Tamil To Tamil Dictionary
| Tamil Word | Tamil Meaning |
| வைப்புமுத்து | செயற்கை முத்து |
| வைப்புவைத்தல் | சூனியம் வைத்தல் வைப்பாட்டியாக ஒருத்தியைக் கொள்ளுதல் |
| வைப்புழி | பொருள் முதலியன சேமித்து வைக்கும் இடம் |
| வைபவம் | பெருமை பெரியோர் வரலாறு |
| வைபவம் | (சடங்கு முறையில் நிகழ்த்தும்) கொண்டாட்டம் |
| வைபோகம் | மகிழ்ச்சி அறிவுக்கூர்மை சிற்றின்பக் களிப்பு சீர்மை வயணம் |
| வைபோகி | விவேகி |
| வைமாத்திரேயன் | சக்களத்தி மகன் |
| வைமானிகர் | விமானத்திற் செல்லும் தேவர் |
| வையகம் | மண்ணுலகம் விலங்கு இழுக்கும் வண்டி கூடாரவண்டி சிவிகை ஊர்தி உரோகிணிநாள் |
| வையம் | உலகம் |
| வையம் | பூமி குதிரை இழுக்கும் வண்டி தேர் ஊர்தி கூடாரவண்டி சிவிகை எருது உரோகிணிநாள் விளக்கு யாழ் |
| வையமகள் | நிலமகள் |
| வையாகரணன் | இலக்கணம்வல்லவன |
| வையாபுரி | பழனிமலை |
| வையாளி | குதிரை செல்லும் வழி குதிரையேற்றம் |
| வையாளிவீதி | குதிரை செல்லும் வீதி |
| வையை | மதுரையில் உள்ள ஆறு |
| வையைத்துறைவன் | பாண்டியன் |
| வைர விழா | 60 ஆண்டுகள் |
| வைரக்கடுக்கன் | வயிரமணியிட்டமைந்த காதணி |
| வைரக்கல் | வயிரமணி |
| வைரம் | ஒன்பதுவகை மணியுள் ஒன்று கடினமானது மரக்காழ் செற்றம் பகை வீரத்தின் தன்மை வாச்சியப்பொது |
| வைரம்1 | ஒளியைப் பல திசைகளில் பிரதிபலிக்கும் விலை உயர்ந்த வெண்ணிறக் கல் |
| வைரம்2 | (முற்றிய மரத்தின்) உறுதியான பழுப்பு நிற நடுப் பகுதி |
| வைரவனூர்தி | நாய் |
| வைரவிழா | (கல்விக்கூடம், நிறுவனம் முதலியவற்றின்) அறுபது ஆண்டு நிறைவில் கொண்டாடப்படும் விழா |
| வைராக்கியஞ்சொல்லுதல் | தான் துறவுபூணத் துணிந்துள்ளதை ஆசிரியன்முன் தெரிவித்துக்கொள்ளுதல் |
| வைராக்கியம் | விடாப்பிடி வெறுப்பு உலகப் பற்றின்மை மதவெறி பகை |
| வைராகம் | பற்றின்மை |
| வைராகி | மனவுறுதியுள்ளவன் துறவி |
| வைராவி | மனவுறுதியுள்ளவன் துறவி |
| வைரி | பகைவன் மனவுறுதியுள்ளவன் |
| வைரி1 | (மரத்தில்) வைரம்பாய்தல் |
| வைரி2 | (எந்தக் காலத்திலும் ஒத்துப்போக முடியாத) எதிரி |
| வைரியம் | வீரியம் வெறுப்பு பகை |
| வைரியர் | கூத்தர் பாணர் |
| வைரூப்பியம் | அவலட்சணம் |
| வைரோசனன் | விரோசனன் மகனாகிய மாவலி கதிரவன் வாலி |
| வைலட்சணம் | அழகற்றது |
| வைவஸ்வதி | தென்திசை |
| வைவாகிகம் | (விவாகம்)விவாகத்திற்குரியது |
| வைவு | ஏச்சு இகழ்வு சாபம் |
| வைனதேயன் | கருடன் |
| வைனன் | கருடன் |
| வௌ | கௌவுதல் கொள்ளை அடித்தல் |
| வௌவால் | ஒரு பறவைவகை |
| வௌவால் | விலங்கு போல் குட்டிபோடுவதும் பறவை போல் பறப்பதும் இரவில் இரை தேடுவதுமான ஒரு பிராணி |
| வௌவானத்தி | மண்டபத்தின் மேல்முகடு |
| வௌவியம் | அரைத்த மஞ்சள் |
| வௌவுதல் | கைப்பற்றுதல் ஆறலைத்தல் திருடுதல் கவர்தல் பாவம், பேய் முதலியன பற்றிக்கொள்ளுதல் மேற்கொள்ளுதல் |
| ஜக(ஜ்)ஜோதி | (உலகத்திற்கே ஒளி தருவது போன்ற) மிகுந்த பிரகாசம் |
| ஜகத்குரு | சங்கரர் பெயரில் நிறுவப்பட்ட மடங்களின் தலைவருக்கான பட்டப்பெயர் |
| ஜகம் | உலகம் |
| ஜட்கா | குதிரை வண்டி |
| ஜட்டி | இடுப்பில் அணிந்துகொள்ளும் சிறிய உள்ளாடை |
| ஜடம் | உயிரற்ற பொருள் |
| ஜடாமுடி | ஒன்றோடு ஒன்று சேர்ந்து கற்றையாக இருக்கும் முடி |
| ஜடைபில்லை | பெண்கள் முடியில் திருகி அணிந்துகொள்ளும் கற்கள் பதிக்கப்பட்ட வட்ட வடிவ ஆபரணம் |
| ஜண்டவரிசை | (இசை கற்பவர்களுக்குச் சரளிவரிசைக்குப் பின் கற்றுத் தரப்படும்) ஒவ்வொரு ஸ்வரத்தையும் இரு முறைக்கு மேல் வரிசைப்படுத்திப் பாடும் முறை |
| ஜதி | சொற்கட்டு |
| ஜதிஸ்வரம் | ஸ்வரங்களால் ஆன உருப்படிக்கு ஆடப்படும் நாட்டியம் |
| ஜதை | இரட்டை |
| ஜந்து | (பொதுவாக) உயிரினம்(குறிப்பாக) ஊர்வன இனத்தைச் சேர்ந்த உயிரினம் |
| ஜப்தி | கடன் கொடுத்தவர் ஏமாற்றப்படாமல் இருக்க, கடன் வாங்கியவரின் சொத்துகளைச் சட்டப்படி கைப்பற்றுதல் |
| ஜபம் | மந்திரத்தை வாய்க்குள்ளாகச் சொல்லிச் செய்யும் வழிபாடு |
| ஜம்-என்று | பிரமாதமாக |
| ஜம்பம் | (-ஆக, -ஆன) தற்பெருமை |
| ஜம்பர் | ரவிக்கை |
| ஜமா | (ஒரு நிகழ்ச்சிக்கு ஒன்று சேர்ந்த) குழு |
| ஜமாபந்தி | கிராமக் கணக்குகளைச் சரிபார்க்கவும் நிலத் தீர்வைகுறித்த பிரச்சினைகளைத் தீர்த்துவைக்கவும் அந்தந்தப் பகுதிகளிலேயே சம்பந்தப்பட்ட மக்களோடு மாவட்ட வருவாய் அதிகாரிகளால் நடத்தப்படும் கூட்டம் |
| ஜமாய் | பிரமாதமாகச் செய்தல் அல்லது அனுபவித்தல் |
| ஜமீன் | (முன்னர் வழக்கில் இருந்த) நிர்ணயித்த வரியை முதலில் செலுத்திவிட்டுப் பிறகு குடியானவர்களிடமிருந்து வசூலித்துக்கொள்ளும் உரிமை வழங்கப்பட்டு ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்ட அரசு நிலம் |
| ஜமீன்தார் | அரசிடமிருந்து ஜமீனைப் பெற்று நிர்வகித்த நிலச்சுவான்தார் |
| ஜமுக்காளம் | (படுப்பதற்கு அல்லது உட்கார்வதற்குப் பயன்படும்) கனமாக நெய்த செவ்வக வடிவத் துணி |
| ஜரிகை | மெல்லிய வெள்ளித் தகடு சுற்றப்பட்டதும் அதன் மீது தங்க முலாம் பூசப்பட்டதுமான பட்டு நூல் |
| ஜரூர் | (ஒரு செயலை முடிப்பதில்) விரைவு |
| ஜலசந்தி | இரு கடல்கள் சேரும் குறுகிய நீர்வழி |
| ஜலதரங்கம் | குறிப்பிட்ட எண்ணிக்கை உள்ள கிண்ணங்களில் வெவ்வேறு அளவில் நீர் ஊற்றிக் குச்சியால் தட்டி வாசிக்கும் இசைக் கருவி |
| ஜலதாரை | சாக்கடை |
| ஜலதோஷம் | மூக்கிலிருந்து சளியும் நீரும் வெளியேறும் வகையில் அடிக்கடி தும்ம வைக்கும் சாதாரண உடல்நலக் குறைவு |
| ஜலம் | நீர் |
| ஜல்லி | சிறுசிறு துண்டுகளாக உடைக்கப்பட்ட கருங்கல் அல்லது செங்கல் |
| ஜல்லிக்கட்டு | (பொதுவாகக் கிராமப்புறங்களில் நடைபெறும்) முரட்டுக் காளையைத் துரத்திப் பிடிக்கும் விளையாட்டு |
| ஜவ்வரிசி | மரவள்ளிக்கிழங்கு மாவிலிருந்து மிகச் சிறிய மணி வடிவில் தயாரிக்கப்படும் ஒரு வகை உணவுப் பொருள் |
| ஜவ்வாது | ஒரு வகைப் பூனை சுரக்கும் திரவத்திலிருந்து தயாரிக்கப்படும் மணம் உடைய பொருள் |
| ஜவ்வாதுப்பூனை | புனுகுப்பூனை |
| ஜவ்வுமிட்டாய் | வெல்லப் பாகில் செய்யப்படும் ஓர் இனிப்புப் பண்டம் |
| ஜவாப் | பதில் |
| ஜவாப்தாரி | பொறுப்பாளி |
| ஜவான் | ராணுவத்தைச் சேர்ந்த அல்லது குறிப்பிட்ட விசேஷக் காவல் படையைச் சேர்ந்த வீரர் |
| ஜவுளி | வேட்டி, சேலை முதலிய துணி வகைகள் |
| ஜனங்கள் | மக்கள் |
| ஜனதா | விலை மலிவாகவும் பெரும்பாலான மக்கள் வாங்கக்கூடியதாகவும் இருப்பது |
| ஜனநாயகம் | மக்களாட்சி (முறை) |
| ஜனம் | மக்கள் |
| ஜனனம் | பிறப்பு |
| ஜன்னல் | கட்டடம் போன்றவற்றில் காற்றும் வெளிச்சமும் வருவதற்கு ஏற்ற வகையில் திறந்து மூடக் கூடியதாகச் சுவரில் அமைக்கப்பட்டிருக்கும் திறப்பு |
| ஜன்னி | காய்ச்சல் அதிகமாவதால் உடல் விறைத்து வலிப்புக்கு உள்ளாகும் நிலை |
| ஜனாதிபதி | குடியரசுத் தலைவர் |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.