iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

8,321 words starting with த · page 112 of 167

தும்பினி மின்மினிப்பூச்சி
தும்பிப்பதக்கம் வண்டின் வடிவாகச் செய்யப்பட்ட அணிவகை
தும்பியூதுதல் வண்டுபோல ஒலித்தல் ஓசையோடு வலிந்து மூச்சு வாங்குதல் எச்சில், சவர்க்காரநீர் முதலியவற்றை ஊதிக் குமிழி உண்டாக்குதல்
தும்பிலி ஒரு மரவகை கடல்மீன்வகை
தும்பு நார்
தும்பு கயிறு நார் சிம்பு தாலியுரு நெருஞ்சி கரும்பு வரம்பு தூசி குற்றம் அநாகரிகச் சொல்
தும்பு1 (மாட்டையோ கன்றையோ கட்டிப்போடும்) நீளம் அதிகம் இல்லாத கயிறு
தும்பு2 தேங்காய் மட்டையிலிருந்து உரித்த நார்
தும்பு3 வம்பு என்பதோடும் தூசி என்பதோடும் இணைந்து வரும் சொல்
தும்புக்கட்டு தேங்காய் நாரால் செய்த துடைப்பம்
தும்புக்கட்டு தென்னந் தும்பினால் கட்டப்பட்ட துடைப்பம்
தும்புக்கயிறு தென்னை, பனை முதலியவற்றின் நாரால் திரிக்கப்பட்ட கயிறு மாட்டுத்தும்பு
தும்புதட்டுதல் நையப் புடைத்தல்
தும்புபோடுதல் கயிறு திரித்தல் துருவியறிதல்
தும்புரு யாழ்வகை ஒரு கந்தருவன்
தும்புவெட்டு ஆடையின் ஓரத்தைக் கத்தரித்தல்
தும்பை வெண்மையான நிறத்தையுடைய ஒருவகை மலராகும்
தும்பை (மருந்தாகப் பயன்படும்) சிறிய வெள்ளை நிறப் பூவைத் தரும் ஒரு சிறு குத்துச்செடி
தும்பைத்திணை பெருவீரச் செயல் காட்டிப் பகைவரோடு போர் செய்தலைக் கூறும் பகுதி
தும்பைமாலை தும்பைமாலை அணிந்து பெரும்போர் புரிந்த வீரனைப் புகழ்ந்து கூறும் நூல்வகை
தும்மட்டி சிறுகொம்மட்டி
தும்மற்காதல் தும்மலைக்கொண்டு குறி சொல்லுகை
தும்மல் தும்முதல் மூச்சு
தும்மல் மூக்கிலிருந்து வெடிப்பொலியோடு வெளிப்படும் மூச்சுக் காற்று
தும்மு தும்முதல் கொசு
தும்முட்டி சிறுகொம்மட்டி
தும்முதல் தும்மல் மூச்சுத் தடைப்பட்டு ஒலியுடன் மூக்கு வாய்வழியாய் வெளிவருதல் விடுதல் மூச்சுவிடுதல்
துயக்கன் மனத்திரிவை உண்டாக்குபவன்
துயக்கம் சோர்வு தடை
துயக்கு சோர்வு துயரம் மனமயக்கம் ஆசை பந்தம் தடை மனத்திரிவு
துயக்குதல் தளரச் செய்தல்
துயங்குதல் சோர்தல்
துயம் இரண்டு திருமாலைத் தேவதையாகக் கொண்டதும் இரண்டு வாக்கியங்கள் உடையதுமான மந்திரம் கொடி
துயரடி துன்பம் சோர்வு
துயரம் துன்பம் மனத்துக்கம் இரக்கம் மழை
துயரம் (-ஆன) துன்பம்
துயரி யாழ்நரம்பு
துயர் துன்பம் அரசர்க்கு உரிய சூது முதலாகிய விதனம்
துயர் துடைப்புப் பணி (வறட்சி, வெள்ளம் முதலியவற்றால்) பாதிக்கப்பட்டவர்களின் துன்பம் போக்கும் நிவாரண நடவடிக்கை
துயர்தல் வருந்துதல் தொடர்தல்
துயற்சி தூக்கம்
துயலுதல் அசைதல் தொங்குதல் பறத்தல்
துயல்தல் அசைதல் தொங்குதல் பறத்தல்
துயல்வருதல் அசைதல்
துயவு அறிவின் திரிபு
துயினடை தூக்கத்திடையே எழுந்து செல்லச் செய்யும் நோய்
துயிற்றுதல் உறங்கச்செய்தல் தங்கப்பண்ணுதல்
துயிலார் உறக்கமில்லாத தேவர்
துயிலார்தல் உறங்குதல்
துயிலி ஒரு கீரைவகை ஓர் ஆடைவகை

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together