Tamil To Tamil Dictionary
Tamil Word | Tamil Meaning |
ஞஞ்சை | மயக்கம் |
ஞஞ்ஞையெனல் | ஓர் ஒலிக்குறிப்பு |
ஞண்டு | நண்டு கற்கடகராசி |
ஞத்துவம் | அறியுந்தன்மை |
ஞமகண்டன் | யமகண்டன் |
ஞமர்தல் | பரத்தல் தங்குதல் முற்றுதல் ஒடிதல் நெரிதல் |
ஞமலி | நாய் மயில் கள் |
ஞமன் | யமன் துலாக்கோலின் சமன்வாய் |
ஞயம் | நயம் இனிமை |
ஞரல்தல் | ஒலித்தல் முழங்குதல் |
ஞரலுதல் | ஒலித்தல் முழங்குதல் |
ஞரிவாளை | ஒரு பூடுவகை ஒரு மரவகை |
ஞலவல் | கொசுவகை மின்மினிப்பூச்சி |
ஞவல் | கொசுவகை மின்மினிப்பூச்சி |
ஞறா | மயிலின் குரல் |
ஞா | ஒர் உயிர்மெய்யெழுத்து (ஞ்+ஆ) கட்டு பொருந்து |
ஞாங்கர் | இடம் பக்கம் மேல் அங்கே முன் இனி வேற்படை |
ஞாஞ்சில் | கலப்பை மதிலுறுப்பு |
ஞாட்பு | போர் போர்க்களம் படை கூட்டம் கனம் வலிமை |
ஞாடு | நாட்டுப்பகுதி |
ஞாண் | கயிறு வில்லின் நாண் |
ஞாத்தல் | கட்டுதல் பொருந்துதல் |
ஞாதம் | அறியப்பட்டது அறிபவன் |
ஞாதவ்வியம் | அறியவேண்டியது |
ஞாதா | ஞானவான் அறிகிறவன் |
ஞாதி | பங்காளி, தாயாதி சுற்றம் தொலையுறவினர் பதினோர் உருத்திரருள் ஒருவர் |
ஞாதிரு | அறிபவன் ஆன்மா |
ஞாதுரு | அறிபவன் ஆன்மா |
ஞாதுருத்துவம் | அறிகிறவனான தன்மை |
ஞாதேயம் | உறவு உறவுத்தன்மை |
ஞாபகக்கருவி | அறிதற்கு உதவுங் கருவி |
ஞாபகக்குறி | நினைவூட்டுவதற்கு அடையாளமாக வைத்த பொருள் |
ஞாபகக்குறிப்பு | நினைவூட்டுவதற்குரிய சீட்டு |
ஞாபகக்குறை | நினைவின்மை |
ஞாபகங்கூறல் | குறித்த பொருளை நேரே கூறாது வேறு வகையில் நினைவுபடுத்தும் ஒருவகைத் தந்திரவுத்தி |
ஞாபகசக்தி | நினைவாற்றல் |
ஞாபகப்படுத்து | (ஒன்றை) நினைவுக்குக் கொண்டுவருதல்/(ஒன்றை ஒருவருக்கு) நினைவுபடுத்துதல் |
ஞாபகப்படுத்துதல் | நினைப்பூட்டுதல் நினைவிற் கொள்ளுதல் |
ஞாபகம் | நினைவு |
ஞாபகம் | நினைவு அறிவு குறிப்பிப்பது நற்பொருள் மேற்கோள் இலக்கியம் குறிப்பு |
ஞாபகம் | நினைவு (என்பதன் நான்காவது பொருள் தவிர்த்த எல்லாப் பொருளிலும்) |
ஞாபகம்பண்ணுதல் | நினைப்பூட்டுதல் நினைவிற் கொள்ளுதல் |
ஞாபகமறதி | நினைவின்மை |
ஞாபகமறதி | நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியதையும் மறந்துவிடும் தன்மை |
ஞாபகவேது | அறிவிற்குக் காரணமாயது |
ஞாபகார்த்தம் | (ஒருவரை அல்லது ஒன்றை) நினைக்கச்செய்வதாக அமைவது |
ஞாபகி | நினைவாற்றலுள்ளவன் இடைமாற்று |
ஞாபித்தல் | நினைப்பூட்டுதல் |
ஞாய் | தாய் உன் தாய் |
ஞாயம் | நீதி வாய்மை நன்னெறி சட்டம் முகாந்தரம் வாக்குவாதம் கௌதமர் மதம் பற்றிய தருக்கநூல் போக்கு கட்டுப்பாடு இடம் வழக்கு உலகியலாகவும் சாத்திரமாகவும் வழங்கும் திட்டாந்த நெறி ஒரு நோக்கத்துடன் அமைந்த சட்டம் |
ஞாயில் | கோட்டையின் ஏவறை |
ஞாயிறு | சூரியன் ஞாயிற்றுக்கிழமை சௌரமாதம் |
ஞாயிறுதிரும்பி | செடிவகை ஒரிலைத் தாமரை ஒருவகைக் கெட்டியான பட்டு |
ஞாயிறுபோது | உச்சிப்போது |
ஞாயிறுவணங்கி | ஒரு செடிவகை |
ஞாலம் | உலகம் புவி [ஞாலம் கருதினும் கைகூடும் காலம் கருதி இடத்தாற்செயின், -வள்ளுவர்] (இணைத்தவர் : Raju Rajendran) |
ஞாலம் | உலகம், பூமி, நிலம் உயர்ந்தோர் மாயவித்தை |
ஞாலமாது | ஊமத்தை நிலமகள் |
ஞாலித்தட்டு | சிற்றுருக்களோடு சேர்த்து மகளிர் கழுத்தில் அணியும் அணிகலவகை |
ஞாலுதட்டு | சிற்றுருக்களோடு சேர்த்து மகளிர் கழுத்தில் அணியும் அணிகலவகை |
ஞாலுத்தட்டு | சிற்றுருக்களோடு சேர்த்து மகளிர் கழுத்தில் அணியும் அணிகலவகை |
ஞாலுதல் | தொங்குதல் பொழுதுசாய்தல் |
ஞாழ் | யாழ் |
ஞாழல் | புலிநகம் போன்ற பூவையுடைய கொன்றைமரம் |
ஞாழல்மாது | செடிவகையில் ஒன்று வெள்ளூமத்தை கருவூமத்தை உன்மத்தம் |
ஞாழி | வள்ளைக்கொடி |
ஞாளம் | தண்டு |
ஞாளி | நாய் கள் |
ஞாளிதம் | வள்ளைக்கொடி |
ஞாளியூர்தி | நாயை ஊர்தியாக உடைய வைரவன் |
ஞாற்சி | தொங்குகை |
ஞாற்று | தொங்குகை |
ஞாற்றுதல் | தொங்கவிடுதல் |
ஞாறுதல் | மணம்வீசுதல் தோன்றுதல் |
ஞான போதனை | சமய தீட்சை விசேட தீட்சை நிர்வாண தீட்சை |
ஞான வகை | கேட்டல் சிந்தித்தல் தெளிதல் நிட்டை கூடுதல் |
ஞான வேள்வி | ஓதுதல் ஓதுவித்தல் கேட்டல் கேட்பித்தல் சிந்தித்தல் |
ஞானக்கண் | அறிவாகிய பார்வை |
ஞானக்கண் | (முகத்தில் இருக்கும் கண்ணுக்கு எதிர்மறையாகக் கூறப்படும்) எதிர்காலத்தையும் அறியக் கூடிய ஆற்றல் |
ஞானக்கந்தம் | அறிவியல் உண்மை அறிவு பேரறிவு, சிவபிரானது அறிவாற்றல் |
ஞானக்காட்சி | இறையறிவு காண்க : ஞானதிருட்டி |
ஞானக்குழந்தை | ஞானஸ்நானத்தின்போது வாக்களித்துப் பொறுப்பேற்றுக்கொள்ளப்படும் குழந்தை |
ஞானக்கூத்தன் | ஞானத்தில் கூத்தாடும் சிவன் |
ஞானக்கை | பரஞானமாகிய முத்திசாதனம் |
ஞானகிருதம் | தெரிந்து செய்த பாவம் |
ஞானசத்தி | முத்தி எய்துமாறு செய்யும் சிவபிரானது சத்தி |
ஞானசபை | ஞானம் விளங்கும் சிதம்பரத்தில் உள்ள சிற்சபை |
ஞானசமாதி | துறவிகள் நிட்டையின்பொருட்டு நேராக நிமிர்ந்திருக்கும் நிலை |
ஞானசரிதன் | ஞானநெறியில் ஒழுகுபவன் |
ஞானசரீரம் | அறிவுமயமான உடம்பு |
ஞானசாதகன் | மோட்சசாதன முறையில் ஞானநெறி அடையவேண்டி முயல்பவன் |
ஞானசாதனம் | மோட்சசாதன முறையில் ஞானநெறி அடைதற்கு வேண்டும் பயிற்சி |
ஞானசாதனை | மோட்சசாதன முறையில் ஞானநெறி அடைதற்கு வேண்டும் பயிற்சி |
ஞானசித்தன் | அறிவு கைவரப்பெற்றவன் |
ஞானசுகம் | இறைவனோடு இரண்டறக் கலந்து நிற்கும் பேரின்ப மகிழ்ச்சி |
ஞானசூனியம் | அறிவில்லாத ஆள் |
ஞானசூனியன் | அறிவற்றவன் |
ஞானத்தந்தை | ஞானஸ்நானத்தில் ஒரு குழந்தையைக் கிறித்தவ நெறியில் வளர்க்கும் பொறுப்பேற்கும் நபர் |
ஞானத்தாளன் | ஞானமுள்ளவன் நாலாம் பாதத்தோன் பேரறிவுடையவன் அருகன் நான்முகன் கேது சேவல் |
ஞானத்தில் ஞானம் | ஞானநிட்டை கூடுகை |
ஞானத்தில்யோகம் | ஞானத்தைச் சிந்தித்துத் தெளிகை |
ஞானத்திறைவி | அறிவிற்குரிய பெண்தெய்வமான கலைமகள் |
ஞானதிட்டி | ஞானத்தால் அறிதல் முக்கால உணர்ச்சி ஆசாரிய அருள் |
ஞானதிருட்டி | ஞானத்தால் அறிதல் முக்கால உணர்ச்சி ஆசாரிய அருள் |
ஞானதிருஷ்டி | (ஞானி, யோகி போன்றோருக்கு இருப்பதாக நம்பப்படும்) மூன்று கால நிகழ்ச்சிகளையும் அறியக் கூடிய ஆற்றல் |
ஞானதீட்சை | ஞானவுபதேசவகை ஞான ஸ்நானக்கிரியை |
ஞானநாயகன் | கடவுள் மெய்யறிவால் சிறந்தவன் |
ஞானநிட்டை | இறைவனோடு ஆன்மா ஒன்றி நிற்கும் அனுபவநிலை |
ஞானநிலை | ஞானநெறி, முத்தி எய்தற்குரிய தலைசிறந்த ஞானபாதம் |
ஞானப்பல் | கடைசிக் கடைவாய்ப்பல் |
ஞானப்பல் | கடைசியாக முளைக்கும் கடைவாய்ப் பல் |
ஞானப்புதல்வன் | மாணாக்கன் |
ஞானப்பூங்கோதை | திருக்காளத்தியில் உள்ள உமாதேவி |
ஞானப்பைத்தியம் | ஞானத்தால் உண்டாகும் அறிவுமயக்கம் |
ஞானபரன் | கடவுள் ஞானகுரு |
ஞானபரன் | ஞானத்தால் சிறந்த கடவுள் |
ஞானபாதம் | சிவாகமம் நாற்பாதங்களுள் பதி, பசு, பாசங்களாகிய முப்பொருளைப்பற்றிக் கூறும் முதற்பகுதி காண்க : ஞானமார்க்கம் அருகக் கடவுளது திருமொழி |
ஞானபாரகன் | ஞானவறிவிலே தெளிவடைந்தவன் |
ஞானபுத்திரன் | மாணாக்கன் |
ஞானபூசை | அறிவுநிலையில் நின்று அறிவு நூல்களை ஓதல் ஓதுவித்தல் முதலிய பூசனை |
ஞானபூரணன் | அறிவு நிறைந்தவன் |
ஞானம் | அறிவு |
ஞானம் | அறிவு கல்வி பரஞானம் பூமி தத்துவநூல் தசபாரமிதைகளுள் ஞானம் நிரம்புகை மதிஞானம், சுருதஞானம், அவதிஞானம், மனப்பரியய ஞானம், கேவலஞானம் என்னும் ஐவகை ஞானங்கள் சிவனைச் சகளமும் நிட்களமும் கடந்த திருமேனி உடையவராகக் கேட்டல் முதலிய ஞான முறைப்படி அறிவால் வழிபடுகை பூசையில் சிவலிங்கம் அமைவதற்குரிய சலாசனங்களுள் ஒன்று |
ஞானம் | அனைத்தும் அறிந்த நிலை |
ஞானமார்க்கம் | ஞானநெறி, முத்தி எய்தற்குரிய தலைசிறந்த ஞானபாதம் |
ஞானமூர்த்தி | அறிவு உருவமான கடவுள் சிவன் அறிவுக்கு இறைவியாம் கலைமகள் |
ஞானவல்லியம் | பார்வதி கிணறு முதலிய வெட்டுதற்குரிய நிலத்தின் இயல்பைக் கூறும் கூவநூல் |
ஞானவான் | ஞானமுள்ளவன் நாலாம் பாதத்தோன் பேரறிவுடையவன் அருகன் நான்முகன் கேது சேவல் |
ஞானவிரல் | மோதிரவிரல் |
ஞானவிருத்தன் | அறிவால் முதிர்ந்தவன் |
ஞானவீரன் | பரஞானத்தில் வீரனாயுள்ளவன் |
ஞான்றஞாயிறு | சூரியன் மறையும் நேரம் |
ஞான்று | நாள் காலத்தில் ஓர் இடைச்சொல் |
ஞான்றுகொள்ளுதல் | கழுத்திற் சுருக்கிட்டுச் சாதல் |
ஞான்றை | காலம் |
ஞானன் | கடவுள் நான்முகன் |
ஞானன் | அறிவு முதிர்ந்தவனான பிரமன் |
ஞானஸ்நானம் | திருச்சபையின் அங்கத்தினராக ஏற்றுப் புனிதப்படுத்தும் சடங்கு |
ஞானாகரன் | அறிவிற்கு இருப்பிடமானவன் |
ஞானாகாசம் | ஞானியனைத்தையும் ஒருங்கு உணர்தற்குரிய பரவெளி |
ஞானாசாரம் | முத்திமார்க்கத்தில் சிறந்ததாகிய ஞானபாதத்திற்குரிய ஒழுக்கம் |
ஞானாசாரியன் | மெய்யறிவு கொளுத்தும் ஆசிரியன் |
ஞானாரணியம் | அறிவை மறைப்பதான கருமம் |
ஞானார்த்தம் | மெய்ப்பொருள் |
ஞானானந்தம் | பேரின்பம் |
ஞானானந்தன் | கடவுள் |
ஞானி | அருகன் |
ஞானி | ஆத்ம சிந்தனையில் நிறைந்த ஞானம் படைத்தவர் |
ஞானேந்திரியம் | உணர்தற்குரிய மெய், வாய், கண், மூக்கு, செவி என்பன |
ஞானோதயம் | மெய்யறிவு தோன்றுகை |
ஞானோபதேசம் | ஞானபோதனை ஞானாசிரியரிடத்தே உபதேசம் பெறுகை |
ஞானோபதேயம் | ஞானபோதனை ஞானாசிரியரிடத்தே உபதேசம் பெறுகை |
ஞிமிர் | ஒலி |
ஞிமிர்தல் | வண்டு முதலியன ஒலித்தல் நிமிர்தல் |
ஞிமிறு | தேனீ வண்டு |
ஞெகிழ்தல் | கழலுதல் தளர்தல் மனமிளகுதல் மலர்தல் உருகுதல் மெலிதல் சோம்புதல் |
ஞெகிழம் | சிலம்பு |
ஞெகிழி | கொள்ளிக்கட்டை தீக்கடைகோல் தீ காண்க : கொடிவேலி சிலம்பு |
ஞெண்டு | நண்டு கற்கடகராசி |
ஞெண்டுகம் | ஒரு மரவகை வேலிப்பருத்தி |
ஞெண்டுதல் | கிண்டுதல் |
ஞெப்தி | நினைவு அறிவு |
ஞெமர்தல் | பரத்தல் நிறைதல் |
ஞெமல் | சருகு |
ஞெமலி | மகநாள் |
ஞெமலுதல் | திரிதல் |
ஞெமவ்தல் | திரிதல் |
ஞெமன்கோல் | துலாக்கோல் |
ஞெமிடுதல் | கசக்குதல் |
ஞெமிதல் | நெரிதல் |
ஞெமிர்த்தல் | ஒடித்தல் நெரித்தல் அழுத்தல் பரப்புதல் |
ஞெமிர்தல் | பரத்தல் முற்றுதல் தங்குதல் ஒடிதல் நெரிதல் |
ஞெமுக்கம் | அழுந்துகை அமுக்கம் |
ஞெமுக்குதல் | நெருக்கி வருத்துதல் |
ஞெமுங்குதல் | அழுந்துதல் செறிதல் |
ஞெமை | ஒரு மரவகை |
ஞெரல் | ஒலி விரைவு |
ஞெரி | முரிந்த துண்டு |
ஞெரிதல் | முரிதல் |
ஞெரேரெனல் | அச்சக்குறிப்பு விரைவுக் குறிப்பு ஒலிக்குறிப்பு தன்மைக் குறிப்பு |
ஞெரேலெனல் | அச்சக்குறிப்பு விரைவுக் குறிப்பு ஒலிக்குறிப்பு தன்மைக் குறிப்பு |
ஞெலி | தீக்கடைகோல் |
ஞெலிகோல் | தீக்கடைகோல் |
ஞெலிதல் | குடைதல் தீக்கடைதல் |
ஞெலுவல் | சாதல் தேங்காய் நெற்று உலர்ந்து சுருங்கிய பனம்பழம், மிளகாய், வாழை முதலியன மெலிந்தது அறக்காய்ந்தது, பசுமையற்றது |
ஞெலுவன் | தோழன் |
ஞெள்தல் | உடன்படுதல் ஒலித்தல் பள்ளமாதல் |
ஞெள்ளல் | உடன்படுதல் ஒலித்தல் பள்ளமாதல் பூசல் விரைவு சோர்வு பள்ளம் மிகுதி மேன்மை குற்றம் வீதி |
ஞெள்ளுதல் | உடன்படுதல் ஒலித்தல் பள்ளமாதல் |
ஞெள்ளெனல் | ஒலிக்குறிப்பு |
ஞெள்ளை | நாய் |
ஞெளிதல் | உடல் வளைதல் வளைந்து நகர்தல் சுருளுதல் குழிதல் வருந்துதல் குலைதல் மிகுதியாதல் அதுங்குதல் |
ஞெளிர் | யாழ்முதலியவற்றின் உள்ளோசை ஒலி |
ஞெளிர்தல் | எடுத்தலோசையுடன் ஒலித்தல் |
ஞெறித்தல் | புறவிதழ் ஒடித்தல் நெரித்தல் |
ஞேயம் | அன்பு காண்க : சினேகம் அறியப்படும் பொருள் அறிதற்குரிய கடவுள் |
ஞேயர் | நண்பர் அறிவுடையோர் |
ஞேயா | பெருமருந்துக்கொடி |
ஞைஞையெனல் | இகழ்ச்சிக்குறிப்பு கெஞ்சுதற்குறிப்பு அழுதற்குறிப்பு |
ஞொள்குதல் | மெலிதல் குறைவுபடுதல் சோம்புதல் அஞ்சுதல் அலைதல் குலைதல் |
ஞொள்ளெனல் | ஓர் ஒலிக்குறிப்பு |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.
