Tamil To Tamil Dictionary
| Tamil Word | Tamil Meaning |
| காவுகொடு | (காளி முதலிய தெய்வங்களுக்கு) உயிரை பலி கொடுத்தல் |
| காவுகொள் | (உயிர்) பலி ஏற்றல் |
| காவுதடி | காவடித் தண்டு |
| காவுதல் | காவடி சுமத்தல் சுமத்தல் விரும்புதல் |
| காவுப்பொட்டு | பூசாரி நெற்றியிலணியும் அஞ்சனப் பொட்டு |
| காவுவோர் | பல்லக்குச் சுமப்போர் |
| காவெட்டு | பழுக்கத் தொடங்கியிருக்கும் காய் |
| காவேரிமணல் | அயமணல் |
| காவேளை | காய்வேளைப் பூண்டு |
| காவோலை | முற்றின வோலை |
| காழ் | மரவயிரம், மனவுறுதி கட்டுத்தறி தூண் ஓடத்தண்டு இருப்புக்கம்பி யானைப் பரிக்கோல் கதவின் தாழ் விறகு காம்பு கழி இரத்தினம் முத்து பளிங்கு பூமாலை மணிவடம் நூற்சரடு விதை கொட்டை கருமை குற்றம் |
| காழகம் | கடாரம் ஆடை கைக்கவசம் கருமை |
| காழ்கொள்ளுதல் | முதிர்தல் |
| காழ்கோளி | நெட்டிலிங்கம் |
| காழ்த்தல் | முற்றுதல் மனவயிரங்கொள்ளுதல் அளவுகடந்து மிகுதல் உறைத்தல் |
| காழ்ப்பு | உறைப்பு வயிரம் மனவயிரம் தழும்பு சாரம் |
| காழ்ப்பு | பகைமையுடன் கூடிய வெறுப்பு |
| காழம் | உடை விசேடம் |
| காழ்வை | அகில் |
| காழி | உறுதி சீகாழி |
| காழியர்கோன் | திருஞானசம்பந்தர் |
| காழியன் | பிட்டுவாணிகன் உப்புவாணிகன் வண்ணான் |
| காழூன்றுகடிகை | குத்துக்கோல் கூடாரம் |
| காழோர் | குத்துக்கோலுடைய யானைப்பாகர் |
| காளகண்டம் | குயில் |
| காளகண்டம் | குயில் மயில் கரிக்குருவி ஊர்க்குருவி வேங்கைமரம் |
| காளகண்டன் | சிவன். (உரி. நி.) |
| காளகண்டன் | கறுத்த கழுத்துடைய சிவன் |
| காளகண்டி | துர்க்கை ஒருகெட்ட நாள் |
| காளகம் | சேங்கொட்டை மருக்காரைச் செடி எக்காளம் கருமை |
| காளகூடம் | ஆலகாலம், நஞ்சு ஒரு நரகம் |
| காளச்சிலை | வைடூரியம் |
| காளசுந்தரி | கறுத்த கழுத்தையுடைய பார்வதி |
| காளஞ்சி | தாம்பூலக்கமலம் |
| காளத்தி | சீகாளத்தி என்னுஞ் சிவதலம் மகிழ்ச்சி பொங்கக் காளத்தி கண்டுகொண்டு (பெரியபு. கண்ணப்ப. 100) |
| காளபதம் | மாடப்புறா |
| காளபந்தம் | ஒரு விளக்கு |
| காளபம் | போர் |
| காளம் | கருமை நஞ்சு பாம்பு எட்டிமரம் மேகம் நல்வினைக்கு காரணமான பெருமழை கழு ஊதுகொம்பு அவுரிப்பூண்டு சூலம் சக்கரப்படை |
| காளமுகி | கல்மழையைப் பொழியும் மேகம் |
| காளமேகம் | கரு மேகம் ஒரு புலவன் |
| காளயுக்தி | அறுபதாண்டுக் கணக்கில் ஐம்பத்திரண்டாம் ஆண்டு |
| காளவனம் | சுடுகாடு |
| காளவாய் | கழுதை செங்கல் சுண்ணாம்பு சுடும் சூளை |
| காளவாய் | மட்பாண்டங்கள், செங்கற்கள், சுண்ணாம்பு முதலியவற்றைச் சுட்டு எடுக்கப் பயன்படுத்தும் பெரிய அடுப்பு |
| காளவாய்க் கல் | சுட்ட புதுச்செங்கல் |
| காளவாயன் | உரக்கக் கத்துபவன் |
| காளவிளக்கு | திருவிழா முதலிய சிறப்புக் காலங்களில் பயன்படுத்தும் பெருவிளக்கு |
| காளாஞ்சி | களாஞ்சி |
| காளாத்திரி | பாம்பின் நான்கு நச்சுப் பற்களுள் ஒன்று |
| காளாம்பி | நாய்க்குடை |
| காளான் | நாய்க்குடை |
| காளான் | மழை பெய்த சில நாட்களுக்குப் பின் நிலத்தில் முளைக்கும் ஒரு வகைத் தாவரம் |
| காளி | துர்க்கை: பார்வதி சிங்கம் கரியவள் வாயுமூர்த்தியான காளரின் சக்தி பதினெட்டு உபபுராணத்துள் ஒன்று பாம்பின் நச்சுப் பற்களுள் ஒன்று மணித்தக்காளி எட்டி காட்டுமுருக்கு கக்கரி |
| காளி | கரிய நிறமுடைய ஒரு பெண் தெய்வம் |
| காளிக்கங் கட்டுதல் | கருஞ்சாயங் கூட்டுதல் |
| காளிக்கம் | ஒருவித நீலச்சாயம் செப்புத்தாது உள்ள மலை |
| காளிக்கமெழுதுதல் | சீலைத்துணியில் கருஞ்சாய ரேகை எழுதுதல் |
| காளிகம் | மணித்தக்காளிச் செடி உபபுராணம் பதினெட்டனுள் ஒன்று |
| காளிங்கமர்த்தனன் | காளிங்கன் என்னும் நாகத்தின்மீது பாதங்களை வைத்து ஆடித்துவைத்த கண்ணபிரான் |
| காளிங்கராயன் | தமிழ்மன்னர்களால் அரசாங்கத் தலைவர் சிலருக்கு வழங்கப்பட்ட பட்டப் பெயர் கள்ளர்குலப் பட்டப்பெயருள் ஒன்று |
| காளித்தனம் | மூர்க்கத்தனம் |
| காளிதம் | களிம்பு கறுப்பு |
| காளிந்தம் | ஏலம் பாம்பு |
| காளிந்தி | யமுனையாறு வாகை தேக்கு |
| காளிப்பணம் | 3 அணா 4 பைசா கொண்ட பழைய நாணயம் |
| காளிமம் | களிம்பு கறுப்பு |
| காளிமை | களிம்பு கறுப்பு |
| காளியன் | கண்ணபிரான் தன் பாதங்களால் தலையில் மிதித்தாடப்பெற்ற பாம்பு |
| காளினியம் | கத்தரிச்செடி |
| காளை | இளவெருது எருது கட்டிளமைப்பருவத்தினன் ஆண்மகன் பாலைநிலத்தலைவன் வீரன் |
| காளை | இளமைப் பருவத்தில் உள்ள (இனவிருத்திக்கான) ஆண் மாடு |
| காளைக்கன்று | ஆவின் ஆண்கன்று |
| காளைமாடு | எருது |
| காளையங்கம் | போர் |
| காளையம் | போர் ஆரவாரம் |
| காற்கட்டு | தடை கலியாணம் |
| காற்கடுப்பு | கால் உளைச்சல் |
| காற்கடைகொள்ளுதல் | புறக்கணித்தல், அலட்சியம் பண்ணுதல் |
| காற்கவசம் | மிதியடி, பாதரட்சை |
| காற்காந்தல் | காற்புண் |
| காற்காப்பு | காலில் அணியும் காப்பு |
| காற்காறை | தெய்வத் திருமேனியின் பாதங்களிற் சாத்தும் அணிகலன் |
| காற்குடைச்சல் | காலுளைவு |
| காற்குப்பாயம் | காற்சட்டை |
| காற்குளம் | பூசநாள் |
| காற்கொட்டை | காலுக்கிடும் திண்டு |
| காற்கோமாரி | கால்நடைகளுக்கு வரும் கால்நோய்வகை |
| காற்சட்டை | சல்லடம் |
| காற்சரி | ஒரு காலணி: பாதரசம் |
| காற்சவடி | பாதசாலம் |
| காற்சிராய் | காற்சட்டை |
| காற்சிலம்பு | காலணிவகை |
| காற்சீப்பு | இடுப்புச் சந்தெலும்பு |
| காற்சுவடு | அடிவைப்பின் குறி |
| காற்சுற்று | மகளிர் கால்விரலில் அணியும் அணிவகை |
| காற்படம் | விரலை அடுத்திருக்கும் பாதத்தின் அடிப்பக்கம் புறவடி |
| காற்படுதல் | அழிதல் |
| காற்படை | காலாட்படை கோழி கட்டட அடிப்படையில் தரைக்கு மேலுள்ள பகுதி |
| காற்பரடு | புறவடி |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.