14,846 words starting with க · page 118 of 297
Tamil Word
Tamil Meaning
களைவாங்குதல்
அழகு குறைதல்
விக்கிரகத்தில் தெய்வ ஆற்றல் நீங்குதல்
களைவாரி
களைபறிக்குங் கருவி, களைக்கொட்டு
களைவு
களைதல், நீக்குதல்
கள்
பன்மைவிகுதி. வாய்ச்சொற்க ளென்ன பயனு மில (குறள் 1100)
அசைநிலை. சுட்டிடுங்களன்றே (சீவக. 2773)
பனை, தென்னை போன்ற மரங்களிலிருந்து உற்பத்தி செய்யப்படும் ஒரு வகையான போதை ஏற்படுத்தும் பானம் ஆகும்
கள்ளு, மது
கள்
மது
தேன்
வண்டு
களவு
பன்மை விகுதி
அசைநிலை
கள்
தென்னை அல்லது பனை மரத்திலிருந்து எடுக்கப்பட்டுப் போதை தரக் கூடியதாக ஆக்கப்பட்ட பானம்
கள்ள
ஓர் உவமஉருபு
கள்ள
சட்டவிரோதமாகவும் லாப நோக்கத்தோடும் செய்யப்படுகிற அல்லது நடத்தப்படுகிற
கள்ளக் கையெழுத்து
(காசோலை, பத்திரம் முதலியவற்றில்) ஏமாற்றும் நோக்கத்தோடு பிறருடைய கையெழுத்தைப் போடுதல்
கள்ளக்கடவு
திருட்டுவழி
கள்ளக்கடை
திருட்டுப் பொருள்களை விற்கும் கடை
கள்ளக்கதவு
கள்ளவாயில், பிறர் அறியாமற் செல்லுதற்குரிய கதவுள்ள வாயில்
கள்ளக்கப்பற்காரன்
கடற்கொள்ளை யடிப்போன்
கள்ளக்கப்பல்
கடற்கொள்ளைக்காரர்க்குரிய கப்பல்
கள்ளக்கயிறு
உறியின் சுருக்குக் கருவி
பையின் சுருக்குக் கயிறு
கள்ளக்கவறு
கள்ளச் சூதுகருவி
கள்ளக்கவி
பிறர் பாடிய பாடலைத் தனதென்று கூறுபவன்
ஒருவனுக்குப்பாடிய பாட்டை வேறொருவனுக்குக் கொடுப்போன்
கள்ளக்காசு
செல்லாக்காசு
திருட்டு நாணயம்
கள்ளக்காமம்
காரியத்தின்பொருட்டு மேற்கொண்ட போலிக் காமம்
கள்ளக்கிடை
தூங்குவதுபோல் பாசாங்கு செய்தல்
மறைந்து பதுங்கியிருத்தல்
கள்ளக்கும்பிடு
வஞ்சனையாகச் செய்யும் வணக்கம்
கள்ளக்கும்பீடு
வஞ்சனையாகச் செய்யும் வணக்கம்
கள்ளக்கையெழுத்து
ஏமாற்றும் நோக்கத்தில் பிறர் கையெழுத்துப் போன்று இடுதல்
கள்ளக்கையெழுத்து
மாறான கையொப்பம்
கள்ளக்கோல்
அளவைத் தவறாக நிறுத்துக்காட்டுந் தராசு
கள்ளங்கபடம்
பொய்
களவு
வஞ்சனை போன்ற செயல்
கள்ளங்கவடு
சூதுவாது
கள்ளச்சத்தியம்
பொய் ஆணை
கள்ளச்சந்தை
அரசாங்கக் கட்டுப்பாட்டில் உள்ளதை உரிமையின்றித் திருட்டுத்தனமாக விற்றல்
கள்ளச்சந்தை
அரசாங்கக் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் பொருள்களை உரிமை பெறாமலும் வரி செலுத்தாமலும் அதிக விலைக்கு விற்கும் வியாபாரம்
கள்ளச்சரக்கு
திருட்டுப்பொருள்
ஏமாற்றி விற்கும் போலிப்பொருள்
கள்ளச்சாட்சி
பொய்ச்சாட்சி
பொய்ச்சாட்சி சொல்வோன்
கள்ளச்சாவி
களவாடும் நோக்கத்தில் பூட்டைத் திறக்கப் பயன்படும் மாற்றுச்சாவி
கள்ளச்சாவி
கள்ளத் திறவுகோல்
கள்ளச்சாவி
திருடும் நோக்கத்துடன் (பூட்டைத் திறக்கப் பயன்படுத்தும்) மாற்றுச் சாவி
கள்ளச்சி
கள்ளச் சாதியாள்
திருடி
வாழைப் பூவின் உட்புறமுள்ள நரம்பு
கள்ளச்சிரிப்பு
வஞ்சகமாக வெளிக்குக் காட்டுஞ் சிரிப்பு
கள்ளச்சுரம்
உட்காய்ச்சல்
கள்ளச்சொல்
பொய்
திருட்டுப்பேச்சு
கள்ளஞானம்
போலியறிவு
கள்ளத்தனம்
திருட்டுத்தனம்
கபடம்
கள்ளத்தாலி
பிறர் மணம் புரியாதவாறு தனக்கு உரிமையுள்ள ஒரு பெண்ணுக்குத் திருட்டுத் தனமாகக் கட்டும் தாலி
கள்ளத்தூக்கம்
பொய்யுறக்கம்
யோகநித்திரை
கள்ளத்தோணி
அனுமதியின்றி பொருள்களைக் கடத்திச் செல்லப் பயன்படுத்தும் படகு
கள்ளத்தோணி
உரிய அனுமதி இல்லாமல் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டுக்கு ஆட்களை அல்லது பொருள்களைக் கடத்தப் பயன்படுத்தும் படகு
கள்ளநித்திரை
பொய்யுறக்கம்
யோகநித்திரை
கள்ளநேரம்
களவு முதலியன நடத்துவதற்கு ஏற்ற வேளை
கன்னியிருட்டு வேளை
கள்ளநோக்கம்
கள்ளப்பார்வை
வஞ்சகக் கருத்து
கள்ளநோக்கு
கள்ளப்பார்வை
வஞ்சகக் கருத்து
கள்ளன்
பிறர் பொருட்களை அவருக்கு தெரியாமல் கவர்ந்து கொள்பவன்
திருடன்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.