Tamil To Tamil Dictionary
Tamil Word | Tamil Meaning |
வெம்பல் | (காய்கறியைக் குறிக்கையில்) வெப்பத்தால் பாதிக்கப்பட்டது |
வெம்பளிக்கை | இறுமாப்பு |
வெம்பறவை | எண்காற்புள் |
வெம்பா | மூடுபனி |
வெம்பிளிக்கை | இறுமாப்பு பொருட்படுத்தாமை |
வெம்பு | (பயன்படுத்த முடியாத அளவுக்கு வெப்பத்தால்) பிஞ்சிலேயே பழுத்தல் |
வெம்புதல் | மிகச் சூடாதல் வாடுதல் முதிராது கனிதல் சினத்தல் மனம்புழுங்குதல் விரும்புதல் ஒலித்தல் |
வெம்மை | வெப்பம், கடுமை சினம் விருப்பம் வீரம் |
வெம்மை | (எரியும் பொருளிலிருந்து வீசும்) வெப்பம் |
வெய்து | வெப்பமுள்ளது. சிறுநெறி வெய்திடை யுறாஅ தெய்தி (அகநா. 203) வெப்பம். (மதுரைக். 403, உரை.) வெப்பமுள்ள பொருளாலிடும் ஒற்றடம் துக்கம். வெய்துறு பெரும்பயம் (ஞானா. 35, 3) விரைவில். வேந்தன் வெருவந்து வெய்துகெடும் (குறள், 569) |
வெய்து | வெப்பமுடையது வெப்பம் துயரம் வெப்பமுள்ள பொருளாலிடும் ஒற்றடம் |
வெய்துயிர்த்தல் | வெப்பமாக மூச்சுவிடுதல் துன்பத்தால் மூச்சுவிடுதல் |
வெய்துயிர்ப்பு | வெப்பமூச்சு பெருமூச்சு |
வெய்துரை | கடுஞ்சொல் |
வெய்துறுதல் | துன்புறுதல் மனங்கலங்குதல் சினத்தல் |
வெய்தெனல் | விரைவுக்குறிப்பு வெம்மைக்குறிப்பு கொடுமைக்குறிப்பு |
வெய்ய | வெப்பமான. வெய்ய கதிரோன் விளக்காக (திவ். இயற். 1, 1) கொடிய விரும்புதற்குரிய. வெய்யநெய் (தக்கயாகப். 506) |
வெய்ய | வெப்பமான கொடிய விரும்புதற்குரிய |
வெய்யது | சூடானது கொடியது தாங்கமுடியாதது |
வெய்யவன் | கொடியவன் சூரியன் விருப்பமுள்ளவன தீக் கடவுள் |
வெய்யன் | கொடியவன் சூரியன் விருப்பமுள்ளவன் தீக் கடவுள் |
வெய்யில் | சூரிய வெளிச்சம் சூரிய வெப்பம் கதிரவன் ஒளி |
வெய்யோன் | கொடியவன் சூரியன் விருப்பமுள்ளவன தீக் கடவுள் |
வெயர் | வேர்வைநீர் |
வெயர்த்தல் | வேர்வை நீருண்டாதல் சினத்தல் |
வெயர்ப்பு | வேர்வைநீர் வேர்வையுண்டாகை சினம் |
வெயர்வை | வேர்வைநீர் |
வெயில் | சூரிய வெளிச்சம் சூரிய வெப்பம் கதிரவன் ஒளி |
வெயில் | வெப்பத்துடன் கூடிய சூரிய ஒளி |
வெயிலடித்தல் | சூரியன் ஒளிவீசல் சூரியக்கதிர் வெப்பமாயிருக்கை |
வெயில்நீக்கி | குடை |
வெயிலுறைத்தல் | சூரியஒளி வெப்பமாயிருக்கை |
வெயிலெறித்தல் | சூரியன் ஒளிவீசல் சூரியக்கதிர் வெப்பமாயிருக்கை |
வெயிலோன் | சூரியன் |
வெயிற்குளித்தல் | வெயிலிற் காய்தல் குளிர் காயச் சூரியவெப்பத்தி லிருத்தல் |
வெயின்மறை | வெயிலை மறைக்கும் கருவி |
வெரிந் | முதுகு |
வெரு | அச்சம் |
வெருக்குவிடை | காட்டுப்பூனையின் ஆண் |
வெருக்கொள்ளுதல் | அஞ்சுதல் |
வெருக்கோள் | அச்சங்கொள்ளுகை |
வெருகடிப்பிரமாணம் | மூன்றுவிரலாற் கிள்ளும் அளவு |
வெருகம் | வாலின் கீழிடம் |
வெருகு | ஆண்பூனை காட்டுப்பூனை மரநாய் செடிவகை வெண்கிடை மெருகு |
வெருட்சி | அச்சம் மருட்சி மருளுகை |
வெருட்டி | வெருட்டுவது |
வெருட்டு | பயமுறுத்துதல் |
வெருட்டுதல் | அச்சுறுத்துதல் திகைக்கச்செய்தல் விலங்கு முதலியவற்றை ஓட்டுதல் விரைவாகச் செல்லத் தூண்டுதல் |
வெருப்பறை | போர்முரசு |
வெருவந்தம் | அச்சம் |
வெருவரல் | அச்சந்தருதல் அஞ்சுதல் |
வெருவருதல் | அச்சந்தருதல் அஞ்சுதல் |
வெருவருநிலை | பகைவர் அம்பு தன் மார்பைப் பிளப்பவும் பூமியில் விழாமல் நின்ற வீரனது நிலையைக் கூறும் புறத்துறை |
வெருவலர் | பகைவர் |
வெருவாமை | அஞ்சாமை |
வெருவு | அச்சம் |
வெருவுதல் | அஞ்சுதல் |
வெருவெருத்தல் | அஞ்சுதல் |
வெருள் | அச்சம் மனக்கலக்கம் அஞ்சத்தக்கது |
வெருள் | மிரளுதல் |
வெருள்ளு | மருளுதல். எனைக்கண்டார் வெருளா வண்ணம் மெய்யன்பை யுடையாய் பெறநான் வேண்டுமே (திருவாச. 32, 3) அஞ்சுதல். பெருங்குடி யாக்கம் பீடற வெருளி (பெருங். மகத. 24, 84) குதிரை முதலியன மருளுதல் |
வெருளார்த்தல் | திகைத்தல் மயங்குதல் |
வெருளி | செல்வச்செருக்கு வெருட்சி வெருளச்செய்யும் புல்லுரு முதலியன |
வெருளி | சோளக்கொல்லைப் பொம்மை |
வெருளிப்பிணை | பெண்மான்வகை |
வெருளுதல் | மருளுதல் அஞ்சுதல் குதிரை முதலியன மருளுதல் |
வெரூஉ | அச்சம் |
வெரூஉதல் | மருண்டஞ்சுகை |
வெல் | வெல்லு வெல்லல் வெல்லுதல் வேறல் வென்றவன் வென்றோன் |
வெல் | (போர், போட்டி முதலியவற்றில்) வெற்றி அடைதல் |
வெல¦இயோன் | வெல்வித்தோன் |
வெல்புகழ் | போர்க்கண் வெற்றியால் உண்டாம் கீர்த்த |
வெல்லப்பாகு | கருப்பஞ்சாற்றைக் காய்ச்சி உண்டாக்குங் குழம்பு |
வெல்லம் | 10000000000000000 |
வெல்லம் | கருப்பஞ்சாற்றுக்கட்டி |
வெல்லம் | கரும்புச் சாற்றை அல்லது பதநீரைக் காய்ச்சித் தயாரிக்கப்படும் கட்டியான இனிப்புப் பொருள் |
வெல்லல் | வெற்றியடைதல் வாயுவிளங்கம் |
வெல்லவட்டு | வெல்லத்தைக் காய்ச்சிச் சக்கரமாக ஊற்றிய துண்டு |
வெல்லி | சிற்றேலம் வல்லவர் |
வெல்லுதல் | வெற்றிபெறுதல் ஒத்தல் ஒழித்தல் மேம்படுதல் |
வெல்லுமா | புலி |
வெல்லை | வெள்ளைநிறம் |
வெல்வி | வெற்றி |
வெலவெலத்தல் | நடுங்குதல் |
வெலவெலத்தல் | களைத்தல் கைகால் உதறுதல் வியத்தல் |
வெலிகம் | கற்றாழை |
வெலிகாரம் | மருந்துச்சரக்கு |
வெவ்வர் | வெம்மை |
வெவ்விடாய் | கடுந்தாகம் |
வெவ்விது | சூடானது கொடியது |
வெவ்வினை | போர் கொடிய வினை |
வெவ்வுயிர்த்தல் | வெப்பமாக மூச்சுவிடுதல் |
வெவ்வுரை | கடுஞ்சொல் |
வெவ்வுழவு | மேலுழவு |
வெவ்வெஞ்செல்வன் | வெம்மையுடையதும் விரும்பப்படுவதுமாகிய இளஞாயிறு |
வெவ்வேகம் | கொடிய நஞ்சு |
வெவ்வேறாக | தனித்தனியாக |
வெவ்வேறான/வெவ்வேறு | தனித்தனியாக உள்ள |
வெவ்வேறு | வேறுவேறு தனித்தனி |
வெள் | வெண்மையான. வெள்ளரைக் கொளீஇ (மலைபடு. 562) உள்ளீடற்ற கலப்பில்லாத ஒளி பொருந்திய. வெள்வேல் விடலை (அகநா. 7) |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.
