Phone / WhatsApp : +91 9686446848
Spoken Tamil classes online - Book a demo

Tamil to Tamil Dictionary

We are happy to provide you with the best Online Tamil to Tamil Dictionary/Translator.
For typing word in Tamil you can use our tool typing tool

  
Tamil WordTamil Meaning
ஓர் உயிர்மெய்யெழுத்து (ர்+அ)
ரகசியக் காப்புப் பிரமாணம் அமைச்சர்கள் பதவி ஏற்கும்போது, அமைச்சர் என்ற முறையில் தனக்குத் தெரியவரும் தகவல்களை யாருக்கும் தெரியப்படுத்துவதில்லை என்று ஆளுநர் முன்பாகச் செய்யும் பிரமாணம்
ரகசியப் போலீஸ் (தான் காவலர் என்பது தெரியாமல் இருக்க) சீருடை அணியாமல் சாதாரண உடையில் சென்று துப்பறியும் காவலர் (படை)
ரகசியம் தனக்கு மட்டுமே தெரிந்த, பிறர் அறியாமல் காக்கப்படுகிற செய்தி
ரகம் (-ஆன) (பொதுவாகக் குறிக்கப்படுவதில்) சில வேறுபாடுகளால் தனித்து இனம் காணப்படுவது
ரகளைகுழப்பம்
கலவரம்
கன்னடப்பாட்டு வகை
ரகளை நாகரிகமற்ற முறையில் கூச்சல் போடுவது போன்ற செயல்
ரங்கராட்டினம் உயரமாக மேலெழுந்து வட்டப் பாதையில் சுற்றிவரும் ராட்டினம்
ரசகுல்லா பாலில் மைதா மாவைப் பிசைந்து உருண்டையாக உருட்டிப் பொரித்து ஜீராவில் போட்டுச் செய்யும் இனிப்புப் பண்டம்
ரசதமலைகயிலைமலை
வெள்ளிமலை
ரசம்1மிளகு, சீரகம் போன்றவற்றை அரைத்துப் புளிப்புச் சுவையுடைய நீரில் போட்டுக் கொதிக்கவைத்துச் செய்யும் திரவம்
ரசம்2(இலக்கியம், நாட்டியம் முதலியவற்றில்) உணர்ச்சி வெளிப்பாடு
ரசம்3கண்ணாடியைப் பிரதிபலிக்கும் தன்மையுடையதாக்க ஒரு பக்கத்தில் பூசப்படும் சிவப்பு நிற ரசாயனக் கலவை
ரசம்4இரத்தமாக மாற்றப்படுவதற்கு முன் உள்ள உணவின் சாரம்
ரசமட்டம் ஒரு பரப்பின் சமநிலையை அறியப் பயன்படும் கண்ணாடிக் கூட்டினுள் பாதரசத் துளி கொண்ட சாதனம்
ரசனை விருப்பம்
ரசாயன உரம் (தொழிற்சாலையில்) ரசாயனப் பொருள்களைக்கொண்டு தயாரிக்கப்படும் உரம்
ரசாயனம் வேதியியல்
ரசி (ஈடுபாடு கொள்ளும் அளவு) இனிமையாக இருத்தல்
ரசிகர் மன்றம் (ஒரு நடிகரின் அல்லது நடிகையின்) ரசிகர்கள் ஏற்படுத்திக்கொள்ளும் அமைப்பு
ரசிகன் (கலை, இலக்கியம் முதலியவற்றில்) தேர்ந்த சுவை உள்ளவன்
ரசிகை ரசிகன் என்பதன் பெண்பால்
ரசீதுபெற்றுக்கொண்டதைக் குறிப்பிட்டுக் கொடுக்குஞ் சீட்டு
ரசீது (பணம் அல்லது பொருள்) பெற்றுக்கொண்டதைக் குறித்துத் தரும் சீட்டு
ரஞ்சகம் இன்பம் தருவது
ரஞ்சிதம் இன்பம் தருவது
ரண ஜன்னி தசைவிறைப்பு ஜன்னி
ரணகளம் (ஆயுதங்களால் தாக்கப்பட்டு) இரத்தம் சிந்த வேண்டிய நிலை
ரணசிகிச்சை அறுவைச் சிகிச்சை
ரணம் இரத்தக் கசிவு உள்ள புண்
ரத்த நாளம் இரத்தக் குழாய்
ரத்தக் காட்டேரி இரத்தம் குடிப்பதாகக் கூறப்படும் ஒரு வகைப் பேய்
ரத்தாகு ரத்துசெய்யப்படுதல்
ரத்தினக் கம்பளம் (சிவப்பு நிறம் சற்று அதிகமாகத் தெரியும்படி) பல நிறங்களோடு நெய்யப்பட்ட அலங்காரக் கம்பளம்
ரத்தினச்சுருக்கம்-ஆக/-ஆன குறைந்த சொற்களில் நேர்த்தியாக/குறைந்த சொற்களில் நேர்த்தியான
ரத்தினம் (அணிகலன்களில் அழகுக்காகப் பதிக்கும்) மரகதம், பவளம் போன்ற விலையுயர்ந்த இயற்கைப் பொருள்
ரத்து (பெரும்பாலும் செய்தித்தாளில் தலைப்பாக) ரத்துசெய்யப்படுதல்
ரத்துசெய் (வரி, கடன் அல்லது சட்டம், தடை முதலியவற்றை) இல்லாமல்செய்தல்(நிகழ்ச்சி முதலியவற்றை) நடத்தாமல் விட்டுவிடுதல்
ரதம் (அரசர் முதலியோர் பயணத்திற்கும் போருக்கும் பயன்படுத்திய) குதிரைகளால் இழுக்கப்படும் வாகனம்
ரதி (புராணத்தில்) மன்மதன் மனைவி
ரப்பர் (ஒரு வகை மரத்தின் பாலிலிருந்து அல்லது செயற்கையாக ரசாயன முறையில் தயாரிக்கப்படும்) விசைக்குள்ளாகும்போது நீட்சி அடைந்து மீண்டும் பழைய நிலைக்கு வந்துவிடும் தன்மை கொண்ட பொருள்
ரம்பம் கூரான பற்களுடைய இரும்புத் தகடு பொருத்தப்பட்டு அறுப்பதற்குப் பயன்படுத்தும் பல வகையான கருவிகளின் பொதுப்பெயர்
ரம்மியம் புலன்களுக்கு அல்லது மனத்திற்கு மகிழ்ச்சி தருவது
ரம்ஜான் இஸ்லாமியரின் ஆண்டில் ஒன்பதாவது மாதத்தில் தினமும் காலைமுதல் மாலைவரை உண்ணாமல் இருந்து மேற்கொள்ளும் நோன்பு
ரயில் புகைவண்டி
ரயிலடி புகைவண்டி நிலையம்
ரவிக்கை முழங்கைவரையிலான கைப்பகுதியுடன் உடம்பின் மேல்பகுதியை மறைக்கும் வகையில் பெண்கள் அணியும், கழுத்துப்பட்டி இல்லாத இறுக்கமான உடை
ரவுடி அடாவடித்தனம் அல்லது கலாட்டா செய்பவன்
ரவை1பொடியாக உடைக்கப்பட்ட கோதுமை
ரவை2(சில வகைத் துப்பாக்கிகளில் பயன்படும்) சிறு உருண்டை வடிவ ஈயக் குண்டு
ரஜா விடுமுறை
ரஸ்தா சாலை
ரஸ்தாளிப்பழம் மெல்லிய தோலை உடையதும் இனிப்புச் சுவை மிகுந்ததுமான ஒரு வகை வாழைப்பழம்
ரா (பெரும்பாலும் பிற சொற்களோடு இணைந்து) இரவு
ராக்கொடி (பெண்கள் தலை உச்சியில் அணிந்துகொள்ளும்) கற்கள் பதித்த வில்லை வடிவ ஆபரணம்
ராகம் இசைக் கலைஞர் தன் கற்பனைப்படி விரிவுபடுத்தக் கூடிய வகையில் இருக்கும், ஸ்வரங்களைக் குறிப்பிட்ட மேலேறும் வரிசையிலும் கீழிறங்கும் வரிசையிலும் கொண்ட அமைப்பு
ராகி கேழ்வரகு
ராகு ஒன்பது கிரகங்களில் ஒன்று
ராகுகாலம் ஒவ்வொரு நாளிலும் மங்களகரமான காரியங்கள் முதலியவை நடத்த, செயல்கள் தொடங்க உகந்ததல்லாததாகக் கருதப்படும் ஒன்றரை மணி நேரப் பொழுது
ராசி2(மனஸ்தாபம், சண்டை முதலியவற்றினால் பிரிந்தவர் இடையே ஏற்படும்) சமரசம்
ராட்சச (ஒன்றின் அளவைக்குறித்து வருகையில்) மிகவும் பெரிய
ராட்சசன் (புராணங்களில்) பயங்கரமான தோற்றத்தையும் பிரமாண்டமான உருவத்தையும் உடையவனாகக் கூறப்படுபவன்
ராட்சசி ராட்சசன் என்பதன் பெண்பால்
ராணி அரசி
ராணி ஈ தேன் கூட்டில் இனப்பெருக்கத்திற்கு இன்றியமையாததாகவும் பிற தேனீக்களுக்குத் தலைமையானதாகவும் இருக்கும் தேனீ
ராணுவம் நாட்டைக் காப்பதற்காகவும் தேவையானால் பிற நாட்டைக் கைப்பற்றுவதற்காகவும் பயிற்சியளிக்கப்பட்ட படைகளின் தொகுப்பு
ராத்தல் (முன்பு வழக்கில் இருந்த) பதிமூன்று பலம் கொண்ட நிறுத்தலளவு
ராத்திரி இரவு
ராந்தல் அரிக்கன் விளக்கு
ராப்பாடி இரவு நேரத்தில் வீட்டுக்கு வந்து பாடிப் பிச்சை வாங்குபவன்
ராவு அரத்தால் தேய்த்தல்
ராஜ்(ஜி)யம் (குறிப்பிட்ட ஆட்சியின்) ஆளுகைக்கு உட்பட்ட நாடு அல்லது பகுதி
ராஜகுமாரன் அரசனின் மகன்
ராஜகுமாரி அரசனின் மகள்
ராஜகோபுரம் கோயிலின் (கிழக்கு வாயிலில் இருக்கும்) உயரமான கோபுரம்
ராஜதந்திரம் (பிரச்சினைகளைச் சமாளிக்க அரசியல்வாதி, அதிகாரி போன்றோரின்) முன்யோசனையும் சாமர்த்தியமும் நிறைந்த வழிமுறை
ராஜதந்திரி பிற நாடுகளுடன் சீரான உறவு இருப்பதற்கான பணிகளை மேற்கொள்ளும் அதிகாரி
ராஜபாட்டை அரசர் செல்வதற்காக அமைக்கப்பட்ட அகன்ற பெரு வீதி
ராஜபிளவை முதுகின் நடுப்பகுதியில் உண்டாகிக் கடும் வலியை ஏற்படுத்தும் பெரிய கட்டி
ராஜமரியாதை (முக்கியமானவர்களுக்குத் தரப்படும்) சிறப்பான வரவேற்பு
ராஜ்ய சபை மாநிலங்களவை
ராஜா அரசன்
ராஜாத்தி (பெரும்பாலும் ஒப்பிட்டுக் கூறும்போது) ராணி
ராஜிய (தூதர் வைத்துக்கொள்ளுதல், தூதரகம் அமைத்தல் போன்ற) அரசுத் தொடர்பு கொண்ட
ராஜினாமா (பதவி) விலகல்
ராஷ்டிரபதி குடியரசுத் தலைவர்
ரிக்ஷா (இயந்திர விசையால் அல்லது மிதிப்பதால் நகரும்) இரண்டு பேர் அமர்ந்துசெல்லக் கூடிய மூன்று சக்கர வாகனம்
ரிஷபம் (சிவபெருமானின் வாகனமாகக் கூறப்படும்) காளை
ரிஷி முனிவர்
ரிஷிமூலம் ஒரு முனிவரின் பிறப்பு, குலம், குடும்பம் முதலிய விவரம்
ரீஓர் உயிர்மெய்யெழுத்து (ர்+ஈ)
ரீங்கரி (வண்டு, தேனீ போன்றவை) சீராகவும் தொடர்ச்சியாகவும் (காதைத் துளைப்பது போன்ற) ஒலியெழுப்புதல்
ரீங்காரம்வண்டு முதலியவற்றின் ஒலி
ரீங்காரம் (வண்டு, தேனீ போன்றவை எழுப்பும்) காதைத் துளைப்பது போன்ற தொடர்ச்சியான ஒலி
ருசி1சுவைத்தல்
ருசி2சுவை
ருசு ஆதாரம்
ருதுவாகு (பெண்) பருவமடைதல்
ரூபம் வடிவம்
ரூபாய் (இந்தியாவிலும் வேறு சில நாடுகளிலும்) நாணயத்தின் அடிப்படை அலகு/மேற்குறிப்பிட்ட அடிப்படை அலகில் இருக்கும் தாள் அல்லது நாணயம்
ரேக்கு (தங்கத்தின்) தகடு
ரேக்ளா வண்டி ஒருவர் அமர்ந்து வேகமாகச் செல்லக் கூடிய ஒற்றைக் குதிரை அல்லது ஒற்றை மாட்டு வண்டி
ரேகை மனிதர்களின் கை, கால் விரல்களின் உட்புறத்தில் ஒருவருக்கொருவர் வேறுபட்டு அமைந்திருக்கிற கோடுகள்
ரேந்தை ரவிக்கை, பாவாடை முதலிய பெண்களின் ஆடைகளில் இணைக்கப்படும் வேலைப்பாடு கொண்ட பின்னல் துணி
ரேவதி இருபத்தேழு நட்சத்திரங்களுள் கடைசி நட்சத்திரம்
ரேழி முன் பக்கத்து வாசலுக்கும் முதல் கட்டுக்கும் இடையில் நடைபாதை போல அமைந்திருக்கும் பகுதி
ரேஷன் அத்தியாவசியமான உணவுப் பொருள்களாகிய அரிசி, சர்க்கரை, எண்ணெய் முதலியவற்றை நியாய விலையில் குடும்பத்துக்கு இவ்வளவு என்று நிர்ணயித்து விற்பனைசெய்யும் முறை/மேற்குறிப்பிட்ட முறையில் விற்பனைசெய்யப்படும் பொருள்
ரொட்டி கோதுமை மாவைப் பிசைந்து தட்டி அதிக வெப்பத்தோடு எரியும் அடுப்பின் அறைப்பகுதியில் வைத்துத் தயாரிக்கப்படும் உணவுப் பண்டம்
ரொம்ப மிகவும்
ரோகம் (பொதுவாக) நோய்
ரோகி (பொதுவாக) நோயாளி(குறிப்பாக) குஷ்டரோகி
ரோகிணி இருபத்தேழு நட்சத்திரங்களில் நான்காவது
ரோதனை (பொறுக்க முடியாத) தொந்தரவு
ரோந்து (காவல் புரிய) ராணுவத்தினர் அல்லது காவலர்கள் சுற்றி வருதல்
ரோமக்கால் முடியைத் தோலோடு இணைத்திருக்கும் அடிப்பகுதி
ரோமம் (மனித உடலில்) முடி(மிருகங்களின்) மயிர்
ரோஜா (பெரும்பாலும்) வெளிர்ச் சிவப்பு அல்லது இளம் சிவப்பு நிறத்தில் அடுக்கடுக்கான சிறிய இதழ்களைக் கொண்ட மலர்
ரௌத்திரம் கடுமையான கோபம்