iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

7,352 words starting with ம · page 104 of 148

முன்தள்ளு (ஒரு வரிசையிலிருந்து, ஒழுங்கிலிருந்து) முன் பக்கமாக நீண்டிருத்தல்
முன்நிறுத்து (ஒருவரை அல்லது ஒன்றை) முதன்மைப்படுத்துதல்
முன்நில் முதன்மைப் பொறுப்பு வகித்தல்
முன்னங்கால் முன்பக்கத்துக் கால் முழங்காலின் முன்பக்கம் பாதத்தின் மேற்புறம்
முன்னங்கால் (விலங்கினத்தில்) கழுத்தை ஒட்டி அமைந்திருக்கும் கால்
முன்னங்கை கையின் முன்பகுதி
முன்னங்கை விரல்கள் இருக்கிற கைப் பகுதி
முன்னடி வீட்டின் முகப்பிடம் (W.) சமீபம். அது முன்னடியிலே யிருக்கிறது விளிம்பு. கிணற்று முன்னடி பாட்டின் முதலடி முன்னடியான் முன்பு. (யாழ். அக.)
முன்னடி வீட்டின் முகப்பிடம் அண்மை விளிம்பு பாட்டின் முதலடி முன்பு கோயிலின் வாயிலிலுள்ள சிறுதேவதை
முன்னடிவிளக்கு முன்னால் கொண்டுசெல்லும் கைவிளக்கு
முன்னடைப்பன் அசைபோடாமற் செய்யும் மாட்டுநோய்வகை
முன்னடையாளம் முன்னறிகுறி
முன்னணி தூசிப்படை
முன்னணி (விளையாட்டு, தேர்தல் முதலியவற்றில்) வெற்றி அடையும் வாய்ப்புடன் இருக்கும் நிலை
முன்னணிசு தலைமுண்டாசுவகை
முன்னணை மாட்டுத்தொட்டி கொண்டி மாட்டுக்கு முன்னங்காலிற் கட்டுந் தளை அணைக்குமுன் தாற்காலிகமாகப் போடும் அணை முன்பிறந்த குழந்தை அல்லது கன்று
முன்னதாக முன்பு
முன்னதாக (குறிப்பிடப்படும் நேரத்திற்கு அல்லது குறிப்பிடப்படுவதற்கு) முன்பு
முன்னதிமது பல்லவப்பருனிச்செடி
முன்னது (வரிசையில், ஒழுங்கில்) முன் இருப்பது அல்லது முதலில் வருவது
முன்னந்தம் முன்பார்வை
முன்னந்தலை நெற்றியிலிருந்து உச்சிவரையுள்ள தலைப்பாகம்
முன்னன் தமையன்
முன்னம் See முன். நம்மினு முன்ன முணர்ந்தவளை (குறள் 1277)
முன்னம் முற்காலம் கருத்து மனம் குறிப்பு இம் மொழி சொல்லுதற்கு உரியாரும் கேட்டற்கு உரியாரும் இன்னோரெனப் படிப்பார் அறியுமாறு செய்யப்படுவதாகிய செய்யுளுறுப்பு அரிமா சீக்கிரிமரம்
முன்னர் முன்பு முற்காலத்தில்
முன்னறிகுறி பின்னிகழ்ச்சிக்கு அறிகுறியாக முன்னிகழ்வது
முன்னறிவிப்பு முன்கூட்டியே தெரிவிக்கும் நடவடிக்கை
முன்னல் நினைவு நெஞ்சு
முன்னவன் கடவுள் சிவபிரான் தமையன்
முன்னவள் தமக்கை மூதேவி
முன்னவிலக்கு குறிப்பினால் ஒன்றனை மறுத்து மேன்மை தோன்றச் சொல்லும் விலக்கணி வகை
முன்னாடி முன்னமே, முன்னதாக
முன்னால்1 முன்பக்கமாக
முன்னால்2 முன்பக்கத்தில்
முன்னாள் (பொறுப்பு, பதவி முதலியவை குறித்து வருகையில்) கடந்த காலத்தில் இருந்த
முன்னிடுதல் நேரிடுதல் முந்துதல் சித்தமாயிருத்தல் உதவியாதல் முன்வைத்தல் எதிர்ப்படுதல் முன்போகவிடுதல் துணைக் கொள்ளுதல் நோக்கமாகக் கொள்ளுதல்
முன்னிட்டி விலங்கிற்கு உணவிடுந் தொட்டி
முன்னிட்டு (ஒரு காரணத்தை) முன்வைத்து
முன்னிருட்டு முன்னிரவின் இருள்
முன்னிருப்பு முன்னிலைமை மரபுவழி வந்த உடைமை கையிருப்புத்தொகை கணக்கில் முன்னேட்டிலிருந்து எடுத்தெழுதும் இருப்புத் தொகை
முன்னிரை பெருந்தொகை
முன்னிலவு முன்னிரவின் நிலவு
முன்னிலை முன்னனி, முதல் இடம் - leading position (இத்தேர்தலில் முன்னிலை வகிப்பவர் யார்?) ஒருவர் இருக்கும் இடத்திற்கு முன்னால் -presence ,in front of (இறைவன் முன்னிலையில் யாரும் சமம்) இலக்கணம் - முன்னே இருப்பவரை நிலைப்படுத்தும் இடம்.அதாவது, பேசுபவரின் முன் இருப்பவர் (எடுத்துக்காட்டு) நான், உங்களுக்கு இவ்விலக்கணத்தை விளக்கினேனா? இதிலுள்ள உங்களுக்கு என்பது , இலக்கணப்படி முன்னிலை இடத்தில் இருக்கிறது
முன்னிலை முன்னிற்பவர் முன்னிற்பது தன்மை முதலிய மூவிடங்களுள் ஒன்று காரணம் சமூகம் முதன்மையானது வெளிப்படும் இடம்
முன்னிலை (விளையாட்டு, தேர்தல் முதலியவற்றில் வெற்றி பெறுவதற்கு உரிய) முதல் இடம்
முன்னிலைக்காட்சி இறைவனை அணித்துறக் காணுங் காட்சி
முன்னிலைப்படர்க்கை முன்னிலைப் பொருளில் வழங்கும் படர்க்கைச்சொல்
முன்னிலைப்படுத்து (தன்னை) முதன்மை நிலையில் வைத்தல்
முன்னிலைப்பரவல் கடவுளை முன்னிலைப் படுத்திப் புகழ்தல்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together