We are happy to provide you with the best Online Tamil to Tamil Dictionary/Translator.
For typing word in Tamil you can use our tool typing tool
Tamil Word | Tamil Meaning |
ஈ | வீடுகளில் பறந்து திரிந்து உணவுப் பொருள்கள்,குப்பைகள் போன்றவற்றை மொய்க்கும் (ஆறு கால்களை உடைய)ஒரு சிறிய கருப்பு நிறப் பூச்சியினம் அதிசயக்குறிப்பு. எங்களுக்குத் தெரியாதபடி யிராநின்றதீ! (ஈடு, 1, 3, 9) நான்காமுயிரெழுத்து கொடு |
ஈ | நான்காம் உயிரெழுத்து துத்த இசையின் எழுத்து ஈ என்னும் பறவை தேனீ வண்டு முன்னிலை அசைச்சொல் சிறகு அழிவு அம்பு அரைஞாண் இந்திர வில் குகை கொசு தாமரை நரி பாம்பு பார்வதி திருமகள் வியப்புக்குறிப்பு |
ஈ | (வி) ஈயென் ஏவல் பகிர்ந்து கொடு தா சொரி |
ஈ1 | கொடுத்தல் |
ஈ2 | வீடுகளில் பறந்து திரியும் (ஆறு கால்களும் இறக்கைகளும் உடைய) ஒரு சிறிய கருப்பு நிற உயிரினம் |
ஈக்க | தருக |
ஈக்கில் | (தென்னை)ஈர்க்கு ஈர்க்குக்குச்சி |
ஈக்கில் கட்டு | ஈர்க்குக்குச்சியால் ஆன நீண்ட கைபிடி உள்ள துடைப்பம் |
ஈக்கில் கட்டு | நீண்ட கைப்பிடி உள்ள துடைப்பம் |
ஈக்குடி | சாவிக்கதிர் |
ஈக்குடி | சாவிக் கதிர் |
ஈக்கை | புலிதொடக்கி உப்பிலி |
ஈக்கை | புலிதொடக்கிக் கொடி உப்பிலி |
ஈகம் | இச்சை சந்தனமரம் |
ஈகம் | விருப்பம் சந்தனமரம் தியாகம் |
ஈகரை | இரு(ஈ) + கரை |
ஈகாமிருகம் | செந்நாய் ரூபகவகை. (சிலப். பக். 84, கீழ்க்குறிப்பு.) |
ஈகுதல் | கொடுத்தல் படைத்தல் |
ஈகை | (மனம் உவந்து கொடுக்கப் படும் ) பொருள் உதவி கொடை கொடை பொன் கற்பகமரம் காடை என்ற பறவை இண்டங்கொடி |
ஈகை | கொடை பொன் கற்பகம் இண்டு புலிதொடக்கி காடை காற்று மேகம் கற்பகமரம் இல்லாமை ஈதல் கொடுத்தல் |
ஈகை | (பெருந்தன்மையோடு செய்யப்படும்) பொருள் உதவி |
ஈகைப் பெருநாள் | ரம்சான் பண்டிகை |
ஈகையரியவிழை | மங்கலிய சூத்திரம் |
ஈகையன் | கொடையாளன் |
ஈகையாளன் | கொடையாளன் |
ஈங்கண் | இவ்விடம் |
ஈங்கம் | சந்தன மரம் |
ஈங்கம் | சந்தனமரம் |
ஈங்கன் | ஈங்கனம் |
ஈங்கன் | இங்கனம் இவ்விடம் இவ்வாறு |
ஈங்கனம் | இருப்பிடம் இங்ஙனம் |
ஈங்கிசை | கொலை நிந்தை துன்பம் வருத்தம் வருத்துதல் தீங்கு |
ஈங்கிசை | கொலை வருத்தம் இகழ்ச்சி |
ஈங்கு | ஈண்டங்கொடி இவ்விடம் சந்தனம் |
ஈங்கு | இவ்விடம் இண்டங்கொடி இவ்வுலகம் இப்படியே சந்தனம் |
ஈங்கை | இண்டங்கொடி |
ஈங்கை | இண்டங்கொடி இணடம்பூ உப்பிலி |
ஈங்கைத்துலக்கு | ஒரு மரப்பட்டை |
ஈசசகன் | குபேரன் |
ஈச்சப்பி | உலோபி கஞ்சன் |
ஈச்சப்பி | கடும்பற்றுள்ளன், ஈயாதவன் |
ஈச்சம் பழம் | சிறு சிவப்பு நிறப் பழம் இது வறல் நிலக்காடுகளில் காணப்படும் |
ஈச்சு | ஈச்சமரம் |
ஈச்சு | ஈந்து, ஈச்சமரம் |
ஈச்சுக்கொட்டல் | கீழ்க்கைவிடுதல் |
ஈச்சுக்கொட்டுதல் | சீழ்க்கையடித்தல் |
ஈச்சுர | அறுபதாண்டுக் கணக்கில் பதினோராம் ஆண்டு |
ஈச்சுரம் | சிவதத்துவம் ஐந்தனுள் ஒன்று |
ஈச்சுரம் | சிவதத்துவம் ஐந்தனுள் ஒன்று, அது ஞானங்குன்றிக் கிரியை உயர்ந்தது |
ஈச்சுரன் | ஈசுவரன், கடவுள் சிவன் |
ஈச்சுவரன் | கடவுள் தலைவன் |
ஈச்சுவரன் | தலைவன் கடவுள் சிவன் |
ஈச்சை | 1.பழுப்பு நிறமும் இனிப்புச் சுவையும் உடைய கொத்துக்கொத்தான சிறு பழங்களைத் தரும் முள் போன்று கூரிய நுனியுடைய ஓலைகளைக் கொண்ட தென்னையை ஒத்த சிறிய மரம் 2.மேற்குறிப்பிட்டது போன்ற பழங்களைத் தரும் முள் போன்று கூரிய இலைகளைக் கொண்ட குத்துச்செடி |
ஈச்சை | பழுப்பு நிறமும் இனிப்புச் சுவையும் உடைய பழங்களைத் தரும், தென்னையை ஒத்த ஒரு மரம் |
ஈச்சோப்பி | ஈப்பிணி ஈயோட்டி |
ஈச்சோப்பி | ஈப்பிணி ஈயோட்டி சிலந்தி |
ஈசத்துவம் | யாவர்க்கும் தேவனாதல் செலுத்துகை எண் வகைச் சித்திகளுள் ஒன்று |
ஈசத்துவம் | எண்வகைச் சித்திகளுள் ஒன்று செலுத்துகை யாவர்க்கும் தேவனாகுதல் |
ஈசதேசாத்தி | பெருமருந்து |
ஈசதேசாத்தி | பெருமருந்துக் கொடி |
ஈசல் | இறக்கை முளைத்த கறையான் ஈயல் |
ஈசல் | சீழ்க்கை செட்டைக் கறையான், சிறகு முளைத்த கறையான் |
ஈசல் | இறக்கை முளைத்த கறையான் |
ஈசற்போடல் | ஈசைக்கொட்டல் |
ஈசன் | (பொதுவாக)இறைவன். சிவன் அரசன் தலைவன் பச்சைக் கர்ப்பூரம் |
ஈசன் | எப்பொருட்கும் இறைவன் சிவன் தகப்பன் அரி குரு அரசன் தலைவன் மூத்தோன் பச்சைக் கருப்பூரம் கௌரி பாடாணம் |
ஈசன் தினம் | திருவாதிரை |
ஈசன்தார் | கொன்றை மாலை |
ஈசன்மைந்தன் | முருகன் விநாயகன் வீரபத்திரன் வைரவன் |
ஈசன்வில் | மகாமேரு |
ஈசன்றார் | கொன்றைமாலை |
ஈசனாள் | ஆதிரைனாள் |
ஈசனாள் | திருவாதிரை நாள் |
ஈசனின் ஐம்முகம் | ஈசானம் வாமதேவம் அகோரம் சத்தியோசாதம் தற்புருடம் |
ஈசாவாசியம் | நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று |
ஈசாவியம் | வடகீழ்த் திசை |
ஈசான மூலை | ஈசானிய மூலை வடகிழக்குப் பக்கம் |
ஈசான மூலை/ஈசானிய மூலை | வடகிழக்குப் பக்கம் |
ஈசானகோணம் | வடகீழ்த்திசை |
ஈசானகோணம் | வடகீழ்த்திசை, சனிமூலை |
ஈசானதிசை | வடகீழ்த்திசை |
ஈசானம் | சிவபிரானின் ஐந்து முகங்களில் ஒன்று வடகீழ்த்திசை |
ஈசானம் | வடகீழ்த்திசை சிவனுடைய ஐந்து முகங்களுள் ஒன்று ஒரு சைவ மந்திரம் |
ஈசானன் | வடகிழக்குத் திக்குப் பாலகன் சிவன் |
ஈசானன் | சிவன் வடகீழ்த்திசைப் பாலகன் |
ஈசானி | உமையவள் |
ஈசானிய மூலை | வடக்கு |
ஈசானியதேசிகர் | இயற்றமிழாசியர் |
ஈசானியம் | ஈசானம் வடகீழ்த்திசை |
ஈசானியமூலை | வடகீழ்த்திசை, சனிமூலை |
ஈசானியன் | ஈசானன் |
ஈசி | ஓர் இகழ்ச்சிக் குறிப்பு. ஈசி போமின் (திவ். பெரியதி.1 3 8) |
ஈசி | ஓர் இகழ்ச்சிக் குறிப்பு |
ஈசிகை | சித்திரமெழுதுங் கோல் யானை விழி |
ஈசிதன் | ஆள்பவன் செங்கோல் செலுத்துபவன் ஈசுவரன் |
ஈசிதை | ஈசத்துவம் - எண்வகைச் சித்திகளுள் ஒன்று |
ஈசுரமூலி | பெரு மருந்துக் கொடி தராசுக் கொடி |
ஈசுரமூலி | பெருமருந்துக் கொடி, தராசுகொடி பெருங்கிழங்கு |
ஈசுரல¦லை | கடவுள் திருவிளையாடல் |
ஈசுரலீலை | கடவுள் திருவிளையாடல் |
ஈசுரவிந்து | பாதரசம் |
ஈசுரவேர் | தராசுக்கொடி |
ஈசுரன் | ஈசன் ஈச்சுவரன் கடவுள் சிவன் |
ஈசுரார்ப்பணம் | கடவுளுக்குரிய தாக்குகை |
ஈசுரார்ப்பணம் | கடவுளுக்கு உரியதாக்குகை |
ஈசுவர | ஒரு தமிழ் ஆண்டு |
ஈசுவரத்துவம் | ஈசுவரனாயிருக்கும் தன்மை |
ஈசுவரதரு | கடம்பு |
ஈசுவரவிந்து | பாதரசம் இரசம் |
ஈசுவரன் | சிவன் ஈசன் |
ஈசுவரி | பார்வதி |
ஈசுவரி | பார்வதி, உமை |
ஈசுவரிநாதம் | கந்தகம் |
ஈசுவரிவிந்து | ஈசுவரிபிந்து ஈசுவரி நாதம் கந்தகம் கெந்தகம் பாதரசம் |
ஈசுவரிவிந்து | கந்தகம் பாதரசம் |
ஈசுவை | பொறாமை |
ஈசை | ஏர்க்கால் உமையவள் கலப்பை |
ஈசை | ஏர்க்கால் பார்வதி |
ஈஞ்சு | ஈச்சமரம் ஈந்து |
ஈஞ்சு | ஈச்சமரம் பேரீந்து காட்டீஞ்சு சிற்றீஞ்சு |
ஈஞ்சை | இகழ்ச்சி கொலை நிந்தை |
ஈஞ்சை | கொலை இம்சை இகழ்ச்சி |
ஈடகம் | மனத்தைக் கவர்வது |
ஈடகம் | மனத்தைத் கவர்வது |
ஈட்சணம் | நோக்கம் பார்வை பார்த்தல் |
ஈட்டம் | பொருள் சம்பாதித்தல் கூட்டம் சேமிப்பு மிகுதி வலிமை |
ஈட்டம் | மிகுதி திரள் கூட்டம் தேட்டம் பொருளீட்டுகை வலிமை |
ஈட்டல் | தேடுதல் தொகுத்தல் செய்தல் |
ஈட்டி | கழியின் நுனியில் கூர்மையான முக்கோண வடிவ இரும்பு முனை செருகப் பட்ட எறியும் ஆயுதம் (விளையாட்டுப் போட்டியில்)எறிவதற்குப் பயன்படுத்தப்படும் மேற்குறிப்பிட்ட வடிவில் ஆன சாதனம் கூரிய முனையுடைய கோல் குந்தம் |
ஈட்டி | குந்தம், வேல், ஈட்டி தோதகத்திமரம் சவளம் கழுக்கடை கழுமுள் சலாகை |
ஈட்டி | முக்கோண வடிவ இரும்பு முனை கழியில் செருகப்பட்ட எறியும் ஆயுதம் |
ஈட்டி எறிதல் | ஈட்டியை எறியும் விளையாட்டுப் போட்டி |
ஈட்டி எறிதல் | ஈட்டியை எறியும் போட்டி விளையாட்டு |
ஈட்டிக்காரன் | (பெரும்பாலும் இந்தியாவின் வடமேற்குப் பகுதியிலிருந்து வந்து கந்து வட்டிக்குப் பணம் கொடுக்கும் தொழிலில் ஈடுபட்டு)அசலையும் வட்டியையும் குறித்த காலத்தில் கறாராக வசூல் செய்பவன் |
ஈட்டிக்காரன் | (பெரும்பாலும் இந்தியாவின் வடமேற்குப் பகுதியிலிருந்து வந்து வட்டிக்குப் பணம் கொடுக்கும் தொழிலில் ஈடுபட்டு) அசலையும் வட்டியையும் குறித்த காலத்தில் கறாராக வசூல்செய்பவன் |
ஈட்டிய விடுப்பு | நிரந்தரப் பணியாளர்கள் குறிப்பிட்ட வேலை நாட்களுக்கு ஒரு நாள் விடுப்பு என்ற விகிதத்தில் சேர்த்து வைக்கும் விடுமுறை |
ஈட்டிய விடுப்பு | நிரந்தரப் பணியாளர்கள் குறிப்பிட்ட வேலை நாட்களுக்கு ஒரு நாள் விடுப்பு என்ற விகிதத்தில் சேர்த்துவைக்கும் விடுமுறை |
ஈட்டிய விடுமுறை | அறிவிக்கப்பட்ட விடுமுறை நாட்களில் பணிபுரிந்தால் அதற்குப் பதிலாக எடுத்துக் கொள்ளும் வேறொரு விடுமுறை நாள் |
ஈட்டிய விடுமுறை | பணியாளர்கள் அறிவிக்கப்பட்ட விடுமுறை நாட்களில் பணிபுரிந்தால் அதற்குப் பதிலாக வேறொரு நாள் எடுத்துக்கொள்ளும் விடுப்பு |
ஈட்டு | (பொருள்)சம்பாதித்தல் (வெற்றி, அனுபவம்,புகழ் முதலியவற்றை) பெறுதல் |
ஈட்டு | (பொருள்) சம்பாதித்தல் |
ஈட்டுக்கீடு | சரிக்குச்சரி |
ஈட்டுத் தொகை | (அரசுப் பணியில் உள்ள மருத்துவர் வழக்கறிஞர் போன்றோர் அரசுப் பணி தவிரத் தனியாக பணி செய்ய அனுமதி இல்லாததால்) வருமான இழப்பை ஈடு செய்யும் நோக்கத்தோடு சம்பளத்துடன் தரப்படும் கூடுதல் படி |
ஈட்டுத்தொகை | உதவித் தொகை |
ஈட்டுத்தொகை | உதவித்தொகை |
ஈட்டுத்தொகை | (அரசுப் பணியிலுள்ள மருத்துவர், வழக்கறிஞர் போன்றோர் அரசுப் பணி தவிரத் தனியாகப் பணிசெய்ய அனுமதி இல்லாததால்) வருமான இழப்பை ஈடுசெய்யும் நோக்கோடு சம்பளத்துடன் தரப்படும் கூடுதல் தொகை |
ஈட்டுதல் | கூட்டுதல் |
ஈட்டுதல் | கூட்டுதல் சம்பாதித்தல் |
ஈட்டுப் படி | (பெரிய நகரங்களில் பணி புரியும் அரசுப் பணியாளர் முதலியோஉக்கு)வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ற வகையில் சம்பளத்துடன் தரப்படும் கூடுதல் தொகை |
ஈட்டுப் படி | (பெரிய நகரங்களில் பணிபுரியும் அரசுப் பணியாளர் முதலியோருக்கு) வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ற வகையில் சம்பளத்துடன் தரப்படும் கூடுதல் தொகை |
ஈட்டுப் பத்திரம் | கடனைத் திருப்பிச் செலுத்த இயலாத நிலையில் குறிப்பிட்ட உடைமையைக்கொண்டு கடனை அடைப்பதாகக் கடன் கொடுப்பவருக்கு எழுதிக்கொடுக்கும் பத்திரம் |
ஈட்டுப்பத்திரம் | அடைமான சாசனம் |
ஈட்டுறுதி | கடனைத் திருப்பிச் செலுத்த இயலாத நிலையில் குறிப்பிட்ட உடைமையைக்கொண்டு கடனை அடைப்பதாகக் கூறும் உறுதி |
ஈடணம் | புகழ் |
ஈடணாத்திரயம் | ஆசை புதல்வன், மனைவி, பொன் மூன்றிலும் விருப்புறுகை துன்பம் |
ஈடணை | அவா பேரவா |
ஈடழிதல் | பெருமைகள் கெடுதல் |
ஈடழிதல் | வலிமை பெருமைகள் கெடுதல் |
ஈடழிவு | சீர்கேடு |
ஈடறவு | சீர்கேடு பெருமைக்கேடு |
ஈடறவு | பெருமைக்கேடு, மேன்மைக்கேடு |
ஈடன் | பெருமையுடையவன் ஆற்றலுடையவன் |
ஈடன் | பெருமையுடைவன் ஆற்றலுடையவன் வலிமை பொருந்தியவன் |
ஈடாட்டம் | ஊசலாட்டம் போட்டி பணப்புழக்கம் நெகிழ்ச்சி கொடுக்கல் வாங்கல் |
ஈடாட்டம் | போட்டி பணப்புழக்கம் நெகிழ்ச்சி ஏழைமை நிலை |
ஈடாட்டம் | உறுதி குலைதல் |
ஈடாடு | (முடிவுசெய்ய முடியாமல்) ஊசலாடுதல் |
ஈடாதண்டம் | ஏர்க்கால் |
ஈடிகை | அம்பு எழுதுகோல் தூரிகை |
ஈடிகை | அம்பு தூரிகை, எழதுகோல் |
ஈடிணை | (வடிவில் குணத்தில் மதிப்பில்)சரிசமம் (ஒருவருக்கு)ஒப்பு |
ஈடிணை | (வடிவில், குணத்தில், மதிப்பில்) சரிசமம் |
ஈடு | (ஒன்றுக்கு) மாற்று பதில்(ஒப்பிடும்போது தகுதியில்,மதிப்பில்,செயலில்)சரிசமம் இணை |
ஈடு | ஒப்பு உவமை வலி பெருமை பிரதி கைம்மாறு அடகு தகுதி நேராகுகை |
ஈடு வை | (வைக்க, வைத்து) அடகு வைத்தல் |
ஈடு1 | சரிசமம் |
ஈடு2 | (பல்வேறு எண்ணிக்கையில் தென்னை போன்ற மரங்கள் காய்க்கும்போது அல்லது இட்லி போன்ற உணவுப் பொருள்கள் தயாரிக்கப்படும்போது) தடவை |
ஈடுகட்டு | (ஒன்றின் குறையை இன்மையை மற்றொன்றின் மூலம்) நிறைவு செய்தல் சரிக்கட்டுதல் |
ஈடுகட்டு | (ஒன்றின் குறையை மற்றொன்றின்மூலம்) நிறைவுசெய்தல் |
ஈடுகட்டுதல் | பிணைகொடுத்தல் பிணையாதல் பொருளிழப்பிற்கு ஈடுகட்டுதல் |
ஈடுகட்டுதல் | பிணை கொடுத்தல், பிணையாதல் பொருளிழப்பிற்கு ஈடுசெய்தல் பேரன்பு கொள்ளுதல் |
ஈடுகொடு | (ஒருவரின் திறமைக்கு மற்றொருவர்)நிகராக நிற்றல்,சமமாக இருத்தல் (சூழலுக்கு)தகுந்தாற்போல் நடத்தல் |
ஈடுகொடு | (ஒருவர் திறமைக்கு மற்றொருவர்) நிகராக நிற்றல் |
ஈடுகொடுத்தல் | எதிர் நிற்றல் நிகராதல் மன நிறைவு செய்வித்தல் போட்டி போடுதல் மனங்கவிதல் |
ஈடுகொடுத்தல் | எதிர்நிற்றல் நிகராதல் மனநிறைவு செய்வித்தல் போட்டி போடுதல் பதிலளித்தல் |
ஈடுகொள்ளுதல் | மனம் கனிதல் |
ஈடுகொள்ளுதல் | மனங்கனிதல் |
ஈடுசெய் | (இழப்பை,குறையை) சரிக்கட்டுதல் ஈடுகட்டுதல் |
ஈடுபடு | (ஒரு செயலில்)முனைதல்,இறங்குதல் (ஒன்றில்)நாட்டம் கொள்ளுதல் (மனம்)ஒன்றுதல் |
ஈடுபடு | (ஒரு செயலில்) முனைதல் |
ஈடுபடுத்து | (ஒருவரை ஒன்றில்)முனையச் செய்தல் அல்லது இறங்கச் செய்தல் (ஒன்றில்) நாட்டம் கொள்ளச் செய்தல்,(மனம்)ஒன்றச் செய்தல் |
ஈடுபடுத்து | (ஒருவரை ஒன்றில்) முனையச்செய்தல் |
ஈடுபடுதல் | அகப்படுதல் துன்பப்படுதல் மனங்கவிதல் வலியழிதல் |
ஈடுபாடு | ஆர்வம்,நாட்டம் (நலனில்) அக்கறை |
ஈடுபாடு | தொடர்பு மனங்கவிகை இலாபநட்டம் சங்கடம் |
ஈடுபாடு | ஆர்வம் |
ஈடுபெற்ற கடன் | கடன் பெற்றவரின் உடைமையை ஈட்டுறுதியாகப் பெற்றுக் கொண்டு தரும் கடன் |
ஈடுபெறாத கடன் | கடன் வாங்கியவரிடம் ஈட்டுறுதியாக எதுவும் பெற்றுக்கொள்ளாமல் தரும் கடன் |
ஈடுவை | அடகு வைத்தல் |
ஈடேற்றம் | மீட்சி உய்வு மீட்பு |
ஈடேற்றம் | உய்வு பேரின்ப வாழ்வு கடைத்தேற்றம் மீட்பு |
ஈடேற்றம் | (பெரும்பாலும் சமயத் துறையில்) மீட்சி |
ஈடேற்று | (எண்ணத்தை, விருப்பத்தை)நிறைவேற்றுதல், (கனவை) உண்மையாக்குதல் (பெரும்பாலும் சமயத் துறையில்)(உலக வாழ்வின் இன்பதுன்பங்களில் இருந்து)விடுவித்தல்,மீட்சி |
ஈடேற்று | (எண்ணத்தை, விருப்பத்தை) நிறைவேற்றுதல்(எதிர்காலக் கனவை) உண்மையாக்குதல் |
ஈடேற்றுதல் | உய்வித்தல் |
ஈடேறு | 1.(நோக்கம் விருப்பம்)நிறைவேறுதல் (கனவு) உண்மையாதல் 2.(பெர்ம்பாலும் சமயத் துறையில்)(உலகவாழ்வின் இன்பதுன்பங்களில் இருந்து ஒருவர்)மீளுதல் |
ஈடேறு | (நோக்கம், விருப்பம்) நிறைவேறுதல்(எதிர்காலக் கனவு) உண்மையாதல் |
ஈடேறுதல் | உய்யப் பெறுதல் கடைத்தேறுதல் வாழ்வடைதல் |
ஈடேறுதல் | உய்யப்பெறுதல், கடைத்தேறுதல், வாழ்வடைதல் |
ஈடை | ஈகை புகழ்ச்சி |
ஈடை | புகழ்ச்சி ஏர்க்கால் |
ஈண்டல் | நெருங்குதல் கூடுதல் நிறைதல் விரைதல் |
ஈண்டல் | நெருங்குதல், கூடுதல் நிறைதல் விரைதல் |
ஈண்டு | இவ்விடத்தில் இப்பொழுது இம்மையில் விரைவு கூட்டமாகச் சேர்ந்திரு எண்ணிக்கை மிகுந்திரு விரைந்து செல் தோண்டியெடு [ஈண்டுதல்] |
ஈண்டு | இவ்விடம் இவ்வண்ணம் இம்மை விரைவு புலிதொடக்கிக் கொடி இப்பொழுது |
ஈண்டுதல் | ஈண்டல் கூடுதல் செறிதல் விரைதல் அடர்ந்து வளர்த்தல் திரளுதல் தொகுதல் வருதல் நிறைதல் பெருகுதல் தோண்டுதல் |
ஈண்டுதல் | கூடுதல், செறிதல், நெருங்குதல் பெருகுதல் விரைதல் தோண்டுதல் |
ஈண்டுநீர் | கடல் |
ஈண்டென | விரைவாக |
ஈண்டை | இங்கு இவ்வுலகில், இவ்விடம், இவண் |
ஈண்டை | இங்கு, இவ்விடம் |
ஈண்டையான் | இவ்விடத்தவன் |
ஈண்டையான் | இவ்விடத்தான் |
ஈணவள் | ஈன்றவள் |
ஈணி | உள் உட்பட்டது நம்பத்தக்க நட்பினர் தெங்கு, பனை முதலியவற்றின் மட்டைகளின் அகவாயிலிருந்து உரிக்கும் நார் வயல் மருதநிலம் |
ஈணை | அகணி தெங்கு பனை இவற்றின் நார் |
ஈத்த | கொடுத்த |
ஈத்தந்து | கொடுத்து |
ஈதல் | கொடுத்தல் அருளல் இடதல் உதவல் படிப்பித்தல் |
ஈதல் | கொடுத்தல் வறியவருக்குத் தருதல் சொரிதல் படிப்பித்தல் |
ஈத்வரீ | வியபசாரி |
ஈதா | இந்தா. அறிந்திலேனீதா (பரிபா. 8 60) |
ஈதா | இந்தா |
ஈதி | மிகுந்த மழை மழையின்மை எலி விட்டில் கிளி அரசின்மை என்னும் ஆறினாலும் நாட்டிற்கு வருங்கேடு |
ஈதி | மிகுந்த மழை, மழையின்மை, எலி, விட்டில், கிளி, அரசண்மை என்னும் ஆறினாலும் நாட்டுக்கு வருங் கேடு |
ஈதியாதை | தருமசங்கடம் |
ஈது | ஈதேயென்றேழி (திருவாச. 7,1.) இது |
ஈது | இது முகம்மதியர் திருநாள்களுள் ஒன்று, பக்ரீத் திருநாள் |
ஈதை | துன்பம் வருத்தம் துயர் |
ஈதை | துன்பம், வருத்தம் |
ஈந்தி | ஈச்சமரம் சிற்றீச்சமரம் நஞ்சு |
ஈந்து | ஈச்சமரம் |
ஈநம் | இழிவு |
ஈப்சை | இச்சை |
ஈப்பாடு | ஈரமாயிருக்கை மனநெகிழ்ச்சி |
ஈப்பிணி | உலோபி |
ஈப்பிலி | ஈயைக் கொல்லும் ஒரு வகைப் பூச்சி நாய்ப்புலி விளையாட்டு |
ஈப்புலி | ஈயைக்கொல்லும் பூச்சி |
ஈப்புலி | ஈயைக் கொல்லும் பூச்சி, ஒருவகைச் சிறு சிலந்தி பதினைந்தாம் புலி விளையாட்டு |
ஈம் | சுடுகாடு |
ஈம் | சுடுகாடு பிணஞ்சுடு விறகடுக்கு பாதிரி மரம் |
ஈமக்கடன் | ஈமச்சடங்கு இறுதிச் சடங்கு இறந்தவர்க்குச் செய்யும் கிரியை |
ஈமக்கடன் | சுடுகாட்டில் செய்யப்படும் பிணச்சடங்கு |
ஈமக்கடுமை | ஈமக்கடுமை |
ஈமகாவலன் | சுடுகாடுகாப்போன் |
ஈமச் சடங்கு | இறுதிச் சடங்கு |
ஈமத்தாடி | சிவன் |
ஈமத்தாடி | சுடுகாட்டில் ஆடும் சிவன் |
ஈமத்தாழி | பண்டைக் காலத்தில் இறந்தோரை வைத்துப் புதைக்கும் ஒருவகைப் பாண்டம் முதுமக்கள் தாழி |
ஈமத்தாழி | முதுமக்கட்டாழி, இறந்தவரை இட்டுப் புதைக்கும் பெருஞ்சால் |
ஈமப்பறவை | கழுகு காகம் பருந்து |
ஈமம் | இ(சு)டுகாடு சுடுகாடு பிணம் சுடும் விறகுக் குவியல் பாதிரிமரம் |
ஈமவனம் | சுடுகாடு |
ஈமவாரி | வசம்பு |
ஈமன் | சிவன் |
ஈமாந்தார் | நம்பிக்கையுள்ள |
ஈமான் | இறை நம்பிக்கை கொள்கை |
ஈமான் | கொள்கை |
ஈமான் | இறை நம்பிக்கை |
ஈமைக்கிரிகை | இறுதிச்சடங்கு |
ஈயக்களங்கு | வங்கவெட்டை |
ஈயக்கொடி | இண்டங்கொடி புலி தொடக்கிக் கொடி |
ஈயக்கொடி | இண்டங்கொடி புலிதொடக்கிக் கொடி |
ஈயச்சுரதம் | இண்டஞ்சாறு |
ஈயத்தின்பிள்ளை | நீலபாஷாணம் |
ஈயப்பற்று | (மின் இணைப்புகளை அல்லது உலோக இணைப்புகளை உருவாக்குவதற்கோ துவாரங்களை அடைக்கவோ உருக்கிப் பயன்படுத்தும்)ஈயமும் தகரமும் கலந்த கலவை |
ஈயப்பற்று | (பாகங்களை இணைக்கவோ துவாரங்களை அடைக்கவோ உருக்கிப் பயன்படுத்தும்) ஈயமும் தகரமும் கலந்த கலவை |
ஈயம் | கனமான ஆனால் எளிதில் உருகும் வலையக்கூடிய தன்மை கொண்ட வெளிர் நீல உலோகம் காரீயம் வெள்ளீயம் |
ஈயம் | பஞ்சலோகத்துள் ஒன்று, வெள்ளீயம் பாதிரி |
ஈயம் | கனமான ஆனால் எளிதில் உருகவும் வளையவும் கூடிய வெளிர் நீல உலோகம் |
ஈயம் பூசு | (பித்தளைப் பாத்திரத்தில் புளி முதலியவற்றால் ஆகும் இரசாயன மாற்றத்தைத் தடுக்க அவற்றின் உட்பகுதியில்) ஈயத்தை உருக்கித் தடவுதல் கலாய் பூசுதல் |
ஈயம் பூசு | (பித்தளைப் பாத்திரங்களில் புளி முதலியவற்றால் ரசாயன மாற்றம் ஏற்படுவதைத் தடுக்க அவற்றின் உட்பகுதியில்) ஈயத்தை உருக்கித் தடவுதல் |
ஈயமலை | ஒருமலை |
ஈயல் | ஈசல் தம்பலப்பூச்சி சிறகு முளைத்த கறையான் ஈதல், கொடுத்தல் |
ஈயவரி | பெருமருந்து |
ஈயவெள்ளை | மரம் முதலியவற்றிற்குப் பூசும் ஒருவகை வெள்ளை மை தூள்வகை |
ஈயன்மூதா | இந்திரகோபம், தம்பலப்பூச்சி |
ஈயன்மூதாய் | இந்திரகோபம் |
ஈயாடவில்லை | அவமானத்தால் ஏற்படும் முகத்தோற்றம் |
ஈயாப்பிசினி | கஞ்சன் கருமி |
ஈயுவன் | இராவணன் |
ஈயெச்சிற்கீரை | புதினாக்கீரை |
ஈயை | இஞ்சி சிங்கிலி புலி தொடக்கி இரண்டு |
ஈயை | இஞ்சி இண்டு புலிதொடக்கி |
ஈயோட்டி | ஈச்சோப்பி ஈயை விலக்குங் கருவி |
ஈயோட்டி | ஈயை ஓட்டுங் கருவி |
ஈயோட்டு | (வேலை இல்லாததால்) சும்மா இருத்தல் |
ஈயோப்பி | ஈயை ஓட்டுங் கருவி |
ஈர் | பேனின் முட்டை (உயிரெழுத்துகளில் தொடங்கும் பெயர்ச்சொற்களுக்கு முன் வரும்போது)இரண்டு என்பதன் பெயரடை வடிவம் ஈர்க்கு இறகு நுண்மை ஈரம் பசுமை இனிமை நெருப்பு |
ஈர்2 | பேனின் முட்டை |
ஈர்3 | (உயிர் எழுத்துகளில் தொடங்கும் பெயர்களின் முன்) இரண்டு என்பதன் பெயரடை வடிவம் |
ஈர்க்காட்டு | கார்காலத்து உடை குளிர் கால உடை |
ஈர்க்கில் | அம்பின் இறகு ஓலையின் நரம்பு |
ஈர்க்கிறால் | இறால் மீன்வகை |
ஈர்க்கு | பனை தென்னை ஓலையின் நடுவில் உள்ள மெல்லிய (கம்பி போன்ற) நரம்பு |
ஈர்க்கு/ஈர்க்குச்சி | பனை, தென்னை ஓலையின் நடுவில் உள்ள மெல்லிய (கம்பி போன்ற) நரம்பு |
ஈர்க்குச்சம்பா | ஒரு நெல் |
ஈர்க்குச்சி | ஈர்க்கு |
ஈர்க்குமல்லிகை | ஒரு மல்லிகை |
ஈர்கொல்லி | ஈரைக்கொல்லும் கருவி |
ஈர்கொல்லி | ஈரைக் கொல்லும் கருவி, ஈர்வலி உப்பிலி |
ஈர்கோலி | ஈர்வாரி |
ஈர்கோலி | ஈருருவுங்கருவி, ஈர் வாங்கும் கருவி |
ஈர்ங்கட்டு | கார்காலத்து உடை, குளிர்கால உடை |
ஈர்ங்கண் | குளிர்ந்த இடம் |
ஈர்ங்கதிர் | திங்கள் |
ஈர்ங்கதிர் | குளிர்ந்த கதிர் சந்திரன் |
ஈர்ங்கை | உருண்டுகழுவிய கை |
ஈர்ங்கை | உண்டு கழுவிய கை |
ஈரங்கொல்லி | வண்ணான் |
ஈரங்கொல்லியர் | வண்ணார் |
ஈரசைச்சீர் | இரண்டசைச்சீர் இயற்சீர் ஆசிரியச்சீர் ஆசிரிய உரிச்சீர் அது தேமா, புளிமா, கருவிளம், கூவிளம் என்னும் வாய்ப்பாட்டான் வருவது |
ஈரசைச்சீர் | இரண்டு அசைகொண்ட சீர் அது தேமா, புளிமா, கருவிளம், கூவிளம் என்னும் வாய்பாட்டால் வரும் |
ஈரடி | இரண்டு அடி, இணையடி ஈரப்பதம் ஈரொட்டு, ஐயம் இரண்டாம் போகம் |
ஈரடிப்பயன் | கவர்பொருள் ஐயம் மாறுபாடு |
ஈரடிப்பயன் | கவர்பொருள் ஐயம் கபடம் மாறுபாடு |
ஈரடிமடக்கு | அடிகளு ளிரண்டடி மடங்கி வருவது |
ஈரடிவருக்கம் | ஒவ்வோரடியிலும் முதலாம் எழுத்தும் நடுவெழுத்தும் ஒன்றாயிருக்குமாறு இரண்டடியுடையதாய்ச் செய்யப்படும் செய்யுள் |
ஈரடிவெண்பா | குறள்வெண்பா |
ஈரடுக்கொடி | உபயவோசை |
ஈரடுக்கொலி | இரட்டையாக அடுக்கி வரும் ஒலிக் குறிப்புச் சொல் |
ஈரடுக்கொலி | இரட்டையாக அடுக்கிவரும் ஒலிக்குறிப்புச் சொல் |
ஈரணம் | வெறுநிலம் களர்நிலம் |
ஈரணம் | வெறுநிலம் களர்நிலம் கள்ளி |
ஈரணி | புனலாடும் போது மகளிர் அணிதற்குரியவை |
ஈரணி | நீராடும்போது மகளிர் அணியும் ஆடை |
ஈரணை | இரண்டு சோடி மாடு இரண்டு அணை |
ஈரணை | இரண்டு அணை இரண்டுசோடி மாடு |
ஈர்த்தல் | இழுத்தல் உரித்தல் கூர்மையாதல் எழுதுதல் பிளத்தல் அறுத்தல் |
ஈர்த்தல் | அறுத்தல் இழுத்தல் உரித்தல் பிளத்தல் எழுதுதல் |
ஈர்தல் | அரிதல் பிளத்தல் அறுத்தல் இழுக்கப்படுதல் |
ஈர்தல் | அரிதல் அறுத்தல் இழுக்கப்படுதல் |
ஈர்ந்தமிழ் | தண்டமிழ், கேட்டற்கு இனிய தமிழ் |
ஈரந்தி | காலை - மாலை |
ஈரந்துவட்டுதல் | ஈரமெடுத்தல் நீராடியபின் ஈரத்தைத் துடைத்தல் |
ஈரநா | புறங்கூறும் நாக்க |
ஈரநா | புறங்கூறும் நாக்கு |
ஈர்பட்டு | ஈர்வாணி |
ஈரப்பச்சை | ஈரப்பசுமை |
ஈரப்பசை | (பொருள் அல்லது இடம் கொண்டிருக்கும்)நீர்த்தன்மை ஈரக்கசிவு இரக்கம் |
ஈரப்பசை | ஈரக்கசிவு இரக்கம் செல்வம் |
ஈரப்பசை | (பொருள் அல்லது இடம் கொண்டிருக்கும்) நீர்த்தன்மை |
ஈரப்பதம் | ஈரத்தன்மை |
ஈரப்பதம் | (காற்றில் நிறைந்திருக்கும்) ஈரப்பசை |
ஈரப்பதன் | ஈரப்பதம் ஈரத்தன்மை |
ஈரப்பலா | ஆசினிப்பலா ஆசினி மரவகை ஒரு மரம் பலாசம் சீமைப்பலா |
ஈரப்பலா | ஒருவகைப் பலா, ஆசினிப் பலா |
ஈரப்பற்று | அன்புப் பற்று நன்றி |
ஈரப்பற்று | ஈரக்கசிவு இரக்கம் |
ஈரப்பாடு | மன நெகிழ்ச்சி ஈரமாயிருத்தல் |
ஈர்ப்பி | ஈர் |
ஈர்ப்பு | (ஒருவரைத் தன்பக்கம்)இழுக்கும் தன்மை அல்லது ஆற்றல்,கவர்ச்சி (பொருள்களைத் தன்நோக்கி வரச் செய்யும்)இழுப்பு சக்தி,ஆகர்சணம் (ஒருவர் ஈடுபட்டிருக்கிற செயல் அவரைப் பிற செயல்களில் கவனத்தைச் செலுத்த விடாமல்) கவர்கிற நிலை |
ஈர்ப்பு | இழுப்பு இசிவுநோய் |
ஈர்ப்பு | (ஒருவரைத் தன் பக்கம்) இழுக்கிற தன்மை அல்லது ஆற்றல் |
ஈரம் | நீரில் நனைவதால் பொருள்களில் காணப்படும் நீர்த்தன்மை, நீர்த்துளி,ஈரப்பதம் இரக்கம்,கருணை |
ஈரம் | நீர்ப்பற்று பசுமை குளிர்ச்சி அன்பு அருள் அழகு அறிவு குங்குமப்பூ பகுதி கரும்பு வெள்ளரி |
ஈரம் | நீரில் நனைவதால் பொருளுடன் சேரும் நீர்த்தன்மை |
ஈரமின்றி | இரக்கமின்றி |
ஈர்மை | குளிர்ச்சி நுண்மை இனிமை பெருமை வருத்தம் |
ஈர்மை | இனிமை பெருமை நுண்மை குளிர்ச்சி வருத்தம் |
ஈரல் | ஈருள் [ கல்லீரல், மண்ணீரல்] வருந்துகை சுருள் வருத்துதல் மார்பிலுள்ள ஊன் |
ஈரல் | ஈருள், மண்ணீரல் கல்ல¦ரல் வருத்துகை |
ஈரல் கருகுதல் | மிகவும் அஞ்சுதல் வேதனை மிகுதல் |
ஈரல்கருகுதல் | வேதனை மிகுதல் மிகவும் அஞ்சுதல் |
ஈரலி | ஈரமாதல் |
ஈரலித்தல் | ஈரமாதல் |
ஈரலிப்பு | ஈரப்பதம் ஈரம் |
ஈர்வடம் | பனை நாரால் பின்னப்பட்ட கயிறு |
ஈர்வடம் | பனையீர்க்குக் கயிறு |
ஈர்வலி | (தலைமுடியிலுள்ள ஈர் ,பேன் ஆகியவற்றை எடுப்பதற்குப் பயன்படுத்தும்) நீண்ட பற்களும் கைபிடியும் கொண்ட ஒருவகை மரச் சீப்பு ஈர் உருவுங் கருவி |
ஈர்வலி/ஈர்வாங்கி | (தலைமுடியிலுள்ள ஈர், பேன் ஆகியவற்றை எடுப்பதற்குப் பயன்படுத்தும்) நீண்ட பற்களும் கைப்பிடியும் கொண்ட ஒரு வகை மரச் சீப்பு |
ஈர்வலித்தல் | ஈர்வாரல் |
ஈரவன் | மதி |
ஈர்வாங்கி | ஈர்வலி |
ஈர்வாணி | ஈர்க்குக்கயிறு |
ஈர்வாரி | ஈருருவுங்கருவி |
ஈர்வாள் | மரம் அறுக்கும் வாள் |
ஈர்வாள் | இரம்பம், மரம் அறுக்கும் வாள் |
ஈரவிதைப்பு | புழுதி விதை ஈரநிலத்தில் விதைக்கை ஈரநிலத்தில் உண்டான பயிர் |
ஈரவுள்ளி | ஈருள்ளி ஈரவெண்காயம் |
ஈரவுள்ளி | உள்ளிப்பூண்டு ஈரவெங்காயம் |
ஈர்வெட்டு | ஈர்பட்டு |
ஈரளிப்பு | ஈரப்பதம் |
ஈரற்குலை | ஈரலின் கொத்து |
ஈரற்கொலை | ஈரற்கொத்து |
ஈரற்றீய்தல் | ஈரற்கருகுதல் |
ஈர்ஷை | பொறாமை |
ஈராட்டி | இரண்டு மனைவி ஈராடி காற்று மாறி அடிக்கை காற்றின் அமைதி நிலையின்மை |
ஈராட்டி | இரண்டு மனைவியர் காற்று மாறி அடிக்கை காற்று அமைதி நிலையின்மை |
ஈராட்டை | இரண்டு ஆண்டு |
ஈராடி | ஈரம் மழைத் தன்மை |
ஈராடி | ஈரம் மழைக்குணம் |
ஈரி | மகளிர் விளையாட்டில் ஒன்று தந்தை பலாக்காய்ச் சடை பலாக்காய்த்தும்பு மனக்கனிவுள்ளவன் நனை |
ஈரி | கந்தை ஏழாங்காய் விளையாட்டின் ஓர் உறுப்பு, பலாக்காய்த் தும்பு மனக்கனிவு உள்ளவன்(ள்) |
ஈரிச்சல் | குளிர்தல் |
ஈரிணம் | கரைநிலம் பாழடைந்த நிலம் |
ஈரிணம் | களர்நிலம் பாழடைந்த நிலம் |
ஈரித்தல் | ஈரமாதல் குளிர்தல் |
ஈரிதம் | தள்ளப்பட்டது |
ஈரிப்பு | ஈர்த்தல் |
ஈரிப்பு | குளிர்மை நட்பு |
ஈரிய | ஈரமுள்ள குளிர்ந்த. ஈரிய நறும்பூ வாளி (திருவிளை. மாயப். 21) அன்புடைய. ஈரிய நெஞ்சம் |
ஈரிய | ஈரத்தையுடைய குளிர்ந்த அன்புடைய |
ஈரிய நெஞ்சம் | அன்புள்ள மனம் |
ஈரியது | ஈரமுள்ளது |
ஈரியநெஞ்சம் | அன்புள்ளமனது |
ஈரிழை | இரட்டையிழைகொண்டது ஆடையின் இரட்டை நூல் |
ஈரிழை | ஆடையின் இரட்டை நூல் |
ஈருயிர்க்காரி | கெர்ப்பிணி சூல் கொண்டவள் |
ஈருயிர்க்காரி | சூல்கொண்டவள் |
ஈருயிர்ப்பிணவு | சூல்கொண்ட பிணவு |
ஈருயிர்ப்பிணவு | சூல்கொண்ட பெட்டை |
ஈருருவி | ஈர்வலி |
ஈருள் | ஈரல் |
ஈருள் | மண்ணீரல், பித்தமிருக்குமிடம் |
ஈருள்ளி | காரம் சற்றுக் கூடிய சிறு வெங்காயம் |
ஈரெச்சம் | பெயரெச்சம் வினையெச்சம் |
ஈரெச்சம் | இருவகை வினைக்குறை, பெயரெச்சம் வினையெச்சம் |
ஈரெட்டாக | ஈரெட்டான (பெரும்பாலும் பேச்சைக் குறித்து வரும் போது)(வேண்டுமென்றே)நிச்சயமற்றதாக/நிச்சயமற்றதான |
ஈரொட்டு | நிச்சயமில்லாமை உறுதியின்மை |
ஈரொட்டு | உறுதியின்மை, இரண்டுக்குற்றது ஐயம் |
ஈரொற்றுவாரம் | இரண்டு மாத்திரை பெற்று வரும் செய்யுள் |
ஈரொற்றுவாரம் | தாளத்து இரண்டு மாத்திரை பெற்றுவரும் செய்யுள் |
ஈலி | கைவாள் கரிகை |
ஈலி | கைவாள், சுரிகை |
ஈவித்தல் | பங்கிடுதல் |
ஈவிரக்கம் | (அடிப்படை மனிதத் தன்மைகளான) இரக்கம் பரிவு முதலியன |
ஈவிரக்கம் | மனக்கசிவு இரக்கக்கொடை |
ஈவிரக்கம் | (அடிப்படை மனிதத் தன்மைகளான) இரக்கம், பரிவு முதலியன |
ஈவு | ஒரு எண்ணை மற்றொரு எண்ணால் வகுத்தால் கிடைக்கும் வகுக்கும் எண்ணின் மடங்கு கொடை பங்கிடுதல் ஒழிதல் |
ஈவு | கொடை நன்கொடைப் பொருள் பங்கிடுகை பிரித்துக் கண்ட பேறு ஒழிகை |
ஈவு | ஒரு எண்ணை மற்றொரு எண்ணால் வகுத்தால் கிடைக்கும் வகுக்கும் எண்ணின் மடங்கு |
ஈவுக்கணக்கு | பங்கிடுதல் பிரிவுக்கணக்கு, வகுத்தற் கணக்கு |
ஈவுசோர்வு | சமயா சமயம் |
ஈவுசோர்வு | சமயாசமயம் |
ஈவுத்தொகை | ஒரு நிறுவனம் லாபத்தில் தன் பங்குதாரர்களுக்குத் தரும் விகிதம் |
ஈவோன் | கொடையாளி ஆசிரியன் கல்விக் கொடையளிப்பவன் |
ஈவோன் | கொடுப்பவன், கொடையாளி, கற்பிப்பவன் |
ஈழக்குலச்சான்றார் | சான்றார்குல வகுப்பு சாணார் ஏனாதி நாயனார் |
ஈழங்கிழங்கு | பெருவள்ளி |
ஈழதண்டம் | ஏர்க்கால் |
ஈழத்தலரி | ஒருவகை அலரி |
ஈழத்தலரி | ஒருவகை அலரி பெருங்கள்ளி |
ஈழநாடு | இலங்கை |
ஈழம் | சிங்களத் தீவு கள் கள்ளி |
ஈழம் | இலங்கை உலேர்கக்கட்டி கள்ளி கள் பொன் |
ஈழமண்டலம் | இலங்கை |
ஈழர் | சான்றார் சாணார் |
ஈழர் குலச்சான்றார் | ஏனாதி நாயனார் |
ஈழவர் | சாணார் |
ஈழவன் | மலையாள நாட்டில் கள்ளிறக்கும் சாதியார் |
ஈழுவர் | ஈழவர் |
ஈழுவன் | மலையாள நாட்டில் கள்ளிறக்கும் சாதியார் |
ஈழை | ஈளை |
ஈழைக்கொல்லி | தாளகம் |
ஈளை | ஆஸ்துமா கோழை காசநோய் இழைப்பு நோய் |
ஈளை | கோழை இளைப்பு காசநோய் |
ஈளை | ஆஸ்துமா |
ஈளைக்காரன் | கோழைநோயாளி |
ஈளைத்தரை | ஈரத்தரை |
ஈறல் | நெருக்கம் துன்பம் பின்னல் |
ஈறல் | துன்பம் நெருக்கம் |
ஈற்றசை | பாட்டின் முடிவில் நிற்கும் அசை |
ஈற்றசையோகாரம் | ஈற்றசையாகவரும்ஏகார விடைச்சொல் |
ஈற்றம் | ஈனுகை |
ஈற்றயல் | (சொல்லைப் பிரித்து அல்லது செய்யுள் உறுப்புகளைப் பிரித்துக் கூறும்போது) இறுதிக்கு முந்திய |
ஈற்றயல் | இறுதிக்கு முந்தையது |
ஈற்றா | (ஈற்று + ஆ) கன்று போட்ட பசு |
ஈற்றா | ஈற்றுப் பசு, கன்றீன்ற பசு |
ஈற்று | (விலங்கு கன்று ஈனுவதை அல்லது குட்டிபோடுவதைப் பற்றிக் கூறும்போது) தடவை |
ஈற்று | ஈனுதல் ஈனப்பட்டது மரக்கன்று |
ஈற்று | (பெரும்பாலும் மாட்டின் எத்தனையாவது கன்று என்று கூறும்போது) ஈனப்பட்டது |
ஈற்றேறுதல் | பயிர்க்கரு முதிர்தல் |
ஈற்றேறுதல் | கதிர் விடுதல் கதிர் முற்றுதல் |
ஈறாக | (பலரை அல்லது பலவற்றைக் குறிப்பிடுகையில்) வரை |
ஈறிலான் | கடவுள் |
ஈறிலி | ஈறிலான் |
ஈறு | வாயில் பற்கள் ஊன்றியிருக்கும் தசை (ஒரு நிகழ்ச்சி,வரிசை முதலியவற்றில்)இறுதி,கடைசி முடிவு எல்லை மரணம் |
ஈறு | முடிவு உப்பளம் இறப்பு பல்ல¦று விகுதி எல்லை |
ஈறு1 | வாயில் பற்கள் ஊன்றியிருக்கும் தசை |
ஈறு2 | (ஒரு நிகழ்ச்சி, வரிசை முதலியவற்றில்) இறுதி |
ஈறுகட்டி | இரசகருப்பூரம் |
ஈறுகெடுதல் | ஈரழிதல் |
ஈறுதப்பின பேச்சு | தகாத மொழி |
ஈறுதப்பினபேச்சு | தகாதமொழி, எல்லைகடந்த சொல் |
ஈன் | (பெண்ணைக் குறித்து வரும் போது)குழந்தையைப் பெறுதல், (விலங்குகளைக் குறித்து வரும்போது)கன்று போடுதல்,குட்டி போடுதல் விளைவி [ஈனுதல், ஈனல்] |
ஈன் | இவ்விடம் இவ்வுலகம் ஆச்சா |
ஈனக்குமரி | மகப் பெறாத இளம் பெண் |
ஈனசாதி | எளியசாதி |
ஈனசுரம் | தாழ்ந்த குரல் |
ஈனசுரம் | தாழ்ந்த குரல், தாழ்ந்த ஓசை |
ஈனத்தார் | கொன்றை |
ஈனதை | இழிவு கீழ்மை தாழ்வு |
ஈனதை | இழிவு, கீழ்மை, தாழ்வு |
ஈனம் | இழிவு,கேவலம் குறை (குரலைக் குறிப்பிடும்போது)மெலிதாக ஒலிப்பது,சக்தியின்மை |
ஈனம் | இழிநிலை குறைபாடு கீழ்மை, தாழ்வு, புன்மை கள்ளி சரிவு முயல் |
ஈனம்1 | இழிவு |
ஈனம்2 | (குரலைக் குறிப்பிடுகையில்) மெலிதாக ஒலிப்பது |
ஈனமாந்தர் | அற்பர் கீழ்மக்கள் |
ஈனல் | பிரப்பித்தல் தானியக் கதிர் |
ஈனல் | காய்த்தல் பெறுதல் கதிர் |
ஈனவன் | இழிந்தோன் |
ஈன்றணிமை | அண்மையில் ஈனப்பட்டமை புனிறு |
ஈன்றணிமை | அண்மையில் ஈனப்பட்டமை, புனிறு |
ஈன்றணுமை | அண்மையில் ஈனப்பட்டமை, புனிறு |
ஈன்றல் | உண்டாதல் ஈனல் |
ஈன்றல் | ஈனல் உண்டாதல் |
ஈன்றவள் | தாய் |
ஈன்றவன் | தந்தை நான்முகன் |
ஈன்றார் | தாய் தந்தையர் |
ஈன்றாள் | தாய் |
ஈன்றான் | தந்தை நான்முகன் |
ஈன்றெடு | ஈனுதல் ஈன் |
ஈன்றோன் | தந்தை நான்முகன் |
ஈனன் | இழிந்தவன் |
ஈனனம் | வெள்ளி |
ஈனாயம் | நிந்தை இழிவு அவமதிப்பு |
ஈனாயம் | நிந்தை, அவமதிப்பு, இழிவு |
ஈனில் | கருவுயிர்க்கும் இடம் பொறையுயிர்த்தற்குரிய இடம் |
ஈனில் | கருவுயிர்க்குமிடம், பேற்றுக்குரியவிடம், மகப்பேறு நிலையம் |
ஈனுதல் | பெறுதல் உண்டாக்குதல் விடுதல் குலைவிடுதல் தருதல் |
ஈனுதல் | கருவுயிர்த்தல் உண்டாக்குதல் குலைவிடுதல் தருதல் |
ஈனும் | பெறும் |
ஈனுமணிமை | சீதகம் புனிறு |
ஈனுலை | அணுசக்தியை உற்பத்தி செய்யப் பயன்படும் தொழில்நுட்பச் சாதனம் |
ஈனை | இலை நரம்பு ஒரு நோய் சித்திரம் |
ஈனை | இலை நரம்பு சித்திரக் குறிப்பு ஒரு நோய் |
ஈனை எழுதுதல் | சித்திரக் குறிப்பு வரைதல் |
ஈனோர் | இவ்வுலகினர் |
ஈனோர் | இவ்வுலகத்தோர் |
ஈஸ்வரி | (பொதுவாக) பெண் தெய்வம்(குறிப்பாக) பார்வதி |