iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

8,321 words starting with த · page 85 of 167

திருத்தம் (எழுதப்பட்டவற்றில் அல்லது அச்சிடப்பட்டவற்றில் உள்ள) தவறுகளை நீக்கி ஒழுங்குபடுத்தித் தரும் முறை
திருத்தல் திருத்தம் வயல்
திருத்தி மனநிறைவு
திருத்தியமை (ஏற்கனவே இயற்றப்பட்ட சட்டம், போடப்பட்ட திட்டம் முதலியவற்றில் உள்ள குறைபாடுகளை நீக்கி) ஒழுங்குபடுத்தி அமைத்தல்
திருத்து பண்படுத்தபட்ட நிலம் நன்செய் நிலம் ஒப்பனை
திருத்துதல் செவ்விதாக்குதல் சீர்படுத்துதல் மேன்மைப்படுத்துதல் செம்மையாகச் செய்தல் நிலம் முதலியவற்றைப் பண்படுத்தல் இலை, காய் முதலியன நறுக்குதல் செம்மைபெற அணிதல் உறவாக்குதல் மெருகிடுதல் மேற்பார்த்தல் அழைத்தல்
திருத்துழாய் நத்தைச்சூரிப் பூண்டு
திருத்தொண்டர் இறைவனடியார்
திருத்தொண்டு கடவுளடியார்க்குச் செய்யும் பணிவிடை
திருத்தோப்பு கோயிலுக்குரிய நந்தவனம்
திருநகர் செல்வநகரம்
திருநடனம் இறைவன் திருக்கூத்து
திருநடைமாளிகை கோயிற்பிராகாரம்
திருநட்சத்திரம் பெரியோர் பிறந்த நட்சத்திரம் பெரியோர் மறைந்த நட்சத்திரம் வயது
திருநந்தவனம் கோயில் நந்தவனம்
திருநந்தாவிளக்கு சுவாமி திருமுன் எப்பொழுதும் எரிந்துகொண்டிருக்கிற விளக்கு
திருநல்லியாண்டு நல்ல வளமையான ஆட்சி ஆண்டு
திருநாடலங்கரித்தல் வைகுண்டத்தை அலங்கரிக்கும் நற்கதியடைதல்
திருநாடு வைகுண்டம்
திருநாமக்கத்திரி ஒரு பாம்புவகை
திருநாமச்செடி ஒரு செடிவகை
திருநாமத்துக்காணி தேவதான நிலம்
திருநாமத்துத்தி ஒரு பூடுவகை
திருநாமப்பாட்டு இயற்றியவரின் பெயர், பயன் முதலியவை கூறும் பதிகவிறுதிப் பாட்டு
திருநாமப்பாலை ஒரு பூடுவகை
திருநாமம் தெய்வம் அல்லது பெரியோரின் பெயர் வைணவர் தரிக்கும் ஊர்த்துவ புண்டரம் மதிப்புவாய்ந்த மக்கள்
திருநாளைப்போவார்நாயனார் தில்லையைக் காண நாளைப் போவேன் என்றவராகிய நந்தனார்
திருநாள் விழாநாள் பிறந்தநாள்
திருநாள் பண்டிகை நாள்
திருநிலைமகளிர் சுமங்கலிகள்
திருநீறு விபூதி
திருநீறு சைவர்கள் உடலில் பூசிக்கொள்வதற்காக விசேஷமாகத் தயாரிக்கப்பட்ட சாம்பல்
திருநீற்றுக்காப்பு பெரியோரால் ஒருவருக்குக் காப்பாக இடப்படும் திருநீறு திருநீறு
திருநீற்றுக்கோயில் திருநீற்றுப் பை
திருநீற்றுப் பச்சிலை கரந்தை
திருநீற்றுப்பச்சை ஒரு செடிவகை
திருநீற்றுப்பத்திரி ஒரு செடிவகை
திருநீற்றுப்பழம் திருநீற்றுருண்டை
திருநீற்றுமடல் திருநீறு வைக்கும் கலம்
திருநீலக்கண்டன் கரிய கழுத்தையுடையவனான சிவன் ஒரு பூரான்வகை தீயன்
திருநுந்தாவிளக்கு சுவாமி திருமுன் எப்பொழுதும் எரிந்துகொண்டிருக்கிற விளக்கு
திருநோக்கம் கடவுள், குரு முதலியோரின் அருட்பார்வை
திருநோக்கு கடவுள், குரு முதலியோரின் அருட்பார்வை
திருந்த திருத்தமாக
திருந்தகைமை மேன்மை
திருந்தலர் பகைவர்
திருந்தார் பகைவர்
திருந்தினர் ஒழுக்கமுள்ளவர்
திருந்து தவறான பழக்கவழக்கங்களிலிருந்து விலகுதல்
திருந்துதல் சீர்ப்படுதல் செவ்விதாதல் பண்படுத்தப்படுதல் தொழில் முற்றுதல் அழகுபடுதல் மேன்மையாதல் பயிற்சி மிகுதல்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together