We are happy to provide you with the best Online Tamil to Tamil Dictionary/Translator.
For typing word in Tamil you can use our tool typing tool
Tamil Word | Tamil Meaning | English Meaning |
உக்கிரம் | (சில இயற்கைச் சக்திகளின் அல்லது சில உணர்ச்சிகளின்) கடுமை | intensity (of some natural forces) |
உக்கிராணம் | (பெரும்பாலும் கோயில், மடம் போன்றவற்றில்) சமையலுக்கு வேண்டிய பொருள்கள் வைத்திருக்கும் அறை | store room for provisions (in a temple or house) |
உகு | (கண்ணீர்) வடித்தல் | shed (tears) |
உச்சந்தலை | (மனித) மேல்தலையின் நடுப்பகுதி | crown (of head) |
உச்ச நீதிமன்றம் | (இந்தியாவில்) நாடு முழுமைக்குமான தலைமை நீதிமன்றம் | supreme court (of India) |
உச்சம் | (ஒரு செயல், உணர்ச்சி போன்றவை அடையும்) தீவிரம் அல்லது அதிக அளவு | maximum or extreme point |
உச்சமட்டம் | (பல நிலைகளைக் கொண்ட அமைப்பில்) இறுதி | highest (in a hierarchical set up) |
உச்சரி | (எழுத்தை, சொல்லை) ஒலித்தல் | pronounce (a sound, word) |
உச்சரிப்பு | (எழுத்தின், சொல்லின்) ஒலிப்பு முறை | pronunciation |
உச்சவரம்பு | வரையறுக்கப்பட்ட உயர் எல்லை | (of time, production) deadline |
உச்சஸ்தாயி | (பாடும்போது) குரலின் மேல்எல்லை | high pitch |
உச்சாடனம் | (மந்திரங்களை) ஒரே சீராக ஓதுதல் | (of mantras) chanting |
உச்சாணி | (மரத்தின்) உச்சி | top (of a tree) |
உச்சி | (உயரமான ஒன்றின்) மேல்பகுதி | top (of a tree, tower, etc.) |
உச்சிக்கால பூஜை | (கோவிலில் நாள்தோறும்) பகல் பன்னிரண்டு மணியளவில் நடக்கும் பூஜை | (in temples) பூஜை performed around the noon (daily) |
உச்சிக்குடுமி | (ஆண்கள்) உச்சந்தலையின் பின்பகுதியில் நீளமாக வளர்த்து முடிந்துகொள்ளும் முடிக் கற்றை | tuft of hair (just behind the crown of the head) |
உச்சிக்கொண்டை | (பெண்கள்) உச்சந்தலையின் பின்பகுதியில் போட்டுக்கொள்ளும் ஒரு வகைக் கொண்டை | (of women) a hairdo in which hair is gathered up and knotted at the back of the crown of the head |
உச்சிகுளிர் | (புகழ்ச்சியால்) பெரும் மனமகிழ்ச்சி ஏற்படுதல் | feel flattered (by nice words) |
உச்சிப்பொழுது | தலைக்கு நேராக வானத்தில் சூரியன் வரும் நேரம் | high noon |
உச்சிமாநாடு | (முக்கியப் பிரச்சினைகுறித்து விவாதித்து நடவடிக்கை எடுக்க) முன்னேறிய நாட்டு அரசுத் தலைவர்களின் சந்திப்பு | summit conference (of world leaders of mostly developed countries) |
உச்சிவானம் | தலையின் மேல்பகுதிக்கு நேராக உள்ள வானம் | sky overhead |
உச்சிவெயில் | நண்பகல் வெயில் | hot sun (of the high noon) |
உசத்தி | (மதிப்பு, தரம் முதலியவற்றில்) உயர்வு | being preferential or superior |
உசாத்துணை நூல்கள் | துணைநூல் பட்டியல் | bibliography |
உசாவு | கேட்டல் | enquire |
உசிலி | வேகவைத்து அரைத்த பருப்போடு ஏதேனும் ஒரு காய்கறியைச் சேர்த்துத் தயாரிக்கும் உணவுப் பண்டம் | a dish prepared by adding a vegetable to the boiled and mashed pulse |
உட்கரு | (கதை முதலியவற்றின்) மிக ஆதாரமான பொருள் | central theme |
உட்கருத்து | (வெளிப்படையாகத் தெரியாத) நுண்மையான செய்தி | intended sense |
உட்காய்ச்சல் | தொடு உணர்வால் அறிந்துகொள்ள முடியாமல் உடலில் இருக்கும் காய்ச்சல் | latent or internal fever |
உட்கார் | (மனிதன்) இடுப்பின் கீழ்ப்பகுதியை ஒரு பரப்பில் வைத்து ஓய்வு பெறுதல் | (of human beings) sit |
உட்கார்த்து | (ஒருவரை) உட்காரச்செய்தல் | seat |
உட்குழு | ஒரு குழுவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரைக் கொண்டதும் முக்கியமான முடிவுகளைத் தீர்மானிக்கக் கூடியதுமான சிறு குழு | inner group |
உட்கொள் | (வாய் வழியாக உணவு முதலியவற்றை) உள்ளே இறங்கச்செய்தல் | take in (food, etc.) |
உட்செலுத்து | (உள்ளீடற்ற பொருளில், துவாரம் முதலியவற்றில் ஒன்றை) நுழைத்தல் | insert |
உட்பகை | வெளிப்படையாகத் தெரியாத விரோதம் | covert enmity |
உட்பட்ட | (ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு) கீழ் உள்ள | below |
உட்பட | (கூறப்படும் ஒருவருக்கு அல்லது ஒன்றுக்கு மேற்பட்டதை) சேர்த்து | including |
உட்படு | (வரம்புக்குள், அளவுக்குள்) அமைந்திருத்தல் | be subjected to (certain limits and conditions) |
உட்படுத்து | (ஒன்றின்) கீழ் அமைக்கப்படுதல்(சோதனை, ஆய்வு முதலியவற்றுக்கு) உள்ளாக்குதல் | bring |
உட்பிரிவு | (பகுக்கப்பட்ட ஒரு பெரும் பிரிவின்) சிறு பிரிவு | subdivision (in a book, treatise, etc.) |
உட்புறம் | வெளிப்புறத்தின் மறுபுறம் | inside |
உட்பூசல் | (ஒரு குழு, அமைப்பு போன்றவற்றின் உறுப்பினர்களுக்குள்) சொந்த நலனை முன்னிட்டு எழும் பூசல் | quarrel within (the members of a group) |
உட்பொருள் | வெளிப்படையாக அல்லது மேலோட்டமாகத் தெரியாத பொருள் | hidden or inner meaning |
உடந்தை | (குற்றத்துக்கு அல்லது தீய செயலுக்கு) துணை | connivance |
உடம்பு | உடல் | body |
உடமை | (ஒருவருக்கு) உரிமை உடையது(வீடு, நிலம் போன்ற) சொத்து | possessions (such as house, land, etc.) |
உடல் | (மனிதனின் அல்லது விலங்கின்) முழு உருவம் | body |
உடல்நலம் | உடல் நோயற்று இருக்கும் நிலை | health |
உடல்நிலை | உடம்பின் (ஆரோக்கியமான அல்லது ஆரோக்கியக் குறைவான) தன்மை | health |
உடலுழைப்பு | உடலை வருத்திச் செய்கிற கடின உழைப்பு | physical labour |
உடலுறவு | பாலுணர்வின் உந்துதலினால் ஆணும் பெண்ணும் கொள்ளும் சேர்க்கை | sexual intercourse |
உடற்கல்வி | விளையாட்டு, பயிற்சி முதலியவற்றின் மூலம் அளிக்கும் உடல் ஆரோக்கியத்திற்கான கல்வி | physical education |
உடற்கூற்றியல் | உடல் உறுப்புகளின் உள்ளமைப்பை விவரிக்கும் அறிவியல் துறை | anatomy |
உடற்பயிற்சி | உடலை ஆரோக்கியமாகவும் வலிமையாகவும் வைத்துக்கொள்வதற்காக மேற்கொள்ளும் செயல்கள் | physical exercise or training |
உடன்கட்டை ஏறு | கணவனின் சிதையில் மனைவி இறங்கித் தன் உயிரைப் போக்கிக்கொள்ளுதல் | (of women) burn oneself alive in the funeral pyre of the husband |
உடன்படிக்கை | இரு நாடுகள் அல்லது அமைப்புகள் ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காகச் செய்துகொள்கிற ஒப்பந்தம் | treaty |
உடன்படு | இணங்குதல் | comply with |
உடன்பிறந்தார் | சகோதர சகோதரிகள் | brothers and sisters (born of the same parents) |
உடன்பிறந்தாள் | சகோதரி | (own) sister |
உடன்பிறந்தான் | சகோதரன் | (own) brother |
உடன்பிறப்பாக | (ஒன்று தோன்றிய அதே நேரத்தில் உண்டாகி) தொடர்புடையதாக | simultaneously |
உடன்பிறப்பு | உடன்பிறந்தான் அல்லது உடன்பிறந்தாள் | brother or sister |
உடனடி | தற்போது மிக அவசியமான | immediate |
உடனடியாக | சிறிது நேரம்கூடக் காத்திராமல் | without any delay |
உடனிரு | (நிகழ்ச்சி, செயல் ஆகியவை நடக்கிறபோது) கூட இருத்தல் | be present |
உடனுக்குடன் | தாமதிக்காமல் விரைந்து | promptly |
உடனே1 | (செயல் நடந்த) நிமிடமே | at once |
உடுக்கு | மெல்லிய தோலை இழுத்துக் கட்டிய வட்ட வடிவப் பக்கங்களும் ஒடுங்கிய நடுப்பகுதியும் உடைய ஒரு (இசை) கருவி | small drum tapering in the middle (to be held in the hand and played with fingers) |
உடுக்குறி | (ஏதேனும் ஒரு குறிப்பிற்காக எழுத்து, சொல் முதலியவற்றிற்கு மேல் இடப்படும்) நட்சத்திர வடிவக் குறியீடு | asterisk |
உடுத்து | (பொதுவாக ஆடை) அணிதல்(குறிப்பாகப் புடவை, வேட்டி முதலியன) கட்டுதல் | (generally) wear |
உடுப்பு | உடை | clothes |
உடும்பு | சுமார் ஒரு மீட்டர் நீளம் வளரக் கூடியதும், தான் இருக்கும் இடத்தை உறுதியாகப் பற்றிக்கொள்ளக் கூடியதுமான பெரிய பல்லி போன்ற பிராணி | monitor lizard |
உடை1 | (அழுத்தத்தால், கீழே விழுவதால்) துண்டாதல் | break |
உடை2 | துண்டாக்குதல் | break |
உடை3 | ஆடை | clothes |
உடைசல் | உடைந்துபோன பொருள் | broken pieces |
உடைப்பில்போடு | (உபயோகமற்ற அல்லது உபயோகிக்க விரும்பாத ஒரு பொருளை வேண்டாமென்று) தூக்கி எறிதல் | throw out |
உடைப்பு | உடைத்தல் | act of breaking open |
உடைப்பெடு | (கரை, வரப்பு முதலியவை) உடைந்து துண்டுபடுதல் | (of river bank, etc.) get breached |
உடைய1 | (தன்மை, குணம், பண்பு முதலியவை) கொண்ட | having or containing (characteristics, tendencies, etc.) |
உடைவாள் | (அரசர் முதலியோர்) உடையில் செருகிவைத்திருக்கும் வாள் | sword |
உண்1 | (உணவு) சாப்பிடுதல்(நீர், கள்) குடித்தல் | eat (food) |
உண்டாக்கு | படைத்தல் | create |
உண்டாகு | (சேதம், பஞ்சம் முதலியவை) ஏற்படுதல் | come into existence |
உண்டான | உரிய | due |
உண்டி | உணவு | food |
உண்டியல் | (பணம் போடப் பயன்படும்) மேல்புறம் நீளவாக்கில் துளை உடைய பெட்டி போன்ற சாதனம் | a container (used for personal savings or kept in temples for collecting contributions) having a slit to facilitate dropping in money |
உண்டுபண்ணு | (குழப்பம், சேதம் முதலியவற்றை அல்லது உணர்ச்சியை, ஆர்வத்தை) உண்டாக்குதல் | cause (confusion, damage, etc.) |
உண்டைக்கட்டி | (கோயிலில் பிரசாதமாகத் தரப்படும்) உருண்டை வடிவக் கட்டிச் சாதம் | balls of food (mostly freely distributed in temples) |
உண்ணாவிரதம் | (நோன்பாக) உண்ணாமல் இருத்தல்/(எதிர்ப்புத் தெரிவித்து) உண்ணாமல் இருந்து நடத்தும் போராட்டம் | fasting (as a religious observance)/hunger strike |
உண்ணி | (ஆடு, மாடு, நாய் போன்ற விலங்குகளின் தோலில் ஒட்டிக்கொண்டு) இரத்தத்தை உறிஞ்சி உயிர்வாழும் மிகச் சிறிய உயிரினம் | tick |
உண்மை | மறுக்க முடியாதது | fact |
உணர் | (உடலிலும் மனத்திலும் ஏற்படும் நிலையை) அனுபவித்து அறிதல் | feel (bodily sensation or mental experience) |
உணர்ச்சி | உடலில் அல்லது மனத்தில் ஏற்படும் நிலையை அறியும் அனுபவம் | feeling |
உணர்ச்சிவசப்படு | வலுவான மனநிலைக்கு ஆட்படுதல் | get worked up |
உணர்வு | (ஒன்றை அனுமதிக்கிற, விரும்புகிற, வேண்டுகிற) மனநிலை | awareness |
உணவு | (உயிர் வாழ) உண்ணுவது | food |
உணவுக் குழல் | உண்ட உணவு மட்டும் செல்வதற்காக வாயிலிருந்து இரைப்பைவரை உள்ள குழாய் போன்ற உறுப்பு | alimentary canal |
உணவு விடுதி | விலையைக் கொடுப்பதன்மூலம் பரிமாறப்படும் உணவை உண்டு செல்லக் கூடிய வசதி கொண்ட விடுதி | restaurant |
உத்தமம் | சிறப்பு | the best |