Tamil To Tamil Dictionary
Tamil Word | Tamil Meaning |
வெள் | வெண்மையான உள்ளீடற்ற கலப்பில்லாத ஒளிபொருந்திய கூர்மை |
வெள்குதல் | வெட்குதல் அஞ்சுதல் கூச்சப்படுதல் மனங்குலைதல் |
வெள்யாடு | ஓர் ஆட்டுவகை |
வெள்வரகு | வரகுவகை |
வெள்வரி | பலகறை கண்ணோய்வகை காண்க : வெள்ளரி |
வெள்வரைத்தல் | கிழக்கு வெளுத்தல் |
வெள்வரைப்பு | கிழக்கு வெளுத்தல் |
வெள்வளையார் | மகளிர் |
வெள்வாடை | இளந்தென்றல் |
வெள்வாள் | ஒளியுள்ள வாள் |
வெள்விழி | வெள்ளை விழி |
வெள்விளர்த்தல் | மிக வெண்மையாதல் |
வெள்வீச்சு | வெற்றுப்பேச்சு |
வெள்வெங்காயம் | பூடுவகை உள்ளி |
வெள்வெடி | வெற்றுத்தோட்டா காண்க : வெள்வீச்சு வெருட்டு |
வெள்வேல் | வேலமரவகை |
வெள்ளக்காடு | நீர்ப் பெருக்கு |
வெள்ளக்காடு | பெருவெள்ளம் நீரால் நிலப்பரப்பு நிறைகை |
வெள்ளக்காடு | வெள்ளத்தால் எங்கும் நீர் நிறைந்திருக்கும் நிலை |
வெள்ளக்கால் | வெள்ளநீர் |
வெள்ளக்கேடு | வெள்ளமிகுதியால் நேரும் பயிர்க்கேடு |
வெள்ளச்சாவி | வெள்ளமிகுதியால் நேரும் பயிர்க்கேடு |
வெள்ளடி | வெளிப்படை உள்ளீடின்மை பொது பொதுவானது வெறுங்கால் வெண்பாவுக்குரிய அடி வெருட்டு |
வெள்ளடிச்சேவல் | காலின் முள் செதுக்கப்படாத சண்டைச்சேவல் |
வெள்ளடை | வெற்றிலை பரமாகாசம் ஒரு சிவதலம் |
வெள்ளணி | பிறந்தநாள் ஒப்பனை வெள்ளிய ஆடை அரசன் பிறந்தநாள் விழா |
வெள்ளப்பாடு | வெள்ளமிகுதியால் வருமழிவு பள்ளமான வயல்நிலம் |
வெள்ளப்பாழ் | வெள்ளமிகுதியால் நேரும் பயிர்க்கேடு |
வெள்ளம் | நீர்ப்பெருக்கு பெருக்கம் கடல் கடலலை நீர் ஈரம் மிகுதி ஒரு பேரெண் உண்மை |
வெள்ளம் | (மழை முதலியவற்றால்) நீர்ப் பெருக்கு |
வெள்ளர் | வெண்ணிறமுடையார் கபடமற்றவர் |
வெள்ளரணை | சீலையிற் பற்றும் பேன் |
வெள்ளரி | ஒரு கொடிவகை |
வெள்ளரி | நீர்ச்சத்து மிகுந்த, சிறுசிறு விதைகளோடு கூடிய பச்சையாகத் தின்னக் கூடிய காய்/மேற்குறிப்பிட்ட காய் காய்க்கும் கொடி |
வெள்ளலரி | ஒரு பூச்செடிவகை |
வெள்ளவிளர்த்தல் | மிக வெண்மையாதல் |
வெள்ளவெளி | பரமன் உறையும் ஞானாகாசம் |
வெள்ளறிவு | அறிவுக்குறைவு |
வெள்ளறுகு | அறுகம்புல்வகை புல்வகை |
வெள்ளறுவை | வெள்ளை ஆடை |
வெள்ளாட்டி | பணிப்பெண் வைப்பாட்டி |
வெள்ளாடு | ஓர் ஆட்டுவகை |
வெள்ளாடு | அடர்ந்த ரோமம் இல்லாத கரு நிறத் தோல் உடையதும் சிறு கொம்பு உடையதுமான ஒரு வகை ஆடு |
வெள்ளாண்மை | பயிர்த்தொழில் வேளாண்மை |
வெள்ளாம்பல் | ஆம்பல்வகை |
வெள்ளாமை | விவசாயம் |
வெள்ளாமை | கடலாமைவகை காண்க : வேளாண்மை பறையாமை |
வெள்ளாமை | வேளாண்மை |
வெள்ளாவி | வெள் வெள்ளாவிகட்ட ஆடை வெளுத்தல் |
வெள்ளாவி | ஆடை வெளுக்க உதவும் நீராவி |
வெள்ளாவி | (துணிகளை) சலவைச்சோடாக் கரைசலில் அல்லது உவர்மண் கரைசலில் நனைத்துப் பிழிந்து பின்னர் சலவை செய்வதற்கு அவிக்கும் முறை |
வெள்ளாவிகட்டுதல் | வெளுத்தற்குரிய ஆடைகளை நீராவியிலிடுதல் நன்றாக அடித்தல் |
வெள்ளாவிவைத்தல் | வெளுத்தற்குரிய ஆடைகளை நீராவியிலிடுதல் நன்றாக அடித்தல் |
வெள்ளாழன் | வேளாள மரபினன் |
வெள்ளாளர் | நில உடைமையாளர் வேளாண்மை |
வெள்ளாளன் | வேளாள மரபினன் |
வெள்ளாறு | சோழ பாண்டிய நாட்டு எல்லையாக உள்ள ஓர் ஆறு |
வெள்ளானை | இந்திரனது ஐராவதம், வெள்ளையானை, வாலைரசம் |
வெள்ளானையுள்ளோன் | ஐயனார் |
வெள்ளானையூர்ந்தோன் | இந்திரன் |
வெள்ளி | வெண்மை வெண்ணிறமுள்ள உலோகவகை நாணயவகை சுக்கிரன் வெள்ளிக்கிழமை விண்மீன் அறிவுக்குறைவு விந்து ஒரு புலவர் அசுர குருவாகிய சுக்கிரன் |
வெள்ளி விழா | 25 ஆண்டுகள் |
வெள்ளி1 | (ஆபரணங்கள், பாத்திரங்கள் முதலியவை செய்யப் பயன்படும்) விலை உயர்ந்த பளபளப்பான வெண்ணிற உலோகம் |
வெள்ளி2 | சூரியனிலிருந்து இரண்டாவதாக உள்ள கிரகம் |
வெள்ளிக் கோல் | ஒர் நிறை கோல் |
வெள்ளிக்கிழமை | வாரத்தில் ஆறாம் நாள் |
வெள்ளிக்கோல் | துலாக்கோல்வகை |
வெள்ளிச்சரிகை | வெள்ளியால் இழைத்த சரிகை |
வெள்ளிடம் | இடைவெளி |
வெள்ளிடி | கோடையில் மழை பெய்யாது இடிக்கும் இடி எதிர்பாராது திடீரென வரும் இடுக்கண் |
வெள்ளிடை | வெளியிடம் வானம் இடைவெளி தெளிவு |
வெள்ளிடைமலை | யாவரும் அறியும்படி தெளிவாயிருப்பது |
வெள்ளித் திரை | திரைப்படம் |
வெள்ளித்திரை | (திரைப்படம் காட்டுவதற்கான) வெண்ணிறத் திரை |
வெள்ளிது | வெளிப்படையானது |
வெள்ளிநிலை | துயர்தீரச் சுக்கிரன் மழைபெய்வித்தலைக் கூறும் புறத்துறை |
வெள்ளிமலை | கயிலைமலை ஒரு மலை |
வெள்ளிமன்றம் | மதுரைக் கோயிலில் கூத்தப்பிரான் கால்மாறியாடிய மன்றம் |
வெள்ளிமாடம் | அரண்மனைவகை |
வெள்ளிமீன் | சுக்கிரன் |
வெள்ளிமுலாம் | வெள்ளிப்பூச்சு |
வெள்ளியம்பலம் | மதுரைக் கோயிலில் கூத்தப்பிரான் கால்மாறியாடிய மன்றம் |
வெள்ளியார் | வெண்ணிறமுடையவர் நற்குண முள்ளவர் சுக்கிரன் சிவபிரான் |
வெள்ளியுயிர் | மக்கட்பிறப்பு |
வெள்ளியெழுதல் | வெள்ளிமுளைத்தல் |
வெள்ளில் | விளாமரம் விளாம்பழம் பாடை |
வெள்ளிலங்காடு | சுடுகாடு |
வெள்ளிலை | வெற்றிலை ஆயுதங்களின் அலகு வெள்ளிமடந்தைச்செடி |
வெள்ளிலைப்பற்று | வெற்றிலைக் கவளி |
வெள்ளிலோத்திரம் | வெண்பூவுள்ள மரவகை விளாமரம் விளாம்பட்டை |
வெள்ளிவரைகாப்போன் | நந்தி |
வெள்ளிவள்ளி | மகளிரணியும் வெள்ளித்தோள் வளை |
வெள்ளிவிழா | இருபத்தைந்தாம் ஆண்டு நிறைவுக் கூட்டம் |
வெள்ளிவிழா | (கல்லூரி, நிறுவனம் போன்றவற்றின்) இருபத்தைந்து வருட நிறைவை அல்லது (திரைப்படம் போன்றவற்றின்) இருபத்தைந்தாம் வார நிறைவைக் கொண்டாடும் விழா |
வெள்ளிவேர் | சல்லிவேர் |
வெள்ளிழுது | வெண்ணெய் |
வெள்ளீயம் | ஓர் ஈயவகை |
வெள்ளீயம் | பித்தளைப் பாத்திரங்களுக்கு முலாம் பூசப் பயன்படும் வெள்ளி நிற ஈயம் |
வெள்ளீரல் | மணிக்குடர் |
வெள்ளுப்பு | வெண்மைநிறமான உப்பு |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.
