Tamil To Tamil Dictionary
Tamil Word | Tamil Meaning |
அறிவினா | அறிந்து கேட்கும் கேள்வி |
அறிவீனம் | முட்டாள்தனம் |
அறிவீனம் | மடமை |
அறிவீனன் | மூடன் |
அறிவீனன் | அறிவுக்குறையுடையோன் மூடன் |
அறிவு | கல்வி மற்றும் அனுபவத்தால் கிடைக்கும் செயல் திறன் (அல்லது) தகவலறிவு புரிந்து கொள்ளுதல் புலமை ஞானம் |
அறிவு | ஞானம் புத்தி பொறியுணர்வு அறிய வேண்டியவை கல்வி ஆன்மா |
அறிவு | அனுபவம், சிந்தனை போன்ற முறைகளின் மூலமாகப் பெற்றுத் தெரிந்துவைத்திருப்பது |
அறிவுக்கொழுந்து | (பெரும்பாலும் கேலியாக)அறிவாளி |
அறிவுகேடன் | ஞானமற்றவன் |
அறிவுகொளுத்துதல் | புத்தி புகட்டுதல் |
அறிவுசார் சொத்துரிமை | தன்னுடைய கண்டுபிடிப்பு படைப்பு போன்றவற்றில் தான் செலுத்திய அறிவுத்திறன் மீது ஒருவர் பெற்றிருக்கும் உரிமை |
அறிவுடைமை | ஒரு செயலைச் செய்வதற்குத் தேவையான அறிவைப் பெற்றிருக்கும் தன்மை |
அறிவுடைமை | உண்மை அறிவுடையவனாதல் |
அறிவுநினைவு | சுயநினைவு |
அறிவுநூல் | ஞான சாத்திரம் |
அறிவுபயிற்சி | படிப்பு |
அறிவுபிறத்தல் | ஞானம் உண்டாதல் மூர்ச்சை தெளிதல் |
அறிவுபுகட்டுதல் | அறிவூட்டுதல் |
அறிவுமயங்குதல் | நினைவு தவறுதல் திகைத்தல் |
அறிவுரை | ஆலோசனை புத்திமதி |
அறிவுரை | நன்மை விளைவிக்கும் என்னும் நோக்கில் ஒருவர் மற்றொருவருக்கு வழங்கும் கருத்து |
அறிவுவரம்பிகந்தோன் | அருகன் வரம்புகடந்த அறிவினையுடையோன் |
அறிவுவரம்பிகந்தோன் | மிகுந்த அறிவினையுடையவன், அருகன் |
அறிவுறால் | அறிவுறுத்துகை |
அறிவுறு | அறிதல துயிலெழுதல். கிடந்துறங்குஞ் சீரிய சிங்க மறிவுற்று (தி. திருப்பா. 23) |
அறிவுறுத்து | (தெரிவித்தபடி நடந்துகொள்ளுமாறு) கேட்டுக்கொள்ளுதல்,பணித்தல் தெரிவித்தல் அறிவு புகட்டுதல் |
அறிவுறுத்து | (தெரிவித்தபடி நடந்துகொள்ளுமாறு) கேட்டுக்கொள்ளுதல் |
அறிவுறுத்துதல் | தெரிவித்தல் அறிவுபுகட்டுதல் |
அறிவுறுதல் | அறிதல் துயில் எழுதல் |
அறிவுஜீவி | சிந்தனையை வாழ்க்கை முறையாகக் கொண்டவர் |
அறிவை | ஞானம் |
அறிவைபங்காளன் | சிவன் |
அறிவொப்புக்காண்டல் வினா | தான் அறிந்ததைப் பிறன் அறிவோடு ஒப்புநோக்கக் கேட்கும் கேள்வி |
அறிவொளி | அறிவுடையவன் அறிவைப் பரப்புபவன் |
அறு | (கயிறு,இழை போன்றவற்றை)துண்டாக்குதல்,வெட்டுதல் அற்றது, ஆறு, ஒழி |
அறு1 | (கயிறு, இழை, தந்திக் கம்பி முதலியன) துண்டாதல் |
அறு2 | (கூரிய பரப்புடைய ஒன்றை) முன்னும் பின்னும் நகர்த்தி வெட்டுதல் |
அறுக்கணக்கு | சரக்கறைக் கணக்கு |
அறுக்கரிவாள் | கருக்கறுவாள் |
அறுக்கன் | தலைவன் நெருக்கமான நண்பன் |
அறுக்கை | பாதுகாப்பு |
அறுகடி | அறுகு பற்றிய நிலம் |
அறுகரிசி | அட்சதை |
அறுகரிசி | அறுகம்புல்லோடு கூடிய மங்கல அரிசி, அட்சதை |
அறுகழி | நீரற்றகழி |
அறுகால் | (கதவின்) நிலை |
அறுகால் | வண்டு பாம்பு இல்லாதபோது |
அறுகாலன் | பாம்பு |
அறுகாழி | மோதிரவகை |
அறுகாற்பீடம் | ஆறு கால்கள் அமைந்த இருக்கை |
அறுகிடுதல் | திருமணத்தில் அறுகு இட்டு வாழ்த்துதல் |
அறுகிலிப்பூடு | பூண்டுவகை |
அறுகீரை | அறைக்கீரை |
அறுகீரை | பாத்திக் கீரைவகை |
அறுகு | அறுகம்புல் சிங்கம் புலி யானையாளி யானை வெளித்திண்ணை தெருப்பந்தல் |
அறுகுணன் | ஆறு குணங்களோடு கூடியவன் பகவன் |
அறுகுதராசு | சிறுதராசு |
அறுகுதராசு | சிறு தராசு |
அறுகுவெட்டுத் தரிசுகூலி | தரிசு நிலத்திலுள்ள காடுகளை வெட்டிச் செம்மை செய்து உழவுக்குக் கொண்டுவந்தவர்க்கு அதுபற்றி அந்நிலத்தில் ஏற்பட்ட அனுபோக உரிமை |
அறுகுறும்பு | (விளையாட்டுத்தனமான குறும்பு |
அறுகுறை | கவந்தம், முண்டம் |
அறுகெடுத்தல் | அறுகிட்டு வாழத்தல் பூசித்தல் |
அறுகெழுந்தபடுதரை | அறுகு முளைத்து உழவுக்குப் பயன்படாத தரிசுநிலம் |
அறுகை | அறுகம்புல் |
அறுகோணம் | ஆறு பக்கங்களை உடைய படம் |
அறுகோணம் | ஆறு மூலைகொண்ட வடிவம் |
அறுகோணம் | ஆறு (சம) கோணமுடைய வடிவம் |
அறுசமயம் | ஆறு வகையான வைதிக மதங்கள் அவை : சைவம், வைணவம், சாக்தம், சௌரம், காணபத்தியம், கௌமாரம் |
அறுசரம் | ஓசையாழ் |
அறுசரம் | யாழ் |
அறுசரிக்கை | அநுசரித்தல் |
அறுசீர்க்கழி நெடிலடி | ஆறுசீர்கொண்டகழி நெடிலடி |
அறுசுவை | கைப்பு இனிப்பு புளிப்பு துவர்ப்பு உவர்ப்பு கார்ப்பு |
அறுசுவை | கைப்பு, இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, உவரப்பு, கார்ப்பு என்னும் ஆறு வகையான சுவைகள் |
அறுசுவை | இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, உறைப்பு, கசப்பு ஆகிய ஆறு சுவைகள் |
அறுசூலை | ஆறு வகையான நோய் அவை : பித்தசூலை, வாதசூலை, சிலேட்டுமசூலை, வாதபித்த சூலை, சிலேட்டுமபித்த சூலை, ஐயகணச்சூலை |
அறுத்தல் | அரிதல், ஊடறுத்தல், செங்கல் அறுத்தல், தாலியறுத்தல், இடைவிடுதல் பங்கிட்டுக் கொடுத்தல் முடிவுசெய்தல் வளைதோண்டல் வருத்துதல் நீக்குதல் இல்லாமற் செய்தல் வெல்லுதல் செரித்தல் |
அறுத்தவள் | கைம்பெண் |
அறுத்திசைப்பு | வேற்றிசை கலந்து வரும் ஒருவகை யாப்புவழு |
அறுத்திடல் | அவாவறுக்கை |
அறுத்துக்கட்டு | (குறிப்பிட்ட சில சாதிகளில் கணவன் இறந்த பிறகு)மறுமணம் செய்து கொள்ளுதல்/கனவனோடு கொண்ட கருத்து வேற்றுமையால் தாலியைக் கழட்டித் தந்துவிட்டு வேறுமணம் செய்து கொள்ளல் |
அறுத்துக்கட்டுதல் | தாலி நீங்கியபின் மறுதாலி கட்டி மணத்தல் |
அறுத்துப்பேசுதல் | தீர்மானமாகப் பேசுதல் |
அறுத்துமுறி | மனைவியைத் தள்ளிவிடுகை |
அறுத்துரைத்தல் | வரையறுத்துச் சொல்லுதல் பிரித்துச் சொல்லுதல் |
அறுத்துவிட்டவள் | கைம்பெண் |
அறுத்தோடி | அரித்தோடும் நீரோட்டம் |
அறுதல் | கயிறு முதலியன இறுதல் இல்லாமற்போதல் தீர்தல் பாழாதல் செரித்தல் தங்குதல் நட்புச் செய்தல் கைம்பெண் |
அறுதலி | கைம்பெண் |
அறுதாலி | கைம்பெண் |
அறுதி | (மாற்றமுடியாத)முடிவு, இறுதி (நிலம்,வீடு போன்றவற்றை குறிப்பிட்ட காலத்திற்குள் மீட்டுவிடுவதாகக் கூறி வைக்கும் அடமானம் முடிவு. அறுதி யாகவின் றருஞ்சமர் முடித்தும் (பாரத. பதினெட். 46) அறுதிக்கிரயம்.அறுதியீ தென்றுகொண்டு (திருவாலவா. 46, 32) அறுதிக்குத்தகை நாசம். அறுதியிலரனே (சி. சி. 1, 35, சிவாக்.) இல்லாமை வரையறை. காடு மன்னுநின் புதல்வருக் கறுதிசெய் காலமோ (பாரத. உலூக. 16) உரிமை. செம்மகள் கரியோற் கறுதி யாக (கல்லா. 17) வரை. அன்றுமுத லின்றறுதியா (திவ். பெரியாழ். 4, 10, 9) |
அறுதி | முடிவு வரையறை இல்லாமை அழிவு உரிமை அறுதிக் குத்தகை காண்க : அறுதிக்கிரயம் |
அறுதி | (மாற்ற முடியாத) முடிவு |
அறுதிக்கரை | நிலங்களைச் சமுதாயத்தில் வைக்காமல் தனித்தனியாய் உரிமையுள்ளவர்களுக்குப் பிரித்துக்கொடுக்கும் முறை |
அறுதிக்களநடை | ஆண்டிறுதி நெற்கணக்கு |
அறுதிக்கிரயம் | முடிவான விலை |
அறுதிச்சாசனம் | விலையாவணம் |
அறுதிச்சாதனம் | அறுதிச்சீட்டு |
அறுதிச்சீட்டு | விலையாவணம் |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.
