Interrogative Sentence (கேள்வி வாக்கியங்கள்)

Interrogative sentences using am , are , is , were , was

Were you happy yesterday? நேற்று நீ சந்தோஷமாக இருந்தாயா?
Am I a fool? நான் என்ன முட்டாளா?
Are you happy? நீ ஆனந்தமாக இருக்கிறாயா?
Is your name Ram? உங்களுடய பெயர் ராமா?
Was he singing? அவன் பாடி கொண்டிருந்தானா?
Is it hot today? இன்று சூடாக உள்ளதா?
Are you Ravi? நீங்கள் ரவியா?
Was the coffee very hot? காபி மிகவும் சூடாக இருந்ததா?

Interrogative sentence using Could , can , may

Can you tell me the answer? நீ எனக்கு பதில் சொல்ல முடியுமா?
May I come in? நான் உள்ளே வரலாமா?
Could he come to office? அவன் அலுவலகத்துக்கு வர முடியுமா?
Can I play with you? நான் உன் கூட விளையாடலாமா?
May I have your bangles ? எனக்கு உன்னுடைய வளையல்களை தர முடியுமா?
Can you drop me in temple? என்னை கோயிலில் இறக்கி விட முடியுமா?
Could we do this together ? நாம் இதை சேர்ந்து செய்வோமா?
May I have your attention? நான் உங்களுடைய கவனத்தை பெறலாமா?

Interrogative sentence using Would , should , will , shall

Will you give me that book ? நீ எனக்கு அந்த புத்தகம் தருவாயா?
Should I come to the temple ? நான் கோயிலுக்கு வர வேண்டுமா?
Should I not disturb you? நான் உன்னை தொந்தரவு செய்யக் கூடாதா?
Will they go for the wedding? அவர்கள் கல்யாணத்திற்க்கு செல்வார்களா?
Shall we go to school? நாம் பள்ளிக்கூடத்திற்கு செல்வோமா?
Would he give me some chocolates ? அவன் எனக்கு சாக்லேட்கள் தருவானா?
Shall we play? நாம் விளையாடுவோமா?
Would you tell me the answer even if it is wrong ? பதில் தவறாக இருந்தாலும் நீ எனக்கு அதை சொல்வாயா?

Interrogative sentence using What , where , why , when

What is the time?

இப்பொழுது மணி என்ன?

What is your age ?

உன்னுடைய வயது என்ன?

When will you come?

நீ எப்பொழுது வருவாய்?

When is your birthday?

உன்னுடைய பிறந்த நாள் எப்பொழுது?

Where is your house?

உன்னுடைய வீடு எங்கே?

Where is your watch?

உன்னுடைய கைகடிகாரம் எங்கே?

Why did she cry?

அவள் எதற்கு அழுதாள்?

Why are you happy?

நீ எதற்கு ஆனந்தமாய் இருக்கிறாய்?

Interrogative sentence using Whose , Who , Whom

Who danced yesterday? நேற்று யார் ஆடினார்கள்?
Who is standing there? அங்கு யார் நிற்ப்பது?
Whose book Is that? அந்த புத்தகம் யாருடையது
Whose house is there? யாருடைய வீடு அது?
Whom do you meet? நாம் யாரை சந்திக்க வேண்டும்?
Whom had you promised? நீங்கள் யாருக்கு வாக்கு கொடுத்தீர்கள்?
Who is that? அந்த நபர் யார்?
Who sang this song? அந்த பாடல் யார் பாடினார்?

Interrogative sentence using Did , do , does

Does he like it ? அவனுக்கு பிடித்திருக்கிறதா ?
Did you go there? நீ அங்கு சென்றாயா ?
Did she bathe? அவள் குளித்தாளா ?
Do you smoke? நீ புகைப்பிடிப்பாயா ?
Do you speak Hindi? நீ ஹிந்தி பேசுவாயா?
Does it rain there? அங்கு மழை பெய்யுமா?
Did you call me? நீ என்னை அழைத்தாயா?
Did you ring the bell? நீ மணி அடித்தாயா ?

Interrogative sentence using Have , had , has

Have you found your pen ? நீ உன்னுடைய பேனாவை கண்டுப்பிடித்து விட்டாயா?
Have you completed your work? நீ உன்னுடைய வேலையை முடித்து விட்டாயா?
Has Anu missed the bus? அனு பேருந்தை தவர விட்டாளா?
Has he completed writing the story? அவன் கதையை எழுதி முடித்தானா?
Had your lunch? நீ மதியம் உணவு சாப்பிடாயா ?
Have you ever gone to Delhi? நீ எப்பொழுதாவது டெல்லிக்கு சென்றிருக்கிறாயா ?
Have you spent the money? நீ உன்னுடைய பணத்தை செலவழித்து விட்டாயா ?

Interrogative sentence using How many , How much , How long , How

How are you? நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?
How old are you? உனக்கு என்ன வயது?
How long have you been in Delhi? டெல்லியில் எத்தனை காலமாக இருக்கிறீர்கள்?
How many of you are here? இங்கு எத்தனை பேர் உள்ளனர்?
How long I should wait ? நான் எத்தனை காலம் காத்திருக்க வேண்டும்?
How many students are in the class? வகுப்பறையில் எத்தனை மாணவர்கள் உள்ளனர்?
How much money should I pay? நான் எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்?
How do you manage? நீங்கள் எப்படி சமாளிக்கிறீர்கள்?

Interrogative sentence using Which

Which is your book? உங்களுடைய புத்தகம் எது?
Which is your favourite colour? உங்களுக்கு பிடித்த வண்ணம் எது?
Which is your pen? உங்களுடைய பேனா எது?
Which is your house? உங்களுடைய வீடு எது?

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil