8,321 words starting with த · page 87 of 167
Tamil Word
Tamil Meaning
திருமஞ்சனம்
குறிப்பிட்ட இடத்திலிருந்து நீரைக் கொண்டுவந்து மந்திரம் சொல்லி வழிபாட்டிற்கான விக்கிரகத்தை நீராட்டுதல்
திருமடந்தை
திருமகள்
திருமடம்
குருவின் மாளிகை
திருமடவளாகம்
கோயிலைச் சுற்றியுள்ள இடம்
திருமடைப்பள்ளி
சமையலறை
திருமண வகைகள்
பிரமமணம்
பிரசாபத்தியி மணம்
ஆரிட மணம்
தெய்வ மணம்
காந்தருவ மணம்
ஆசுர மணம்
இராக்கத மணம்
பைசாச மணம்
திருமணம்
கலியாணம்
திருமணம்
ஆணும் பெண்ணும் கணவன் மனைவியாகும் நிகழ்ச்சி அல்லது சடங்கு
திருமணம்பரிமாறுதல்
தாளித்தல்
பொய் கலந்து பேசுதல்
திருமணிகுயிற்றுநர்
முத்துக்கோப்போர்
திருமண்
வைணவர் நெற்றியலணியும் நாமம்
நாமக்கட்டி
திருமண்
(வைணவர்கள்) நாமம் இட்டுக்கொள்ளப் பயன்படுத்தும் வெள்ளை நிறக் கட்டி
திருமண்காப்பு
வைணவர் நெற்றியில் இடும் திருநாமம்
திருமதி
கணவனை மதிப்பவர்களை திருமதி என்று பொருள்
திருமதி
மதிப்புத் தரும் முறையில் திருமணமான பெண்ணின் பெயருக்கு முன்னால் இடப்படும் அடை
திருமதில்
கோயிலின் சுற்றுமதில்
திருமதுரம்
பழம், நெய், சருக்கரை சேர்த்துச் செய்யப்படும் படையற்பொருள்
திருமந்திரம்
சிவஐந்தெழுத்து
திருமால் எட்டெழுத்து
திருமூலர் இயற்றிய நூல்
கோயில்
திருமந்திரவோலைநாயகம்
அரசவை எழுத்தாளர் தலைவன்
திருமரம்
அரசமரம்
திருமறுமார்பன்
அருகன்
மார்பில் அழகிய மறுவையுடைய திருமால்
திருமலர்
திருமகள் வீற்றிருக்கும் தாமரைமலர்
திருமலை
தூய்மையான மலை
கயிலாயமலை
திருவேங்கடமலை
திருமாது
திருமகள்
திருமானகரம்
வைகுண்டம்
திருமாமகள்
திருமகள்
திருமாமணிமண்டபம்
பரமபதத்துள்ள திருவோலக்க மண்டபம்
திருமாலவதாரம்
மீன், ஆமை, பன்றி, நரசிங்கம், வாமனம், பரசுராமன், இராமன், பலராமன், கண்ணன், கற்கி என்னும் திருமாலின் பத்துப் பிறப்புகள்
சனகன், சனந்தனன், சனாதனன், சனற்குமாரன், நரநாராயணன், கபிலன், இடபன், நாரதன், அயக்கிரீவன், தத்தாதிரேயன், மோகினி, வேள்வியின்பதி, வியாதன், தன்வந்திரி, புத்தன் எனப் பதினைந்து கூறுகளையுடைய பிறப்புகள்
திருமாலாயுதம்
சங்கு
சக்கரம்
தண்டு
வாள்
வில்
திருமாலாயுதம்
திருமாலின் ஐம்படைகளான பாஞ்சசன்னியம் என்னும் சங்கு, சுதரிசனம் என்னும் சக்கரம், சார்ங்கம் என்னும் வில், நாந்தகம் என்னும் வாள் கௌமோதகி என்னும் தண்டு
திருமாலிருஞ்சோலை
அழகர் கோயில்கொண்டுள்ள மலை, திருமாலிருஞ்சோலை
திருமால்
விட்டுணு
அரசன்
திருமால்
காத்தல் தொழிலுக்கு உரிய இறைவன்
திருமால்குன்றம்
அழகர்மலை
திருமால்கொப்பூழ்
திருமாலின் கொப்பூழிலிருந்து உண்டான தாமரை
திருமால்நிலை
திருமாலின் பரம், வியூகம், விபவம், அந்தர்யாமித்துவம், அர்ச்சை என்னும் ஐவகை வடிவங்கள்
திருமால்புதல்வன்
திருமாலின் மகனான மன்மதன்
பிரமன்
திருமாளிகை
கோயில்மதிலை ஒட்டி உட்புறத்து அமைத்துள்ள கட்டட வரிசை
பெரியோர் வாழும் இல்லம்
திருமுகம்
கடவுள் சன்னிதானம்
பெரியோர் வரைந்து அனுப்பும் ஓலை
அரசனது சாசனம்
திருமுடி
கோயில்மூர்த்தியின் தலைப்பகுதி
மதிப்புவாய்ந்த மக்கள்
கொத்துவேலை செய்வோர்
திருமுடிச்சாத்து
தலைப்பாகை
திருமுடிச்சேவகர்
ஐயனார்
திருமுடித்திலகம்
திருமுடியில் சூட்டும் மணி
திருமுடியோன்
முடிசூடிய அரசன்
திருமுட்டு
பூசைத்தட்டு முதலியன
திருமுண்டம்
சைவர்கள் மூன்று வரியாக நெற்றியில் இடும் திருநீற்றுக்குறி
திருமுதல்
திரும்புதல்
நன்றாகத் தேய்த்தல்
திருமுன்
திருமுன்பு. விழுந்தவர் திருமுன்சென்று (திருவாலவா. 27, 28)
திருமுன்னர்
திருமுன்
சன்னிதி
சன்னிதியில்
திருமுன்னர்
சன்னிதி
சன்னிதியில்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.