iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

7,352 words starting with ம · page 95 of 148

முட்டிக்கால் முழங்கால்
முட்டிக்கொள் (ஒருவர் செய்ய இருக்கும் செயலால் நல்ல பயன் கிடைக்காது என்பது தெரியும்போது அதைக் கைவிட) வற்புறுத்திச் சொல்லுதல்
முட்டிக்கொள்ளுதல் சினம், துயரம், முதலியவற்றால் தலையை மோதிக்கொள்ளுதல் பெருமுயற்சி எடுத்தல்
முட்டிடை நெருக்கடி நெருக்கம்
முட்டிபோடு (தண்டனையாக) மண்டிபோடுதல்
முட்டிமுரண்டுதல் பெருமுயற்சி எடுத்தல்
முட்டிமோது அலைமோதுதல்
முட்டியடித்தல் திண்டாடுதல்
முட்டியுத்தம் கைக்குத்துச்சண்டை
முட்டு விலங்கு முதலியன கொம்பு முதலியவற்றால் தாக்குகை தடை தட்டுப்பாடு சங்கடம் குறைவு உட்சென்று கடத்தலருமை கண்டுமுட்டுக் கேட்டுமுட்டு முதலிய தீட்டுகள் மாதவிடாய் கருவி : சில்லறைப் பொருள்கள் பற்றுக்கோடு முழங்கால், முழங்கை, விரல்கள் இவற்றின் பொருத்து மேடு குவியல்
முட்டு2 (ஒன்று விழாமல்) தாங்கும் அல்லது (நகராமல்) தடுக்கும் கட்டை முதலியவை
முட்டுக்கட்டியாடுதல் பொய்க்கால்களில் நின்று நடத்தல்
முட்டுக்கட்டுதல் கட்டை முதலியன ஆதரவாகக் கொடுத்தல் வழியை அடைத்தல் வயல் முதலியவற்றுக்கு எல்லை கட்டுதல் முழந்தாளைக் கைகளால் கட்டுதல்
முட்டுக்கட்டை தடை
முட்டுக்கட்டை தாங்குகம்பம் தடைசெய்பவர் தடைசெய்வது
முட்டுக்கட்டை முட்டாகக் கொடுக்கும் கட்டை
முட்டுக்கால் தாங்குகால் காண்க : முட்டிக்கால்
முட்டுக்கொடுத்தல் ஆதாரக்கால் நிறுத்துதல் இடையூறு செய்தல்
முட்டுக்கோல் கிட்டி
முட்டுச்சட்டம் உதைமானச் சட்டம்
முட்டுச்சந்து மேற்கொண்டு செல்ல முடியாமல் முடிந்துவிடுகிற சந்து
முட்டுச்சுவர் உதைமானச் சுவர்
முட்டுதல் மோதுதல் தடுத்தல் எதிர்த்தல் எதிர்ப்படுதல் பிடித்தல் தேடுதல் குன்றுதல் நிறைதல் முடிதல் தடைப்படுதல் பொருதல் வழுவுதல்
முட்டுப்படுதல் துன்புறுதல் தடைப்படுதல்
முட்டுப்பாடு இடையூறு நெருக்கிடை சங்கடம் தட்டுப்பாடு ஆயுதவகை தீமை
முட்டுற்றவன் அறிவில்லாதவன் குறைவுள்ளவன்
முட்டுவீக்கம் முட்டுக்காலில் வீங்குகை
முட்டை முட்டை பறவைகள், ஊர்வனவற்றின் வளர்ச்சியின் ஆரம்ப கட்டமாகும் கருக்கட்டிய சூல் முட்டையாக இடப்பட்டுத் தாயின் உடலுக்கு வெளியிலே மீதி வளர்ச்சி நடைபெற்றுப் பொரித்துக் குஞ்சுகள் வெளிவருகின்றன முட்டை பொரித்துக் குஞ்சாவதற்குச் சாதகமான வெப்பநிலை வேண்டும் பறவைகள் அடைகாத்து இவ்வெப்பநிலையை முட்டைக்குக் கொடுக்கின்றன. முழுவளர்ச்சியடைந்த குஞ்சு முட்டையை உடைத்து வெளியேறும் கோழி, வாத்து, காடை போன்ற பறவைகளின் முட்டைகள் உணவாகப் பயன்படுத்தப்படுகின்றன
முட்டை அண்டம் அண்டகோளம் உடம்பு சாணங்கொண்டு தட்டிய வறட்டி தவிடு சிறுகரண்டி
முட்டை1 (பறவைகளில், ஊர்வனவற்றில் பெண்ணினம் இடும்) குஞ்சு வளர்வதற்கான கருவைக் கொண்ட நீள் கோள அல்லது உருண்டை வடிவப் பொருள்/(குறிப்பாக உண்பதற்குப் பயன்படுத்தும்) கோழி முட்டை
முட்டை2 வறட்டி
முட்டைக்கண் உருண்டை விழி
முட்டைக்கோசு ஒரு செடிவகை
முட்டைக்கோவா முட்டைக்கோசு
முட்டைக்கோஸ் முட்டைக்கோசு
முட்டைக்கோஸ் வெளிர்ப் பச்சை நிற இலைகளை அடுக்கடுக்காகக் கொண்ட உருண்டையான ஒரு காய்கறி
முட்டைவடிவு நீண்ட உருண்டை வடிவம்
முட்டொறடு இறைச்சி தொங்கவிடும் முள்
முட்பன்றி முள் அடர்ந்துள்ள பன்றிவகை
முட்புறக்கனி பலாப்பழம்
முணக்குதல் உள்வளைத்தல்
முணங்கு அடக்கம் சோம்பல்முரிப்பு சோம்பு
முணங்குதல் உள்ளடங்குதல் அடங்குதல் குரலையடக்கிப் பேசுதல்
முணங்குநிமிர்தல் சோம்பல்முரித்தல்
முணமுணத்தல் வாய்க்குட் பேசுதல்
முணவல் சினம்
முணவுதல் வெறுத்தல் சினத்தல்
முணுக்கென்றால் சின்ன விஷயத்தில் சிறிது கடுமையை வெளிப்படுத்தினாலும்
முணுமுணுத்தல் வாய்க்குட் பேசுதல்
முணுமுணுப்பு (வெறுப்பு, அதிருப்தி முதலியவற்றை வெளிப்படுத்தும் வகையில்) முணுமுணுத்தல்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together