Tamil To Tamil Dictionary
Tamil Word | Tamil Meaning |
அஷ்டமத்துச் சனி | சந்திர லக்கினத்துக்கு எட்டாவது இடத்தில் இருப்பதால் தீமை பயக்கும் சனி |
அஷ்டமத்துச்சனி | வேண்டாத தொல்லை : துன்பம் |
அஷ்டமி | வளர்பிறையில் அல்லது தேய்பிறையில் எட்டாவது நாள் |
அஷ்டலட்சுமி | எண்வகையிலக்குமி தனலட்சுமி தானியலட்சும தைரியலட்சுமி சௌரியலட்சுமி வித்தியாலட்சுமி கீர்த்திலட்சுமி விசயலட்சுமி இராச்சியலட்சுமி |
அஷ்டலோகபஸ்பம் | பொன் வெள்ளி செம்பு இரும்பு வெண்கலம் தரா வங்கம் |
அஷ்டவருக்கம் | சீரகம் கருஞ்சீரகம் சுக்கு மிளகு திப்பிலி இந்துப்பு பெருங்காயம் ஓமம் |
அஷ்டாதசமூலம் | கொடிவேலி எருக்கு நொச்சி முருங்கை மாவிலங்கை சங்சங்குப்பி தழுதாழை குமிழ் பாதிரி வில்வம் கண்டங்கத்தரி கறிமுள்ளி சிற்றாமல்லி பேராமல்லி வேர்க்கொம்பு கரந்தை தூதளை நன்னாரி |
அஷ்டாதசோபபுராணம் | அஷ்டாதச-உப-புராணம் உசனம் கபிலம் காளி சனற் குமாரம் சாம்பவம் சிவதன்மம் சௌரம் தூருவாசம் நந்தி நாரசிங்கம் நாரதீயம் பராசரம் பார்க்கவம் ஆங்கிரம் மாரீசம் மானவம் வாசிட்டலைங்கம் |
அஷ்டாவதானம் | ஒரே நேரத்தில் நிகழும் எட்டுச் செயல்களைக் கவனித்து நினைவில் இருத்தும் கலைத் திறமை |
அஷ்டாவதானி | அஷ்டாவதானம் செய்பவர் |
அஹம் | நான். இவன் அஹமென்றால் ராவணாதிகள் நான் என்றாற்போலே பிறருடைய நானைத் தவிர்த்துக்கொண்டிறே யிருப்பது (ஈடு 1 2 3) |
ஆ | ஒரு வாக்கியத்தில் பெயரடை தவிர்த்த சொல்லோடு இணைக்கப்படும்போது அந்தச் சொல்லுக்கு வினாப் பொருளைத் தரும் இடைச்சொல் அதிர்ச்சி பயம் முதலிய உணர்ச்சிகளைத் தெரிவிக்கப் பயன்படும் ஒரு இடைச்சொல் இரக்கம், இகழ்ச்சி, வியப்பு ஆகியவற்றைக் காட்டும் ஒரு குறிப்பு மொழி ஒரு வினாவெழுத்து (எ.கா - செய்தானா?) இறந்தகால உடன்பாட்டு வினையெச்ச விகுதி (எ.கா - பெய்யாக் கொடுக்கும்) எதிர்மறை இடைநிலை (எ.கா - செய்யாமை செய்யாத) பலவின் பால் எதிர்மறை வினைமுற்று விகுதி (எ.கா - மரங்கள் நில்லா) பசு எருது ஆன்மா ஆச்சாமரம் விதம் (ஆறு என்பதன் கடைக்குறை) |
ஆ | பசு மாடு |
ஆ | இரண்டாம் உயிரெழுத்து குரலிசையின் எழுத்து பெற்றம் மரை எருமை இம்மூன்றன் பெண்பாற் பெயர் இடபம் ஆன்மா காண்க : ஆச்சா விதம் ஆகுகை ஆவது ஓர் இரக்கக்குறிப்பு வியப்புக்குறிப்பு இகழ்ச்சிக்குறிப்பு புழுக்கக்குறிப்பு நினைவுக்குறிப்பு ஈற்றில் வரும் வினாவிடைச்சொல் எதிர்மறையைக் குறிக்கும் சாரியை எதிர்மறை இடைநிலை பலவின்பால் எதிர்மறை வினைமுற்று விகுதி உடன்பாட்டு இறந்தகால வினையெச்ச விகுதி தொடங்கி அல்லது வரையும் எனப் பொருள் தரும் ஒருவடமொழி இடைச்சொல் |
ஆஅ | அதிசயம் இரக்கம் துக்கம் இவற்றின் குறிப்பு. (பிங்.) |
ஆஅ | வியப்பு, இரக்கம், அவலம் இவற்றின் குறிப்பு |
ஆஆ | அதிசயவிரக்கச்சொல் |
ஆக | மொத்தமாய் முழுவதும் அவ்வாறாக விகற்பப் பொருள் தரும் இடைச்சொல் நான்காம் வேற்றுமை உருபுடன் வரும் துணைச்சொல் செய்தி குறிக்கும் இடைச்சொல் முற்றோடு சேர்ந்து செயவென் எச்சப் பொருள் தரும் இடைச்சொல் ஓர் அசைச்சொல் |
ஆக1 | மொத்தத்தில் |
ஆக2 | ஆகவே |
ஆக்கக்கிளவி | ஆக்கம் உணர்த்தும் சொல் செயற்கையை உணர்த்தும் ஆயினான் ஆயினாள் முதலியனவாய் வழங்கும் சொல் |
ஆகக்கூடி | ஆக்மொத்தம் முடிவில் இறுதியாக |
ஆகக்கூடி | ஆகவே மொத்தத்தில் |
ஆகக்கொள்ள | ஆகையால் |
ஆக்கங்கூறுதல் | வாழ்த்துதல் |
ஆக்கச்சொல் | ஆக்கம் உணர்த்தும் சொல் செயற்கையை உணர்த்தும் ஆயினான் ஆயினாள் முதலியனவாய் வழங்கும் சொல் |
ஆக்கஞ்செப்பல் | தன் நெஞ்சில் வருத்தம் மிகுகின்றபடியைப் பிறர்க்கு உரைக்கை |
ஆக்கணாங்கெளிறு | கெளிற்று மீன்வகை |
ஆக்கதம் | முதலை |
ஆக்கந்திதம் | குதிரை நடைவகையுள் ஒன்று |
ஆக்கப்பாடு | பேறு |
ஆக்கப்பெயர் | காரணக் குறியினாலாவது இடு குறியினாலாவது இடையில் ஆக்கப்பட்ட பெயர் மரபுவழிப் பெயருக்கு மாறுபட்டது |
ஆக்கப்பெருக்கம் | வருமானம் |
ஆக்கப்பொருள் | ஆகுபெயர்ப் பொருள் |
ஆக்கபூர்வம் | பயன் தரும் விதத்தில் பயன் தரும்படியான உருப்படியான |
ஆக்கபூர்வம்-ஆக/-ஆன | பயன் தரும் விதத்தில்/பயன் தரும்படியான |
ஆக்கம் | நன்மை தரும் முறையிலானது படைப்புத்திறன் இலக்கியப் படைப்பு சிருட்டி உண்டாக்குதல் அபிவிருத்தி |
ஆக்கமகள் | திருமகள் |
ஆக்கர் | (சுவர் மரம் தகடு போன்றவற்றில்) துளையிடப் பயன்படும் கருவி |
ஆக்கர் | படைக்கப்பட்ட தேவர் திரிந்து கொண்டே துணி முதலியவை விற்போன் துறப்பணம் |
ஆக்கரிவாள் | அறுவாள்வகை தோட்டவேலைக்குதவும் கத்தி |
ஆக்கல் | படைத்தல் சமைத்தல் |
ஆக்கல் | செய்தல் படைத்தல் சமைத்தல் அமைத்துக்கொள்ளுதல் மாற்றுதல் உயர்த்துதல் |
ஆக்கவினை | ஒரு செயலைச் செய்வதற்கு மற்றொருவர் அல்லது மற்றொன்று காரணமாக இருப்பதைத் தெரிவிக்க பயன்படுத்தும் வினை |
ஆக்கவினை | வளர்ச்சிப்பணி ஆக்கத்தால் வரும் வினைச்சொல் |
ஆக்கவினை | ஒரு செயலைச் செய்வதற்கு மற்றொருவர் அல்லது மற்றொன்று காரணமாக இருப்பதைத் தெரிவிக்க (தற்காலத் தமிழில்) பயன்படுத்தும் (செய என்னும் வாய்பாட்டு வினையெச்சத்தின் பின் வரும் செய், வை போன்ற) வினை |
ஆக்கவினைக்குறிப்பு | ஆக்கச் சொல்லைக் கொண்டிருக்கும் வினைக்குறிப்புச் சொல் |
ஆக்கன் | செயற்கையானது |
ஆக்காட்டு | (குழந்தையை) வாயைத் திறந்து காட்டும்படி சொல்லுதல் |
ஆக்காட்டுதல் | வாயைத்திறத்தல் |
ஆக்காண்டி | ஆள்காட்டிப் பறவை |
ஆக்கியரிவாள் | வெற்றிலைக் காம்பறியும் கத்தி |
ஆக்கியாதம் | சொல்லப்பட்டது அறிவிக்கப்பட்டது வினைச்சொல் |
ஆக்கியாபித்தல் | கட்டளையிடல் |
ஆக்கியானம் | கட்டுக்கதை |
ஆக்கியானம் | கட்டுக்கதை வெளிப்படுத்துதல் பேசுதல் |
ஆக்கியோர் | (கவிதை இலக்கணம் முதலியவற்றை)இயற்றியவர் ஆசிரியர் |
ஆக்கியோன் | கட்டுக்கதை படைத்தவன் ஒரு நூல் செய்தவன் |
ஆக்கியோன் | படைத்தோன் நூல்செய்தவன் |
ஆக்கியோன் | (கவிதை, இலக்கணம் முதலியவற்றை) இயற்றியவர் |
ஆக்கிரகம் | விடாப்பிடி கடுஞ்சினம் கைக்கொள்ளுகை கட்டாயம் அருளுகை |
ஆக்கிரகாயணி | புது நெல்லைக்கொண்டு மிருகசீரிடப் பூரணையில் செய்யப்படும் ஒருவகை ஓமம் மார்கழி மாத மதிநிறை நாள் மிருக சீரிடம் |
ஆக்கிரகித்தல் | பலவந்தமாயெடுத்தல் வெல்லல் |
ஆக்கிரந்திதம் | குதிரை நடைவகை ஐந்தனுள் ஒன்றான விரைவு நடை |
ஆக்கிரமணம் | வலிந்து கவர்கை |
ஆக்கிரமம் | அடைதல் கடந்துபோதல் மேலெழுச்சி வீரம் |
ஆக்கிரமி | கவர்ந்துகொள்ளுதல் கைப்பற்றுதல் வலிமையைக் கைக் கொள் [ஆக்கிரமித்தல், ஆக்கிரமணம்] |
ஆக்கிரமி | (சட்ட விரோதமாக ஓர் இடத்தை, நாட்டை) கவர்ந்துகொள்ளுதல் |
ஆக்கிரமித்தல் | கையகப்படுத்தல் |
ஆக்கிரமித்தல் | வலிந்து கவர்தல் உள்ளே அடக்கிக்கொள்ளுதல் மேற்கொள்ளுதல் |
ஆக்கிரமிப்பு | 1.(நாட்டைக் கைப்பற்றும் எண்ணம் கொண்ட)போர் நடவடிக்கை 2.உரிமை இல்லாத இடங்களில் அமைக்கப்படும் வீடு கடை முதலியவை 3.ஆதிக்கம் |
ஆக்கிரமிப்பு | (நாட்டைக் கைப்பற்றும் நோக்கம் கொண்ட) போர் நடவடிக்கை |
ஆக்கிராணப்பொடி | மூக்குத்தூள் |
ஆக்கிராணம் | மோந்துபார்க்கை மூக்கு மூக்கில் இடும் மருந்துப்பொடி |
ஆக்கிராணவிந்திரிகம் | மூக்கு |
ஆக்கிராணவிந்திரியகாட்சி | ஓரளவைந்து கந்தமறிதல் |
ஆக்கிராணித்தல் | மோத்தல் |
ஆக்கிராந்தம் | கைக்கொள்ளப்பட்டது பாரமேற்றப்பட்டது மறைக்கப்பட்டது மேலிடப்பட்டது வெல்லப்பட்டது |
ஆக்கிரோசனம் | சாபம் |
ஆக்கிரோஷம் | வெறி : ஆவேசம் |
ஆக்கினாகரணம் | கீழ்ப்படிதல் |
ஆக்கினாகரன் | ஏவல்செய்வோன் |
ஆக்கினாசக்கரம் | ஆணை செங்கோன்முறைமை |
ஆக்கினாசக்கரம் | சக்கரம்போல் எங்கும் சுழலும் அரசன் ஆணை |
ஆக்கினாசத்தி | அரசனாணையின் வன்மை |
ஆக்கினாதானம் | இலாடத்தானம் |
ஆக்கினாபங்கம் | ஆணை மீறுகை |
ஆக்கினாபத்திரம் | கட்டளைச்சட்டம் |
ஆக்கினாபயதி | ஆணவேதி |
ஆக்கினேயம் | அக்கினிக்குரியது தென்கீழ்த்திசை காண்க : ஆக்கினேயாத்திரம் ஆக்கினேய புராணம் சிவாகமத்துள் ஒன்று திருநீறு |
ஆக்கினேயாத்திரம் | அக்கினியைத் தேவதையாகக் கொண்ட அம்பு |
ஆக்கினை | கட்டளை உத்தரவு தண்டனை |
ஆக்கினை | தண்டனை கட்டளை கட்டைவிரல் |
ஆக்கினைப்பத்திரம் | அரசனது எழுத்து மூலமான கட்டளை |
ஆக்கு | படைத்தல் உண்டாக்குதல் உருவாக்குதல் |
ஆக்கு | படைப்பு |
ஆக்கு1 | படைத்தல் |
ஆக்குத்தாய் | அநீதியாய் |
ஆக்குதல் | செய்தல் படைத்தல் சமைத்தல் அமைத்துக்கொள்ளுதல் மாற்றுதல் உயர்த்துதல் |
ஆக்குப்புரை | சமையற் பந்தல் |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.
