EXAMPLES:
ENGLISH SENTENCE | TAMIL SENTENCE |
I lost the money.Where did you lose the money? | நான் பணத்தை தொலைத்து விட்டேன்.பணத்தை எங்கு தொலைத்தாய்? |
How much money do you have in your purse? I have hundred rupees. | உன்னுடைய பர்சில் எவ்வளவு பணம் வைத்துள்ளாய்? என்னிடம் நூறு ரூபாய் உள்ளது |
Did you sell your house? No ,I did’nt sell it. | உங்களுடைய வீட்டை விற்று விட்டீர்களா? இல்லை.நான் விற்கவில்லை |
Do you have a change for five hundred rupees? Sorry,I don’t have the change. | உங்களிடம் ஐநூறு ரூபாய்க்கு சில்லரை உள்ளதா? மன்னிக்கவும்.என்னிடம் சில்லரை இல்லை |
Could you give me some money? Yes I will give you. | எனக்கு கொஞ்சம் பணம் கொடுக்க முடியுமா? நான் உங்களுக்கு பணம் தருகிறேன் |
What is your salary? Im getting thousand rupees. | உங்கள் சம்பளம் எவ்வளவு? எனக்கு ஆயிரம் ரூபாய் தருகிறார்கள் |
Is there any discount? No discount. | தள்ளுபடி உள்ளதா? தள்ளுபடி இல்லை |
On The Bus (பேருந்தில்)
EXAMPLES:
ENGLISH SENTENCE | TAMIL SENTENCE |
Buy the tickets now | பயணச்சீட்டு வாங்கு |
The conductor is busy | நடத்துனர் வேலையாக உள்ளார் |
I usually get off at Adyar | நான் வழக்கமாக அடையாரில் இறங்குவேன் |
In A Public Library(பொது நூலகத்தில்)
EXAMPLES:
ENGLISH SENTENCE | TAMIL SENTENCE |
What is the late fee per day? | ஒரு நாள் தாமதத்திற்கு எவ்வளவு அபராதம்? |
How much is the membership fees? | உறுப்பினர் கட்டணம் எவ்வளவு? |
Im a regular member of this library | நான் நூலகத்தின் நிரந்தர உறுப்பினர் |
What is the working hour for this library? | நூலகத்தின் அலுவலக நேரம் என்ன? |
At The Theatre(திரையரங்கில்)
EXAMPLES:
ENGLISH SENTENCE | TAMIL SENTENCE |
How was the movie? | படம் எப்படி இருந்தது? |
Hero acted very well in this movie | நடிகன் இந்த படத்தில் நன்றாக நடித்துள்ளான் |
Shall I buy some snacks in the interval time? | இடைவேலை நேரத்தில் சாப்பிட எதாவது வாங்கவா? |
There was not much fight scenes in the movie | இந்த படத்தில் சண்டைக் காட்சி குறைவாக உள்ளது |
Asking The Way(வழி கேட்டல்)
EXAMPLES:
ENGLISH SENTENCE | TAMIL SENTENCE |
Is the temple far away from here? | கோயில் இங்கிருந்து அதிக தூரமா? |
Can you please tell me the way to the shop? | கடைக்கு செல்ல வழி கூற முடியுமா? |
Turn left and go staright | இடது திரும்பி நேராக செல்லவும் |
At The Medical Store (மருந்து கடையில்)
EXAMPLES:
ENGLISH SENTENCE | TAMIL SENTENCE |
Get me the medicines mentioned in the prescription | எனக்கு பரிந்துரைக்க பட்ட மருந்துகளை தாருங்கள் |
I will take five tablets | நான் ஐந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்கிறேன் |
We don’t have this medicine | எங்களிடம் இந்த மருந்து இல்லை |
Could you recommend a medicine for stomach ache? | நீங்கள் வயத்து வலிக்கு மருந்து பரிந்துரைக்க முடியுமா? |
On The Telephone (தொலைபேசியில்)
EXAMPLES:
ENGLISH SENTENCE | TAMIL SENTENCE |
May I speak to Ms.Anu | நான் அனுவிடம் பேச முடியுமா |
Will you convey her that I called | அவர்களிடம் நான் பேசியதாக கூறுங்கள் |
Yes.This is Raj.Good morning | ஆமாம்.நான் ராஜ்.வணக்கம் |
What is your phone number? | உங்களுடைய தொலைபேசி எண் என்ன? |
Making A Trunk Call(ட்ரங்கால் செய்தல்)
EXAMPLES:
ENGLISH SENTENCE | TAMIL SENTENCE |
Subscriber – Hello Is it exchange | சந்தாதர் – ஹல்லோ.இது இணைப்பகமா? |
Operator – Yes.This is exchange | ஆபரேட்டர் – ஆமாம்.இது இணைப்பகமே |
Subscriber – Kindly book an urgent trunk call | சந்தாதர் – ஒரு அவசர ட்ரங்கால் புக் செய்யுங்கள் |
Operator – For which place? | ஆபரேட்டர் – எந்த இடத்திற்கு? |
Subscriber – For Chennai | சந்தாதர் – சென்னைக்கு |
Operator – What is the number? | ஆபரேட்டர் – தொலைபேசி எண் என்ன? |
Subscriber – 1234+ | சந்தாதர் – 1234+ |
Operator – Your number please? | ஆபரேட்டர் – உங்களுடைய தொலைபேசி எண்? |
Subscriber – 4321+ | சந்தாதர் – 4321+ |
Operator – | Wait for sometime |
Hello Is it 1234+? | ஆபரேட்டர் – சிறிது நேரம் காத்திருங்கள்.ஹல்லோ இது 1234+ எண் ஆ? |
Anu – Yes speaking | அனு – ஆமாம் பேசுகிறேன் |
Operator – Here is your trunk call to Chennai | ஆபரேட்டர் – இதோ உங்கள் ட்ரங்கால் சென்னைக்கு |
Subscriber – Hello Anu.This is Raj from Delhi | சந்தாதர் – ஹல்லோ அனு.நான் ராஜ் டெல்லியில் இருந்து பேசுகிறேன் |
Anu – Hi Raj.How are you all doing? | அனு – ஹாய்.எல்லோரும் எப்படி இருக்கிறீர்கள்? |
Subscriber – We are good.How are you all? | சந்தாதர் – நாங்கள் அனைவரும் நலம்.அங்கு எல்லோரும் எப்படி இருக்கிறீர்கள்? |
Anu – We are good.Are you coming for the wedding? | அனு – நாங்கள் அனைவரும் நலம்.நீ கல்யாணத்திற்கு வருகிறாயா? |
Subscriber – Sure.Im coming.Should I have to buy any gift from here? | சந்தாதர் – கண்டிப்பாக .நான் வருகிறேன் நான் இங்கிருந்து ஏதேனும் பரிசு வாங்கி வர வேண்டுமா? |
Anu – We will buy it here.How long will you be here? | அனு – நாம் இங்கேயே வாங்கலாம்.நீ இங்கு எத்தனை நாட்கள் இருப்பாய்? |
Subscriber – Planning to stay for a week.Not yet decided | சந்தாதர் – நான் அங்கு ஒரு வாரம் இருப்பேன்.இன்னும் முடிவு செய்யவில்லை |
Anu – Sure come lets meet.Bye | அனு – கண்டிப்பாக வா.நாம் சந்திப்போம்.பை.. |
Subscriber – Hello Sir I finished my call.How much is the charge? | சந்தாதர் – ஹல்லோ.நான் பேசி முடித்துவிட்டேன்.கட்டணம் எவ்வளவு என்று சொல்லுங்கள்? |
Operator – Seventy rupees Sir | ஆபரேட்டர் – எழுபது ரூபாய் |
Subscriber – Thank You | சந்தாதர் – நன்றி |
About A Tour
EXAMPLES:
ENGLISH SENTENCE | TAMIL SENTENCE |
Sara-Grandpa please tell me what are the places you visited? | சாரா-தாத்தா எந்த இடங்களுக்கு நீங்கள் சென்றீர்கள்? |
Grandpa-First I went to Chennai | தாத்தா-முதலில் நான் சென்னைக்கு சென்றேன் |
Sara-What did you see in Chennai? | சாரா-சென்னையில் எந்த இடங்களை பார்தீர்கள்? |
Grandpa-I visited Marina beach in Chennai | தாத்தா-நான் சென்னையில் மெரினா கடற்கரைக்குச் சென்றேன் |
Sara-After Chennai where did you go? | சாரா-சென்னைக்கு அடுத்து வேறு எங்கு சென்றீர்கள்? |
Grandpa-From Chennai I went to Madurai.There I visited Meenakshi Temple | தாத்தா-சென்னையில் இருந்து நான் மதுரைக்கு சென்றேன்.அங்கு மீனாட்சி கோயிலுக்கு போனேன் |
Sara-Oh Great. | சாரா-நல்லது. |
Grandpa-Yes.We enjoyed . | தாத்தா-ஆமாம்.நாங்கள் சந்தோஷ மாக இருந்தோம். |