Tamil To Tamil Dictionary
Tamil Word | Tamil Meaning |
வெளிகொடுவெளியே | வெளிப்படையாய் |
வெளிச்சங்காட்டுதல் | வழிதெரிய விளக்கின் மூலம் ஒளி காட்டுதல் வெளிக்குப் பகட்டாய்த் தோன்றுதல் ஒளி செய்தல் பகட்டுச் சொல்லால் மழுப்புதல் ஒளியால் கப்பல் முதலியவற்றுக்கு அடையாளம் தெரிவித்தல் |
வெளிச்சம் | வெளிச்சமான வெளிச்சமாக பிரகாசமாக ஒளிமிக்க அறிவுக் கூர்மையான |
வெளிச்சம் | ஒளி விளக்கு தெளிவு பகட்டு |
வெளிச்சம் போட்டுக் காட்டு | பகிரங்கப் படுத்து |
வெளிச்சம்போட்டுக் காட்டு | பகிரங்கப்படுத்துதல் |
வெளிச்சம்போடுதல் | வாணிகப் பொருள்களை ஒளிபெறச்செய்தல் விளக்கேற்றுதல் உள்ளதை மறைத்துப் பொய்த்தோற்றம் காட்டுதல் |
வெளிச்சமாதல் | விடிதல் விளங்குதல் |
வெளிச்சவீடு | கலங்கரை விளக்கம் |
வெளிச்சாடை | வெளிப்பகட்டு மேற்பார்வைக்குக் காணும் காட்சி |
வெளிச்செண்ணெய் | தேங்காயெண்ணெய் |
வெளிசம் | தூண்டில் |
வெளித்தல் | வெளிப்படையாதல் சூழ்ச்சி வெளியாதல் விடிதல் தெளிவாதல் வெண்ணிறங் கொள்ளுதல் பயனிலதாதல் வெறிதாதல் |
வெளித்தோற்றம் | மேற்பார்வைக்குக் காணுங்காட்சி உற்பத்தி நேர்காட்சி உருவெளித்தோற்றம் |
வெளிதிறத்தல் | வெளியிடுதல் வெளிப்படையாதல் காண்க : வெளிர்த்துக்காட்டுதல் |
வெளிது | வெண்மையானது வெள்ளிய ஆடை |
வெளிநடப்பு | (ஓர் அவையில் உறுப்பினர்கள்) எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அவை நடவடிக்கைகளைப் புறக்கணித்து வெளியில் எழுந்துசெல்லுதல் |
வெளிநபர் | (ஒரு நிறுவனம், அமைப்பு முதலியவற்றோடு) தொடர்பு இல்லாதவர் |
வெளிநாட்டம் | தீநெறி ஒழுகுகை |
வெளிநாடு | நான் வாசிக்கும் நாடு தவிர்ந்த ஏனைய நாடுகளை வெளிநாடு என்று அழைக்கப்படும் |
வெளிநாடு | அயல்நாடு வெளியுலகம் |
வெளிநாடுதல் | வெளியிற் காணப்படுதல் தீநெறியில் ஒழுகுதல் |
வெளிப்பகட்டு | போலி |
வெளிப்பகட்டு | வெளித்தோற்றத்தால் உண்டாம் மதிமயக்கம் |
வெளிப்பகட்டு | பிறரைக் கவர்வதற்காக மேற்கொள்ளும் போலியான ஆடம்பர நடவடிக்கைகள் |
வெளிப்படு | (பார்வையில் படும் வகையில்) வெளியே வருதல்/உணரக் கூடிய வகையில் தோன்றுதல் |
வெளிப்படுத்தல் | பலர் அறியத் தெரிவித்தல் காட்டுதல் வெளியே வரச்செய்தல் புத்தகம் பதிப்பித்தல் வெளியே போகச்செய்தல் |
வெளிப்படுத்து | அறியக் கூடிய வகையில் வெளிப்படச்செய்தல் |
வெளிப்படுத்துதல் | பலர் அறியத் தெரிவித்தல் காட்டுதல் வெளியே வரச்செய்தல் புத்தகம் பதிப்பித்தல் வெளியே போகச்செய்தல் |
வெளிப்படுதல் | வெளியே வருதல் வெளிப்படத்தோற்றுதல் பொருள் விளக்கமாதல் பதிப்பிக்கப்படுதல் |
வெளிப்படை | தெளிவானது மேற்பார்வையில் தோன்றுவது அணிவகை |
வெளிப்படை | தெளிவாக அறியக் கூடிய வகையில் இருப்பது |
வெளிப்படைச்சொல் | இயல்பாகப் பொருள் விளங்கி நிற்கும் மொழி |
வெளிப்படையுவமம் | குறிப்பால் அன்றித் தெளிவாக அறியப்படும் உவமம் |
வெளிப்பயன் | வெளிப்படத் தெரியக்கூடிய இலாபம் தெளிவாய் அறியப்படும் பொருள் |
வெளிப்பாடு | வெளிப்படை காணிக்கை |
வெளிப்பாடு | (ஒன்று மற்றொன்றை) வெளிப்படுத்துவதாக இருப்பது |
வெளிப்பு | வெளியிடம் வெளிப்புறம் தெளிவு |
வெளிப்புறப் படப்பிடிப்பு | (பெரும்பாலும்) திரைப்படம் தயாரிக்க வெளி இடங்களில் நடத்தப்படும் படப்பிடிப்பு |
வெளிப்பேச்சு | நாட்டுச்செய்தி உண்மையற்ற பேச்சு |
வெளிமடை | கோயில் புறம்பேயுள்ள சிறு தெய்வங்களுக்குப் படைக்கும் பலி குளம் முதலியவற்றிலிருந்து வெளியே நீர் செல்லும் மதகு |
வெளிமம் | விண்வெளி பரவெளி |
வெளிமயக்கு | வெளித்தோற்றத்தால் உண்டாம் மதிமயக்கம் |
வெளிமான் | மான்வகை பெண்மான் சங்ககாலத்துத் தலைவருள் ஒருவன் |
வெளிமுகடு | வானத்தின் புறவெல்லை |
வெளிமுற்றம் | வீட்டின் வெளிப்புறத்துள்ள திறந்தவெளி |
வெளியடை | திரைச்சீலை |
வெளியரங்கம் | தெளிவானது |
வெளியாக்கு | வெளிப்படுத்துதல் |
வெளியாக்குதல் | பலர் அறியத் தெரிவித்தல் காட்டுதல் வெளியே வரச்செய்தல் புத்தகம் பதிப்பித்தல் வெளியே போகச்செய்தல் |
வெளியாகு | (திரைப்படம், தேர்தல் முடிவுகள் போன்றவை) வெளியிடப்படுதல் |
வெளியாடை | தோரணம் புறவுடை |
வெளியாதல் | வெளியே வருதல் வெளிப்படத்தோற்றுதல் பொருள் விளக்கமாதல் பதிப்பிக்கப்படுதல் |
வெளியார் | அறிவிலார் புறம்பானவர் |
வெளியாள் | அயலான் |
வெளியாள் | சம்பந்தமில்லாத நபர் |
வெளியிடு | (தபால் தலை, திரைப்படம் முதலியவற்றை) பயன்பாட்டிற்குக் கிடைக்கச்செய்தல் |
வெளியிடுதல் | பலர் அறியத் தெரிவித்தல் காட்டுதல் வெளியே வரச்செய்தல் புத்தகம் பதிப்பித்தல் வெளியே போகச்செய்தல் |
வெளியீட்டாளர் | நூல்களைப் பதிப்பித்து வெளியிடுபவர் |
வெளியீடு | நூல் முதலியவற்றின் பதிப்பு நூற்பதிப்பு |
வெளியீடு | (அச்சடிக்கப்பட்டு அல்லது தயாரிக்கப்பட்டுப் பொதுமக்களுக்காக) வெளியிடுதல் |
வெளியுறவு | ஒரு நாடு பிற நாடுகளுடன் அரசியல், கலாச்சாரம், வர்த்தகம் முதலிய துறைகளில் கொள்ளும் உறவு |
வெளியே | எல்லையைத் தாண்டி |
வெளியேற்று | வெளிவரச்செய்தல் |
வெளியேற்றுதல் | வெளியே போகச்செய்தல் நாடு கடத்துதல் காண்க : வெளிப்படுத்துதல் |
வெளியேறுதல் | வெளியே போதல் வீட்டை விட்டு ஓடிப்போதல் வெளியூருக்குப் போதல் கேட்டினின்றும் தப்பித்துவருதல் |
வெளிர் | (நிறத்தில்) அடர்த்தி குறைந்த |
வெளிர்த்துக்காட்டுதல் | மழை நின்ற பின் வானம் வெளுத்தல் வெளிறின நிறமாகத் தோன்றுதல் |
வெளிராதவப்பூ | வெளிராதவன் |
வெளில் | யானைகட்டுந் தூண் தயிர்கடையும் மத்து கம்பம் அணில் |
வெளிவர்த்தகம் | இரு பிரதேசங்களுக்கு இடையே நடைபெறும் வர்த்தகம் |
வெளிவருதல் | பலராலும் அறியப்படுதல் பலருக்குங் கிடைக்குமாறு பதிப்பிக்கப்படுதல் |
வெளிவா | (புத்தகம், கட்டுரை, கதை முதலியவை பத்திரிகையில்) பிரசுரமாதல்/(திரைப்படம் முதன்முறையாக) திரையிடப்படுதல் |
வெளிவாங்கு | (மழைக்கான கரு மேகங்கள் நீங்கி வானம் வெளிச்சம் ஏற்படுகிற வகையில்) தெளிவடைதல் |
வெளிவாங்குதல் | மழை பெய்தபின் மேகங்கலைந்து வெளிச்சமாதல் |
வெளிவாசல் | கட்டடத்தின் வெளியிலிருக்கும் வாசல் வீட்டின் முகப்பிலுள்ள முற்றம் |
வெளிவாய் | பகிரங்கமாய். வெளிவாய்ச் சொல் |
வெளிவாய்ப்படுகை | ஆறு குளங்களை அடுத்துப் புறம்பாக உள்ள நிலம் |
வெளிவிடுதல் | வெளிப்படுத்துதல் பலரறியச் செய்தல் |
வெளிவேடம் | தன்னுருவைப் பிறர் அறியாதபடி மறைக்கை வெளித்தோற்றம் கபடம் |
வெளிவேஷம் | (பிறரை நம்பச்செய்வதற்கான) பொய்யான நடவடிக்கை |
வெளிற்றுப்பனை | வயிரமற்ற பனை |
வெளிற்றுமரம் | வயிரமில்லாத மரம் பாலும் நாரும் முள்ளும் உள்ள மரம் |
வெளிற்றுரை | பயனில் சொல் |
வெளிறன் | அறிவில்லாதவன் கீழ்மகன் |
வெளிறு | வெண்மை நிறக்கேடு வெளிச்சம் வெளிப்படுகை பயனின்மை அறியாமை இளமை திண்மையற்றது குற்றம் வயிரமின்மை மரவகை காண்க : அலிமரம் |
வெளிறு | (மேகங்கள் இல்லாமல் வானம்) தெளிவாக இருத்தல் |
வெளிறுதல் | வெண்மையாதல் நிறங்கெடுதல் |
வெளு | (துணிகளை அழுக்கு நீக்கி) சுத்தப்படுத்துதல் |
வெளுத்தல் | வெண்மையாதல் நிறங்கெடுதல் |
வெளுத்துக் கட்டு | வெளுத்து வாங்கு : சிறப்பைக் காட்டு |
வெளுத்துக்கட்டு | (பலரும் பாராட்டும் வகையில் அல்லது வியக்கும் வகையில் ஒன்றை) சிறப்பாகச் செய்தல் |
வெளுத்துவாங்குதல் | மிக நன்றாகச் செய்தல் நிறம் கெடுதல் |
வெளுப்பு | வெண்மை ஆடைவெளுத்தல் நோயால் உடல் வெளிறுகை புடைக்கை |
வெளுப்பு | (வெளுத்த துணியின்) வெண்மை |
வெளுவெளு | வெளுத்துப்போ |
வெளேரெனல் | வெண்மையாதற்குறிப்பு நிறம் வெளிறுதற்குறிப்பு |
வெற்பன் | குறிஞ்சிநிலத் தலைவன் |
வெற்பு | மலை பக்கமலை |
வெற்றம் | வெற்றி வீரம் |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.
