Tamil To Tamil Dictionary

  

 

 

Tamil WordTamil Meaning
ஜனி பிறத்தல்
ஜாக்கிரதை (-ஆக) (தேவையான) கவனம்
ஜாகை குடியிருக்கும் இடம்
ஜாங்கிரி உளுத்தம் மாவை முறுக்குப் போல எண்ணெய்யில் பொரித்து எடுத்துச் சீனிப் பாகில் போட்டுத் தயாரிக்கும் இனிப்புப் பண்டம்
ஜாடி அகன்ற வாய்ப்பகுதியும் நீள் உருண்டை வடிவ நடுப்பகுதியும் கொண்ட, பீங்கான் முதலியவற்றால் ஆன பாத்திரம்
ஜாடை (-ஆக, -ஆன) (முகபாவம், சைகை முதலியவற்றால்) குறிப்பாகத் தெரிவித்தல்
ஜாடைமாடையாக (வெளிப்படையாக இல்லாமல்) குறிப்பாக
ஜாதகம் (ஒருவருடைய வாழ்நாளில் நடக்கும் நல்ல, தீய பலன்களை) ஒருவர் பிறந்த நேரத்தில் உள்ள கிரகங்களின் நிலைகளை அடிப்படையாகக் கொண்டு கணிக்கும் குறிப்பு
ஜாதி (இந்து சமூகத்தில்) சில பழக்கவழக்கங்களைப் பொதுவாகக் கொண்டிருப்பதும் ஒருவருடைய குடும்பத்தினர், உறவினர் சார்ந்திருப்பதும் பல படி நிலைகளில் அமைக்கப்பட்டதுமான பிரிவு
ஜாபிதா பட்டியல்
ஜாம்பவான் (ஒரு துறையில்) அதிக அனுபவமும் மிகுந்த தேர்ச்சியும் உடையவர்
ஜாமீன் கைதாகிக் காவலில் இருப்பவரை நீதிமன்ற நிபந்தனைகளுக்கு உட்பட்டும் உத்தரவாதம் தந்தும் விடுவித்துக்கொண்டுவரும் முறை/மேற்குறிப்பிட்ட முறையில் உத்தரவாதமாகச் செலுத்த வேண்டிய தொகை
ஜாலக்கு ஜாலம்
ஜாலம் புலன்களைக் கவர்ந்து இழுத்து மயங்கவைக்கும் தன்மையுடையது
ஜாலரா (பாடலுக்கு ஏற்ற வகையில் தாளம் போடப் பயன்படுத்தும்) ஒன்றோடு ஒன்று தட்டி வாசிக்கப்படும் இரு பகுதிகளாக உள்ள வெண்கலக் கருவி
ஜாலராப்போடு உயர் நிலையிலிருப்பவர் சொல்வதையெல்லாம் கண்மூடித்தனமாக ஒப்புக்கொண்டு ஆமோதித்தல்
ஜானவாசம் மாப்பிள்ளை அழைப்பு
ஜாஸ்தி அதிகம்
ஜிகினா (மாலை முதலியவற்றில் அழகுபடுத்துவதற்காகச் சுற்றப்படும்) பளபளப்பான தகர இழை
ஜிப்பா கழுத்து வழியாக அணிந்துகொள்ளும் இறுக்கம் இல்லாத சட்டை
ஜிமிக்கி (காதில் உள்ள தோடு போன்றவற்றுடன் இணைத்துத் தொங்கும்படியாக மாட்டிக்கொள்ளும்) சிறு குடை வடிவத்தில் இருக்கும் ஒரு காதணி
ஜியோமிதி வடிவகணிதம்
ஜில்லா மாவட்டம்
ஜிலேபி மைதா மாவை முறுக்குப் போல எண்ணெய்யில் பொரித்து எடுத்துச் சீனிப் பாகில் போட்டுத் தயாரிக்கும் இனிப்புப் பண்டம்
ஜீயர் வைணவ மடத்தின் தலைவருக்கான பெயர்
ஜீரணம் செரித்தல்
ஜீரணி (உணவுப் பொருள்கள்) செரித்தல்
ஜீரா சீனிப் பாகு
ஜீவகாருண்யம் உயிரினங்களிடம் காட்டும் இரக்கம்
ஜீவநதி நீர் வற்றாத நதி
ஜீவராசி உயிரினம்
ஜீவன் உயிர்
ஜீவனம் பிழைப்பு
ஜீவன்முக்தி மற்றொரு பிறவி என்பதே இல்லாமல் இந்தப் பிறவியிலேயே மோட்சம் அடைவது
ஜீவனாம்சம் மனைவி, சிறு வயதில் உள்ள குழந்தைகள், இயலாத நிலையில் உள்ள பெற்றோர் ஆகியோரைப் பராமரிக்க மறுக்கும் ஒருவர் நீதிமன்ற உத்தரவுப்படி ஜீவனத்திற்காகக் கொடுக்க வேண்டிய தொகை
ஜீவனோபாயம் பிழைப்பு நடத்த வழி
ஜீவாத்(து)மா தனி மனித ஆன்மா
ஜீவாதாரம் ஒருவருடைய வாழ்க்கைக்கு அடிப்படையாக அமைவது
ஜீவி1உயிர்வாழ்தல்
ஜீவி2உயிர்வாழ்வது
ஜீவிதம் உயிர்வாழ்தல்
ஜுரம் காய்ச்சல்
ஜெபி பிரார்த்தித்தல்
ஜெயந்தி (சில தெய்வங்களின், பெரும் தலைவர்களின்) பிறந்த நாள் கொண்டாட்டம்
ஜெயம் வெற்றி
ஜெயி வெற்றி அடைதல்
ஜென்ம விரோதி வாழ்நாள் முழுவதும் மறக்கவோ மன்னிக்கவோ முடியாத அளவுக்குத் தீமை செய்த விரோதி
ஜென்மாந்திரம் (எடுக்கும்) பிறவி
ஜேபி (உடையில்) பை
ஜேஜே-என்று (கூட்டம்) மிகுந்த ஆரவாரத்தோடும் எதிர்பார்ப்போடும்
ஜேஷ்ட (திருமண அழைப்பிதழ் போன்றவற்றில்) மூத்த
ஜைனம் சமணம்
ஜொலி மின்னுதல்
ஜோசியம் சோதிடம்
ஜோசியர் சோதிடர்
ஜோடனை (கவரும் வகையில் செய்யப்படும்) அலங்காரம்
ஜோடி1அலங்கரித்தல்
ஜோடி3ஒரு செயல்பாட்டில் ஈடுபடும் இருவர்
ஜோடு காலணி
ஜோடுதவலை அண்டா வடிவில் இருக்கும் சிறு பித்தளைப் பாத்திரம்
ஜோதி ஒளிப்பிழம்பு
ஜோர் நேர்த்தி
ஜோஸ்யம் சோதிடம்
ஜோஸ்யர் சோதிடர்
ஷரத்து ஒப்பந்தம், சட்டம் போன்றவற்றில் பகுத்து வரிசைப்படுத்தப்பட்டிருக்கும் தனித்தனியான விபரம்
ஷ்ரி திரு
ஷ்ரிமதி திருமதி
ஷரியத் மார்க்க சம்பந்தமாகச் செய்யவேண்டியவற்றையும் செய்யக்கூடாதவற்றையும் தொகுத்துக் கூறும் இஸ்லாமியச் சட்டதிட்டங்கள்
ஷ்ரிலஷ்ரி சைவ மடாதிபதிகளின் பட்டம்
ஷொட்டு பாராட்டும் விதத்தில் தோளில் அல்லது முதுகில் தட்டுதல்
ஷோக்கு (உடையாலும் ஒப்பனையாலும் காட்டும்) உல்லாசத் தோற்றம்
ஆய்தவெழுத்து, முப்பாற்புள்ளி எழுத்து
குற்றெழுத்தின் முன்னர் உயிரோடு கூடிய வல்லெழுத்தாறனுள் ஒன்றன் மேலதாய் இடைவரும் இயல்பினது
   Page 911 of 912    1 909 910 911 912

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil