iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

4,003 words starting with உ · page 44 of 81

உய்தி ஈடேற்றம், உயிர் வாழ்தல், தப்பிப் பிழைத்தல், நீங்குகை
உய்த்தறி உய்த்துணர் (கூறப்பட்டதிலிருந்து கூறப்படாததை) ஆராய்ந்து அறிதல்
உய்த்தறிதல் உய்த்துணர்தல், ஊகித்தறிதல்
உய்த்தலில்பொருண்மை ஓர் அணி, கருதிய பொருள் தெளிவாகப் புலப்படுமாறு எளிய சொல்லுடைமையாகிய குணம்
உய்த்தல் செலுத்துதல் கொண்டுபோதல் சேர்த்தல் நடத்துதல் அமிழ்த்தல் நுகர்தல் கொடுத்தல் அனுப்புதல் குறிப்பித்தல் அறிவித்தல் ஆணை செலுத்துதல் ஆயுதத்தைச் செலுத்துதல் உய்யச் செய்தல் நீக்குதல்
உய்த்துக்கொண்டுணர்தல் முப்பத்திரண்டு உத்திகளுள் ஒன்று, ஒரு பொருளைச் சொல்லும்போது அதனிடமாக மற்றொரு பொருளையும் விளங்கச் செய்தல்
உய்த்துணரவைப்பு முப்பத்திரண்டு உத்திகளுள் ஒன்று, ஒரு பொருளைச் சொல்லும்போது அதனிடமாக மற்றொரு பொருளையும் விளங்கச் செய்தல்
உய்த்துணர் (கூறப்பட்டதிலிருந்து கூறப்படாததை) ஆராய்ந்து அறிதல்
உய்த்துணர்தல் உய்த்துணர்தல், ஊகித்தறிதல்
உய்த்துணர்மொழி செய்யுட் குற்றங்களுள் ஒன்று
உய்த்துணர்வு ஆராய்ந்துணரும் அறிவு ஞானம்
உய்ப்பு உய்க்கை
உய்மணல் கருமணல்
உய்யக்கொண்டான் பிழைக்குமாறு அருள் செய்தவன் எருமைமுல்லை கொய்யாமரம் ஓர் ஆறு
உய்யல் ஏறுதல் செல்லல் கேட்டல் வாழ்தல்
உய்யானம் நந்தவனம் சோலை
உய்யானம் உத்தியானம் பூந்தோட்டம் சோலை சிங்காரவனம் அரசர் விளையாடுஞ் சோலை
உய்வனவு ஈடேற்றம், பிழைப்பு, வாழ்வு
உய்வி உய்வடையச் செய்தல்
உய்வி உய்வடையச்செய்தல்
உய்விடம் பிழைக்குமிடம்
உய்வு (தீவினையிலிருந்து நீங்கிப் பெறும்)நற்கதி மீட்சி
உய்வு உய்தி உயிர் தப்புகை பிழைப்பு ஈடேற்றம் இடுக்கண்களினின்றும் நீங்கும் வாயில் உய்தல்
உய்வு (தீவினையிலிருந்து நீங்கிப் பெறும்) நற்கதி
உரககேதனன் பாம்புக் கொடியையுடையவனாகிய துரியோதனன்
உரககேது பாம்புக் கொடியையுடையவனாகிய துரியோதனன்
உரகடல் பெருங்கடல்
உரகடல் கொந்தளிக்கும் கடல்
உரகதம் பாம்பு
உரகன் ஆதிசேடன்
உரகன் பாம்பு ஆதிசேடன்
உரகமல்லி நாகமல்லி
உரகம் பாம்பு நாகமல்லிகை
உரகர் சமணர் நாகர் என்ற தேவசாதியார்(நாகர்)
உரகர் நாகர் நாக சாதியார் சமணர்
உரகவல்லி நாகமல்லி வெற்றிலைக்கொடி
உரகாதிபன் ஆதிசேடன்
உரகாரி கருடன் விட்டு
உரகாரி கருடன் மயில்
உரகேந்திரன் ஆதிசேடன்
உரக்க (பேசுதல் சிரித்தல் படித்தல் போன்ற செயல்களில்)குரல் ஒலி அதிகரிக்கும் வகையில் அதிக சப்தத்துடன்
உரக்க (பேசுதல், சிரித்தல், படித்தல் போன்ற செயல்களில்) குரல் ஒலி அதிகரிக்கும்படியாக
உரக்கன்னி நாககன்னி
உரங்காட்டுதல் அன்பு பாராட்டல் வலிகாட்டல்
உரங்குத்துதல் மரத்தைச் சுற்றி மண் கெட்டித்தல்
உரங்கொள்ளுதல் கெட்டியாதல், பலமாதல், மிகுதல், கடினமாதல்
உரசல் (ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காததால் ஏற்படும்)சிறு சச்சரவு மனத்தாங்கல்
உரசல் (ஒருவர் மற்றொருவரின் மீது ஏற்படுத்தும்) உராய்வு
உரசு உராய்தல் (ஒன்றை ஒன்றின் மேல்)தேய்த்தல்
உரசு உராய்தல்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together