Tamil To Tamil Dictionary
Tamil Word | Tamil Meaning |
அகவலன் | பாடும் பாணன் |
அகவலிசை | அகவலோசை |
அகவலிமை | படை வலிமை பொருள் வலிமை துணை வலிமை உடல் வலிமை உள்ள வலிமை மூலப் படை |
அகவலுரிச்சீர் | ஈரசைச்சீர் |
அகவலைப்படுத்தல் | வலையில் அகப்படுதல் |
அகவலைப்படுத்தல் | வலையில் அகப்படுத்தல் |
அகவலோசை | ஆசிரியப்பாவிற்கு உரிய ஓசை |
அகவற்சீர் | அகவலுரிச்சீர் |
அகவற்சுரிதகம் | ஆசிரியச் சுரிதகம் |
அகவற்பா | ஒருவரை அழைத்துக் கூறும் முறையில் பாடப்படுவது நால்வகைப் பாக்களுள் ஒன்று, ஆசிரியப்பா |
அகவற்றுறை | நான்கடி கொண்டதாய் முதல் ஈற்றடிகள் ஒத்து இடையடிகள் குறைவுபட்டு வருவது |
அகவன் மகள் | பிறரை விளித்துப்பாடும் பெண் பாண்மகள் |
அகவா | ஒலித்தலைச் செய்யா |
அகவாட்டி | மனையாள் இல்லக்கிழத்தி அகத்தடியாள் |
அகவாட்டி | இல்லக்கிழத்தி, மனைவி |
அகவாய் | உள்ளிடம் கதவுநிலை |
அகவாயில் | மனம் |
அகவாயில் | உள்வாயில் மனம் |
அகவாளன் | வீட்டுக்காரன் கணவன் தலைவன் |
அகவாளன் | வீட்டுக்குரியோன் கணவன் தலைவன் |
அகவிதழ் | உள்ளிதல் அல்லி |
அகவிதழ் | உள் இதழ் அல்லி |
அகவிரல் | விரலின் உட்புறம் |
அகவிரல் | விரலின் உட்பகுதி |
அகவிருள் | மெய்யறிவின்மை |
அகவிருள் | உள்ளிருள் அறியாமை மெய்யறிவின்மை |
அகவிலை | உள்ளிதழ் தானியவிலை |
அகவிலை | மலரின் உள்ளிதழ் தவசவிலை |
அகவிலைப் படி | விலைவாசி ஏற்றம் காரணமாக அடிப்படை ஊதியத்தோடு தரப்படும் கூடுதல் தொகை |
அகவிலைப்படி | விலைவாசி ஏற்றத்தைச் சரிக்கட்ட அடிப்படை ஊதியத்தின் வீதமாக ஊதியத்தோடு கொடுக்கப்படும் கூடுதல் தொகை |
அகவு | [மயில்] கரகரப்பான குரலில் ஒலி எழுப்புதல் கேள் வினவு |
அகவு | (மயில்) கரகரப்பான குரலில் ஒலி எழுப்புதல் |
அகவுதல் | ஒலித்தல் பாடுதல் அழைத்தல் ஆடல் |
அகவுதல் | அகவல் குரல் எழுப்புதல் ஒலித்தல் அழைத்தல் பாடுதல் ஆடல் |
அகவுநர் | ஆடுவோர் பாடுவோர் |
அகவுநர் | பாடுவோர் ஆடுவோர் |
அகவுயிர் | உடம்பினுள் உயிர் |
அகவுவம் | பாடுவோம் |
அகவை | வயது உட்பொருள் |
அகவை | உட்பட்டது உட்பொருள் உள்ளிடம் உட்பட்ட வயது ஆண்டு பருவம் ஏழாம் வேற்றுமை உருபு |
அகவை | வயது |
அகழ் | [புதைந்து கிடக்கும் பொருளை அறிந்து கொள்ள அல்லது வெளியே கொண்டுவர] தோண்டுதல் அகழ்வு அகழாய்வு கோட்டையைச் சூழ்ந்துள்ள கிடங்கு |
அகழ் | அகழி, மதில்சூழ் கிடங்கு, கிடங்கு குளம் |
அகழ் | (புதைந்து கிடக்கும் பொருளை அறிந்துகொள்ளும் அல்லது வெளிக்கொண்டுவரும் முறையில்) தோண்டுதல் |
அகழ்தல் | தோண்டுதல் கல்லுதல் உழுதல் |
அகழ்தல் | தோண்டுதல், கல்லுதல் உழுதல் |
அகழ்வாராய்ச்சி | பண்டை நாகரிகச் சின்னங்களை தோண்டியெடுத்து வெளிப்படுத்தும் ஆராய்ச்சி புதைபொருள் ஆராய்ச்சி |
அகழாய்வு | பண்டை நாகரிகச் சின்னங்களைத் தோண்டியெடுத்து வெளிப்படுத்தும் ஆராய்ச்சி |
அகழான் | ஒருவகைப் பேரெலி வயலெலி |
அகழான் | வயல் எலி |
அகழி | கோட்டை மதிலைச் சுற்றித் தற்காப்புக்காக ஆழமாக வெட்டப்பட்டு,நீர் நிரப்பப்பட்ட அமைப்பு மதில்சூழ்கிடங்கு |
அகழி | கோட்டையைச் சுற்றியுள்ள ஆழமான நீர்நிலை, மதில்சூழ் கிடங்கு ஓடை கயம் கேணி கிடங்கு வாயகன்ற பாண்டம் |
அகழி | (கோட்டை மதிலைச் சுற்றித் தற்காப்பு ஏற்பாடாக) ஆழமாகத் தோண்டி நீர் நிரப்பிய அமைப்பு |
அகழு | தோண்ட |
அகழெலி | அகழான் |
அகளங்கம் | குற்றமின்மை |
அகளங்கம் | குற்றமின்மை தூய்மை |
அகளங்கமூர்த்தி | கடவுள் புத்தன் |
அகளங்கன் | மாசிலான் கடவுள் சோழன் |
அகளம் | களங்கமின்மை யாழின் பத்தர் தாழி நீர்ச்சால் |
அகளம் | தாழி மிடா சாடி யாழின் பத்தர் நீர்ச்சால் களங்கமின்மை |
அகளி | தாழி மிடா பாண்டம் |
அகற்சி | அகலம் |
அகற்சி | அகலம் நீங்குதல், பிரிவு துறவறம் |
அகற்ப விபூதி | இயற்கையில் உண்டான விபூதி |
அகற்பவிபூதி | இயற்கையில் உண்டான திருநீறு |
அகற்பன் | ஒப்பில்லாதவன் |
அகறல் | அகன்றுபோதல் நீங்கிப்போதல் |
அகறல் | அகலல் கடத்தல் நீங்குதல் விரிதல் அகலம் |
அகற்றம் | அகலம் பிரிவு பரப்பு |
அகற்றம் | அகலம் விரிவு |
அகற்றல் | நீக்குதல் துரத்துதல் அகலப்பண்ணுதல், விரிவாக்கல் |
அகற்று | நீக்குதல் இல்லாதபை ஆக்குதல் அப்புறப்படுத்து வெளியேற்றுதல் |
அகற்று | நீக்குதல் |
அகற்றுதல் | நீக்குதல் துரத்துதல் அகலப்பண்ணுதல், விரிவாக்கல் |
அகன்பணை | அகன்ற மருத நிலம் |
அகனம் | பாரமின்மை பெருமையின்மை |
அகன்மணி | மணி தெய்வமணி அகன்ற மணி உயர்ந்த மணி உயர்ந்த முத்து |
அகன்மணி | அகன்ற மணி உயர்ந்த முத்து தெய்வமணி |
அகன்ற | அகலமான விசாலமான விரிந்த |
அகன்ற | அகலமான |
அகன்றிசைப்பு | யாப்பு முறையில் அகன்று காட்டுங் குற்றம் |
அகன்றிசைப்பு | யாப்பு முறையிலிருந்து மாறி ஒலிக்கும் குற்றம் |
அகன்றில் | ஆணன்றில் ஆண் கவுஞ்சம் |
அகன்றில் | ஆணன்றில், ஆண் கிரவுஞ்சம் |
அகன்னம் | செவிடு காதற்றது |
அகன்னம் | காதற்றது செவிடு |
அக்னி | நெருப்பு தீ |
அகனைந்திணை | குறிஞ்சி முல்லை முதலிய ஐந்திணை |
அகனைந்திணை | குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐந்து திணை |
அகஸ்மாத் | திடீரென |
அகஸ்மாத்தாக | தற்செயலாக : எதிர்பாராதவாறு |
அகஸ்மாத்தாக | முன்னேற்பாடு இல்லாமல் |
அகாகம் | ஆசௌசதினம் |
அகாசரம் | அறியாமை |
அகாடி | குதிரை முன்னங்காற்கயிறு முள் |
அகாடி | குதிரையின் முன்னங்காற் கயிறு |
அகாண்டபாதம் | காலமல்லாதகாலசம்பவம் |
அகாதத்துவம் | ஆழம் |
அகாத்தியம் | பொல்லாங்கு |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.
