Tamil To Tamil Dictionary

  

 

 

Tamil WordTamil Meaning
வேள்விக்குண்டம்ஓமகுண்டம். (பிங்.)
வேள்விக்குவேந்தன்இந்திரன்
வேள்விச்சாலையாகசாலை
வேள்விநாயகன்இந்திரன்
வேள்விநிலைஅரசன் வேள்விசெய்த பெருமையைப் புகழ்ந்துகூறும் புறத்துறை
தலைவன் சேதாவினை நாட்காலையிற் கொடுக்குங் கொடைச் சிறப்பினைக் கூறும் புறத்துறை
வேள்விமுதல்வன்யாகத்தலைவன்
காண்க : வேள்விக்குவேந்தன்
வேள்வியாசன்யாகஞ்செய்விக்கும் புரோகிதன்
வேள்வியாளன்பார்ப்பான்
கொடையாளன்
வேள்வியின்பதிதிருமால்
வேள்வுயாகம்
மணவரிசைப்பண்டம்
அரும்பண்டம்
வேளன்வேளாளரில் ஒரு பகுதியான்
குயவர்குலப் பட்டப்பெயர்
வேளாட்டிஏவற்பெண்
வேளாண்மாந்தர்வேளாளர்
வேளாண்மைவேளாண்மை அல்லது விவசாயம் என்பது உணவு மற்றும் வேறு உபயோகங்களுக்காக சிலவகைப் பயிர்களை உற்பத்தி செய்வதையும், வீட்டுமிருக வளர்ப்பையும் குறிக்கும். விவசாயம் வீட்டு வளர்ப்புப் பிராணிகள் மற்றும் தாவரங்களின் உதவியைக் (பயிர்கள்) கொண்டு நாகரீகங்களுக்கு வழிவகுத்திட்ட முக்கியமான வளர்ச்சியாகும்
உணவு உபரிகளை உருவாக்கிக்கொள்வது அடர்த்தியான மக்கள்தொகை அடுக்கு கொண்ட சமூகங்களை வளர்த்தெடுக்க உதவுகிறது. விவசாயத்தைப் பற்றிய ஆய்வு என்பது வேளாண் அறிவியல் எனப்படுகிறது (இது சார்ந்த தாவரவளர்ப்பு என்பது தோட்டக்கலை எனப்படுகிறது)
வேளாண்மைபயிர்த்தொழில்
உதவிபுரிதல்
கொடை
உண்மை
வேளாண்மை பயிர்த்தொழில்
வேளாண்வாகைவேளாளன் செய்தற்குரிய கடமைகளை நிறைவேற்றலைக் கூறும் புறத்துறை
வேளாண்வேதம்நாலடியார்
வேளாவளிஒரு பண்
செவ்வழிக்குப் புறமான பண்திறவகை
வேளாவேளைஉரிய காலத்தில்
சிற்சில சமயத்தில்
வேளாவேளைக்கு (குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு முறை என்ற வகையில்) உரிய நேரத்தில்
வேளாளன்பிறர்க்கு உதவிசெய்பவன்
ஒரு குலத்தான்
வணிகன்
வேளான்வேளாளரில் ஒரு பகுதியான்
குயவர்குலப் பட்டப்பெயர்
வேளிர்ஒருசார் அரசகுலத்தார்
தமிழ்நாட்டுப் பழங்குடி மக்களாகிய குறுநில மன்னர்
சளுக்கவேந்தர்
வேளைகாலம்
கருமவினை
நாய்வேளைப் பூடு
தைவேளைப்பூடு
வேளைபார்த்தல்நன்னாள் பார்த்தல்
சமயம் பார்த்தல்
வேற்கோட்டம்வேல் நிலைபெற்ற முருகன் கோயில்
வேறல்வெல்லுதல்
வெற்றிகொள்ளல்
வேற்றலம்காற்று
வேற்றவன்பகைவன்
அயலான்
வேற்றாள்அயலார்
பறை
வேற்றான்பகைவன்
அயலான்
வேற்றுக்குரல்மாற்றுக்குரல்
அயலார் குரல்
வேற்றுத்தாய்நற்றாயல்லாத மாற்றாந்தாய்
வேற்றுநர்மாறுவடிவங்கொண்டவர்
வேற்றுநிலைமயக்குகசதப ஒழிந்த மெய்கள் ஒன்றோடொன்று மயங்கி வருவது
வேற்றுநிலைமெய்ம்மயக்குகசதப ஒழிந்த மெய்கள் ஒன்றோடொன்று மயங்கி வருவது
வேற்றுப்புலம்பகையிடம்
தனக்கு அயலானவிடம்
வேற்றுமனிதன்அயலான்
வேற்றுமுகம்அயல்முகம்
வெறுப்பைக் காட்டும் மாறுமுகம்
வேற்றுமுனைபகைப்படை
வேற்றுமைதமிழ் இலக்கண கூறு
வேறுபாடு
வேற்றுமைவேறுபாடு
பகைமை
ஒப்புமையின்மை
செயப்படுபொருள் முதலாயினவாகப் பெயர்ப்பொருளை வேறுபடுத்துவது
காண்க : வேற்றுமையுருபு
வேற்றுமைப்புணர்ச்சி
வேற்றுமையணி
வேற்றுமை மாறுபடும் தன்மை
வேற்றுமை உருபுவேற்றுமை
வேற்றுமை உருபு வேற்றுமைப் பொருண்மையை உணர்த்துவதற்கு அடையாளமாகப் பெயருக்கு இறுதியில் சேர்க்கும் உருபு
வேற்றுமை மயக்கம் ஒரு வேற்றுமை உருபு வேறொரு வேற்றுமைப் பொருளில் வழங்கும் நிலை மாற்றம்
வேற்றுமைகாட்டுதல்மாறுபாடு காட்டுதல்
வேற்றுமைத்தொகைஎழுவாயும் விளியும் ஒழிந்த ஆறு வேற்றுமையுருபுகள் தொக்கு நிற்பது
வேற்றுமைநயம்வேறுபடுத்திப் பார்க்கும் முறை
வேற்றுமைப்புணர்ச்சிஎழுவாயும் விளியும் அல்லாத ஆறு வேற்றுமை உருபு விரிந்தேனும் தொக்கேனும் புணர்வது
வேற்றுமைமயக்கம்ஒரு வேற்றுமை உருபு பிறிதொரு வேற்றுமைப் பொருளில் வருகை
வேற்றுமையணிஉவமான உவமேயங்களுள் ஒன்றைச் சிறப்பித்துச் சொல்லுதல்
வேற்றுமையுருபுபெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்தும் உருபு
வேற்றுருமாற்றுருவம்
வேற்றுவன்அயலான்
பிறன்
வேற்றோன்அயலான்
பிறன்
வேறாதல்பிரிதல்
மாறுபடுதல்
மனம் மாறுபடுதல்
முன்னைய தன்மை குலைதல்
சிறப்புடையதாதல்
ஒதுக்காதல்
தனியாதல்
வேறிடம்தனியிடம்
வேறுபிறிது
பிரிந்தது
கூறுபாடு
பகைமை
எதிரிடையானது
புதிது
தீங்கு
சிறப்புடையது
தனி
செய்யுள் வேறுபாட்டினைக் குறிப்பதற்கு இடும் தலைப்புச் சொல்
வேறு தனித்து அறியப்படுவது
வேறுகொள்ளுதல்தனியிடம் செல்லல்
சிறப்புடையதாக மதித்தல்
மாறாகக் கொள்ளுதல்
வேறுசெய்தல்பகை விளைத்தல்
சிறப்புடையதாக மதித்தல்
வேறுநினைத்தல்மாறுபாடாக நினைத்தல்
உதவி செய்தவனுக்குத் தீயவை செய்ய நினைத்தல்
வேறுபடு ஒன்று போல் இல்லாமலிருத்தல்
வேறுபடுத்தல்பிரித்தல்
மாற்றுதல்
நட்புக் கெடுத்தல்
வேறுபடுத்து (ஒன்றல்ல) வேறுவேறு எனக் காட்டுதல்
வேறுபடுதல்பிரிதல்
மாறுபடுதல்
மனம் மாறுபடுதல்
முன்னைய தன்மை குலைதல்
சிறப்புடையதாதல்
ஒதுக்காதல்
தனியாதல்
வேறுபாடுஒன்றை, மற்றொன்றோடு ஒப்பிடும் போது தோன்றும் நிலைகள்
வித்தியாசம், வேற்றுமை, பேதம், ஒப்பின்மை
விரோதம்
வேறுபாடுமனவேறுபாடு
பகைமை
வேன்மிகுதி
வேன்மகன்முருகபூசை செய்பவன்
வேனல்வெப்பம்
வேனிற்காலம்
சினம்
வேனல் கட்டி (கோடைக் காலத்தில் உடலில் உண்டாகும்) பழுத்துச் சீழ் வெளிவரக் கூடிய கட்டி
வேனில்கோடைக்காலம்
இளவேனில்
வெப்பம்
கானல்
ஒப்பனை
பொலிவு
அழகு
வேனில் கோடை
வேனிலாளிமன்மதன்
வேனிலான்மன்மதன்
வேனிற்காலம்கோடைக்காலம்
வேனிற்பள்ளிநிலாமுற்றம்
வேனிற்பாசறைபோர்மேற் சென்ற அரசன் வேனிற்காலத்துத் தங்கும் படைவீடு
வேனின்மாலைவேனிற்காலத்தைச் சிறப்பித்துப் பாடும் நூல்வகை
வேஷம்கட்டு (நாடகம் முதலியவற்றில்) பாத்திரம் ஏற்று நடித்தல்
வைதொழிற்பெயர் விகுதியுள் ஒன்று
போர்வை
கூர்மை
வைதல்
வைத்தல்
வைஓர் உயிர்மெய்யெழுத்து(வ்+ஐ)
கூர்மை
வைக்கோல்
புல்
தொழிற்பெயர் விகுதியுள் ஒன்று
வை3திட்டுதல்
வைக்கல்நெற்பயிரின் உலர்ந்த தாள்
வைக்கோல்நெற்பயிரின் உலர்ந்த தாள்
வைக்கோல் மணிகள் நீக்கப்பட்டு உலர்த்திய நெற்பயிரின் தாள்
வைக்கோற்போர்வைக்கோற்குவியல்
வைகடிகன்மணிகளைச் சாணைபிடிப்பவன்
வைகல்விடியல்
நாள்
கழிவு நாள்
வைகல்தங்குதல்
கழிகை
விடியற்காலம்
நாள்
கழிவுநாள்
வேளை
வைகல்லியம்குறைவு
தகுதியின்மை
சூனியம்
வைகலும்நாள்தோறும்
வைகறைவிடியற்காலம்
காண்க : வைகறையாமம்
வைகறை விடியத் தொடங்குகிற நேரம்
வைகறைப்பாணிவிடியற்காலை வாத்தியவொலி
வைகறையாமம்விடியுமுன்னுள்ள யாமம்
வைகாசம்வைகாசி மாதம்
விடியற்காலம்
வைணவாகமம் இரண்டனுள் ஒன்று
இல்லறத்தார் கடமை கூறும் நூல்
   Page 908 of 912    1 906 907 908 909 910 912

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil