Tamil To Tamil Dictionary
Tamil Word | Tamil Meaning |
வேடதாரி | பொய்யன் |
வேடதாரி | மாறுவேடம் பூண்டவர் வஞ்சக முடையோர் |
வேடதாரி | (கூத்து, நாடகம் முதலியவற்றில் நடிப்பதற்காக) வேடம் தரித்தவர் |
வேட்பாளர் | தேர்தலுக்கு நிற்க விரும்புவோர் |
வேட்பாளர் | தேர்தலில் போட்டியிடுபவர் |
வேட்பித்தல் | வேள்விசெய்தல் |
வேட்பு | விருப்பம் |
வேட்புமனு | தகவல்களை நிரப்பிக் கையெழுத்திட்டு முன்வைப்புத் தொகையுடன் (தேர்தல் அதிகாரியிடம்) அளிக்கும் படிவம் |
வேடம் | உடை முதலியவற்றால் கொள்ளும் வேற்றுவடிவம் உடை விருப்பம் |
வேடம் | (நடிப்பவர்) பாத்திரத்திற்கு ஏற்பச் செய்துகொள்ளும் ஒப்பனை |
வேடன் | வேட்டுவன் பாலைநிலத்துக்குரியவன் காண்க : வேடதாரி |
வேடன் | வேட்டையாடுவதைத் தொழிலாகக் கொண்டவன் |
வேடிக்கை | விநோதம் அலங்காரம் விநோதக் காட்சி விளையாட்டு |
வேடிக்கை | பார்ப்பதற்கு, கேட்பதற்கு வினோதமானதாகவும் சுவாரஸ்யமானதாகவும் சிரிப்பை விளைவிக்கக் கூடியதாகவும் அமைவது |
வேடிக்கை பார் | (காண்பது) வினோதமானதாகவும் சுவாரஸ்யமானதாகவும் இருப்பதாகக் கவனித்தல் |
வேடிக்கைக்காரன் | விநோதஞ் செய்பவன் |
வேடிக்கைகாட்டுதல் | விநோதச்செயல் செய்தல் |
வேடிக்கைப்பேச்சு | சிரிப்பாகப் பேசுதல் |
வேடிச்சி | வேடர்குலப் பெண் |
வேடிதம் | மருந்து நாற்றம் |
வேடு | வேடர்தொழில் வேடச்சாதி வேடன் வரிக்கூத்துவகை பாண்டத்தின் வாயை மூடிக்கட்டும் துணி மூடுகை வடிகட்டுஞ்சீலை பொட்டணம் |
வேடுபறி | வழிப்பறி திருமங்கை மன்னன் திருமாலை வழிப்பறிக்கவும் சுந்தரரிடம் வேடர்கள் வழிப்பறிக்கவும் முயன்றதைக் கொண்டாடும் திருவிழா |
வேடுவன் | வேடன் குளவி |
வேடை | வேட்கை காமநோய் மரக்கலம் வெப்பம் மழையில்லாக்காலம் கோடைக்காலம் |
வேண | See வேண்டிய |
வேண | வேண்டிய மிகுதியான போதுமான இன்றியமையாத |
வேணகை | சுற்றுமதில் |
வேண்டல் | விரும்புதல் விண்ணப்பம் |
வேண்டலன் | பகைவன் |
வேண்டற்பாடு | விருப்பம் தேவை பெருமை செருக்கு |
வேண்டா வெறுப்பாக | விருப்பமில்லாது |
வேண்டாதகாரியம் | தேவையில்லாத செயல் |
வேண்டாத்தலையன் | அஞ்சாதவன் முரடன் |
வேண்டாத்தனம் | தவறு வேண்டாப் பொறுப்பின்மை |
வேண்டாதவன் | விருப்பப்படாதவன் பகைவன் |
வேண்டாதார் | விரும்பாதவர் பகைவர் |
வேண்டாமை | வெறுப்பு அவாவின்மை |
வேண்டார் | விரும்பாதவர் பகைவர் |
வேண்டாவெறுப்பாக | செய்ய வேண்டி இருக்கிறதே என்ற வெறுப்போடு |
வேண்டாவெறுப்பு | விருப்பில்லாமை |
வேண்டி | (பொருட்டு). அதை எனக்கு வேண்டிச் செய் |
வேண்டிக்கொள்ளுதல் | குறைநீக்க வேண்டுதல் |
வேண்டிய | இன்றியமையாத தேவையான போதுமான மிகுதியான. வேண்டிய நாள் என்னோடும் பழகிய நீ (தாயு. மண்டலத். 10) |
வேண்டியது | இன்றியமையாதது தேவையானது போதுமானது மிகுதியானது மனத்துத் தோன்றியது |
வேண்டியமட்டும் | தேவையான அளவு போதுமான அளவு |
வேண்டியவன் | நட்புக்குரியவன் பிரியமுள்ளவன் ஒருவன் நன்மையை நாடுபவன் |
வேண்டியிரு | தவிர்க்க முடியாத அல்லது செய்தே தீர வேண்டிய நிலையில் இருத்தல் |
வேண்டியிருத்தல் | இன்றியமையாததாயிருத்தல் |
வேண்டு | பணிவோடு நயமாகக் கேட்டல் |
வேண்டு மென்றே | நன்று அறிந்தே |
வேண்டுகோள் | நேர்தல் |
வேண்டுகோள் | ஒன்றைச் செய்யுமாறு அல்லது ஒத்துக்கொள்ளுமாறு நயந்து கேட்டல் |
வேண்டுதல் | விரும்புதல் விரும்பிக்கேட்டல் விலைக்கு வாங்குதல் இன்றியமையாததாதல் |
வேண்டுதல் | பிரார்த்தனை |
வேண்டும்2 | ஒருவர் மற்றொருவருக்கு இன்ன உறவு முறையில் இருக்கிறார் என்பதைத் தெரிவிக்கும் வினைமுற்று வடிவம் |
வேண்டுமென்று | முழுமனத்தோடு பிடிவாதமாய் |
வேணத்தக்கின | போதுமான. வேணத்தக்கின தருமங்கள் செய்து (சித். நாய. 13) |
வேணது | இன்றியமையாதது தேவையானது போதுமானது மிகுதியானது மனத்துத் தோன்றியது |
வேண்மாள் | வேளிர்குலப் பெண் |
வேண்மான் | வேளிர்குல மகன் |
வேணளா | வேட்கைப்பெருக்கம் |
வேணாடு | செந்தமிழ்நாடு பன்னிரண்டனுள் ஒன்று |
வேணி | சடை பின்னிய மயிர் மரவேர் வசம்பு ஆறு நீர்ப்பெருக்கு தெரு சேரி வானம் வெளி |
வேணிகை | பின்னிய மயிர் |
வேணினர் | விரும்புபவர் |
வேணீர் | நீர்வேட்கை நீங்க உண்ணும் நீர் |
வேணு | மூங்கில் இசைக்குழல் புல்லாங்குழல் வில் தனுசு ராசி வாள் |
வேணுகம் | யானைத்தோட்டி |
வேணுகானம் | வேய்ங்குழல் இசை |
வேணுகோபாலன் | புல்லாங்குழல் ஊதும் கண்ணபிரான் |
வேணுசம் | மூங்கிலரிசி |
வேணுநாதன் | குழல் இசைப்போன் |
வேணுபலம் | மூங்கிலரிசி |
வேணுபுரம் | சீகாழி |
வேதக்காரர் | கிறித்தவர் |
வேதகப்பொன் | புடமிட்ட பொன் |
வேதகம் | வேறுபடுத்துகை வேறுபாடு பகைமை இரண்டகம் புடமிடுகை புடமிட்ட பொன் இரும்பு முதலிய உலோகங்களைப் பொன்னாக்கும் பண்டம் சிறுதுகில் கருப்பூரம் தானியம் வெளிப்படுத்துகை |
வேதகன் | ஒன்றின் தன்மையை வேறுபடுத்துவோன் அறிவிப்பவன் |
வேதகீதன் | வேதத்தினாற் புகழ்ந்து பாடப்படுவோனாகிய கடவுள் |
வேதங்கம் | ஓர் ஆடைவகை |
வேதசம் | பிரம்புவகை நாணற்புல் பெரு விரலடி |
வேதசாரம் | வேதத்தின் சத்து நாணற்புல் உபநிடதம் |
வேதஞ்ஞன் | மறையை அறிந்தவன் |
வேதண்டம் | மலை கைலாயம் பொதியமலை யானை |
வேததத்துவம் | வேதத்தின் மெய்ப்பொருள் |
வேத்தவை | அரசவை |
வேத்தன் | அறிந்தவன் அறியத்தக்கவன் |
வேத்தியம் | அறியத்தக்கது அடையாளம் |
வேத்தியல் | அரசர்க்காடுங் கூத்து வேந்தனது தன்மை காண்க : வேத்தியன்மலிபு |
வேத்தியன் | அறியத்தக்கவன் |
வேத்தியன்மண்டபம் | அரசனது அரசவை மண்டபம் |
வேத்தியன்மலிபு | வீரமிக்க மன்னனது மேம்பாட்டினை வீரர் சொல்லுதலைக் கூறும் புறத்துறை |
வேத்திரகரன் | பிரம்பைக் கையில்கொண்ட நந்திதேவன் |
வேத்திரத்தாள் | பிரப்பங்கிழங்கு |
வேத்திரதரன் | வாயில்காப்போன் கட்டியக்காரன் நந்திதேவன் |
வேத்திரப்படை | பிரம்பாகிய ஆயுதம் |
வேத்திரம் | பிரம்பு அம்பு இலந்தைமரம் |
வேத்திராசனம் | பிரப்பம்பாய் |
வேதநாதன் | வேதங்களுக்குத் தலைவனான கடவுள் |
வேதநாயகன் | வேதங்களுக்குத் தலைவனான கடவுள் |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.
