முதலியோரின் ஆண்டுப்பிறப்பு யுகத்தின் தொடக்கம் |
| யுகாதி | (தெலுங்கு, கன்னட) வருடப் பிறப்பு |
| யுகாந்தம் | யுகமுடிவு உலக முடிவுகாலம் |
| யுகாந்திரம் | யுக அளவு |
| யுஞ்சானம் | உடற்பயிற்சி செய்வோன் |
| யுத்தகளம் | போர்க்களம் |
| யுத்தசன்னத்தன் | போருக்கு ஆயத்தமானவன் |
| யுத்தம் | போர் |
| யுத்தம் | போர் பொருத்தமானது நான்குமுழங்கொண்டது |
| யுத்தமுகம் | போர்முனை |
| யுத்தாயுத்தம் | தக்கதும் தகாததும் |
| யுத்தி | கூரிய அறிவு பொருத்தம் அனுமானம் நியாயம் சூழ்ச்சி ஆராய்வு வழிவகை அறிவுக்கூர்மை புத்திமதி |
| யுவ | இளைய |
| யுவ | அறுபதாண்டுக் கணக்கில் ஒன்பதாம் ஆண்டு |
| யுவதி | இளம் பெண் |
| யுவதி | பதினாறு வயதுடைய பெண் இளம் பெண் |
| யுவராசன் | இளவரசன் |
| யுவன் | இளைஞன் |
| யுவன் | வாலிபன் |
| யுனானி | கிரேக்க வைத்திய முறை |
| யுனானி | (இந்திய) முஸ்லிம்கள் பின்பற்றும் கிரேக்க வைத்திய முறை |
| யூ | ஓர் உயிர்மெய்யெழுத்து (ய்+ஊ) |
| யூகசாலி | புத்திக்கூர்மையுள்ளவன் |
| யூகம் | எதிர்பார்ப்பு அறிவுக்கூர்மை கருத்து காந்தி வாதம் படையின் முன்னணிவகுப்பு படை உடற்குறை கோட்டான் கருங்குரங்கு பெண்குரங்கு பேன் |
| யூகவான் | புத்திக்கூர்மையுள்ளவன் |
| யூகி | புத்திசாலி |
| யூகித்தல் | எதிர்பார்த்தல் அனுமானித்தல் ஆராய்தல் |
| யூகை | கல்வி அறிவாளி மூலத்திலிருந்து உரைகாரர் அனுமானிக்குங் கருத்து அறிவுக்கூர்மை பேன் |
| யூதநாதன் | யானைக்கூட்டத்துக்குத் தலைமை யானை |
| யூதநாயகன் | படைத்தலைவன் |
| யூதபதி | யானைக்கூட்டத்துக்குத் தலைமை யானை |
| யூதபம் | யானைக்கூட்டத்துக்குத் தலைமை யானை |
| யூதம் | யானைக்கூட்டம் பெரும்படை |
| யூதிகை | முல்லை |
| யூபத்தம்பம் | வேள்வித்தூண் |
| யூபம் | வேள்வித்தூண் |
| யோ | ஓர் உயிர்மெய்யெழுத்து (ய்+ஓ) |
| யோகக்காட்சி | யோகத்தாற் காணுமறிவு |
| யோகக்காரன் | நல்வினையாளன் |
| யோக்கியத்துக்குக்கொடுத்தல் | ஒருவனது தகுதியின்மேல் ஆதாரமின்றிக் கடன்கொடுத்தல் |
| யோக்கியதாபட்சம் | தகுதிபற்றிய மதிப்பு |
| யோக்கியதாபத்திரம் | கல்வித்தேர்ச்சியைக் குறிக்கும் நற்சான்றிதழ் நல்லொழுக்கத்தைக் குறிக்கும் பத்திரம் |
| யோக்கியதாம்சம் | தகுதி |
| யோக்கியதாம்சம் | (கல்வி, அனுபவம் முதலிய) தகுதி |
| யோக்கியதை | தகுதி நேர்மை தொடரில் சொற்கள் பொருள்பொருத்த முற்றிருக்கை ஆற்றல் கல்வி, ஒழுக்கம் முதலியவற்றால் வருஞ் சிறப்பு பயன்படுத்தற்கேற்ற தன்மை |
| யோக்கியதை | (பெரும்பாலும் எதிர்மறையில் அல்லது எதிர்மறைத் தொனியில்) (ஒழுக்கம், நேர்மை, திறமை முதலியவை அடிப்படையிலான) தகுதி |
| யோக்கியம் | தகுதி நேர்மை நன்மையானது ஒழுங்கானது தூய்மை |
| யோக்கியம் | ஒழுக்கமும் நேர்மையும் நிறைந்த தன்மை |
| யோக்கியன் | தகுந்தவன் குணவான் பயன்படுபவன் |
| யோகசத்தி | நவச்சாரம் |
| யோகசம்பந்தம் | கூட்டம், புணர்ச்சி |
| யோகசமாதி | ஆன்மா உடலையும் மனத்தையும் விட்டு நீங்கிநிற்கும் யோகநிலை |
| யோகசரன் | அனுமான் |
| யோகசாதனம் | யோகப்பயிற்சி |
| யோகசாதனை | யோகப்பயிற்சி |
| யோகசித்தி | யோகஞ் செய்ததனால் பெற்ற பேறு |
| யோகதண்டம் | யோகியின் கையிலுள்ள கோல் |
| யோகதீட்சை | யோகநெறியால் குரு சீடனது உடலுட்புகுந்து அவனது ஆன்மாவை ஈர்த்துச் சிவன் திருவடியிற் சேர்ப்பிக்கும் தீட்சைவகை தீட்சை ஏழனுள் நிராதாரயோகத்தைப் பயிற்றுவிக்கை |
| யோகநித்திரை | உறங்குவது போன்றிருந்தும் அறிவுற்றிருக்கும் யோகநிலை |
| யோகநிலை | யோகமுறையில் தியானத்தில் அமர்ந்திருக்கை |
| யோகபரன் | யோகசிந்தையுடையவன் |
| யோகபாதம் | கடவுளை அகத்தான் வழிபடும் நெறி யோகத்தைப்பற்றிக் கூறும் சிவாகமத்தின் இரண்டாம் பகுதி |
| யோகம் | ஓகம் |
| யோகம் | இயமம் நியமம் ஆசனம் பிராணா யாமம் பிரத்யாகாரம் தாரணை தியானம் சமாதி |
| யோகம் | சேர்க்கை புணர்ச்சி கூட்டல் நற்பேறு உயர்ச்சி ஊக்கம் தகுதி காரணப்பெயர் சூத்திரம் வழி மருந்து ஏமாற்று அரைப்பட்டிகை நற்சுழி காண்க : யோகு உணர்ச்சி கடவுளை அகத்தான் வழிபடுகையாகிய நெறி எண்வகைப்பட்ட யோகாப்பியாச அங்கங்கள் ஆறுவகை யோகங்கள் ஒவ்வொரு சிவாகமத்திலும் யோகத்தைப்பற்றிக் கூறுவதாயுள்ள இரண்டாம் பகுதி |
| யோகம்1 | மனத்தை ஒருநிலைப்படுத்திச் செய்யும் ஆழ்ந்த தியானம் |
| யோகம்2 | அதிர்ஷ்டம் |
| யோகமார்க்கம் | யோகமுறை |
| யோகர் | யோகியர் முனிவர் சமணமுனிவர் |
| யோகரூடி | காரண இடுகுறி |
| யோகவான் | நற்பேறுபெற்றவன் |
| யோகவிபாகம் | ஒரு சூத்திரத்தில் ஒரு பகுதியைத் தனியே பகுத்து வேறு சூத்திரமாக்கிப் பொருள் கோடலாகிய நூற்புணர்ப்பு |
| யோகாசனம் | யோகத்திற்குரிய இருக்கை முழங்காலிட்டுக் குந்தியிருக்கும் இருப்பு |
| யோகாசனம் | மூச்சைச் சீராக உள்ளிழுத்து வெளிவிட்டு உடலைப் பல நிலைகளில் இருத்திச் செய்யும் மன ஒருமைப் பயிற்சி |
| யோகாதிசயம் | இன்பநிலை |
| யோகி | யோகப்பயிற்சியுடையவன் சன்னியாசி சிவன் அருகன் முனிவன் உடலை வளைக்க உதவும் தசை ஐயனார் |
| யோகி | யோகத்தின்மூலம் அசாதாரணச் சக்திகளைப் பெற்றவர் |
| யோகித்தல் | தியானித்தல் |
| யோகிப்பு | தியானம் |
| யோகினி | மந்திரவாதந் தெரிந்தவள் காளியின் ஏவல்செய் மகளிர் தெய்வப்பெண் காளி தேவதை |
| யோகினிச்சி | வரிக்கூத்துவகை |
| யோகீசுவரன் | யோகத்தில் வல்லவன் |
| யோகு | ஆழ்ந்த தியானம் |
| யோசனம் | சிந்தனை கருத்து புத்திமதி வழிவகை அறிவுக்கூர்மை நான்கு குரோசங் கொண்ட நீட்டலளவை ஓசை |
| யோசனவல்லி | மஞ்சிட்டிவேர் வல்லாரை |
| யோசனன் | கடவுள் |
| யோசனை | எண்ணம் எண்ணக்கரு |
| யோசனை | (ஒன்றைக்குறித்து) சிந்தித்து வெளிப்படுத்தும் கருத்து, வழிமுறை முதலியவை |
| யோசனைக்காரன் | முன்னாலோசனை உடையவன் |
| யோசனைசாலி | கூரிய அறிவினன் |
| யோசி | சிந்தித்தல் |
| யோசித்தல் | ஆராய்தல் சேர்த்தல் சிந்தித்தல் ஆலோசனை கேட்டல் |
| யோதனம் | போர் |
| யோனி | புணர்புழை என்பது கழுத்துப் போன்ற கருப்பையின் கீழ்ப்பகுதிக்கும் புறத்தேயுள்ள பிறப்புறுப்புக்கும் இடைப்பட்ட பாதையாகும் |
| யோனி | பெண்குறி பிறப்பிடம் கருப்பப் பை பிறவி காரணம் காண்க : ஆவுடையார்(ள்) ஒரு நாடகவுறுப்பு பூரநாள் நீர் |
| யோனி | (பெண்ணின்) இனப்பெருக்க உறுப்பு |
| யோனி பேதம் | ஊர்வன -11 மானுடம் - 9 நீர் வாழ்வன - 10 பறப்பன _ 10 நடப்பன _ 10 தேவர் _ 14 தாவரம் _ 20 ஆக 84 நூறாயிரம் |
| யோனிக் கசிவு | வெள்ளைபடுதல் |
| யோனிப் பொருத்தம் | ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு மிருகம் உண்டு. பெண் ஆண் நட்சத்திரங்கள் பெண்ணுக்குப் பெண் யோனியாகவும் ஆணுக்கு ஆண் யோனியாகவும் பகையில்லாமலிருந்தால் உத்தமம் |
| யோனிப்படுதல் | பிறத்தல் |
| யோனிப்பொருத்தம் | மணப்பொருத்தம் பத்தனுள் ஒன்று |
| யோனிபேதம் | எண்பத்துநான்கு நூறாயிரமாகக் கூறப்படும் பிறப்புவகை |
| யோனிலிங்கம் | பெண்குறியின் ஓர் உள்ளுறுப்பு |
| யோனிவாய்ப்படுதல் | பிறத்தல் |
| யௌ | ஓர் உயிர்மெய்யெழுத்து (ய்+ஔ) |
| யௌகிகம் | பகுபதம் |
| யௌதகம் | மகளுக்குத் தருஞ் சீர்ப்பொருள் |
| யௌதம் | பெண்கள் கூட்டம் ஒரு நீட்டலளவு |
| யௌவனகண்டகம் | முகப்பரு |
| யௌவனதசை | இளம்பருவம் |
| யௌவனம் | இளமை வனப்பு |
| யௌவனம் | இளமை அழகு களிப்பு மகளிர் கூட்டம் |
| யௌவனலட்சணம் | அழகு கொங்கை |
| யௌவனிகை | பதினாறு வயது தொடங்கி ஐம்பது வயதுக்குட்பட்ட பெண் |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.