iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,541 words starting with ச · page 107 of 191

சீட்டி1 (நாக்கை மடித்து உதடுகளைக் குவித்து) காற்றை வெளியேற்றுவதனால் உண்டாகும் ஒலி
சீட்டி2 (திரைச்சீலை, உறை முதலியன தைக்கப் பயன்படும்) வண்ணமும் வடிவமும் பதிக்கப்பட்ட சற்றுக் கனமான பருத்தித் துணி
சீட்டியடி (வாயால்) சீட்டி எழுப்புதல்
சீட்டியடித்தல் சீழ்க்கையடித்தல்
சீட்டு எழுத்துக் குறிப்பு பத்திரம் கூட்டுச் சீட்டு நிதி விளையாட்டுச் சீட்டு பட்டியல்
சீட்டு2 (அமர்வதற்கான) இருக்கை
சீட்டுக்கச்சேரி சீட்டாட்டம்
சீட்டுக்கட்டு விளையாடுஞ் சீட்டுத்தொகுதி
சீட்டுக்கட்டு (பணம், பாத்திரம் முதலிய சீட்டில்) உறுப்பினராகச் சேர்ந்து குறிப்பிட்ட தொகை செலுத்துதல்
சீட்டுக்கரைசுவான் ஏலச்சீட்டு நடத்துபவன்
சீட்டுக்கவி ஓலைப்பாசுரம், ஓலையில் கவி வடிவில் எழுதிய கடிதம்
சீட்டுக்கவி (முற்காலத்தில் புலவர்கள் தம்மை ஆதரிக்க வேண்டி எழுதிய) செய்யுள் வடிவக் கடிதம்
சீட்டுக்கிழி1 வேலை பறிபோதல்
சீட்டுக்கிழி2 வேலையை விட்டு நீக்குதல்
சீட்டுக்கிழிதல் இழத்தல் வேலையிலிருந்து நீக்கப்படுதல்
சீட்டுக்குலுக்கு (தேர்ந்தெடுப்பதற்காகக் குறிப்பிட்ட பெயர்கள் அல்லது எண்கள் எழுதப்பட்ட) காகிதச் சுருள்களைக் குலுக்கிப் போட்டு ஒன்றை எடுத்தல்
சீட்டுக்குலுக்குதல் திருவுளச்சீட்டு உதறுதல்
சீட்டுக்கொடுத்தல் ஆதாரபத்திரம் முதலியனகொடுத்தல் வேலையினின்று விலகக் கட்டளையிடுதல்
சீட்டுப்பிடி (பணம், பாத்திரம் முதலிய) சீட்டுக்கான உறுப்பினர்களைச் சேர்த்தல்
சீட்டுப்பிடித்தல் கூட்டுச்சீட்டு ஏற்படுத்துதல் சீட்டில் ஏலமெடுத்தல் சீட்டு விளையாட்டில் பிறர் சீட்டை வென்றெடுத்தல்
சீட்டுப்போடுதல் திருவுளச்சீட்டு உதறுதல் கூட்டுச்சீட்டு நிதியில் பங்கெடுத்தல் சீட்டு விளையாட்டில் சீட்டுப் போடுதல்
சீட்டுவாங்குதல் தள்ளப்படுதல் எமனுடைய சீட்டுப் பெறுதலான இறத்தல்
சீட்டுவிழுதல் திருவுளச்சீட்டு முதலியன ஒருவன் சார்பாக உரிமையாதல்
சீட்டை இரண்டாம் போகத்தில் விளையும் கதிர் சீழ்க்கை
சீட்டைக்கதிர் இரண்டாம் போகத்தில் விளையும் கதிர் பணியாளர் அனுபோகத்தின் பொருட்டு விடப்பட்ட கதிர்
சீணசந்திரன் தேய்பிறை
சீணம் கேடு சோர்வு அழிவுறுகை
சீணித்தல் வலிகுறைதல் அழிவடைதல்
சீண்டரம் தொல்லை தொந்தரவு
சீண்டல் தயிர் முதலியவற்றின் தீநாற்றம்
சீண்டு தயிர் முதலியவற்றின் தீநாற்றம்
சீண்டு (விளையாட்டாகவோ குறிப்பிட்ட நோக்கத்துடனோ) கோபம், எரிச்சல் ஆகியவை உண்டாகுமாறு சிறு தொல்லை தருதல்
சீண்டுதல் வெறுப்பு உண்டாக்குதல்
சீண்டுதல் தொந்தரவுசெய்தல் தீண்டியுணர்த்துதல்
சீதகண்டுவாதம் பாத நரம்பில் சீதள மிகுதியால் உண்டாகும் நமைச்சல்நோய்
சீதகன் சுக்கிரன் சோம்பன் சந்திரன்
சீதகம் ஈயம் தரா
சீதகிரணன் சந்திரன்
சீதகும்பம் அலரி
சீதக்கடுப்பு சீதக்கட்டால் மலவாயிலில் தோன்றும் வலி
சீதக்கட்டு சீதவழும்புநோய்
சீதக்கழிச்சல் சீதபேதிவகை
சீதசம்பகம் கண்ணாடி
சீதசுரம் குளிரோடுவரும் சுரம்
சீதநீர் பனிநீர்
சீதனக்காணி சீதனமாகப் பெற்ற பூமி
சீதனக்காரி சீதனத்துடன் வந்த பெண்
சீதனச்சீட்டு சீதனம் எழுதப்பட்ட ஓலை
சீதனம் மணமகள் கொண்டுவரும் சீர்வரிசை
சீதனம் மணமகள் தாய்வீட்டிலிருந்து கொண்டுவரும் பொருள்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together