956 words starting with ஏ · page 13 of 20
Tamil Word
Tamil Meaning
ஏரின்வாழ்நர்
பூவைசியர்
ஏரிப்பாய்ச்சல்
ஏரிநீர்ப் பாசனம், ஏரிநீர் பாய்ந்து விளையும் நிலப்பகுதி
ஏரிப்பாய்ச்சி
மீன்பிடி வரி
ஏரிவாரியத்தார்
ஏரியை மேற்பார்வையிடும் சபையார்
ஏருந்து
எந்திரக் கலப்பை
ஏருழவர்
ஏர்கொண்டு உழுபவர், உழவர்
ஏருழுநர்
உழவர்
ஏருவப்படு
(நீதிமன்றத்தில் அல்லது காவல் துறையினரிடம் குற்றத்தை ஒப்புக்கொண்டு) சரணடைதல்
ஏரோட்டு
உழு
ஏரோட்டுதல்
உழுதல்
ஏரோர்
உழுவோர், உழுவர்
ஏர்
எழுதல். பனிக்கடல் பருகிவலனேர்பு (முல்லைப். 4)
ஒத்தல். முத்தேர்முறுவலார் (இனி. நாற். 2)
ஏர்
உழுபடை, கலப்பை
உழவுமாடு
உழவுத்தொழில்
எழுச்சி
தோற்றப்பொலிவு
அழகு
நன்மை
ஒப்பு
ஓர் உவமவுருபு
ஏர்கட்டு
உழுபடையில் உழவுமாட்டைப்பூட்டி உழத்தொடங்குதல். நல்ல அந்தியேர் கட்டுகிற நேரம்
ஏர்கட்டு
(நிலத்தை உழுவதற்காக) கலப்பையில் மாட்டை இணைத்தல்
ஏர்கட்டுதல்
உழவுமாட்டைப் பூட்டி உழத்தொடங்குதல்
ஏர்க்களம்
நெற்களம், கதிரடிக்குமிடம்
ஏர்க்களவுருவகம்
போர்க்களத்தை ஏர்க்களமாக உருவகப்படுத்தும் புறத்துறை
ஏர்க்கால்
எருது பூட்டிய நுகத்தில் கொளுவும் கலப்பையின் உறுப்பு
வண்டியின் ஓர் உறுப்பு
ஏர்க்கால்
(கலப்பையில்) ஏரையும் நுகத்தடியையும் இணைக்கும் பகுதி
ஏர்ச்சீர்
உழவுத் தொழிலுக்குரிய கருவிகள்
வேளாண்மையால் வரும் செல்வச் சிறப்பு
ஏர்த்தாயம்
பருவகாலத்து உழவு
ஏர்த்தொழில்
உழவுத்தொழில்
ஏர்நாழி
கலப்பையின் ஓர் உறுப்பு
ஏர்பிடி
(கலப்பைகொண்டு) உழுதல்
ஏர்பு
எழுச்சி
கிரககதி
ஏர்பு
எழுச்சி
வனப்பு
அழகு
கோள்நிலை
ஏர்பூட்டு
ஏரில் மாடுகட்டுதல். ஏர்பூட்டினல்லது (ஏரெழு. 17)
ஏர்பூட்டுதல்
பொன்னேர் பூட்டுதல்
ஏரில் மாட்டைக் கட்டுதல்
ஏர்ப்ப
ஓர் உவமவுருபு. (தொல். பொ. 286
உரை.)
ஏர்ப்பண்
பூட்டாங்கயிறு
ஏர்ச்சீர்
ஏர்ப்பு
ஈர்ப்பு
ஏர்ப்பூட்டு
ஏர்தொடுத்தல்
ஏர்ப்பூட்டு
முதலுழவு
ஏர்மங்கலப்பாட்டு
ஏரைப்பாடுவது
ஏர்மங்கலம்
பொன்னேர் பூட்டிப் பாடும் மங்கலப்பாட்டு
ஏர்வாரம்
கமவாரம்
ஏர்வாரம்
ஏருக்காகக் கொடுக்கும் விளைச்சற்பங்கு
ஏற
அதிகமாக. அரைப்படிக்கு ஏறக்கொடு
உயர. அந்தர மாறா... ஏறபறக்கெனிற் பறந்திடும் (சீவக. 2156)
முழுவதும். என்னுடையிருளை யேறத் துரந்தும் (திருவாச. 2, 6)
முற்பட. மாமனிடத்து ஏறச்செல்லு நிலைமையை விரும்பும் (சீவக. 1932, உரை)
ஏற
அதிகமாக, மிகுதியாக
உயர
முழுவதும்
முற்பட
ஏற இறங்க
(எடைபோடும் நோக்கத்துடன் ஒருவரைப் பார்க்கும்போது) மேலும்கீழுமாக
ஏறக்கட்டு
(படிப்பு, வியாபாரம் முதலியவற்றை) மேலும் தொடராவண்ணம் நிறுத்துதல்
ஏறக்கட்டுதல்
உயரக்கட்டுதல்
பலப்படுத்துதல்
விலையேறுவதற்காகச் சரக்கை விற்காமல் வைத்தல்
மழை முதலியன பெய்யாதிருத்தல்
இறைந்த தவசம் முதலியவற்றைக் கூட்டிச் சேர்த்தல்
அடியோடு நிறுத்துதல்
ஏறக்குறைச்சல்
ஏற்றத்தாழ்ச்சி
ஏறக்குறைய
முன்பின்னாக
சுமார்
ஏறக்குறைய
ஏறத்தாழ, முன்பின்னாக, சுமார், முன்பின்
ஏறக்குறைய/ஏறத்தாழ
சற்றுக் கூடுதலாக அல்லது குறைவாக
ஏறங்கோட்பறை
காணக
ஏறுகோட்பறை
ஏறங்கோள்
முல்லைநிலப் பறை, முல்லைநில மக்கள் ஏறுதழுவும் பொருட்டு அடிக்கும் ஒரு வகைப் பறை
ஏறடுதல்
மேல்வைத்தல்
மேற்கொள்ளுதல்
ஏற்றுக்கொள்ளுதல்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.