14,846 words starting with க · page 196 of 297
Tamil Word
Tamil Meaning
குட்டு1
விரல் முட்டியால் (தலையில்) குத்துதல் அல்லது (தலையின் பக்கவாட்டில்) தட்டுதல்
குட்டு2
(தலையில்) விரல் முட்டியால் விழும் குத்து
குட்டு3
வெளியே தெரியாமல் மறைத்துவைத்திருப்பது அல்லது செய்வது
குட்டுசட்டி
உருண்டையான சட்டி
குட்டுணி
பிறரால் குட்டுண்பவன்(ள்)
குட்டுதல்
கைமுட்டியால் தலையில் குட்டுதல்
குட்டுப்படுதல்
அடிக்கடி இடறுதல்
குட்டுப்பட்டவன்
ஒரு தொழிலில் இடர்ப்பட்டு அனுபவம் பெற்றவன்
குட்டுவன்
குட்டநாட்டிலுள்ளவன்
சேரன்
குட்டேறு
சிறு காளை
எருத்துத் திமில், மாட்டுக் கொண்டை
குட்டை
குள்ளம்
குறுகிய உருவம்
சிறு குளம்
குறுணி
குட்டைமரம்
வெள்ளைக்குட்டம்
குட்டை1
(சராசரியைவிட அல்லது எதிர்பார்த்ததைவிட) உயரத்தில் குறைவு
குட்டை2
குறைந்த அளவில் நீர் தேங்கிக் கிடக்கும் இடம்(கரை இல்லாத) ஆழமற்ற குளம்
குட்டைமரம்
தொழுமரம்
குட்டையாடு
பள்ளையாடு
குட்டையிலடித்தல்
தொழுமரத்தில் கட்டியடித்தல்
குட்டையைக் குழப்புதல்
குழப்பம் விளைவித்தல் : கலகம் செய்தல்
குட்டையைக்குழப்பு
(தெளிவு ஏற்படுத்துவதற்குப் பதிலாக) குளறுபடிசெய்தல்
குணகண்டி
சிவதைக்கொடி
குணகம்
பெருக்கும் எண்
குணகர்
கணக்கர்
குணகாரம்
பெருக்கல்
குணகு
வளை
குணங்கு
குணகு
பூதபிசாசம்
குணகுணிபாவம்
பண்பும் பண்பியும் போலப் பிரியாமல் இருக்கும் நிலை
குணகுதல்
வளைதல்
சோர்தல், தளருதல்
மனந் தடுமாறுதல்
குணகோளார்த்தம்
பூமியின் கிழக்குப் பாதி உருண்டை
குணக்காய்ப்பேசுதல்
விதண்டாவாதஞ் செய்தல்
குணக்கிராகி
நற்குணத்தையே கொள்பவன்
குணக்கு
கிழக்கு
கோணல்
எதிரிடை
மாறுபாடு
நோய் முற்றுகை
குணக்குதல்
பின்னிற்றல்
வளைத்தல்
குணக்குன்று
நற்குணம் மிகுந்தவன்
குணக்கேடன்
நற்குணமற்றவன்
குணக்கேடு
குணமின்மை
நோய் கடுமையாக மாறும் நிலை
குணங்கர்
பூதபிசாசம்
குணங்காட்டுதல்
இயற்கைக் குணத்தை வெளிப்படுத்துதல்
நோயினின்று குணமாதலைக் காட்டுதல்
குணங்கு
பூதபிசாசம்
குணங்குதல்
வளைதல்
சோர்தல், தளருதல்
மனந் தடுமாறுதல்
குணங்குறி
தன்மையும் வடிவமும்
குணசாலி
நற்குணமுள்ளவன்(ள்)
குணசாலி
(பொதுவாக) நல்ல பண்புகள் நிறைந்தவர்(சிறப்பாக) சகிப்புத் தன்மை உடையவள்
குணசீலன்
நற்குன நற்செயல் உடையவன்
குணசீலி
நற்குணச்செயல் உடையவன்
குணசைவம்
பதினாறுவகைச் சைவ சமயங்களுள் சிவபிரானை எண்குணங்களுடையவராக நினைந்து வழிபடும் ஒரு பிரிவு
குணச்சித்திர
குணத்தையும் உணர்ச்சியையும் திறம்பட வெளிப்படுத்தக் கூடிய (நடிகர்)
குணச்சித்திரம்
(கதை, நாடகம் முதலியவற்றில்) கதாபாத்திரம்
குணஞ்ஞன்
பிறர் நற்குணங்களையறிந்து மகிழ்பவன்
இனிய குணமுள்ளவன்
குணட்டு
கதிர் முதலியவற்றின் சிறு கொத்து
குணட்டுதல்
மயக்கிப் பேசுதல்
செல்லங் கொஞ்சுதல்
துள்ளி விளையாடுதல்
பகட்டுப் பண்ணுதல்
குணதரன்
நற்குணமுள்ளவன்
முனிவன்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.