iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,541 words starting with ச · page 134 of 191

சுறுசுறுத்தல் தீவிரப்படுதல், கடுமையாதல்
சுறுசுறுப்பு ஊக்கம் தீவிரம்
சுறுசுறுப்பு (சோம்பல் இல்லாமல்) செயல்படுவதற்கான ஊக்கம்
சுறுசுறெனல் ஒர் ஒலிக்குறிப்பு விரைவுக்குறிப்பு உட்செல்லுதற்குறிப்பு கடுத்தற்குறிப்பு
சுறுதி சுறுசுறுப்பு
சுறை இலையற்ற கொடிவகை
சுறோணிதம் குருதி மகளிர் தீட்டு சுக்கிலத்தோடு சேர்ந்து குழந்தை உண்டாகக் காரணமாகும் மகளிர் இரத்தம் சிவப்பு
சுற்கம் மகள்கொள்ள அளிக்கும் பரிசம் பந்தயப் பொருள் விலைப்பொருள்
சுற்பம் செம்பு
சுற்றத்தார் உறவினர் இனத்தார் துணைவர் பரிவாரம்
சுற்றந்தழால் உறவினரைத் தழுவிக்கொள்தல்
சுற்றம் உறவினரர் பரிவாரம் அரசர்க்குரியதுணையில் ஒன்று கூட்டம் ஆயத்தார்
சுற்றறிக்கை (ஓர் அலுவலகத்தில், அமைப்பில்) செய்திகளைச் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தெரிவிக்க அனுப்பும் அறிக்கை
சுற்றளவு வட்ட அளவு
சுற்றளவு (ஏதேனும் ஒரு) வடிவத்தின் வெளி விளிம்பின் மொத்த நீளம்
சுற்றவும் (பார், நோக்கு, கவனி ஆகிய வினைகளுடன்) சுற்றுமுற்றும்
சுற்றாலை சுற்றுச்சுவர், பிராகாரம்
சுற்றி (ஒருவரை, ஒரு பொருளை) வட்டமாக வளைத்து(ஓர் இடத்தை மையமாகக் கொண்டு) எல்லாப் பக்கங்களிலும்
சுற்றிக்கட்டுதல் எழுத்துச்சுழி வரைதல் சூழ்ச்சிசெய்தல் நீரை வேறுவழி திருப்புதல் பொய்யாகக் கற்பித்தல் இலஞ்சம் கொடுத்தல்
சுற்றிக்கொள்ளுதல் சூழ்ந்துகொள்ளுதல் கவர்தல் வளைந்துகொள்ளுதல்
சுற்றிச்சுழற்றுதல் விளக்கமின்றி வளர்த்துப் பேசுதல்
சுற்றிச்சுழலுதல் சுற்றிவருதல் விடாது பற்றித்தொடர்தல் விடாது கெஞ்சுதல்
சுற்றிச்சுழல் சுற்றிவருதல் விடாது பற்றித்தொடர்தல் விடாது கெஞ்சுதல்
சுற்றித்திரி (குறிப்பிட்ட நோக்கம் எதுவும் இல்லாமல்) அங்குமிங்கும் சென்றுவருதல்
சுற்றிப்பார் (நேரில் சென்று) பார்வையிடுதல்
சுற்றிப்பிடித்தல் வளைந்து பற்றுதல் வயிறு மிகவும் நோதல் பற்றிக்கொள்ளுதல்
சுற்றிப்போடு மிளகாய் மண் உப்பு முதலியவற்றைக் கொண்டு திருஷ்டிக்கழி
சுற்றிப்போடு (மிளகாய், உப்பு, தெரு மண் முதலியவற்றைக் கையில் வைத்து ஒருவரின் தலைமேல் சுற்றிப் பிறகு நெருப்பில் போட்டு) பிறர் பார்வையின் தீய விளைவை நீக்குதல்
சுற்றிப்போடுதல் கண்ணேறு கழித்தல் மணமக்கள் முதலியோரின் முடியைச் சுற்றிப் பண்ணிகாரம் முதலியவற்றை எறிந்து கண்ணேறு கழித்தல்
சுற்றியெறிதல் கண்ணேறு கழித்தல் மணமக்கள் முதலியோரின் முடியைச் சுற்றிப் பண்ணிகாரம் முதலியவற்றை எறிந்து கண்ணேறு கழித்தல்
சுற்றிலும் சுற்றுமுற்றும்
சுற்றிவர சுற்றிலும்
சுற்றிவளை (ஒரு விஷயத்தை) நேரடியாகச் சொல்லாமல் தொடர்பில்லாத விஷயங்களையும் சேர்த்தல்
சுற்றிவாங்குதல் தேசிக்கூத்துக்குரிய கால்வகை சுற்றிவந்து பெற்றுக்கொள்ளுதல்
சுற்று வட்டமாயோடல் அச்சின்மேல் சுழற்சி சுருளுதல் சுற்றளவு சுற்றுவழி சுற்றிடம் கால்விரலணி மதில் கோயிலின் சுற்றுமதில் சொற்பொருள்களின் சிக்கல்
சுற்று1 (ஒரு பொருள் இருக்கும் இடத்தில் இருந்தவாறே) குறிப்பிட்ட திசையில் சுழலுதல்/(ஒரு பொருளை) சுழலச்செய்தல்
சுற்றுக்கட்டு வீட்டின் புறக்கட்டு அயலிடம் உறவினர்களிள் கூட்டம் கட்டுக்கதை இலஞ்சம்
சுற்றுக்கட்டு வீட்டின் உட்புறத்தில் முற்றத்தைச் சுற்றி அமைந்திருக்கும் தாழ்வாரப் பகுதி
சுற்றுக்கட்டை கொத்தன் பூசுவதற்குப் பயன்படுத்தும் மணியாசிக்கட்டை
சுற்றுக்கல் கொப்பு முதலிய நகையைச் சுற்றி வட்டமாக அமைக்கும் மணிகள்
சுற்றுக்காரியம் உதவித்தொழில்
சுற்றுக்காலிடுதல் விடாது பற்றித்தொடர்தல் விடாதுகெஞ்சுதல்
சுற்றுக்கால் சுற்றுப்புறம் அயலிடம் சுற்றியுள்ள கால்வாய்
சுற்றுக்கோயில் ஆலயத்தின் சுற்றுப்பிராகாரத்தில் உள்ள சிறு சன்னதிகள்
சுற்றுக்கோள் சுற்றிக்கொள்ளுகை
சுற்றுச்சுழற்சி சுற்றுவழி செயற்சிக்கல் குறித்த செய்தியை நேரின்றி வளர்த்துக் கூறுகை
சுற்றுச்சுவர் சுற்றுப்புற மதில்
சுற்றுச்சுவர் (கட்டடத்தின்) வெளி எல்லையாக எழுப்பப்படும் சுவர்
சுற்றுச்சூழல் உயிரினங்கள் வாழும் பகுதியில் உள்ள காற்று, நீர் போன்றவை அடங்கிய இயற்கை நிலை
சுற்றுடைமை வட்டவடிவு

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together