Tamil To Tamil Dictionary

  

 

 

Tamil WordTamil Meaning
லக்(கி)னம் சூரிய உதயத்தைப் பொறுத்து ஒரு நாளில் குறிப்பிட்ட நேரத்து நிகழ்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் ராசி
லகரி இன்ப மயக்கம்
லகான் கடிவாளம்
லங்கணம் பட்டினி
லங்கோடு நாடா இணைக்கப்பட்ட கோவணம்
லஞ்சம் தனக்குச் சாதகமாகக் காரியத்தை முடித்துத் தருவதற்காக அதிகாரமோ செல்வாக்கோ உள்ளவருக்கு முறையற்ற வழியில் கொடுக்கும் பணம் அல்லது பொருள்
லட்சணம் அழகு
லட்சம் ஆயிரத்தின் நூறு மடங்கு
லட்சாதிபதி பெரும் பணக்காரன்
லட்சார்ச்சனை (கோயிலில்) இறைவனின் பெயரை லட்சம் முறை கூறிச் செய்யும் வழிபாடு
லட்சியவாதி (குறிப்பிட்ட) லட்சியத்தோடு இருப்பவர்
லட்சுமி (இந்து மதத்தில்) திருமகளைக் குறிக்கும் பெயர்
லட்சுமி கடாட்சம் செல்வ வளம்
லட்சோபலட்சம் பல லட்சம்
லட்டு சர்க்கரைப் பாகில் பூந்தியைப் போட்டு உருண்டையாக உருட்டிய தின்பண்டம்
லடாய் தகராறு
லத்தி1(குதிரை, யானை போன்றவற்றின்) சாணம்
லபக்-என்று (பிடுங்குதல், கவ்வுதல் போன்ற வினைகளோடு) (எதிர்பாராத நேரத்தில்) திடீரென்று
லம்பாடி (பெரும்பாலும் மத்திய இந்தியாவைச் சார்ந்த) நாடோடி வாழ்க்கை வாழும் கூட்டத்தினர்
லயம் ராக தாளங்களுக்கு உரிய ஓசை ஒழுங்கு
லயி (மனம்) ஒன்றுதல்
லயிப்பு ஒன்றில் மனம் ஆழ்ந்து போகும் நிலை
லவங்கப்பட்டை (சமையலில் வாசனைக்காகச் சேர்க்கும்) கிராம்பை மொட்டாக உடைய ஒரு வகை மரத்தின் பட்டை
லவங்கம் கிராம்பு
லாகிரி போதை
லாச்சி (மேஜை, அலமாரி முதலியவற்றில் உள்ள) இழுப்பறை
லாட்டரியடி (உணவு முதலியவை கிடைக்காதா என்று) ஏங்கித் திண்டாடுதல்
லாடம் குதிரையின் அல்லது மாட்டின் குளம்பு தேயாமலிருக்க அவற்றின் அடியில் ஆணி வைத்து அடித்துப் பொருத்தப்படும் வளைந்த இரும்புத் தகடு
லாடு (சில இனிப்புப் பண்டங்களின்) உருண்டை வடிவம்
லாந்தர் அரிக்கன் (போன்ற) விளக்கு
லாந்து இங்குமங்குமாக நடத்தல்
லாபம் (வியாபாரம், தொழில் ஆகியவற்றில்) செய்த முதலீட்டிற்கு அல்லது செய்த செலவுக்கு அதிகப்படியாகக் கிடைக்கும் வருமானம்
லாம்பெண்ணை மண்ணெண்ணெய்
லாயக்கு (ஒன்றைச் செய்வதற்கு அல்லது பயன்படுத்துவதற்கு) ஏற்ற தன்மை
லாயம் குதிரை கட்டும் இடம்
லாவகம் (சிரமத்தை வெளிப்படுத்திக்கொள்ளாத) எளிமையான நளினம்
லாவண்யம் (கவரும்) அழகு
லாவணி புராணக் கதையை ஆதாரமாகக் கொண்டு இருவர் விவாதம் செய்வது போல் பாடல்களைப் பாடி நடத்தும் கலை நிகழ்ச்சி
லிகிதம் கடிதம்
லிங்கம் உயர்ந்த வட்ட வடிவப் பகுதியின் நடுவில் மேல் நோக்கிய நீள் உருண்டையாக (கல், ஸ்படிகம் முதலியவற்றில்) செய்த (சிவனைக் குறிக்கும்) வடிவம்
லிபி எழுத்து
லீலை (புராணங்களில்) (இறைவன் நிகழ்த்தும்) விளையாட்டு
லுங்கி கைலி
லூட்டி (மற்றவர்களுக்குக் தொல்லையாக அமையும்) விளையாட்டுத்தனமான நடவடிக்கை
லெவி விவசாயிகளிடமும் நெல் வியாபாரிகளிடமும் அரசு செய்யும் கட்டாயக் கொள்முதல்
லேகியம் குறிப்பிட்ட பொருள்களுடன் நெய் கலந்து பாகு போலக் காய்ச்சித் தயாரிக்கப்படும் மருந்து
லேசாக/லேசான (அதிகம் என்று சொல்ல முடியாதவாறு) சிறிதளவாக
லேசு கனமற்றது
லேவாதேவி தனிப்பட்ட முறையில் வட்டிக்குக் கடன் கொடுத்து வாங்கும் தொழில்
லொட்டுலொசுக்கு (முக்கியம் அல்லாத) வேறு பிற
லோகம் வாழும் இடம்
லோட்டா (நீர் குடிப்பதற்கான) நீள் உருண்டை வடிவக் குவளை
லோபி கஞ்சன்
லோல்படு (பல விதங்களிலும்) சிரமப்படுதல்
லோலாக்கு தொங்கட்டான்
லௌகீகம் உலக நடைமுறை

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil