14,846 words starting with க · page 266 of 297
Tamil Word
Tamil Meaning
கொடிமல்லிகை
மல்லிகை
சாதிமல்லிகை
கொடிமாசிகள்
நிலையற்றோடும் மேகங்கள்
கொடிமாதுளை
ஒருவகை மாதுளைமரம்
கொடிமின்னல்
கொடிபோல வீசி ஒளிரும் மின்னல்
கொடிமின்னல்
கொடி போல் நீண்டு பிரிந்து தோன்றும் மின்னல்
கொடிமுந்திரி
திராட்சை
கொடிமுந்திரிகை
திராட்சை
கொடிமூக்கு
நீண்ட மூக்கு
கொடிய
உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய
கொடியடுப்பு
அடுப்புவகை
பக்க அடுப்பு
கொடியடுப்பு
பெரிய அடுப்பிலிருந்து கிடைக்கும் வெப்பத்தால் பயன்படுத்தக் கூடிய முறையில் உள்ள சிறு அடுப்பு
கொடியது
கொடுமையானது
கொடியன்
தீயன்
கேது
கொடியரசு
அவரைக்கொடி
அரசரமரவகை
கொடியராகு
கோமேதகம்
கொடியாடு
ஆண்டுக்கொருமுறை ஒரு குட்டி போடும் நீண்ட காலுள்ள ஆடு
கொடியான்
கொடுமையானவன்
கொடியார்கூந்தல்
அம்மையார் கூந்தல் என்னும் சவரிக்கொடி
கொடியாள்
கொடிபோன்ற பெண்
கொடுமையானவள்
கொடியாள்கூந்தல்
அம்மையார் கூந்தல் என்னும் சவரிக்கொடி
கொடியிறக்குதல்
ஏற்றின கொடியைத் தாழத்துதல்
திருவிழா முடிவில் கொடியைக் கீழிறக்கி விடுதல்
காற்றாடியை இறக்குதல்
கொடியீச்சு
சவ்வரிசி
கொடியெடுத்தல்
அறைகூவுகை
வெற்றியின் அறிகுறியாகக் கொடிபிடித்தல்
கொடியேற்றம்
கோயிலில் திருவிழாத் தொடக்கத்தில் கொடி மரத்தில் கொடியை உயர்த்துதல்
கொடியேற்றம்
கோயில் திருவிழாவில் கொடியைக் கம்பத்தில் பறக்கவிடும் துவக்க விழா
கொடியேற்று
கோயிலில் திருவிழாத் தொடக்கத்தில் கொடி மரத்தில் கொடியை உயர்த்துதல்
கொடியேற்றுதல்
கோயிலில் திருவிழாத் தொடக்கத்தில் கொடி மரத்தில் கொடியை உயர்த்துதல்
கொடியோடுதல்
கொடியுண்டாகிப் படர்தல்
இரேகை நீளுதல்
இறக்குந்தருவாயில் மூச்சு இழைதல்
கொடியோன்
தீயவன்
கற்றாழை
கொடிறு
கதுப்பு
யானை மதச்சுவடு
குறடு
பூசநாள்
கொடிற்றுக்கோல்
கள்வர் பயன்படுத்தும் கருவி, கன்னக்கோல்
கொடிவழி
ஒற்றையடிப் பாதை
மரபுவழி
கொடிவழித்தீர்த்தம்
திருப்பதி மலையிலுள்ள ஒரு புண்ணிய தீர்த்தம்
கொடிவாகனன்
காக்கையை ஊர்தியாகவுடைய சனி
கொடிவிடுதல்
மிகுதியாதல்
கொடியோடுதல்
கொடிவீடு
படர்கொடிகளால் அமைந்த வீடு
கொடிவேலி
அதிகற்றாதி
கொடு1
(ஒருவர் ஒன்றை) பெற உதவுதல்
கொடு2
பிறருக்குப் பயன்படும்படி ஒரு செயல் செய்யப்படுவதைக் குறிப்பிடும் துணை வினை
கொடுகுதல்
குளிரால் ஒடுங்குதல்
பற்கூசுதல்
கொடுமையாதல்
கொடுகொடுத்தல்
குளிரால் நடுங்குதல்
விரைவுபடுதல்
கொடுகொட்டி
கொடுகொட்டி என்பது தோற்கருவி வகை சார்ந்த தமிழர் இசைக்கருவிகளுள் ஒன்று. இது ஒரு வகைப் பறை எனும் முழவுக்கருவியாகும். இதனைப் பற்றிய குறிப்புகள் சிலப்பதிகாரத்திலும் தேவாரத்திலும் உள்ளன. இக்கருவி தற்காலத்தில் கிடுகிட்டி என்றழைக்கப்படுகிறது. நாகசுரக் கச்சேரிகளிலும் இடம்பெறுகிறது
கொடுகொட்டி
பதினோராடல்களுள் முப்புரம் எரித்த காலையில் சிவபெருமான் ஆடிய கூத்து
ஒரு பறைவகை
கொடுக்கறுத்தல்
குறும்புத்தனததை அடக்குதல்
கொடுக்கல்வாங்கல்
கொடுப்பதுவும் வாங்குவதும், இலேவாதேவி
கொடுக்கல்வாங்கல்
தருவது, பெறுவது என்ற முறையில் பரிமாறிக்கொள்ளும் செயல்
கொடுக்காய்ப்புளி
வளைந்த காயையுடைய ஒரு மரவகை
கொடுக்காய்ப்புளி
சுருண்ட வடிவமும் பச்சை நிறப் புறத்தோலும் வெண்ணிறச் சதைப் பகுதியில் கரு நிற விதையும் கொண்ட (துவர்ப்பும் இனிப்பும் உடைய) ஒரு வகைக் காய்
கொடுக்கி
ஆபரணப்பூட்டு
தேட்கொடுக்கிப் பூடு
கதவையடைத்து இடும் இருப்புப்பட்டை
கொடுக்கு
தேள் முதலியவற்றின் கொட்டும் உறுப்பு
நண்டு முதலயவற்றின் இடுக்கிக்கால்
தீயவன்
ஆடைத்தொங்கல்
மகன்
மூலத்தாறு
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.